வாழ்க வளமுடன் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் வாழ்க வளமுடன்!

Tuesday, March 31, 2015

வாழை

வாழைப்பூவை சமைத்துண்ணுவதால், நமது செரிமாண மண்டலம் முழுமைக்கும் மிக மிக நல்லது.
வாழைப்பழம் பசியை ஆற்றுவதோடு பல்வேறு மனித உபாதைகளுக்கு மருந்தாக இருக்கிறது. குறிப்பாக மொந்தன் பழம் போன்றவை மலச்சிக்கலுக்கு நல்லது. குழந்தைகளுக்கு சிறுவயதில் ஏற்படும் பல் விழும் காலங்களில் ஆடிக்கொண்டிருக்கும் பல்லை, பிடுங்குவதற்கு பதிலாக பெரிய அளவிலான வாழைப்பழம் (மொந்தன் அல்லது ரஸ்தாளி) போன்றவைகளை வலுக்கட்டாயமாக கொடுப்பர். பல் வாழைப்பழத்துடன் சேர்ந்து வயிற்றில் சென்று பிறகு மலத்துடன் வெளியேறிவிடும்.
தீப்புண்ணுக்கு வாழைமரத்திலிருந்து எடுக்கப்பட்ட சார் எரிச்சலை குறைக்கும். தீக்காயம் ஏற்பட்டவர்களை வாழை இலை கொண்டு போர்த்துவது பல்வேறு இடங்களில் இன்றும் நடைமுறையில் உள்ளது.
வாழைப்பழத்தில் கர்போஹைடிரேட், புரதம், கொழுப்பு முதலான உணவுச் சத்துக்களும் A, B, C வைட்டமின்களும் அடங்கியுள்ளன. சுண்ணாம்புச் சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ், சிறிய அளவில் செம்புச்சத்தும் அடங்கியுள்ளன. நார்ச்சத்தும், ரிபோஃபிளேவின், தயாமின் முதலான வைட்டமின்களும் உள்ளன. இதை அப்படியே சாப்பிடலாம். ஐஸ்கிரீம், சாண்ட்விச், தயாரிக்க இந்தப் பழம் பயன்படுத்தப்படுகிறது. இதன் எண்ணெய் அழகு சாதனப் பொருள்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு வகை பழத்திற்கும் ஒவ்வொரு விசேச பலனும், குணமும் உண்டு. வாழையில் 70க்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. இரசத்தாளி வாழை சுவையைக் கொடுக்கும். செவ்வாழை பலமளிக்கும். மொந்தன் காமாலைக்கு நல்லது. பச்சைவாழை வெப்பத்தைக் குறைக்கும். மலைவாழை சோகையை நீக்கும். பேயன் வாழை குடற்புண் தீர்க்கும். நவரை வாழை கரப்பான் நோயை அதிகப்படுத்தும்.

இதைத் தவிர கற்பூர வாழை, நேந்திர வாழை, பூவன் வாழை எனப் பலவகை உண்டு.

பொதுவாக வாழைப் பழத்தை உண்பதால் மலச்சிக்கல் நீங்குவதுடன் பித்த சம்பந்தமான நோய்கள் குறைகிறது. "நெப்ரைடிஸ்" என்கிற சிறுநீரக நோய், மூட்டுவலி, உயர் இரத்த அழுத்தம், குடற்புண் ஆகியவற்றை குணப்படுத்தவல்லது.

உடல்நலனுக்கு எப்பொழுதும் முழுவதுமாக பழுத்த பழங்களையே சாப்பிட வேண்டும். மூளையில் "செரோடினின்" உருவாக வாழைப்பழம் உதவுகிறது. மனதில் ஏற்படும் பயம், கவலை, வருத்தம் முதலியவற்றை நீக்க செரோடினின் பெரிதும் உதவுகிறது. வாழைப்பழத்தை இதய நோய் உள்ளவர்கள் சாப்பிடலாம். மூளைக்கு வலுவூட்டும். தினசரி இரவு உணவுக்குப் பின் இரண்டு மணி நேரம் கழித்து ஓரிரண்டு வாழைப்பழம் உட்கொள்வதால் மலச்சிக்கல், பித்த நோய்கள், மனநோய், மூர்ச்சை மற்றும் பெண்களுக்கு ஏற்படுகின்ற வெள்ளைப்போக்கு முதலியவை நீங்கும். இரத்த அழுத்தம் நிதானமாக இருக்கும். குடற்புண் வராமல் தடுக்கும். சத்துக்குறைவுள்ள குழந்தைகளுக்கு உடல் வலுப்பெறும். கனிந்த வாழைப்பழத்தில் 5 மிளகை திணித்து திறந்த வெளியில் ஒரு இரவு வைத்து, அடுத்த நாள் காலையில் இந்த மிளகை சாப்பிட இருமல் நீங்கும். உட்கொண்ட உணவு உணவுக் குழாயில் சிக்கி வீக்கம் ஏற்பட்டு அவதியுறும் போது இப்பழம் சாப்பிட உணவுக் குழாயின் சிக்குண்ட பொருள் வயிற்றில் போய் சேர்ந்து விடும்.

மஞ்சளும், பச்சையுமான நிறங்களுள்ள வாழைப்பழம் எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் கிடைக்கக் கூடியது. இதில் பலவகைகள் அடங்கியுள்ளன. உலர்ந்த சருமத்திற்கு மிகுந்த ஈரப்பதத்தை அளிக்கக் கூடியது. எனவே சரும மாஸ்க்குகள், ஹேர் பேக்குகளாக உபயோகப்படுத்தப்படுகின்றன. இப்பழச்சதையினுள் வெண்ணெய் போல ஏறக்குறைய இருபது முதல் இருபத்தைந்து சதவீதம் எண்ணெய் சத்து உள்ளது.

தினசரி ஒரு செவ்வாழை வீதம் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும். நரம்புகளுக்கு நல்ல பலம் ஏறும். உடலில் புதிய சுறுசுறுப்பும், மனதில் உற்சாகமும் உண்டாகும்.

தொடர்ந்து 21 தினங்களுக்கு இரவு ஆகாரத்திற்குப் பின் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் பல் சம்பந்தமான எல்லாக் கோளாறுகளும் நிவர்த்தியாகும். சிறுவர், வாலிபர், வயோதிகர்களுக்கு கண்பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசரி செவ்வாழை பாதியளவு முதல் முழு அளவு வரை தொடர்ந்து 21 தினங்களுக்குக் கொடுத்து வந்தாலே கண் பார்வை படிப்படியாகத் தெளிவடையும்.

வாழைப்பழங்கள் இந்து கடவுள்களின் வழிபாட்டில் முக்கிய இடம் பெறுகின்றன. பண்டைய இந்தியாவில் வாழை கடவுள்களின் உணவாக கருதப்பட்டது.குறிப்பாக தென்னிந்தியாவில் வாழை இலைகளும் இறைவழிபாட்டில் பயன் படுத்தப்படுகின்றன. விருந்தாளிகளுக்கு வாழை இலையில், குறிப்பாக தலை வாழை இலையில் (நுனி இலை) உணவு படைப்பது சிறந்த தமிழ் பண்பாடு.

வாழைப்பழ வகைகள்

செவ்வாழை (சிகப்பு நிறத்திலிருக்கும் சற்று பெரிய அளவில் இருக்கும்)
ரசுதாளி (இதை யாழ்ப்பாணத் தமிழர் கப்பல் பழம் என்கிறார்கள். சிங்களவர்கள் கோழிக்கூடு என்கிறார்கள். மட்டக்களப்புத் தமிழர் பறங்கிப்பழம் என்கிறார்கள். இவ் வாழைப்பழத்தை பறங்கியர்கள் கோழிக்கோடு துறைமுகத்தினூடு கப்பலில் இலங்கைக்குக் கொண்டு வந்து சேர்த்தார்கள் என்றும் அதனாலேயே இவ் வாழைப்பழத்துக்கு இத்தனை பெயர்கள் என்றும் கருதப் படுகிறது.)
கற்பூரவல்லி வாழைப்பழம்
மழை வாழைப்பழம்
பேயன் வாழைப்பழம்
பச்சை வாழைப்பழம் (பச்சை நிறத்தில் இருக்கும்)இதைத்தான் இரதை வாழைப்பழம் என்பதா?
பெங்களூர் பச்சை வாழைப்பழம் (பெங்களூர் பச்சை என்றாலும் நிறத்தில் மஞ்சளேயாகும்.)
நேந்திர வாழைப்பழம் (கேரளாவில் உற்பத்தியாகின்றன)
மொந்தன் வாழைப்பழம்
பூவன் வாழைப்பழம்
கப்பல் வாழைப்பழம்
கதலி வாழைப்பழ

Sunday, March 29, 2015

வீட்டுத் தோட்டம்

வீட்டுத் தோட்டம்

உங்களுடைய காய்கறி மற்றும் பழத் தேவைகளை, உங்கள் வீட்டுப் பின்புறத் தோட்டங்களிலேயே அவற்றைப் பயிரிட்டு, உங்கள் சமையலறை மற்றும் குளியலறைக் கழிவு நீரைப் பாய்ச்சி விளைவிக்க முடியும். முருங்கை, பப்பாளி, நெல்லி, கொய்யா, கறிவேப்பிலை, அகத்தி போன்றவற்றை தோட்டத்தின் ஒரு பக்கத்தில் பயிரிடுவதன் மூலம், அவற்றின் நிழல் மற்ற செடிகளை மறைக்காத வண்ணம் பார்த்துக்கொள்ள முடியும். சுலபமாக வீட்டைச் சுற்றி வளர்க்கக் கூடிய சில மர வகைகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன:

முருங்கை – புரோட்டின், வைட்டமின்கள், தாதுச்சத்துக்கள் நிரம்பியது. நச்சுமுறிவுத் தன்மை அதிகமுள்ளதால், உடலிலுள்ள செல்கள் பழுதடையாமல் காக்கிறது. மூட்டுவலி, இரத்த சோகை மற்றும் அல்சர்களை குணப்படுத்துகிறது. பப்பாளி – இதிலும் நச்சுமுறிவுத் தன்மை அதிகமுள்ளது. வைட்டமின் 'பி' சத்து நிறைந்தது. ஜீரணசக்தியை அதிகரித்து, மலச்சிக்கலைத் தடுத்து, உடலிலுள்ள அதிகப்படியான கொழுப்புக்களைக் குறைக்கிறது.

நெல்லி – வாதம், பித்தம், கபம் இந்த மூன்றையும் சமநிலையோடு இருக்கச் செய்கிறது. அஜீரணக் கோளாறை கட்டுப்படுத்தி, கண்பார்வையை கூர்மையாக்கி, இதயத்துக்கு வலுவூட்டுகிறது.

கொய்யா – வைட்டமின் 'சி' அதிகமுள்ளது. தசைகளுக்கு மிகவும் சிறந்த மருந்தாக விளங்குகிறது. கறிவேப்பிலை – பசியின்மையைப் போக்குகிறது, கர்ப்பிணிப் பெண்களின் மசக்கை பிரச்சனைக்கு மருந்தாகப் பயன்படுகிறது. முடி வளர்ச்சியை அதிகரித்து, இளமையிலேயே நரைமுடி உருவாவதைத் தடுக்கிறது.

அகத்தி – பித்தம் மற்றும் கபத்துக்கிடையே சமநிலையை உருவாக்குகிறது. விஷமுறிவு மருந்தாக செயல்படுகிறது.

வேப்பிலை – வறண்ட சருமத்தை மென்மையாக்கி, தோல் அரிப்பைப் போக்குகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. இது ஒரு சிறந்த கிருமி நாசினி.

பிரண்டை – ஜீரணசக்திக்கு நல்லது, பெண்களுக்கு அவசியமான கால்சியம் சத்து நிறைந்தது.

வாழை – வாழையின் ஒவ்வொரு பகுதிக்கும் மருத்துவ குணங்கள் உள்ளன. வாழைத் தண்டு மிகுந்த நார்ச்சத்து உடைய, பொட்டாசியம் நிறைந்த உணவு. இது சிறுநீரகக் கற்களை அகற்ற உதவுகிறது.

தென்னை – ஊட்டச்சத்து மிகுந்தது. நார்ச்சத்து, தாதுச் சத்துக்கள் நிரம்பியது. அல்சர், சிறுநீர் குழாய் கிருமித் தொற்றுகளுக்கு சிறந்த நிவாரணி.

மாதுளை – இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. நோய்த் தொற்றைத் தடுக்கிறது. பற்சிதைவைப் போக்குகிறது. கீரைகள் குறுகிய காலத்தில் விளையக் கூடிய கீரைகளை தோட்டத்தின் நடைபாதைக்கு அருகே பாத்தி கட்டி வளர்க்கலாம்.

முளைக் கீரை – மலச்சிக்கலைப் போக்கி, சொறி நோயை குணமாக்குகிறது. மணத்தக்காளி கீரை – வாயுத் தொல்லை, அல்சர், கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்சனைகளைத் தீர்க்கிறது.

சிறுகீரை – இரும்புச் சத்து நிறைந்தது, இரத்த சோகை, மூல நோய் போன்றவற்றை குணமாக்கக் கூடியது.

அரைக்கீரை – ஜுரம், வலிப்பு, வாயு மற்றும் உடல் வலிக்கு நிவாரணம் அளிக்கிறது.

கரிசலாங்கண்ணி கீரை – வாய்ப்புண், வாய் துர்நாற்றம் மற்றும் கல்லீரல் நோய்களை குணமாக்குகிறது.

பொன்னாங்கண்ணி – கண் பார்வைக் கோளாறுகள், கண் வலி மற்றும் கண்ணீர் பெருக்கு போன்றவற்றுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுகிறது.

கொத்துமல்லி – இரத்தத்தை சுத்திகரித்து, கண் பார்வையைக் கூர்மை யாக்குகிறது. தொடர்ந்து உண்டு வந்தால் இரத்தத்தில் நோய் எதிர்ப்பு அணுக்களை அதிகரிக்கிறது.

பாலக்கீரை – முக்கியமான வைட்டமின்கள் மற்றும் தாதுச் சத்துக்கள் நிரம்பியது. சிறுநீர்ப் பாதையில் உருவாகும் கல் பிரச்சனையைத் தீர்க்கிறது. கண் பார்வையை கூர்மையாக்குகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு அவர்களுடைய எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவுகிறது.

தவசி – இதில் பலவிதமான வைட்டமின்ங்கள் இருப்பதால் வைட்டமின் கீரை என்று அழைக்கப்படுகின்றது.

முடக்கத்தான் – இது வாத நோய்களுக்கு பயன்படுகின்றது

Friday, March 27, 2015

Replace ward display

புதுவகை வேர்ட் பார்மட்டிங்: பொதுவாக, வேர்ட் டாகுமெண்ட்டில், டெக்ஸ்ட் ஒன்றை பார்மட் செய்து, அதனை அழுத்தமாக, சாய்வாக,
அடிக்கோடிட்டபடி அமைக்க வேண்டும் என்றால், அந்த சொல்லைத் தேர்ந்தெடுத்து, பின் அதனை அழுத்தமாக அமைக்க வேண்டும் என்றால், bold டூலின் மீது கிளிக் செய்திடுவோம். அல்லது கண்ட்ரோல் + B அழுத்துவோம். ஒரே ஒரு சொல்லை நீங்கள் பார்மட் செய்திட விரும்பினால், சொல்லைத் தேர்ந்தெடுக்கும் வேலை எல்லாம் தேவை இல்லை. அந்தச் சொல்லின் மீது கர்சரை எந்த இடத்தில் வேண்டுமானாலும் நிறுத்துங்கள். பின்னர், ரிப்பனில், ஹோம் டேப்பினைக் காட்டவும். அடுத்து Font குரூப்பில், Bold டூலின் மீது கிளிக் செய்திடவும். நீங்கள் கர்சரைக் கொண்டு சென்று வைத்த சொல் முழுவதும் அழுத்தமாகக் காட்சி அளிக்கும். இவ்வாறே, எந்த ஒரு டூலையும் இந்த முறையில் பயன்படுத்தலாம். Ctrl+U அழுத்தினால், சொல்லின் கீழாக அடிக்கோடிடப்படும். டாகுமெண்டின் பழைய மாறா நிலைக்கு, பார்மட்டிங் எதுவும் இல்லாமல் கொண்டு செல்ல வேண்டுமா? கர்சரை பார்மட் செய்த சொல்லுக்குள்ளாக நிறுத்திப் பின்னர், Ctrl+Space Bar அழுத்தவும்.
உங்கள் வேர்ட் புரோகிராமில் இந்த வசதி செயல்படவில்லை என்றால், அதனை வடிவமைக்கும்போது நீங்கள் ஏற்படுத்திய சில செட்டிங்குகளே காரணம்.

1. முதலில் வேர்ட் ஆப்ஷன் டயலாக் பாக்ஸைத் திறக்கவும். வேர்ட் 2007ல் ஆபீஸ் பட்டனை அழுத்திப் பின்னர் வேர்ட் ஆப்ஷன்ஸ் என்பதில் கிளிக் செய்திடவும்.

2. இந்த டயலாக் பாக்ஸின் இடது பக்க ஓரமாக உள்ள, Advanced option என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

3. Editing Options என்னும் பிரிவில், When Selecting Automatically Select Entire Word என்று உள்ளதன் எதிரே உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளம் இருப்பதனை உறுதி செய்திடவும்.

4. அடுத்து நீங்கள் ஏற்படுத்திய மாற்றங்களை சேவ் செய்திட ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

இந்த மாற்றங்கள், ஒரு சொல் தேர்ந்தெடுக்கப்படுகையில், அது எந்த வகையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதனை முடிவு செய்திடுவது மட்டுமின்றி, மேலே குறிப்பிட்ட வகையில் பார்மட்டிங் மாற்றங்களையும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் செட் செய்யப்படுகிறது. இந்த செக் பாக்ஸ் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால், முழு சொல்லும் தேர்ந்தெடுக்கப்படுவது நடைபெறாது.

ரீபிளேஸ் டெக்ஸ்ட் தெரிய: வேர்ட் டாகுமெண்ட்டில் சொற்களைத் தேடிக் கண்டறிந்து, அவற்றின் இடத்தில் நாம் விரும்பும் சொற்களை அமைத்திட Find and Replace என்னும் டூலைப் பயன்படுத்துகிறோம். இதில் ரீ பிளேஸ் செய்திடக் கட்டளை கொடுத்தால், குறிப்பிட்ட சொல்லைக் கண்டறிந்து, அதன் இடத்தில் ரீபிளேஸ் டெக்ஸ்ட்டை அமைத்துவிட்டு, இந்த டூல் அடுத்த சொல் இருக்குமிடத்தில் சென்று நிற்கும். குறிப்பிட்ட இடத்தில், புதிய சொல் அமைக்கப்பட்டுவிட்ட தா என நமக்குத் தெரியாது. இதனை நாம் தெரிந்து கொண்டு செயல்பட, ஒரு வழி உள்ளது.

1. ரீபிளேஸ் செய்யப்பட வேண்டிய டெக்ஸ்ட்டை கிளிப் போர்டுக்கு காப்பி செய்திடவும்.

2. பின்னர், கண்ட்ரோல் + எப் கீகளை அழுத்தி, நாம் தேடும் சொல்லுக்கு இணையாக சொல் உள்ள இடத்தைக் கண்டறியவும். இப்போது எஸ்கேப் கீயை அழுத்தினால், பைண்ட் அண்ட் ரீ பிளேஸ் டயலாக் பாக்ஸ் மூடப்படும். இருப்பினும், நாம் தேடி அறியப்பட வேண்டிய சொல்லில், கர்சர் நிற்கும்.

3. இப்போது கண்ட்ரோல்+ வி கீகளை அழுத்தினால், கிளிப் போர்டில் உள்ள ரீபிளேஸ் செய்யப்பட வேண்டிய டெக்ஸ்ட் பேஸ்ட் செய்யப்படும்.

அடுத்து Object Browser இல், நெக்ஸ்ட் அம்புக்குறி அல்லது கண்ட்ரோல் + பேஜ் டவுண் கீகளை அழுத்தினால், தேடும் சொல் இருக்கும் இடத்தில் கர்சர் நிற்கும். இனி மேலே 2 மற்றும் 3ல் காட்டப்பட்டுள்ள செயல்பாடுகளை மீண்டும் மேற்கொள்ளவும்.

ஞாயிறு முதல் சனி வரை தினம் சொல்லி வணங்கும் பாடல்கள்:

ஞாயிறு முதல் சனி வரை தினம் சொல்லி வணங்கும் பாடல்கள்:

ஞாயிற்றுக் கிழமை:

வினாயகர் வழிபாடு:

ஐந்து கரத்தனை யானைமுகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்திமகன் தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே

சிவன் வழிபாடு:

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசந்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழ பாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னை யல்லாள் இனியாரை நினைக்கேனே
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கில வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நிழலே

அம்மன் வழிபாடு:

பூத்தவளே, புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே, பின் கரந்தவளே; கறைகண்டவனுக்கு
மூத்தவளே; என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னையன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே

முருகன் வழிபாடு:

வருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

பெருமாள் வழிபாடு:

பரஞ்சோதி நீ பரமாய் நின் இகழ்ந்து பின் மற்றோர்
பரஞ்சோதி இன்மையின் படியோவி நிகழ்கின்ற
பரஞ்சோதி நின் உள்ளே படர் உலகம் படைத்த எம்
பரஞ்சோதி கோவிந்தா! பண் புரைக்க மாட்டேனே!

சூரியன் வழிபாடு:

சீலமாய் வாழ சீரருள் புரியும்
ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி
சூரியா போற்றி சந்திரா போற்றி
வீரியா போற்றி வினைகள் களைவாய்.

கேது வழிபாடு:
கேதுத்தேவே கீர்த்தித் திருவே
பாதம் போற்றி பாபம் தீர்ப்பாய்
வாதம் வம்பு வழக்குகளின்றி
கேதுத் தேவே கேண்மையாய் ரக்ஷி

திங்கட் கிழமை:

வினாயகர்:

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத்தமிழ் மூன்றும் தா.

சிவன் வழிபாடு:

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே

அம்மன் வழிபாடு:
துணையும் தொழுந் தெய்வமும் பெற்ற தாயும் சுருதிகளின்
பனையும் கொடுந்தும் பதிகொண்ட வேரும் பனிமலர் பூங்
கனையும் கரும்பும் சிலையும் மென் பாசாங்குசமும் வகையில்
அனையுந் திரிபுர சுந்தரியாவது அறிந்தனமே

முருகன் வழிபாடு:
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சி புனையும் வேளே போற்றி
உயர்கிரிக் கனக சபைக்கோ ரரசே!
மயில் நடமிடுவோய் மலரடி சரணம்
சரணம் சரணம் சரவணபவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்

திருமால் வழிபாடு;

வாராய் நாக்கே! கேசவனை ஸ்தோத்திரம் செய்!
நெஞ்சே! முராசுரனைக் கொன்ற கண்ணனைத் தியானம்செய்!
கைகளே! திருமாலை ஆராதியுங்கள்!
காதுகளே! தன்னை யடைந்தவர்களை ஒருகாலும் நழுவ
விடாதவனான கண்ணனுடைய கதைகளைக் கேளுங்கள்!
கண்களே! எம்பெருமான் திருக்கோயிலுக்குச் செல்லுங்கள்!
மூக்கே! முகுந்தனுடைய திருவடிகளில் ஸமர்ப்பித்த துளசியை நுகரு!
தலையே! எம்பெருமானை வனங்கு!

சந்திரன் வழிபாடு:
எங்கள் குறைகள் எல்லாந் தீர்க்கும்
திங்களே போற்றி, திருவருள் தருவாய்
சந்திரா போற்றி சற்குணா போற்றி
சங்கடந் தீர்ப்பாய் சதுரா போற்றி

செவ்வாய்க் கிழமை:

வினாயகர் வழிபாடு:

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு

சிவன் வழிபாடு:

நல்லவை பெருகவேண்டும் நாடெல்லாம் வாழவேண்டும்
அல்லவை ஒழியவேண்டும் அனைத்துயிர் வாழவேண்டும்
பொல்லவைக் கலியும் நீங்கிப் புதுயுகம் பூக்கவேண்டும்
செல்வமிக் கோங்கும் அண்ணா மலைவளர் தேவதேவ!

முருகன் வழிபாடு:

அஞ்சு முகந்தோன்றில் ஆறு முகந்தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சல் எனவேல் தோன்றும் நெஞ்சில்
ஒருக்கால் நினைக்கில் இருகாலும் தோன்றும்
முருகா என்றோதுவார் முன்

சக்தி வழிபாடு:

தனந்தரும் கல்விதரும் , ஒருநாளும் தளர்வறியா
மனந்தரும், தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும், நல்லன எல்லாந்தரும், அன்பர் என்பவர்க்கே
கனம்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே

அனுமன் வழிபாடு:

வானரரில் முதலோனை மற அரக்கர் குலத்தோர்கள்
ஆனவராம் குமுதவனம் அழிகிரண ஆதவனை
தீனர்களின் துயர்திடைக்கத் திடவிரதம் கொண்டவனை
மானவளி தவமகனை மனக்கண்முன் கண்டேனே

செவ்வாய் வழிபாடு:

சிறப்புறு மணியே செவ்வாய் தேவே
குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ
மங்களச் செவ்வாய் மலரடி போற்றி
அங்காரகனே அவதிகள் நீக்கு

புதன் கிழமை:
வினாயகர் வழிபாடு:

திகடசக்கரச் செம் முகம் ஐந்துளான்
சகடச் சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணியா உறை
விகடச் சக்கரன் மெய்பதம் போற்றுவோம்

சிவன் வழிபாடு:

பெற்ற தாய்தனை மகமறந்தாலும்
பிள்ளையைப்பெறுந் தாய்மறந் தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரே மேவிய உடல்மறந் தாலும்
கற்ற நெஞ்சகங் கலைமறந் தாலும்
கண்கள்நின்றிமைப் பதுமறந்தாலும்
நற்த வத்தவர் உள்ளிருந் தோங்கும்
நமச்சி வாயத்தை நான்மற வேனே

அம்மன் வழிபாடு:

மங்கள ரூபிணி மதியணி சூலினி
மன்மத பாணியளே!
சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே!
கங்கண பாணியன் கரிமுகங் கண்டநல்
கற்பகக் காமினியே!
ஜயஜய சங்கரி கௌரி கிருபாகரி
துக்க நிவாரணி காமாக்ஷி

முருகன் வழிபாடு:

ஆடும் பரிவேல் அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனியானைச் சகோதரனே.
நாளென் செய்யும்வினை தானென் செயுமென நாடிவந்த
கோளென் செயும் கொடுங் கூற்றென் செய்யுங் குமரே சரிரு
தாளுஞ் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
ராமன் வழிபாடு:

கண்ணிரண்டும் ராமனைக் காணவே
காதிரண்டும் ராமனக் கேட்கவே
பண்ணிசை ராமனை பாடவே
பாதமிரண்டும் ராமனை நாடவே
எண்ணி எண்ணி ராமனை நேசிப்போம்
இதயப் பூவால் ராமனைப் பூசிப்போம்

புதன் வழிபாடு:

இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
புத பகவானே பொன்னடி போற்றி
பதந்தந் தாள்வாய் பண்ணொலியானே
உதவியே யருளும் உத்தமா போற்றி

வியாழக்கிழமை:
விநாயகர்:
வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான் விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணில் பணிமின் கனிந்து

சிவன்:
தோடுடைய செவியன் விடைஏறி
ஓர் தூவெண்மதி சூடிக்
காடுடைய சுடலைப் பொடி பூசி
என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாள்
பணிந்து ஏத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய
பெம்மான் இவன் அன்றே

அம்மன்:
நின்றும் இருந்தும் கிடந்தும்
நடந்தும் நினைப்பது உன்னை
என்றும் வணங்குவது உன்மலர்த்
தால் எழு தாமரையின்
ஒன்றும் அரும்பொருளே அருளே
உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே அழியா
முத்தி ஆனந்தமே

முருகன்:
மூவிரு முகங்கள் போற்றி
முகம் பொழி கருணை போற்றி
ஏவரும் துதிக்க நின்ற
ஈராறு தோள் போற்றி - காஞ்சி
மாவடி வைகும் செவ்வேள்
மலரடி போற்றி - அன்னான்
சேவலும் மயிலும் போற்றி
திருக்கைவேல் போற்றி போற்றி

பெருமாள்:
பச்சைமாமலை போல் மேனி
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரரேறே ஆயர்தம்
கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய்
இந்திரலோகமாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகருளானே.

வியாழன்:
குணமிகு வியாழக் குரு பகவானே
மனமுடன் வாழ மகிழ்வுடனருள்வாய்
ப்ருஹஸ்பதி வியாழப் பரதகுரு நேசா
கிரகதோஷ மின்றிக் கடாக்ஷித்தருள்வாய்

வெள்ளிக் கிழமை:
விநாயகர்:
அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றிற் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம் நல்ல
குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில் மேவும்
கணபதியக் கைதொழுதக் கால்

சிவன்:
சிவனோடொக்குந் தெய்வந் தேடினுமில்லை
அவனோ டொப்பாரிங்கு யாவருமில்லை
புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந்
தவனச் சடைமுடித் தாமரை யானே.

அன்புஞ் சிவமு மிரண்டென்பரறிவிலார்
அன்பே சிவமாவ தாரு மறிகிலார்
அன்பே சிவமாவ தாரு மறிந்தபின்
அன்பே சிவமா யமர்ந்திருந்தாரே

அம்மன்:
நாயகி நான்முகி நாராயணிகை நளினபஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கியென்
றாயகி யாதி உடையாள் சரணம் அரண்நமக்கே

ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டமெல்லாம்
பூத்தாளை மாதுளம் பூநிறத் தாளை புவிஅடங்கக்
காத்தாளை அங்குச பாசாங் குசமும் கரும்பும்அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒருதீங்கில்லையே

முருகன்:
ஆறிரு தடந்தோள் வாழ்க
அறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க
குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க
யானை தன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க
வாழ்க சீர் அடியாரெல்லாம்

விஷ்ணு:
அச்சுதன் அமலன் என்கோ
அடியவர் வினை கெடுக்கும்
நச்சு மாமருந்தும் என்கோ
நலங்கடல் அமுதம் என்கோ
அச்சுவைக்கட்டி என்கோ
அறுசுவை அடிசில் என்கோ
நெய்ச்சுவை தேறல் என்கோ
கனிஎன்கோ பால் என்கேனோ

சுக்கிரன்:
சுக்கிரமூர்த்தி சுபமிக யீவாய்
வக்கிரமின்றி வரமிகத் தருவாய்
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே

சனிக்கிழமை:
விநாயகர்:
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் யானை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை

சிவன்:
வேண்டத் தக்க தறிவோய் நீ
வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன்மாற் கரியோய் நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள்செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன் றுண்டென்னில்
அதுவும் உந்தன் விருப்பன்றே

அம்மன்:
மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த
அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே
பணியேன் ஒருவரை நின்பத்மபாதம் பணிந்தபின்னே
பயிரவி பஞ்சமி பாசாங் குசைபஞ்ச பாணிவஞ்சர்
உயிரவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிரும்கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வாராகி யென்றே
செயிரவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே

முருகன்:
சங்கரன் மகனே சரவண பவனே
ஐங்கரன் துணைவனே அமரர்தம் கோனே
செங்கண்மால் மருகனே தெய்வானை கேள்வனே
பங்கயம் போன்ற பன்னிரு கண்ணனே
பழனிமா மலையுறும் பன்னிரு கரத்தனே
அழகுவேல் ஏந்தும் ஐயனே சரணம்

பெருமாள்:
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்டோள் மணிவண்ணா! உன்
சேவடி செவ்விதிருக்காப்பு
அடியோ மோடும் நின்னோடும் பிரிவின்றி
ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற
மங்கையும் பல்லாண்டு
வடிவார் ஜோதி வலத்துறையும் சுடர்
ஆழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும் அப்பாஞ்ச
சன்னியமும் பல்லாண்டே!

சனி:
சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றிச் சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தா தா

ராகு:
அரவெனும் இராகு அய்யனே போற்றி
கரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கு
ஆகவருள்புரி அனைத்திலும் வெற்றி
இராகுக் கனியே ரம்மியா போற்றி

Thursday, March 19, 2015

மூல நோய்க்கு சித்த மருந்துகள்

மூல நோய்க்கு சித்த மருந்துகள்

காயத்தில் மூலங் கண்ட விதங்கேளு
பாயொத்த தீபனம் பரிந்தேயடக்கினும்
மாயை மயக்க மலத்தையடக்கினும்
ஓயுற்ற குண்டலினுக்குட் புகும் வாயுவே

என்று திருமூலர் மூல நோயின் உற்பத்தியை விவரிக்கின்றார் தீவிரமான பசியைத் தாங்கி சரியான நேரத்தில் சாப்பிடாதிரு ந்தாலும் ,உடலுறவின் போது சிறுநீர்,மலம் அடக்குவதாலும் , ஒரே இடத்தில் ஆசனங்களில் அமர்ந்து தொழில் புரிவோர்க் கும் மூலாதாரம் எனப்படும் ஆசன வாய்ப்பகுதியில் வெப்பம் மிகுந்து இந்நோய் தோன்றுகிறது .

மற்றும் உணவில் நார்ச்சத்து வகைகளை குறைத்து உண்பதா லும் மலச்சிக்கல் ஏற்பட்டு மூலநோய் ஏற்படும்,அடிக்கடி நீர் அருந்தாமையினாலும் குடல் இளக்கமின்றி இந்நோய் தோன் றும். அதிக உடலுறவு ,அதிக காரமான உணவுஉண்போருக்கும் பெண்களின் குழந்தைப்பேறு கால சமயங்களில் குழந்தை வெளி வரும் போது முக்குவதாலும் மூல நோய் தோன்றும்.

மூலநோயை சித்தர்கள் 21-வகையாகப் பிரித்துள்ளனர். ஆங்கில மருத்துவத்தில் இதனை மூன்று வகையாகக் கூறு கின்றனர்.வெளிப்படையாக நமக்கு புலப்படுவதும் இவைகள் தான்.

1- உள் மூலம்,-ஆசன வாயின் உட்பகுதியில் குருத்து போல் வளர்வது.

2- வெளி மூலம்,-ஆசனவாயின் தசைப்பகுதிகள் பிதுங்கி வெளி வருவது .

3- இரத்த மூலம்,-மலம் வெளிவரும் போது இரத்தம் கசிவது.

மூல நோயின் அறிகுறிகள் :
மலச்சிக்கல்,அடித்தொடை கணுக்கால் வலி குடைச்சல்,உடல் சோர்வு, களைப்பு, ஆசன வாய் எரிச்சல்,ஆசனக்கடுப்பு,மலத்தோடு குருதி கழிதல், மார்பு துடிப்பு,முக வாட்டம்,போன்றவை ஏற்படும்.மேலும் இரத்தமூலம் ஏற்பட்டு தினமும் இரத்தம் வெளி ஏறிக்கொண்டிருந்தால் உடலில் பலம் குறையும்,மயக்கம் உண்டாகும் .
 
மூல நோய் வராமல் தடுக்க :
உணவில் கீரை வகைகள்,காய் பழ வகைகள்,தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடிக்கடி நீர் அருந்தவேண்டும்,தினமும் காலை மாலை மலம் கழித்தல் வேண்டும்,மலச்சிக்கல் உள்ள போது  உடலுறவு கூடாது,தின மும் நடைப் பயிற்சி அல்லது எளிய உடற் பயிற்சி மேற்கொள்ளுதல் நல்லது.உணவில் விளக்கெண்ணை,நெய்,வெங்காயம்,தவறாது சேர்த்தல்  வேண்டும்.கருணைக் கிழங்கு அடிக்கடி உணவில் சேர்த்தல் நன்று.

மூல நோய்க்கு எளிய மூலிகை மருந்துகள்:

1- பிரண்டைக் கொடியின் கணுப்பகுதியை நீக்கிவிட்டு நெய் விட்டு வதக்கி புளி,பருப்பு சேர்த்து துவையல் செய்து வாரம் இரு முறை சாப்பிட்டு  வர மூலம் கரைந்து விடும்.

2- மூல நோய்க்கு துத்தி இலை சிறந்த மருந்தாகும். இரண்டு கை அளவு துத்தி இலை,நறுக்கிப் போட்டு, சிறிது மஞ்சள் தூள்,சிறிய வெங்காயம் பத்து,அரிந்து போட்டு விளக்கெண்ணை விட்டு வதக்கி மிளகுத்தூள்,உப்பு சிறிது சேர்த்து பத்து நாள் தொடர்ந்து சாப்பிட மூல நோய் குணமாகும்.

3- வெளி மூலத்திற்கு துத்தி இலை ஒரு கை பிடி அளவு எடுத்து அதனுடன் சிறிது மஞ்சள்தூள் விளக்கெண்ணை விட்டு வதக்கி இளம் சூட்டுடன் ஆசன வாயில் வைத்து இரவில் கட்டிவர சில நாட்களில் வெளி மூலம் சுருங்கி விடும்.(தினமும் கட்டவும்)

4- நன்றாக செழித்து வளர்ந்த குப்பைமேனி செடியைத் தேவையான அளவு  எடுத்து வந்து தண்ணீரில் அலசி சுத்தம் செய்து வெயிலில் போட்டு நன்கு காய விடவும். காய்ந்த பின் இலை,வேர்,தண்டு அனைத்தையும் இடித்து தூள் செய்து வைத்துக்கொள்ளவும்.இதில் அரை டீஸ்பூன் அளவு எடுத்து பசு வெண்ணை ஒரு எலுமிச்சை அளவு சேர்த்துப் பிசைந்து காலை , மாலை என நாற்ப்பத்து எட்டு நாள் சாப்பிட்டு வர அனைத்து மூல வியாதியும் குணமாகும் .
இந்த மருந்துகளைச் சாப்பிட்டு வரும் போது அதிக காரம்,பச்சை மிளகாய்,கோழிக்கறி சேர்க்கக் கூடாது.மிளகு சேர்த்துக் கொள்ளலாம். உடல் உறவு கூடாது.

Friday, March 13, 2015

Web pay roll

http://www.tntam.in/2015/03/web-pay-roll-demo-video.html?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed:+blogspot/DMdkI+(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95+%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D++(TAM))&m=1

Wednesday, March 11, 2015

தொப்பையை குறைக்க என்ன செய்யலாம்

தொப்பையை குறைக்க என்ன செய்யலாம்

தொப்பையைக் குறைக்க உணவுகளுக்கு அடுத்தபடியாக உதவுவது உடற்பயிற்சி தான். எனவே தொப்பையைக் குறைக்க உதவும் உணவுகளுடன்,
தினமும் உடற்பயிற்சியையும் தவறாமல் மேற்கொண்டு வந்தால், நிச்சயம் தொப்பையைக் குறைக்கலாம்.

அதிலும் உங்களுக்கு ஜிம் சென்று உடற்பயிற்சி செய்ய நேரமில்லையா? எந்த ஒரு கருவிகளின் உதவியும் இல்லாமல் ஈஸியான உடற்பயிற்சியின் மூலமே தொப்பையைக் குறைக்கலாம். வயிற்றில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகளை பார்க்கலாம். உடற்பயிற்சி செய்யும் போது, கலோரிகளானது கரைக்கப்பட்டு, உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் கரைந்து, தொப்பையும் குறைய ஆரம்பிக்கும்.

தொப்பையைக் குறைக்க கடுமையான உடற்பயிற்சி தான் அவசியம் என்பதில்லை. தினமும் எளிய உடற்பயிற்சியான ரன்னிங்/வாக்கிங்கை மேற்கொண்டாலே, கொழுப்பை கரைக்கலாம். ஆனால் ரன்னிங்/வாக்கிங் மேற்கொள்ளும் போது, நாளுக்கு நாள் கொஞ்சம் கொஞ்சமாக தூரத்தை அதிகரிப்பதுடன், உடற்பயிற்சிக்கு முன்னும், பின்னும் வாம்ப் அப் செய்து உடலை ரிலாக்ஸ் செய்ய மறக்க வேண்டாம்.

உங்களால் உடற்பயிற்சி இயந்திரங்களை வாங்க முடிந்தால், நீள் பயிற்சி கருவியை வாங்கி தினமும் உடற்பயிற்சி செய்து வாருங்கள். இந்த உடற்பயிற்சி இயந்திரம் தொப்பையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இந்த இயந்திரத்தில் தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்தால், 300 கலோரிகளை கரைக்கலாம்.

உங்கள் வீட்டில் சைக்கிள் இருந்தால், தினமும் அதிகாலையில் சிறிது தூரம் சைக்கிளில் வெளியே பயணம் செய்யுங்கள். ஏனெனில் சைக்கிள் ஓட்டுவதன் மூலம், கால்கள் வலிமையடைவதுடன், குனிந்தவாறு ஓட்டுவதால் வயிற்றில் உள்ள கொழுப்புக்களும் கரையும்.

எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கக் கூடிய நன்மைகள்!!!

எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கக் கூடிய நன்மைகள்!!!
      எலுமிச்சை சாற்றை

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் இளஞ்சூடான எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கக் கூடிய நன்மைகள்!!!

1. எமது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது...
எலுமிச்சையில் நிறைய விட்டமின் சீ அடங்கியுள்ளதால் , தடிமன் முதலிய சிறு நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. பொட்டாசியம் மூளை, நரம்பு கடத்துகையை சீராக்கிறது. குருதிச் சுற்றோட்டத்தை கட்டுப்படுத்துகிறது.

2. உடலின் pH ஐ சீராக்குகிறது...
எலுமிச்சைச் சாறில் சிட்ரிக் அமிலம் இருக்கிறது. ஆயினும், சமிபாட்டு செயன்முறையால், அது மூலச்சேர்க்கையாக மாறி, உடலின் அமிலத்தன்மையை நீக்குகிறது...

3. உடல் எடையைக் குறைக்கிறது...
எலுமிச்சையில் உள்ள பெக்டின் நார்ப்பொருள் பசியைக் குறைக்கிறது. மூலத்தன்மையுள்ள உணவுகளை அதிகம் உண்பவர்கள் மெலிவான உடல்வாகை கொண்டிருப்பது நிருபணமான உண்மை...

4. சமிபாட்டை வேகப்படுத்துகிற து...

5. சிறுநீர்த் தொகுதியைச் சுத்திகரிக்கிறத ு.

6. தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்களைக் குறைக்கிறது.

7. வாய்த்துற்நாற்ற த்தை போக்கி, சீரான சுவாசம் தருகிறது...

8. நுரையீரல் தொற்றுக்களை குறைக்கிறது.

9. Stress ஐ குறைக்கிறது.
இது விட்டமின் சீ காரணமாய் இருக்கலாம் என்பது தியறி. ஆனால் நிருபிக்கப்படவில்லை.

10. காலையில் டீ அல்லது கோப்பி குடிக்கும் கெட்ட பழக்கத்தை நீக்குகிறது.

Tuesday, March 10, 2015

வாட்ஸ் அப் பயன்பாட்டில் பாதுகாப்பு இல்லை உஷார் மக்கா உஷார்

வாட்ஸ் அப் பயன்பாட்டில் பாதுகாப்பு இல்லை உஷார் மக்கா உஷார்

உடனடி செய்திகளைப் பரிமாறிக் கொள்வதில், இன்று மிகப் பெரிய அளவில் வாடிக்கையாளர்களைக் கொண்ட தளமாக வாட்ஸ் அப் வளர்ந்துவிட்டது.
நீங்கள் வாட்ஸ் அப் பயன்படுத்துபவராக இருந்தால், அதில் உள்ள பாதுகாப்பு குறைவான வழிகள் சிலவற்றை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

இணைய மால்வேர் புரோகிராம்கள்: இப்போது வாட்ஸ் அப் அப்ளிகேஷனை, பெர்சனல் கம்ப்யூட்டரில் பிரவுசர் வழியாகப் பயன்படுத்தலாம் என்று வாட்ஸ் அப் அறிவித்துள்ளது. இதனால், பல ஹேக்கர்கள், வாட்ஸ் அப் தளத்திலிருந்து வருவதைப் போன்ற செய்திகளை உலா விட்டுள்ளனர். பல வாடிக்கையாளர்கள், இந்த போலியான தளங்களில் சிக்கி, கொத்து கொத்தாகத் தங்கள் கம்ப்யூட்டரில் மால்வேர் புரோகிராம்களைத் தரவிறக்கம் செய்து இன்னலுக்கு ஆளாகின்றனர். ஆண்ட்டி வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்களைத் தயாரித்து வழங்கும் காஸ்பெர்ஸ்கி லேப்ஸ், வாட்ஸ் அப் போல, போலியாக இயங்கும், அதுவும் பல்வேறு மொழிகளில் இயங்கும் தளங்களைக் கண்டறிந்துள்ளனர். இவை, வங்கிக் கணக்குகள் போன்றவற்றைக் கண்டறிந்து கறந்துவிடும் வகையில் இயங்கும் மால்வேர்களாக உள்ளன. இதிலிருந்து தப்பிக்கும் வழி எளியதுதான். பெர்சனல் கம்ப்யூட்டரில் வாட்ஸ் அப் செயலி இயங்க வேண்டும் என்றால், அந்த நிறுவனத்தின் இணைய தள முகவரி உள்ள உண்மையான தளம் சென்று, அதற்கான புரோகிராமினைத் தரவிறக்கம் செய்திடவும். நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி http://web.whatsapp.com/.

கிராஷ் ஆகும் செய்திகள்: யாராவது ஒருவர், உங்களுக்கு 7 எம்.பி. அளவிலான மெசேஜ் ஒன்றை வாட்ஸ் அப் செயலி மூலம் அனுப்பினால், உங்கள் அக்கவுண்ட் க்ராஷ் ஆகும் வாய்ப்பு உள்ளது. இது அண்மையில் கண்டறியப்பட்டது. இந்த செய்தியைப் பெற்ற பின்னர், எப்போது வாட்ஸ் அப் சென்றாலும், அது க்ராஷ் ஆனது.

இது பரவலான பின்னர், தற்போது 2 எம்.பி. அளவில் செய்தி அனுப்பினாலும் க்ராஷ் ஆனது தெரியவந்தது. இந்த செய்தியில், சில ஸ்பெஷல் கேரக்டர்கள் இருந்தன. மெசேஜ் பேக் அப் ஆனாலும், அந்த குறிப்பிட்ட செய்தி வந்த உரையாடலை மீண்டும் சென்று பார்த்தால், அது கிராஷ் ஆனது. இது அந்த மெசேஜ் அனுப்பியவருக்கும் பெற்றவருக்கும் மட்டுமின்றி, இவர்களில் யாரவது ஒருவர், குரூப் ஒன்றில் சேர்ந்திருந்தால், அந்த குழுவின் நடவடிக்கைகளும் கிராஷ் ஆகும். இது தனிப்பட்ட நபருக்குப் பெரிய இழப்பினைத் தராது. இதுவே, நிறுவனங்களுக்கானது எனில், ஈடுகட்ட முடியாத இழப்பினைத் தரும். இந்த பிரச்னைக்கான தீர்வினை இன்னும் யாரும் தரவில்லை. விரைவில் வாட்ஸ் அப் அல்லது பேஸ்புக் பொறியாளர்கள், தீர்வினைக் கண்டு தருவார்கள் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். இந்த கிராஷ் ஆகும் பிரச்னை, ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் செயல்படும் வாட்ஸ் அப் செயலியில் மட்டுமே ஏற்படுகிறது. மற்ற இயக்க முறைகளில் உள்ள வாட்ஸ் அப் செயலியில் ஏற்படவில்லை.

மீறப்படும் ப்ரைவசி செட்டிங்ஸ்: அண்மைக் காலத்தில், வாட்ஸ் அப் செயலிக்கான பாதுகாப்பு கூடுதலாகப் பலப்படுத்தப்பட்டது. இருப்பினும், வாட்ஸ் அப் வாடிக்கையாளர்கள் குறித்த தகவல்கள் திருடப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. மைக்கேல் என்பவர், வாட்ஸ் அப் நாம் எண்ணுகிறபடி, அதிக பாதுகாப்பு கொண்ட செயலி அல்ல என்று கூறியுள்ளார். WhatsSpy Public என்ற தர்ட் பார்ட்டி புரோகிராம் மூலம், அடுத்தவருடைய ஸ்டேட்டஸ் மெசேஜ், ஸ்டேட்டஸ் மாற்றங்கள், அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் போட்டோ, அதன் மாற்றம் ஆகியன குறித்து உடனுடக்குடன் அறியலாம் எனத் தெரிவித்துள்ளார். இந்த செயலியின் மூலம், மற்றவர்களின் செட்டிங்ஸ் அமைப்பினையும் மாற்ற முடியும். துரதிருஷ்டவசமாக, இதற்கு எதிராக நாம் எதுவும் செய்திட முடியாது. வாட்ஸ் அப் நிறுவன வல்லுநர்களே, இதற்கான பாதுகாப்பு பைலை வழங்கிட வேண்டும்.

மற்ற பயனாளர்களை வேவு பார்ப்பது: வாட்ஸ் அப் அண்மையில், அதன் செயலியில் இடப்படும் செய்திகளை, தகவல்களை, அனுப்பப்பட்ட இடத்திலிருந்து, அது பெறப்படும் இடம் வரையிலும், பாதுகாப்பான முறையில் சுருக்கி அனுப்பி, இறுதி நிலையில் விரித்துக் காணும் வகையில் அமைத்திருந்தது. இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரும், நம் உரையாடல்களை இன்னொருவர் கைப்பற்ற முடியும் என்ற உண்மை நம்மைப் பயமுறுத்துகிறது. mSpy என்ற ஒரு சாப்ட்வேர் புரோகிராம், ஒருவர் அனுப்பும் மெசேஜ்கள், அழைப்புகள், பிரவுசிங் தளங்கள் இன்னும் பல விஷயங்கள் குறித்து, இந்த சாப்ட்வேர் நிறுவியவருக்கு அனுப்புகிறது. இந்த ஸ்பை வேர் செயலியை, உங்கள் போனில் சில நொடிகளில் பதித்துவிடலாம் என்பதால், அது உங்கள் போனில் வருவது உங்களுக்குத் தெரியாமலே போகலாம்.

இது போன்ற வேவு பார்க்கும் புரோகிராம்களை, நம் போனில் இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்களின் பட்டியலை அவ்வப்போது ஆய்வு செய்தால், கண்டறிந்து நீக்கிவிடலாம்.

வாட்ஸ் அப் செயலியை அன் இன்ஸ்டால் செய்திட வேண்டுமா? இவ்வளவு சிக்கல்கள், மால்வேர் புரோகிராம்கள் பாதிக்கும் வாட்ஸ் அப் மெசஞ்சர் செயலியை, நாம் வைத்துக் கொள்ள வேண்டுமா? நீக்கிவிடலாம் என்று தோன்றுகிறதா? வேண்டாம். அவ்வாறு நீக்க வேண்டாம். இன்றைக்கு இணைய உலகில், இன்ஸ்டண்ட் மெசேஜ் அனுப்ப உதவும் செயலிகளில், அதிக அளவு எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களைக் கொண்டிருப்பது வாட்ஸ் அப் புரோகிராம் தான். எனவே, இதனை எப்படி பாதுகாப்பாகப் பயன்படுத்தலாம் என்று சிந்தித்துச் செயல்படவும்.

Monday, March 09, 2015

விண்டோஸ் 7 ஷார்ட்கட் கீகள்

விண்டோஸ் 7 ஷார்ட்கட் கீகள்

எப்2 - தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றின் பெயர் மாற்ற
எப்3 - பைல் அல்லது டூல் பாரினைத் தேட

எப்4 - விண்டோஸ் எக்ஸ்புளோரரில் அட்ரஸ் பார் பட்டியலைக் காட்ட
எப்5 - அப்போதைய விண்டோவினை ரெப்ரெஷ் செய்திட
எப்6 - ஒரு விண்டோ அல்லது டெஸ்க்டாப்பில் காட்டப்படும் ஸ்கிரீன் ஆப்ஜெக்ட்கள் ஒவ்வொன்றாகச் செல்ல
எப்10 - இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராமில், மெனு பாரினை இயக்கத்திற்குக் கொண்டு வர
டெலீட் - தேர்ந்தெடுத்ததனை அழித்து, ரீ சைக்கிள் பின்னுக்குக் கொண்டு செல்ல
எஸ்கேப் - அப்போதைய செயல்பாட்டினை நிறுத்த (தேர்ந்தெடுத்த விண்டோவினை மூட)
வலது ஆரோ - வலது பக்கம் உள்ள அடுத்த மெனுவினைத் திறக்க / துணை மெனு ஒன்றைத் திறக்க
இடது ஆரோ - இடது பக்கம் உள்ள அடுத்த மெனுவினைத் திறக்க / துணை மெனு ஒன்றைத் திறக்க

Friday, March 06, 2015

ஆண்ட்ராய்ட் போன்களை நாமே பழுது பார்க்கலாம்

ஆண்ட்ராய்ட் போன்களை நாமே பழுது பார்க்கலாம்

கேட்ஜெட் பிரியர்கள் மத்தியில் ஐபிக்ஸிட் (iFixit) இணையதளம் மிகவும் பிரபலமானது. இந்தத் தளம் நவீன் சாதனங்களை அக்குவேறு ஆணி
வேறாகப் பிரித்து அதன் செயல்பாடுகளை விளக்கி, அவற்றைப் பயனாளிகளே பழுதுபார்த்துக்கொள்ள வழிகாட்டக்கூடியது. இந்தத் தளத்தின் பின்னே பெரிய இணைய சமூகமே இருக்கிறது. எல்லோருமே கேட்ஜெட் செயல்பாடுகளை அறிவதில் ஆர்வம் கொண்டவர்கள். அவற்றைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறவர்கள். இந்தத் தளத்தில் உள்ள ஒரே குறை என்ன என்றால் இது ஐபோன், ஐபேடு சாதனங்களைப் பிரதானமாகக் கொண்டது என்பதுதான்.

ஆனால் இந்தக் குறை இனி இல்லை. ஆம், இப்போது ஐபிக்ஸ்டி ஆண்ட்ராய்டு சாதனங்களுக்காகவும் அறிமுகமாகியிருக்கிறது. ஆண்ட்ராய்டு போன்களே பிரபலமாக இருப்பதால் இந்த வகை சாதங்களுக்கான பகுதி தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 252 சாதனங்களுக்கான டியர்டவுன் வழிகாட்டி இடம்பெற்றுள்ளது. அதாவது அந்தச் சாதனங்களைத் தலைகீழாகப் பிரித்துப்போட்டு அவற்றின் செயல்பாடுகள் விளக்கப்பட்டிருக்கும். ஸ்மார்ட் போன், டேப்லெட்கள் இதில் அடங்கும். இவற்றுக்கான பாகங்களை வாங்கும் வசதியும் இருக்கிறது.

ஆண்ட்ராய்ட் சாதனம் தொடர்பாக எந்தச் சந்தேகம் என்றாலும் இந்த இணையதளத்துக்கு செல்லுங்கள். தகவல்களைத் தெரிந்துகொள்ளுங்கள், ஆனால் போனில் கை வைக்கும்போது நீங்கள்தான் பொறுப்பு.

ஆண்ட்யாடுக்கான ஐபிக்ஸிட் தளம்

மெமரி கார்டு சரி செய்வது எப்படி.


மெமரி கார்டு சரி செய்வது எப்படி.

மெமரி கார்டு திடீரென எரர் மெசேஜ் காட்டும் போது பயம் கொள்ள வேண்டாம், அனேகமாக அவற்றில் இருக்கும் தகவல்கள் தொலைய வாய்ப்புகள் குறைவு தான். உங்களிடம் கணினி மற்றும் கார்டு ரீடர் இருந்தால் கரப்ட் ஆன மெமரி கார்டை சுலபமாக சரி செய்துவிடலாம்.

*மென்பொருள் *

முதலில் டேட்டா ரிக்கவரி ப்ரோகிராம் ஒன்றை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யவேண்டும். முதலில் முக்கியமான தகவல்களை மீட்க வேண்டும்.

*கார்டு ரீடர் *

யுஎஸ்பி கார்டு ரீடரில் மெமரி கார்டை செருகி கணினியில் பொருத்த வேண்டும்.

*ரிக்கவரி *

டேட்டா ரிக்கவரி ப்ரோகிரம் மூலம் கரப்ட் ஆன மெமரி கார்டில் இருந்து தகவல்களைரிக்கவர் செய்ய முயற்சி செய்யலாம்.

*விண்டோஸ் *

விண்டோஸ் கணினி மூலம் சரி செய்ய, முதலில் மெமரி கார்டை கார்டு ரீடரை கொண்டுகனெக்ட் செய்ய வேண்டும்.

*கம்ப்யூட்டர் *

ஸ்டார்ட் மெனு சென்று Computer என க்ளிக் செய்ய வேண்டும்.

*மெமரி கார்டு *

கணினியில் டிவைசஸ் மற்றும் ரிமூவபிள் ஸ்டோரேஜ் பகுதியில் உங்களது மெமரி கார்டுகாணப்படும்.

*கமான்ட் ப்ராம்ப்ட்*

டெஸ்க்டாப்பில் ⊞ Win+R பட்டன்களை க்ளிக் செய்து cmd என டைப் செய்து OK பட்டனைக்ளிக் செய்ய வேண்டும்.

*செக் டிஸ்க் *

கமான்ட் ப்ராம்ப்ட் ஸ்கிரீனில் chkdsk m: /r, என டைப் செய்ய வேண்டும், இங்குm: வார்த்தை உங்களது மெமரி கார்டை குறிக்கும், அதன் பின் ↵ Enter பட்டனைக்ளிக் செய்ய வேண்டும்

Thursday, March 05, 2015

பேதி மாத்திரை

பேதி மாத்திரை

நம் உடலிற்குத் தேவையான சத்துகள் நாம் உண்ணும் உணவில் இருந்தே பெறுகிறோம். உணவில் இருந்து சத்துக்களை உடலுக்கு பிரித்தளிக்கும் வேலையை செய்வது நமது வயிறு. இதனை தூய்மையாய் வைத்திருந்தால் உடல் ஆரோக்கியத்தை பேண முடியும் என்கின்றனர் சித்தர் பெருமக்கள்.

எப்படி சுத்தமாய் வைத்திருப்பது என்கிற கேள்வி இன்னேரத்துக்கு உங்களுக்கு வந்திருக்கும்.

ஒரு நாளிற்கு இரண்டு முறை மலம் கழிப்பதும், வருடத்திற்கு இரு முறை பேதி மருந்து உட்கொள்வதும் தான் அந்த விதிகள்.

எளிமையான விதிகள் தானே.!

எல்லாம் சரிதான், அதென்ன பேதி மருந்து?

இந்த பேதி மருந்தைப் பற்றி தேரையர் தனது "தேரையர் வைத்திய காவியம்" நூலில் "பேதி மாத்திரை" என்ற பெயரில் அருளியிருக்கிறார். அந்த பாடல்கள் பின்வருமாறு...

ஆகும் பேதி யரையுங் கிராம்புடன்
வாகு வோமம் வரையும் லவங்கமும்
பாகு சீரம் பகருஞ் சாதிக்காயும்
கூகு நீருங் குறிப்பாய் சமன்தூக்கே.

தூக்கு சுக்குடன் துய்ய கஸ்தூரியும்
தாக்கி வேளை தனிய வசம்புடன்
போக்கில்லாத பொருந்துங் கஸ்தூரியும்
நோக்கி வென்னீரில் நுருங்க வரைத்திடே.

அரைத்துச் சுண்டைக் காயளவுப் பிரமாணம்
கரைத்து வென்னீரிற் காலையில் தானீய
வரைத்த பேதியும் வாகாப் பிழிந்திடும்
திரைத்த வென்னீரு மன்னமு முண்டிடே

கராம்பு, ஓமம், லவங்கம், சீரகம், சாதிக்காய், சுக்கு, கஸ்தூரி, வசம்பு, ஆகிய சரக்கு வகைகளைச் சம அளவாக நிறுத்து எடுத்து, அவற்றை கல்வத்தில் போட்டு நீர் விட்டு நன்றாக அரைத்து, சுண்டைக்காய் அளவில் குளிகைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி எடுத்து சேமித்துக் கொள்ள வேண்டுமாம். இதுவே "பேதி மாத்திரை".

தேவை ஏற்படும் போது இந்த மாத்திரையில் ஒன்றினை எடுத்து காலை வேளையில் வெறும் வயிற்றில் வெந்நீரில் கரைத்து கொடுத்தால் நன்றாகப் பேதியாகுமாம். இதற்கு பத்தியமாக மருந்துண்ணும் நாளில் சாதத்தில் வெந்நீர்விட்டு சாப்பிடவேண்டும் என்கிறார்.

மாத்திரை - மாத்திரை என்றால் அளவு என்று பொருள். எந்த அளவில் மருந்து கொடுக்க வேண்டுமோ அதற்குரிய அளவுக்குரியது மாத்திரை எனப்படும் உருண்டையாக இருப்பதால் உண்டை என்பர். சில சரக்குகளைச் சேர்த்து சாறுகள் அல்லது குடிநீர்களால் அரைத்து அளவாக உருட்டி உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்வது.

Wednesday, March 04, 2015

குழந்தைகளுக்கு கூகுளில் புது வசதி

குழந்தைகளுக்கு கூகுளில் புது வசதி

அவ்வப்போது ஏதேனும் புதுமையான வசதிகளைத் தன் வாடிக்கையாளர்களுக்குத் தருவது, கூகுள் நிறுவனத்தின் வாடிக்கை. அந்த
வகையில், சென்ற திங்கள் கிழமை, குழந்தைகள் பாதுகாப்பாகப் பயன்படுத்தவென, யு ட்யூப் கிட்ஸ் (YouTube Kids) என்ற பெயரில் அப்ளிகேஷன் ஒன்றை, ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் இயங்குவதற்கென தயாரித்து வழங்கியுள்ளது. குழந்தைகள் மற்றும் சிறுவர்களை இலக்காகக் கொண்டு இந்த அப்ளிகேஷன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. இதன் மூலம், சிறுவர்கள், தாங்கள் தேடி அறிய விரும்பும் தளங்களைப் பாதுகாப்பாகவும், எளிதாகவும் பெற முடியும். இந்த அப்ளிகேஷன் மூலம் இணையதளத்தில் தேடுகையில், சிறுவர்கள் பார்க்கக் கூடாத தளங்கள் மறைக்கப்படும். குழந்தைகளும், சிறுவர்களும் பார்க்கக் கூடிய, தேடப்படும் பொருள் சார்ந்த தளங்கள் மட்டுமே காட்டப்படும்.
இந்த அப்ளிகேஷனில் மூன்று சிறப்பம்சங்கள் உள்ளன:

1. பளிச் என்ற பெரிய படங்கள்: மிகப் பெரிய அளவிலான ஐகான்கள், அதைக் காட்டிலும் பெரிய படங்கள் காட்டப்படுவதால், குழந்தைகள் மிக எளிதாக, படங்களை, ஐகான்களைத் தேர்ந்தெடுக்கலாம். இதில் ஒலி வழி தேடல் (voice search) என்னும் டூல் இருப்பதால், குழந்தைகளுக்குச் சரியாக டைப் செய்திடத் தெரியாவிட்டாலும், தஙகளுக்குத் தேவையானவற்றைக் குரலில் வெளிப்படுத்தியும் பிரியப்பட்ட வீடியோவினைத் தேடிப் பெறலாம் என கூகுள் அறிவித்துள்ளது. குழந்தைகளின் மழலைப் பேச்சினை எப்படி, இந்த டூல் அறிந்து தேடல் விடைகளைத் தரும் என்பது கேள்விக் குறியே.

2. குடும்பத்தை மையமாகக் கொண்ட தகவல்கள்: இந்த புதிய டூல், குடும்பங்களை மையமாகக் கொண்ட தகவல்களைத் தருவதாகக் கூகுள் அறிவித்துள்ளது. எனவே, குழந்தைகளும், சிறுவர்களும் பார்க்கக் கூடிய படங்கள் மட்டுமே காட்டப்படும் என்பதால், பெற்றோர்கள் சற்று நிம்மதிப் பெருமூச்சு விடலாம். அத்துடன், கூகுள் சிறுவர்களுக்கான விடியோ படங்கள் தயாரிப்பவர்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, தொடர்ந்து வீடியோ படங்களை அப்லோட் செய்திட வழி மேற்கொண்டுள்ளது.

3. பெற்றோர்களின் கட்டுப்பாடு: யு ட்யூப் கிட்ஸ் டூல், பெற்றோர்கள் மேற்கொள்ளக் கூடிய கட்டுப்பாட்டிற்கான வழிகளுடன் (parental control). பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளிடம் டேப்ளட் பி.சி.க்களைத் தரும் முன், அவர்கள் பார்க்கக் கூடிய நேரத்தினை அமைத்துவிட்டுப் பின்னர் தந்துவிடலாம்.

அது மட்டுமின்றி, தேடல் சாதனத்தின் இயக்கத்தினையும் குறிப்பிட்ட நேரத்திற்கு முடக்கி வைக்கலாம். குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் வகையில், யு ட்யூப் இயக்கத்தினை மாற்றத் திட்டமிடும் கூகுள் நிறுவனத்தின் முதல் கட்ட முயற்சி இந்த யு ட்யூப் கிட் என எடுத்துக் கொள்ளலாம். இந்த டூல் தொடர்ந்து, மேலும் பல வசதிகளைத் தரும் வகையில், மேம்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Tuesday, March 03, 2015

வாகன பதிவு எண்ணை வைத்து உரிமையாளரை அறிய வேண்டுமா

வாகன பதிவு எண்ணை வைத்து உரிமையாளரை அறிய வேண்டுமா
ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம்.

0 921 235 7123 என்ற எண்ணுக்கு "vahan<space>பதிவு எண்" என்று அனுப்ப வேண்டும்.

எடுத்துக்காட்டு: vahan tn74a0000 அடுத்த விநாடியே வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை, வரி செலுத்திய விபரம், தகுதிச் சான்று முடிவடையும் தேதி ஆகிய விபரங்கள் தாங்கிய SMS வந்துவிடும்.

விபத்து நிகழ்த்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை உடனடியாக கண்டுபிடிக்க இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தமிழ்நாடு registration number விபரங்கள் பின்வருமாறு:

TN01 - சென்னை (மத்திய)
TN02 - சென்னை (வடமேற்கு)
TN03 - சென்னை (வட கிழக்கு)
TN04 - சென்னை (கிழக்கு)
TN05 - சென்னை (வடக்கு)
TN06 - சென்னை (தென்கிழக்கு)
TN09 - சென்னை (மேற்கு)
TN10 - சென்னை (தென்மேற்கு)
TN11 - தாம்பரம்
TN11Z - சோழிங்கநல்லூர்
TN16 - திண்டிவனம்
TN18 - REDHILLS
TN18Z - அம்பத்தூர்
TN19 - செங்கல்பட்டு
TN19Z - மதுராந்தகம்
TN20 - திருவள்ளூர்
TN20Y - பூணாமல்லி
TN21 - காஞ்சிபுரம்
TN21W - ஸ்ரீபெரும்புதூர்
TN22 - மீனம்பாக்கம்
TN23 - வேலூர்
TN23T - குடியாத்தம்
TN23Y - வாணியம்பாடி
TN24 - கிருஷ்ணகிரி
TN25 - திருவண்ணாமலை
TN25Z - ஆரணி
TN28 - நாமக்கல்
TN28Y - பரமாதி வெள்லூர்
TN28Z - ராசி புரம்
TN29 - தர்மபுரி
TN29W - பாலக்கோடு
TN29Z - ஹரூர்
TN30 - சேலம் (மேற்கு)
TN30W - ஓமலூர்
TN31 - கடலூர்
TN31U - சிதம்பரம்
TN31V - விருதாசலம்
TN31Y - நெய்வேலி
TN32 - விழுப்புரம்
TN32W - கள்ளக்குறிச்சி
TN32Z - உளுந்தூர்பேட்
TN33 - ஈரோடு
TN34 - திருச்செங்கோடு
TN36 - கோபிசெட்டிபாளயம்
TN36W - பவானி
TN36Z - சத்தியமங்கலம்
TN37 - கோவை (தெற்கு)
TN38 - கோவை (வடக்கு) -
TN39 - திருப்பூர் (வடக்கு)
TN39Z - அவிநாசி
TN40 - மேட்டுப்பாளையம்
TN41 - பொள்ளாச்சி
TN42 - திருப்பூர் (தெற்கு)
TN42Y - கங்கயம்
TN43 - ஊட்டி
TN43Z - கூடலூர்
TN45 - திருச்சிராப்பள்ளி
TN45Y - திருவெறும்பூர்
TN45Z - மணப்பாறை
TN46 - பெரம்பலூர்
TN47 - கரூர்
TN47Z - குளித்தலை
TN48 - ஸ்ரீரங்கம்
TN48Z - துறையூர்
TN49 - தஞ்சாவூர்
TN49Y - பட்டுக்கோட்டை
TN50 - திருவாரூர்
TN50Z - மன்னார்குடி
TN51 - நாகப்பட்டினம்
TN51Z - மயிலதுறை
TN52 - சங்கரி
TN52Z - மேட்டூர்
TN54 - சேலம் (கிழக்கு)
TN55 - புதுக்கோட்டை
TN55Z - அறந்தாங்கி
TN56 - பெருந்துறை
TN57 - திண்டுக்கல்
TN57R - ஒட்டன்சத்திரம்
TN57V - வடசந்தூர்
TN57Y - பட்டலகுண்டு
TN57Z - பழனி
TN58 - மதுரை (தெற்கு)
TN58Z - திருமங்கலம்
TN59 - மதுரை (வடக்கு)
TN59V - வாடிப்பட்டி
TN59Z - மேலூர்
TN60 - தேனி
TN60Z - உத்தமபாளயம்
TN61 - அரியலூர்
TN63 - சிவகங்கை
TN63Z - காரைக்குடி
TN64 - மதுரை (தெற்கு)
TN65 - ராமனாதபுரம்
TN65Z - பரமக்குடி
TN66 - கோவை (மத்திய)
TN67 - விருதுநகர்
TN67U - சிவகாசி
TN67Z - ஸ்ரீவிலிபுதூர்
TN68 - கும்பகோணம்
TN69 - தூத்துக்குடி
TN69Y - திருச்செந்தூர்
TN69Z - கோவில்பட்டி
TN70 - ஒசூர்
TN72 - திருநெல்வேலி
TN72V - வள்ளியூர்
TN73 - ராணிப்பேட்
TN73Z - அரக்கோணம்
TN74 - நாகர்கோவில்
TN75 - மார்த்தாண்டம்
TN76 - தென்காசி
TN76V - அம்பாசமுத்திரம்
TN76Z - சங்கரன்கோவில்
TN77 - ஆத்தூர்
TN77Z - வாழப்பாடி
TN78 - தாராபுரம்
TN78Z - உடுமலைப்பேட்டை

நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள் !!

பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ,

செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு :— 93833 37639

பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு:- Toll Free No :- 180011400,, 94454 64748,, 72999 98002,, 72000 18001,, 044- 28592828

மனரீதியாக பாதிக்கப்பட்ட,ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க:- 044 – 26530504 / 26530599

வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள்– 044- 26184392 / 9171313424

ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்: 044- 25353999 / 90031 61710 / 99625 00500

ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால் —044-24749002 / 26744445

சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற 95000 99100 ( SMS )

மனிதஉரிமைகள் ஆணையம் ————-––044-22410377

மாநகரபேருந்தில அத்துமீறல்————–—-09383337639

போலீஸ் SMS :- —————————————-9500099100

போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :—-—-9840983832

போக்குவரத்து விதிமீறல் SMS : ———-—–98400 00103

வங்கித் திருட்டு உதவிக்கு ———————-9840814100

வன்கொடுமை, பாலியல் ரீதியாக ———-044-28551155

கோடைகால உணவு

தர்பூசணி

தர்பூசணியில் நீர்ச்சத்து 92% உள்ளது. மேலும் இது கோடையில் அதிக அளவில் கிடைக்கும் பழமும் கூட. ஆகவே இந்த பழத்தை அடிக்கடி வாங்கி சாலட் செய்து சாப்பிடுங்கள். இந்த சாலட் சுவையாக இருப்பதற்கு தர்பூசணியுடன், மிளகுத் தூள் மற்றும் உப்பு தூவி சாப்பிடுங்கள்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயும் கோடையில் அதிகம் கிடைக்கும் உணவுப் பொருட்களில் ஒன்று. இது உடலின் நீர்ச்சத்தின் அளவை அதிகரிப்பதோடு, உடலை குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்ளும். மேலும் இதில் தர்பூசணியை விட அதிக அளவு, அதுவும் 96% நீர்ச்சத்து உள்ளது. மேலம் இதில் கொழுப்புக்கள் இல்லை, வைட்டமின் பி6, வைட்டமின் கே மற்றும் பல சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது.

ஸ்ட்ராபெர்ரி

கோடையில் உள்ள சீசன் பழங்களில் ஒன்று தான் ஸ்ட்ராபெர்ரி. இந்த பழத்தில் 92% நீர்ச்சத்துடன், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி போன்றவையும் இருப்பதால், இது உடல் வறட்சியைத் தடுப்பதோடு, சருமத்தின் அழகையும் அதிகரிக்கும்.

லெட்யூஸ்

லெட்யூஸ் என்னும் கீரையிலும் வெள்ளரிக்காய்க்கு இணையான நீர்ச்சத்து நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி, இந்த கீரையில் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியிருப்பதால், இதனை கோடையில் சாலட்டுகளிலோ அல்லது சமைத்தோ சாப்பிட்டு வந்தால், உடலை கோடையில் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

மோர்

கோடையில் மோர் அதிகம் குடித்து வந்தால், உடல் குளிர்ச்சியுடனும், நீர்ச்சத்துடனும் இருக்கும். மேலும் மோர் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழித்து, கோடையில் ஏற்படும் சளியில் இருந்து பாதுகாப்பு தரும்.

முலாம் பழம்

தர்பூசணியைப் போன்றே முலாம் பழத்திலும் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் கோடையில் அதிகம் கிடைக்கக்கூடிய பழங்களிலும் ஒன்று.

இளநீர்

இளநீர் அனைத்து காலங்களிலும் கிடைக்கக்கூடிய ஒன்று. ஆனால் இதனை கோடையில் குடித்து வந்தால், உடலுக்கு வேண்டிய நீர்ச்சத்துடன், உடலின் ஆரோக்கியமும் மேம்படும். அதுமட்டுமல்லாமல், இது உடலில இருந்து நச்சுக்களை வெளியேற்றி, சருமத்தை புத்துணர்ச்சியுடனும், மென்மையாகவும் வைத்துக் கொள்ளும்

எலுமிச்சை ஜூஸ்

கோடையில் ஏற்படும் தாக்கத்தை தணிக்கும் பானங்களில் ஒன்று எலுமிச்சை ஜூஸ். இதனை குடித்தால் தாகம் மட்டுமின்றி, உடலில் ஏற்படும் வறட்சியும் தடுக்கப்படும். ஆகவே கோடையில் முடிந்தால் எலுமிச்சை ஜூஸை அதிகம் பருகி வாருங்கள்.

நன்னாரி சர்பத்

கிராம பகுதிகளில் மிகவும் பிரபலமான ஒரு பானம் தான் சர்பத். கோடையில் பலர் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த குளிர்பானங்கள் பாட்டில் பாட்டிலாக வாங்கி வைத்துக் கொண்டு குடிப்பார்கள். ஆனால் அவற்றை விட மிகவும் சிறந்ததும், உடலுக்கு ஆரோக்கியமானதும் தான் நன்னாரி சர்பத். ஆகவே இதனை வாங்கி கோடையில் ஜூஸ் போட்டு குடியுங்கள்.

நுங்கு

கோடையில் வெயிலின் வெப்பத்தைத் தணிக்கும் உணவுப் பொருட்களில் ஒன்று தான் நுங்கு. இந்த நுங்கு கோடையில் தான் அதிக அளவிலும், விலைக் குறைவிலும் கிடைக்கும். மேலும் இதன் சுவைக்கு இணை எந்த ஒரு உணவுப்பொருளும் வராது எனலாம். அந்த அளவில் இது மிகவும் ருசியாக இருக்கும்.

தண்ணீர்

பழங்கள், காய்கறிகள், பானங்கள் என்று மட்டும் சாப்பிட்டால் போதாது, தண்ணீரையும் அதிக அளவில் குடித்து வர வேண்டும். அதிலும் 2-3 லிட்டர் தண்ணரை தவறாமல் குடிக்க வேண்டும்.

Monday, March 02, 2015

பட்டா வாங்குவது எதற்காக?

சொத்து வாங்கியவுடன் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்தவுடன் வேலை முடிந்துவிட்டது என்று நினைக்கக் கூடாது. பத்திரம் தான் நம் கைக்கு கிடைத்துவிட்டதே இனி சொத்து நமக்குத்தான் சொந்தம் என்று நினைத்துவிடக்கூடாது. பட்டா வாங்குவது மிக அவசியம். அதிலும் ஒருவரிடம் இருந்து சொத்து முழுவதையும் வாங்காமல் ஒரு பகுதியை மட்டும் வாங்கி இருந்தால் உடனே பட்டா பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பித்துவிட வேண்டும்.
பட்டா பெயர் மாற்றம்;
*********************************

ஏனெனில் அவர் சொத்தின் ஒரு பகுதியை மட்டும் விற்பனை செய்து இருப்பதால், பட்டா அவர் பெயரில்தான் இருக்கும். நாம் வாங்கிய பகுதிக்கு தனியே பட்டா பெற வேண்டும். அதற்கு உட்பிரிவு பட்டா என்று பெயர். இந்த பட்டாவை உடனே பெறுவது நல்லது. ஏனெனில் பட்டாவுக்கு விண்ணப்பிக்காமல் இருந்துவிட்டால் நீங்கள் வாங்கிய பகுதிக்கும் சேர்த்து உரிமையாளர் பெயரிலேயே தொடர்ந்து பட்டா இருக்கும் என்பதால், சில பிரச்சினைகளை சந்திக்க நேரலாம்.

முக்கியமாக நீண்ட நாட்களாக பட்டா பெறாமல் இருந்தால், அவர் தன்னுடைய பட்டா மூலம் நீங்கள் வாங்கிய இடத்துக்கும் உரிமை கொண்டாட நேரிடலாம். அவர் வேறொருவருக்கு சொத்தை விற்பனை செய்வதாக இருந்தாலும், அதன் மூலம் உங்களுக்கு பிரச்சினை வரலாம். அதாவது நீங்கள் உட்பிரிவு பட்டா பெறாமல் இருப்பதால், தன்னுடைய பட்டாவை சொத்து வாங்கும் மற்றவரிடம் காண்பித்து முழு சொத்தும் தனக்குரியது! என்று சொல்லலாம்.

உட்பிரிவு பட்டா:
************************
அதன் மூலம் உங்களிடம் சொத்து விற்பனை செய்யப்பட்ட விஷயத்தை மறைக்கலாம். அல்லது நீங்கள் வாங்கியிருக்கும் சொத்தின் பகுதியையும் சேர்த்து மற்றவருக்கு விற்றுவிட முயற்சிக்கலாம். அப்படி விற்பனை நடந்துவிட்டால் சொத்தை வாங்கி இருக்கும் உங்களுக்கு சிக்கல் நேரும். நீங்கள் உட்பிரிவு பட்டா பெறாமல் இருப்பது அவருக்கு சாதகமாக மாறி விடக்கூடும். அதேநேரத்தில் நீங்கள் உட்பிரிவு பட்டாவுக்கு விண்ணப்பித்திருந்தால், அந்த சொத்து இரண்டு பாகமாக பிரிக்கப்பட்டு விடும்.

உதாரணமாக சர்வே எண் 50/1–ல் அடங்கியுள்ள 2 ஏக்கர் நிலத்தில் நீங்கள் ஒரு ஏக்கர் நிலத்தை மட்டும் வாங்கினால், பட்டாவுக்கு விண்ணப்பிக்கும்போது, சர்வே எண் 50/1 இரண்டு பிரிவாக உட்பிரிவு செய்து இரண்டு பட்டாவாக மாற்றப்படும். அதாவது சர்வே எண் 50/1 என்பது 50/1ஏ அடங்கிய ஒரு ஏக்கர் என்றும், 50/1பி அடங்கிய மற்றொரு ஏக்கர் என்றும் பிரிக்கப்பட்டு உரிமையாளருக்கும், நிலத்தை வாங்கிய உங்களுக்கும் தனி தனியாக பட்டா கொடுக்கப்படும்.

கவனமாக இருக்க வேண்டும்:
*********************************************
இதுதவிர உட்பிரிவு எண், பரப்பு, தீர்வை, வரைபடம் போன்றவை மாறுபடும். புதிய உட்பிரிவு எண் அடங்கிய சர்வே எண் வரைபடத்தில் குறிப்பிடப்பட்டும் இருக்கும். அதன் மூலம் அந்த சொத்தில் உங்கள் எல்லைப்பகுதிகள் வரையறை செய்யப்பட்டு இருக்கும். அதனால் உங்கள் சொத்துக் குரிய உரிமை உங்கள் வசம் வந்துவிடும். அதனால் சொத்தின் ஒரு பகுதியை விற்பனை செய்த உரிமையாளர் முழு சொத்துக்கும் உரிமை கொண்டாடுவது தவிர்க்கப்படும்.

அதே நேரத்தில் பாகப்பிரிவினை வாயிலாக வந்த சொத்தை வாங்குவதாக இருந்தால் பட்டா விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அவர் பெயரில்தான் பட்டா இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். அப்படி பட்டா இருந்தால் தான் நீங்கள் எளிதாக உங்கள் பெயருக்கு எளிதாக பெயர் மாற்றம் செய்ய முடியும்.

காலம் தாழ்த்தக்கூடாது:
**************************************
அப்படி இல்லாவிட்டால் அதுவும் சிக்கலை ஏற்படுத்தி விடும். பாகப்பிரிவினை செய்த சொத்துக்கு அவர் பட்டா வாங்காமல் இருந்தால் குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவரும் உரிமை கொண்டாடும் விதத்தில் பழைய பட்டா இருக்கும். அதில் இருந்து அவர் தனியாக தன்னுடைய சொத்துக்கு பட்டா பெற்ற பிறகே அந்த சொத்தை வாங்குவதற்கு பரிசீலிக்க வேண்டும். அப்போது தான் சொத்தை கிரயப்பத்திரம் செய்த பிறகு அவர் பெயரில் இருக்கும் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய சுலபமாக இருக்கும்.

அப்படி அல்லாமல் பாகப்பிரிவினை அடிப்படையில் பட்டா வாங்காமல் இருந்தால் அத்தகைய சொத்தை வாங்குவதை தவிர்ப்பது நல்லது. மேலும் பட்டாவை பிறகு வாங்கிக்கொள்ளலாம் என்று காலம் தாழ்த்தக் கூடாது. சொத்தை விற்பனை செய்தவர் ஒருவேளை இறந்துவிட்டால் அவர் பெயரில் இருக்கும் பட்டாவை உங்கள் பெயருக்கு மாற்றுவது சிக்கலாகி விடும். அவர்களுடைய வாரிசுகளின் உதவியை நாட வேண்டியிருக்கும். அப்படி பெயர் மாற்றம் செய்வதும் சிக்கலான விஷயமாகவே அமையும். எனவே கிரயப்பத்திரம் வாங்கியதும் உடனடியாக உட்பிரிவு பட்டாவுக்கு விண்ணப்பித்து விடுவது நல்லது.