வாழ்க வளமுடன் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் வாழ்க வளமுடன்!

Showing posts with label மூலிகைகள். Show all posts
Showing posts with label மூலிகைகள். Show all posts

Tuesday, September 26, 2017

நிலவேம்பு

நிலவேம்பு – மருத்துவ பயன்கள்

நிலவேம்பு முழுத் தாவரமும் கசப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. இதனால், நீர்க்கோவை, மயக்கம் போன்றவை குணமாகும்; புத்தி தெளிவு உண்டாகும்; மலமிளக்கும்; தாதுக்களைப் பலப்படுத்தும்.


நிலவேம்பு இலைகள் காய்ச்சல் மற்றும் முறைக் காய்ச்சலைக் குறைக்கும்; பசி உண்டாக்கும்; உடல் தாதுக்களைப் பலப்படுத்தும். ஆரோக்கியம் தரும்; உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும்.

நிலவேம்பு நிமிர்ந்த வளரியல் கொண்ட செடி. 30 செமீ முதல் ஒரு மீட்டர் வரை வளரக் கூடியது. நிலவேம்பு தண்டுகள் நாற்கோணப் பட்டையானவை. நிலவேம்பு இலைகள் நீள் முட்டை வடிவமானவை.

நிலவேம்பு மலர்கள், கணுக்களிலும் நுனியிலும் குறுக்கு மறுக்காக அமைந்தவை. பூக்கள் வெண்மையானவை. நாக்கு போன்று நீண்டு ஊதா நிறப் புள்ளிகளுடன் காணப்படும்.

நிலவேம்பு காய்கள் வெடிக்கும் தன்மையானவை. விதைகள் சிறியவை; மஞ்சள் நிறமானவை. நிலவேம்பு பெரியாநங்கை, சிறியாநங்கை, மிளகாய் நங்கை, குருந்து, கொடிக்குருந்து போன்ற மாற்றுப் பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.

நிலவேம்பு தமிழகத்தின் சமவெளிப் பகுதிகளில் பரவலாக விளைகின்றது. மருத்துவர்களில் முக்கியமாக விஷக்கடி மருத்துவம் செய்பவர்களின் வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றது. அரிதாக சில இடங்களில் பயிர் செய்யப்படுகின்றது.

நிலவேம்பு முழுத் தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது. கசப்புச் சுவை அதிகமான தாவரங்களில் நிலவேம்பு முக்கிய இடம் வகிக்கின்றது. இந்தத் தாவரத்தில் மெத்தைல் சாலிசிலிக் அமிலம் காணப்படுகின்றது.

காய்ச்சல் குணமாக நிலவேம்பு முழு தாவரத்தையும் சேகரித்து குடிநீர் செய்து 30 மிலி வீதம் காலை மாலை வேளைகளில் 3 நாள்கள் சாப்பிட்டு வரவேண்டும்.

முறைக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த சுண்டைக் காய் அளவு நிலவேம்பு இலைப் பசையை காலை மாலை வேளைகளில் காய்ச்சல் தீரும் வரை சாப்பிட்டு வரவேண்டும்.

நிலவேம்பு வேரில் இருந்து கஷாயம் தயாரித்து ஒரு டம்ளர் வீதம் காலை மாலை வேளைகளில் தொடர்ந்து 2 வாரங்கள் வரை சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி பெறலாம்.

நிலவேம்பு இலைச்சாறு அரை டம்ளர் வீதம் இரண்டு வேளைகள் மூன்று நாள்கள் குடிக்க கல்லீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

5 கிராம் அளவு நிலவேம்பு இலைத் தூளைக் காலையில் உட்கொள்ள வேண்டும் அல்லது 5 பெரியா நங்கை இலைகளுடன் 10 சீரகம் சேர்த்து மென்று சாப்பிட வேண்டும். அல்லது வேரில் இருந்து கஷாயம் தயாரித்து ஒரு டம்ளர் வீதம் இரவில் மட்டும் 3 நாள்களுக்கு சாப்பிட்டு வர வயிற்றுப் புழுக்கள் வெளியேறும்.

நிலவேம்பு முழுத் தாவரத்தையும் உலர்த்திப் பொடி செய்து பத்திரப் படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். குளிக்கும் போது, தேவையான அளவு நீரில் குழைத்து பசையாக்கி உடலில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊற வைத்துக் குளிக்க வண்டுகடி, சொறி, சிரங்கு போன்றவை குணமாகும்.

நிலவேம்பு இலையில் இருந்து கஷாயம் தயாரித்து ஒரு டம்ளர் வீதம் காலையில் மட்டும் 2 வாரத்திற்கு குடித்து வர காய்ச்சல் மற்றும் வயிற்றுப் போக்கிற்குப் பின்னர் ஏற்படும் அசதி தீரும்.

நிலவேம்புச் செடியை வளர்த்தால் அந்த வளர்ப்பிடத்திற்கு பாம்புகள் வருவதில்லை. பாம்புக் கடி விஷத்தை இந்தச் செடி முறிக்கும் என்பது போன்ற நம்பிக்கைகள் கிராம மக்களிடம் பரவலாக காணப்பட்ட போதிலும் அறிவியல் பூர்வமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இருந்து இது உண்ணமையில்லை என்பது தெரியவந்துள்ளது.

விஷப் பாம்புகளினால் கடி பட்டவர்கள் நிலவேம்புச் செடியை உபயோகித்து குணம் காண முடியாது. இருப்பினும் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வரும் தன்மை இந்த தாவரத்திற்கு உண்டு.

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட உயர்நிலை ஆய்வுகளில் இருந்து நிலவேம்புச் செடிக்கு நோய் எதிர்ப்பு சக்தியும், டைபாய்டு எதிர்ப்பு சக்தியும் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது

Wednesday, September 20, 2017

தூதுவளைச் சட்னி, ஓமவல்லி பஜ்ஜி, சுக்குக் காபி... மழைக்காலத்துக்கு ஏற்ற உணவுகள்!

மழைக்காலம் தொடங்கி விட்டது. திடீர், திடீரென்று வானிலை மாறுகிறது. நன்கு வெயிலடிக்கிறது. சிறிது நேரத்தில் கொட்டுகிறது மழை. பருவநிலை beயில் ஏற்படும் இத்தகைய மாற்றங்களால்  ஜலதோஷம், மூக்கடைப்பு, இருமல், சளி, காய்ச்சல், வாந்தி, பேதி என நோய்கள் வரிசைகட்டி நிற்கின்றன. இதுபோன்ற சூழல்களில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக உணவு விஷயத்தில் கவனம் தேவை.

காலை முதல் இரவு வரை சாப்பிடக்கூடிய, அருந்தக்கூடிய அனைத்துமே சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவையாக இருக்க வேண்டும். காலையில், காபிக்குப் பதிலாக இஞ்சி, துளசி சேர்த்துக் கொதிக்க வைத்த தேநீர் அருந்துவது நல்லது. தொண்டை கரகரப்பு, ஜலதோஷம் இருந்தால் வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு சேர்த்து வாய் கொப்பளிப்பது நல்லது. மேலும் குடிக்கும், குளிக்கும் நீர் மிதமான சூடாக இருந்தால் நல்லது. சளித்தொந்தரவுகள் இருந்தால் நொச்சி அல்லது யூகலிப்டஸ் இலையைப் போட்டு கொதிக்க வைத்த நீரில் குளிப்பது நலம்.

துளசி, தூதுவளை, ஓமவல்லி, இஞ்சி, மிளகு, சீரகம், சின்ன வெங்காயம், வெள்ளைப் பூண்டுடன் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து வடிகட்டி பனங்கற்கண்டு அல்லது உப்பு சேர்த்துக் குடித்து வரலாம். இதை காலை, மாலை வேளைகளில் அருந்தலாம். காலை உணவாக மிளகுப் பொங்கல் சாப்பிடலாம். இட்லி, தோசைக்கு இணை உணவாக தூதுவளைச் சட்னி, இஞ்சித் துவையல் சேர்த்துக் கொள்ளுங்கள். முற்பகல் வேளையில் தூதுவளை சூப், கண்டதிப்பிலி சூப் அருந்துங்கள். 

முசுமுசுக்கையை துவையலாகவோ, தோசை மாவுடன் கலந்து தோசை சுட்டு சாப்பிட்டு வந்தால் காய்ச்சல், சளியுடன் கூடிய காய்ச்சல், நாக்குச் சுவையின்மை போன்றவை சரியாகும். ஜலதோஷம் பிடிப்பதுபோல் இருந்தால் மணத்தக்காளிக் கீரையின் சூப் அருந்தினால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும். இந்த சூப் சூடு பொறுக்கக் குடிக்க வேண்டியது அவசியம்.

மழைக்காலங்களில் பால் மற்றும்  தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் இனிப்பையும் குறைக்க வேண்டும். காரம், கசப்பு, துவர்ப்புச் சுவை நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது நல்லது. மதிய உணவில் தூதுவளை ரசம், மிளகு ரசம், சின்ன வெங்காயம் (பச்சையாக) சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் மதிய உணவு சூடாக இருந்தால் மிகவும் நல்லது. நீர்ச்சத்து நிறைந்த சுரைக்காய், புடலங்காய், பூசணிக்காய், பீர்க்கன்காய், வெள்ளரிக்காய் போன்றவற்றை குறைத்துக் கொள்ளலாம். அசைவ உணவுகஷைப் பொறுத்தவரை, மீன், முட்டை, இறைச்சி சாப்பிடலாம். நெஞ்சுச்சளி இருப்பவர்கள் நண்டுக் குழம்பு சாப்பிடுவதன்மூலம் நிவாரணம் கிடைக்கும்.

குளிர்காலத்தில் சிலருக்கு சருமம் வறண்டுபோகும். அத்தகைய பிரச்னை உள்ளவர்கள் ஆரஞ்சு, எலுமிச்சை, தேன் போன்றவற்றை சாப்பிடுவது பலனளிக்கும். எலுமிச்சை, ஆரஞ்சு ஒத்துக்கொள்ளாதவர்கள் தவிர்த்து விட வேண்டும்.  பொதுவாக வைட்டமின் ஏ, சி சத்துகள் அதிகம் உள்ள பழங்களைத் தொடர்ந்து சாப்பிடுவது நல்லது. கீரைகள், காய்கறிகளை அதிக அளவு சேர்த்துக் கொள்ளலாம். கீரை, காய்கறி சூப் அருந்துவது நல்லது. மற்றபடி மழைக்காலங்களில் எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும். 

மாலைச் சிற்றுண்டியின்போது போண்டா, பஜ்ஜி போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. ஆனால் ஓமவல்லி பஜ்ஜி, கல்யாணமுருங்கை வடை போன்றவற்றை செய்து சாப்பிடலாம். சளித்தொல்லையின்போது இரண்டு, மூன்று ஓமவல்லி இலைகளை மென்று தின்று சூடான நீர் அருந்தினால் பலன் கிடைக்கும். ஓமவல்லி இலையைக் கழுவி 2 மி.லி சாறு எடுத்து அதனுடன்  8 மி.லி தேன் சேர்த்துக் குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் மார்புச் சளி கட்டுக்குள் வரும். 

முள் முருங்கை என்று சொல்லப்படும் கல்யாண முருங்கை அடை அல்லது வடை செய்து சாப்பிடுவதும் சளியை அகற்றும். ஊற வைத்த புழுங்கல் அரிசியுடன் கல்யாண முருங்கை இலையைப் பொடியாக நறுக்கிச் சேர்த்து மிளகு, சீரகம், உப்பு சேர்த்து அடையாகவோ, வடையாகவோ செய்து சாப்பிடலாம். உளுந்த வடை அல்லத் கடலைப்பருப்பு வடையுடன் சேர்த்தும் செய்யலாம். எண்ணெய் குறைவாக இருக்குமாறு பார்த்துக் கொள்வது நல்லது.

மாலை நேரங்களில் சுக்கு, மிளகு, தனியா, ஏலக்காய் சேர்த்துப் பொடித்துக் கொதிக்க வைத்து பனைவெல்லம் சேர்த்துத் தயாரிக்கப்பட்ட சுக்குக் காபி குடித்து வருவது நல்லது..மழைக் காலங்களில் ஏற்படும் செரிமானக் கோளாறு மற்றும் சளித்தொல்லைகள் விலகும். கொள்ளு சூப், வெற்றிலை பஜ்ஜி போன்றவையும் இந்தச் சூழலுக்கு இதம் சேர்க்கும். 

மூக்கடைப்பு, சளித்தொல்லை இருந்தால் இரவில் உறக்கம் வராது. ஆகவே இரவு உணவை முடித்தபிறகு பூண்டுப்பால் அருந்துவது பலன் தரும். தோலுரித்த வெள்ளைப் பூண்டுடன் பால், தண்ணீர் சேர்த்து வேக வைத்து மிளகுத் தூள், மஞ்சள் தூள், பனங்கல்கண்டு சேர்த்து கடைந்து குடித்தால் சளித்தொல்லை விலகும். இரவில் நிம்மதியான உறக்கம் வரும். 

இருமல் இருந்தால் தக்காளி சூப் அருந்தி பலன் பெறலாம். முழு தக்காளியுடன் நான்கைந்து வெள்ளைப் பூண்டு சேர்த்து நசுக்கிப் போட்டு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து உப்பு சேர்த்து வடிகட்டி குடித்தால் இரவில் இருமல் தொல்லை இல்லாமல் இருக்கலாம். தலைபாரம், மூக்கடைப்பு இருந்தால் தலையணையில் நொச்சித் தழைகளை வைத்து உறங்குவது பலன் தரும். தேங்காய் எண்ணெயைச் சூடுபடுத்தி கற்பூரம் சேர்த்துக் கரைந்ததும் நெஞ்சு, கழுத்து, முதுகு மற்றும் விலாப்பகுதியில் சூடு பறக்கத் தேய்த்தாலும் 

காய்ச்சல் வந்தால் நிலவேம்புக் கஷாயம், பப்பாளி இலைக் கஷாயம், கொய்யா இலைக் கஷாயம், மிளகு கஷாயம் போன்றவற்றை அருந்துவது நல்லது. கைப்பிடி கறிவேப்பிலையுடன் நான்கைந்து மிளகு, ஒரு டீஸ்பூன் சீரகம், சிறு துண்டு இஞ்சி சேர்த்து மையாக அரைத்து சுடுநீர் சேர்த்து வடிகட்டி தேன் சேர்த்து குடித்து வந்தாலும் காய்ச்சல் விலகும். காய்ச்சல் நேரங்களில் பார்லி சூப் அருந்துவது இதமளிக்கும். காய்கறிகள், மிளகு, பூண்டு, பால், உப்பு சேர்த்தோ தனியாகவோ சூப் செய்து குடிக்கலாம்.

மழைக்காலங்களில் கடை உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக சுகாதாரமற்ற உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. கூட்டு, பொரியல், சூப் செய்யும்போது மிளகுத் தூள் சேர்ப்பது நல்லது. இரவு உணவில் பச்சைப்பயறு, கேழ்வரகு, கீரை போன்றவற்றைச் சேர்க்கக் கூடாது. ஐஸ்கிரீம், கூல்டிரிங்க்ஸ் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. கெட்டுப்போகாமல் இருப்பதற்காக ப்ரிட்ஜில் வைத்த உணவுகளை வெளியே எடுத்து வைத்து மெதுவாக பயன்படுத்துவது நல்லது.

வாரத்தில்  7 நாட்களுக்குமான அவசிய மூலிகைகள்!

ஆரோக்கியமாகவும், நோயில்லாமலும் உடலை பாதுகாக்க பழரசங்கள், மூலிகைச்சாறு குடித்தல் நலன் தரும். இதனால் உடல் வெப்பம் தணிவதோடு, மூலிகைகள், பழங்களில் உள்ள சத்துக்களால் உடல் நன்கு வலுப்பெறும். ஒவ்வொரு நாளும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உயிர் சத்துகள் நிறைந்த மூலிகைச்சாறு என்னவென்று பார்ப்போம், 


திங்கள் – அருகம்புல்

குறட்டை சத்தம் நீங்க!

ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். கொதித்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும். அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொப்பை போன்ற பிரச்னைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.

செவ்வாய் – சீரகம் 

ஆழ்ந்த உறக்கத்திற்கு...

இரண்டு டம்ளர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும். இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும். ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிச்சல் நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி , இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும். 

புதன் – செம்பருத்தி

இரத்த சுத்திகரிப்புக்கு...

இரண்டு செம்பருத்தி பூ ( மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும். இதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும். முகப்பொலிவு பெறும். இரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும். 

வியாழன் – கொத்துமல்லி

இளநரை மறைய...

ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர்( காய்ச்சி ஆற வைத்தது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும். அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மை ஆகியவை நீங்கும். 

வெள்ளி – கேரட்

மஞ்சள் காமாலைக்கு..

ஒரு கேரட்(உள்ளங்கை அளவு), ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர்( காய்ச்சி ஆற வைத்தது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும். இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும். ஆண், பெண் மலட்டுத் தன்மையை சரி செய்யும் . கண்பார்வை தெளிவுறும். இதய சம்பந்தபட்ட நோய்கள் சரி ஆகும். முடி வளர்ச்சி அதிகரிக்கும். கல்லீரல், மற்றும் வயிற்றில் கற்கள் கரையும்.மஞ்சள் காமாலை சீக்கிரம் குணமாக காரட் ஜூஸ் நல்ல மருந்து.

சனி – கரும்பு சாறு

உடல் பருமனை குறைக்க...

கரும்பு சாறு (இஞ்சி, எலுமிச்சை, ஐஸ் சேர்க்காதது) ஒரு டம்ளர் அளவு குடிக்கவும். உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் ஆற்றல் பெற்றது. கழிவுகளில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்கும். மலச்சிக்கல் தீரும். காமாலை வராமல் தடுக்கும். உடல் பருமன், தொப்பை குறையும்.

ஞாயிறு – இளநீர்

ஜீரண சக்திக்கு...

ஒரு டம்ளர் இளநீரில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு குடிக்க வேண்டும். உடல் வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சி அளிக்கும். இரத்தக் குழாயில் தேங்கி இருக்கும் அடைப்புகளை நீக்கும். இன்சுலின் சரியான அளவில் சுரக்க வைக்கும். வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும். விந்துவை அதிகரிக்கும். குடல் புழுக்களை அழிக்கிறது. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. ஜீரண சக்தியை அதிகரிக்கும். மாத விலக்கின் போது ஏற்படும் அடிவயிற்று வலிக்கும், சிறுநீரகக் கல் கோளாறுக்கும் இளநீரே நல்ல மருந்து. சிறுநீரகத்தை சுத்திகரிக்கும்.

அன்னாசி பழச்சாறு,கரும்புச்சாறு, இளநீரை வெறும் வயிற்றில் குடிக்கக்கூடாது. உணவுக்குப்பின் 2 மணி நேரம் கழித்து குடிக்கவும். பசும்பால் இல்லையென்றால், அதற்கு பதிலாக வேறு பால் கண்டிப்பாக சேர்க்கக்கூடாது. மற்ற இயற்கை பானங்களை உணவிற்கு ஒரு மணிநேரம் முன்னதாக குடிக்கவும்.

கறிவேப்பிலையின் நனமைகள்

கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது.
கறிவேப்பிலை முடியின் வளர்ச்சிக்கு நல்லது என்று பலர் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் அதனை பச்சையாக தினமும் காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

🍀கொழுப்புக்கள் கரையும்:
காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.

🍀இரத்த சோகை:
இரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.

🍀சர்க்கரை நோய் :
சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

🍀இதய நோய்:
கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.

🍀செரிமானம் :
நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.

🍀முடி வளர்ச்சி :
கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.

🍀சளித் தேக்கம்:
சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்.


🍀கல்லீரல் பாதிப்பு:
நீங்கும் கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும்.
மனித உடலின் நண்பன் கறிவேப்பிலை.
தூக்கி எறிந்து உதாசீனம் செய்யாதீர்கள்.
குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுத்து பழக்கப் படுத்துவது நம் தலையாய கடமைகளில் ஒன்று என்பதை மனதால் உணருங்கள்.
பகிர்வோம்...

பசுவின் சாணம் வறட்டி

வீட்டு சுவர்களில் ஏன் வறட்டி காய வைக்க வேண்டும்..? திகைக்க வைக்கும் விஞ்ஞான உண்மை: அவர்களின் கால் தூசுக்கு ஈடாகுமா இன்றைய கண்டுபிடிப்பு..? ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வீட்டுச்சுவரின் வெளிப்புறத்தில் வறட்டி காய வைக்கும் பழக்கும் தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் காணப்பட்டதை நாம் அறிவோம். அது ஏன்? அதற்கு முக்கிய காரணம், வறட்டிகளால் சூழப்பட்ட சுவர்கள் வெளியில் எந்த தட்பவெப்ப நிலை இருந்தாலும், சரியாக 28.35°C வெப்பநிலையை வீட்டிற்குள் வழங்கும். இந்த விஞ்ஞான உண்மை உங்களை திகைக்க வைக்கலாம். அப்போதெல்லாம் தடுப்பூசியோ மருந்து மாத்திரையோ தமிழகத்தில் இல்லை. காரணம் பசு வறட்டியில் உள்ளது. நாட்டு மாடுகளின் A2 சாணம் என்பது ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி என்பது அறிவியல். 18 மாதங்கள் நிரம்பிய ஒவ்வொரு பசுவின் சாணமும் ஆயிரம் தடுப்பூசிக்கு சமம். அப்படியான சாணத்தை தனித்தனியாக ஒவ்வொருவர் முகத்திலும் தனித்தனியாக அடிக்க முடியாது என்பதால், வீட்டுச்சுவற்றில் அடித்து வந்தனர். இதன் மூலம் முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட ஒரு Safe Zone-ல் நம் தாத்தா பாட்டி காலம் வரை வாழ்ந்தார்கள் என்றால் நம்ப முடிகிறதா? அதுபோல, வளி மண்டலத்தில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் மற்றும் காஸ்மிக் கதிர்கள் இந்த நன்கு காய்ந்த வறட்டியில் படும்போது, மின்காந்த சக்தி உந்தப்பட்டு அந்த வீடே அணுக்கதிர்கள் கூட துளைக்க முடியாத ஒரு எஃகு அரணாக மாறிப்போகும். ஆனால் இதன் பலன் 15 நாட்களுக்கு மட்டுமே. இதனாலேயே சோழர்களின் கோட்டையை ஆங்கிலேயர்களால் வீழ்த்த முடியவில்லை என்பது தனிக்கதை. மேலு‌ம், இம்மாதிரியான வறட்டி தட்டும் பழக்கம் கைகள் மூலமாக உடலில் ஏற்படும் கெட்ட கொழுப்புகளை அகற்றி சர்க்கரை நோயை கட்டுக்குள் இருக்க வைத்தது. சுற்றிலும் வறட்டிகளை கொண்ட வீடுகளில் 48 நாட்கள் புழங்கி வந்தால் அலர்ஜி, கேன்சர், இருதய கோளாறு போன்றவை சரியாகும் என சித்தர்கள் தெரிவித்துள்ளனர். மேலைநாட்டினர் அவற்றின் மகிமையைப் புரிந்துக்கொண்டு தான் தற்போது வறட்டியை அதிக அளவில் தங்கள் வீடுகளில் சேமித்து வைக்கின்றனர். வறட்டி தயாரிக்கும் முறைக்கு காப்புரிமையும் பெற்றுள்ளனர். ஆனால் நாமோ, பகுத்தறிவு என்று நாம் நமது முன்னோரின் சம்பிரதாயங்களில் இருக்கும் விஞ்ஞான அறிவைப் புரிந்துகொள்ளாமல் கேலிசெய்து கேவலப்படுத்துகிறோம் .

Wednesday, June 14, 2017

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்



மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்

1. அருகம்புல் பொடி :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

2. நெல்லிக்காய் பொடி :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது

3. கடுக்காய் பொடி :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

4. வில்வம் பொடி :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

5. அமுக்கலா பொடி :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

6. சிறுகுறிஞான் பொடி :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

7. நவால் பொடி :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

8. வல்லாரை பொடி :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

9. தூதுவளை பொடி :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

10. துளசி பொடி :- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

11. ஆவரம்பூ பொடி :- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

12. கண்டங்கத்திரி பொடி :- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

13. ரோஜாபூ பொடி :- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

14. ஓரிதழ் தாமரை பொடி :- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை  நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா

15. ஜாதிக்காய் பொடி :- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

16. திப்பிலி பொடி :- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

17. வெந்தய பொடி :- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

18. நிலவாகை பொடி :- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

19. நாயுருவி பொடி :- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

20. கறிவேப்பிலை பொடி :- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

21. வேப்பிலை பொடி :- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

22. திரிபலா பொடி :- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

23. அதிமதுரம் பொடி :- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

24. துத்தி இலை பொடி :- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

25. செம்பருத்திபூ பொடி :- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

26. கரிசலாங்கண்ணி பொடி :- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

27. சிறியாநங்கை பொடி :- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

28. கீழாநெல்லி பொடி :- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

29. முடக்கத்தான் பொடி :- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.

30. கோரைகிழங்கு பொடி :- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

31. குப்பைமேனி பொடி :- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

32. பொன்னாங்கண்ணி பொடி :- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

33. முருஙகைவிதை பொடி :- ஆண்மை சக்தி கூடும்.

34. லவங்கபட்டை பொடி :- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

35. வாதநாராயணன் பொடி :- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

36. பாகற்காய் பவுட்ர் :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

37. வாழைத்தண்டு பொடி :- சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

38. மணத்தக்காளி பொடி :- குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

39. சித்தரத்தை பொடி :- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

40. பொடுதலை பொடி :- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

41. சுக்கு பொடி :- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

42. ஆடாதொடை பொடி :- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

43. கருஞ்சீரகப்பொடி :- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

44. வெட்டி வேர் பொடி :- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

45. வெள்ளருக்கு பொடி :- இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

46. நன்னாரி பொடி :- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

47. நெருஞ்சில் பொடி :- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

48. பிரசவ சாமான் பொடி :- பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

49. கஸ்தூரி மஞ்சள் பொடி :- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

50. பூலாங்கிழங்கு பொடி :- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

51. வசம்பு பொடி :- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

52. சோற்று கற்றாலை பொடி :- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

52. மருதாணி பொடி :- கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

53. கொருவேலம்பட்டை
 பொடி :- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.