வாழ்க வளமுடன் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் வாழ்க வளமுடன்!

Saturday, February 28, 2015

பள்ளிகள் அங்கீகாரம் அறிய இணையதளம் :

பள்ளிகள் அங்கீகாரம் அறிய இணையதளம் :பெற்றோர் வசதிக்காக துவக்கியது கல்வித்துறை

         தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளிகளின் அங்கீகாரம் மற்றும் இதர விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் முதன் முறையாக, tnmatric.com என்ற இணையதளத்தை அறிமுகம் செய்ய, பள்ளிக் கல்வித் துறை முன்னோட்டம் நடத்தி வருகிறது.

         தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் குறித்து, ஆண்டுதோறும் பெற்றோருக்கு குழப்பம் ஏற்படுகிறது. ஆய்வகம், விளையாட்டு மைதானம், நூலகம், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமலேயே, பல இடங்களில் பள்ளிகள் துவக்கப்பட்டன. புற்றீசல் போல் ஏராளமான பிரைமரி, நர்சரி பள்ளிகள் அதிகரித்தன. 2004ல் கும்பகோணம் பள்ளி தீ விபத்துக்குப் பின், நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகளின் மீது, அரசின் கட்டுப்பாடுகள் அதிகரித்தன. மெட்ரிக் பள்ளிகளில் போதுமான காற்றோட்டம், இடவசதி உள்ளிட்டவை இருந்தால் மட்டுமே அங்கீகாரம் தரவேண்டும்; பிரைமரி, நர்சரி பள்ளிகளில், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, அதிகாரிகள் ஆய்வு செய்து அங்கீகாரத்தைப் புதுப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
தமிழகத்தில் மொத்தம் 66 கல்வி மாவட்டங்கள் உள்ளன. குறைந்தது நான்கு மாவட்டங்களை ஒருங்கிணைத்து, மொத்தம் 15 (ஐ.எம்.எஸ்.,) மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் உள்ளனர். இவர்கள் மூலம் தனியார் பள்ளிகளின் அடிப்படை வசதிகள் மற்றும் இதர விவரங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, பள்ளிக்கு அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
பள்ளிகளின் அங்கீகாரம், பிற விவரங்களை அறிய, பெற்றோருக்கு எவ்வித வசதியும் இல்லை. அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்த்து, பரிதவிக்கும் பெற்றோர் அதிகம். இக்குறையைப் போக்க, தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை முதன் முறையாக, tnmatric.com என்ற இணையதளத்தை துவக்கியுள்ளது. இதற்காக, பள்ளிகளுக்கு தனித்தனியே வரிசை எண் வழங்கப்பட உள்ளது.
ஈரோடு மாவட்ட மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அருள் முருகன் கூறுகையில், ""பள்ளிகள் சார்பான புள்ளி விவரங்களை, tnmatric.com என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ள பள்ளிக்கல்வித் துறை ஆய்வு மேற்கொண்டு வருகிறது. பள்ளி குறித்த அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளும் வகையில் இந்த இணையதளம் உருவாக்கப்படுகிறது. புதிய பள்ளிகள் அங்கீகாரம் பெற ஆன்-லைனில் பதிவு செய்து கொள்ளலாம்," என்றார்.

புகை பிடிப்பதை நிறுத்த ஒரு இணையதளம்

புகை பிடிப்பதை நிறுத்த ஒரு இணையதளம்

இந்த இணைய தளம் சென்றவுடன், முதலில் புகை பிடிப்பதிலிருந்து வெளியேற உங்களைத் தயார் செய்து கொள்கிறீர்களா?  என்ற வினாவுடன் ஒரு பிரிவினைப் பார்க்கலாம். ஏனென்றால், வெகு காலம் புகை பிடிக்கும் ஒருவர், நிச்சயமாய் நிறுத்துவதற்கான முடிவினை எடுக்க வேண்டும். அதில் உறுதியாய் இருக்க வேண்டும். பின்னர், அடுத்து தரப்படும் பிரிவில், எந்த எந்த வழிகளில் புகை பிடிப்பதனை நிறுத்தலாம் என்று பல வழிகள் எடுத்துரைக்கப்படுகின்றன. மேலும், இந்தப் பழக்கத்தினால் ஏற்படும் மன அழுத்தம், சத்தான உணவினை எடுத்துக் கொள்வது, உடற்பயிற்சிகளால் நல்ல செயல்பாட்டுடன் இருப்பது எனப் பல பிரிவுகளில் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. புகைப்பவர்கள் எல்லாரும் ஒரு முறை இந்த தளம் சென்று பார்த்தால், நமக்காக இத்தனை முயற்சிகள் எடுத்து தகவல்களைத் தந்திருக்கிறார்களே என்று ஆச்சரியப்பட்டு, புகைப்பதனை நிறுத்த முயற்சிப்பீர்கள். இந்த இணைய தளத்தின் முகவரி http://smokefree.gov

வேர்ட்டில் தலைப்புகளைத் தானாக அமைக்க வேண்டுமா தலைப்புகளைத் தானாக அமைக்க: நூல்கள் மற்றும் பருவ இதழ்களைத் தயாரிக்கையில், வேர்ட் டாகுமெண்ட்களில், சில குறிப்பிட்ட படங்கள், அட்டவணைகள், டேபிள்கள் ஆகியவற்றிற்கு தலைப்புகள் அமைத்திடுவோம். எடுத்துக் காட்டாக, டாகுமெண்ட்களில் உள்ள அனைத்து டேபிள்களுக்கும் “Table” எனத் தலைப்பிட்டு, ஒவ்வொன்றையும் “Table1,Table2, Table3” என அமைக்கத் திட்டமிடுவோம். வேர்ட் இதனை உணர்ந்து ஒவ்வொருமுறை டேபிள் அமைக்கும் போதும், தானாகவே இந்த தலைப்பினை அமைத்துக் கொள்ளும் வகையில், செட் செய்திடலாம். இதே போல படங்கள் மற்றும் பிற ஆப்ஜெக்ட்களை அமைக்கையிலும் இந்த தலைப்புகளைக் கொண்டு வரலாம். இதற்குக் கீழ்க்காணும் முறையில் செட்டிங்ஸ் அமைக்கவும். 1. டாகுமெண்ட்டைத் திறந்து கொள்ளுங்கள். கேப்ஷன் டயலாக் பாக்ஸைக் கொண்டு வாருங்கள். இதற்கு, உங்கள் வேர்ட் தொகுப்பு வேர்ட் 2007க்கு முந்தையதாக இருந்தால், Insert அழுத்தி, கிடைக்கும் மெனுவில் Reference>Caption எனத் தேர்ந்தெடுக்கவும். இப்போது Caption என்ற சிறிய கட்டம் கிடைக்கும். இதில் நீங்கள் தர விரும்பும் தலைப்பு மற்றும் இந்த தலைப்பு எதற்காக என்பத