வாழ்க வளமுடன் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் வாழ்க வளமுடன்!

Wednesday, February 25, 2015

எக்ஸெல்லில் அவசியமான குறுக்கு வழி கட்டளைகள்

எக்ஸெல்லில் அவசியமான குறுக்கு வழி கட்டளைகள்

ஸ்ப்ரெட் ஷீட்டில் மாற்றங்கள்: எக்ஸெல் ஒர்க் புக் தயாரிப்பில், ஒரே நேரத்தில் பல ஒர்க் ஷீட்களைத் திறந்து வைத்து நாம் பயன்படுத்த
விருப்பப்படுவோம். இதற்கென விண்டோவில் ஒவ்வொரு ஒர்க் ஷீட்டிற்கும் மாறுவதற்கு, கீழாக உள்ள டேப்பிற்கு மவுஸ் கர்சரைக் கொண்டு சென்று செயல்படுத்த வேண்டும். கீ போர்டினையே பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு இது சற்று சிரமத்தைத் தரும். இதற்கான சுருக்கு வழி ஒன்று எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் தரப்பட்டுள்ளது. ஒர்க் ஷீட் மாற விருப்பப்படுகையில், Ctrl+F6 கீகளை அழுத்தவும். இந்த கீகளை அழுத்துகையில், ஒர்க் புக்குகளின் டேப்கள் வரிசையாகத் தேர்ந்தெடுக்கப்படுவதனைப் பார்க்கலாம். ஐந்து ஒர்க்புக்குகள் திறந்திருந்தால், ஐந்தாவது ஒர்க் ஷீட் செல்ல, ஐந்து முறை Ctrl+F6 கீகளை அழுத்த வேண்டும்.

அவசிய சுருக்கு வழிகள்: எந்த அப்ளிகேஷன் புரோகிராமிலும், அனைவருக்கும் அனைத்தும் முக்கியமானவை என்று கருத முடியாது. உங்களுக்கு முக்கியமானது மற்றவர்களுக்குச் சாதாரணமாக இருக்கலாம். அதே போல மாற்றியும் சொல்லலாம். இருப்பினும் இங்கு அதிகம் பயனுள்ள சில வித்தியாசமான ஷார்ட் கட் கீ தொகுப்புகள் இங்கு தரப்பட்டுள்ளன. அச்சடித்து உங்கள் மேஜைக்கு அருகே ஒட்டி வைத்துப் பயன்படுத்தலாம்.

Control + “C”: Copy

Control + “X”: Cut

Control + “V”: Paste

F2:அப்போதைய செல்லை எடிட் செய்திட. (எளிதாக எடிட் செய்திடும் வகையில் செல் ரெபரன்சஸ் அனைத்தும் வண்ணத்தில் அமைக்கலாம்)

F5: Go to

F11:உடனடி சார்ட் கிடைக்க

Shift + F3: பேஸ்ட் செயல்பாட்டிற்கான விஸார்ட் கிடைக்கும்.

Control + F3: பெயரை வரையறை செய்திடலாம்.

Control + “+” அப்போதைய தேர்வுக்கு ஏற்றபடி செல், படுக்கை மற்றும் நெட்டு வரிசையினை இடைச் செருகும்.

Control + “--”: அப்போதைய தேர்வுக்கு ஏற்றபடி செல், படுக்கை மற்றும் நெட்டு வரிசையினை நீக்கும்.

Shift + Space: முழு படுக்கை வரிசையும் அப்போதைய ஏரியாவிற்காக தேர்ந்தெடுக்கப்படும். இது என்ன என்று கொடுத்துப் பார்த்து உணர்ந்து கொள்ளுங்கள்.

Control + Space : முழு நெட்டு வரிசையும் அப்போதைய ஏரியாவிற்காக தேர்ந்தெடுக்கப்படும். இது என்ன என்று கொடுத்துப் பார்த்து உணர்ந்து கொள்ளுங்கள்.

Control + “!” (அல்லது Control + Shift + “1”: எண்ணை இரண்டு தசம ஸ்தானத்தில் பார்மட் செய்திடும்.

Control + “$” (அல்லது Control + Shift + “4”): கரன்சியாக பார்மட்செய்திடும்.

Control + “%” (அல்லது Control + Shift + “5”): சதவீதத்தில் பார்மட் செய்திடும்.

Control + “/” (அல்லது Control + Shift + “7”): சயின்டிபிக் ஆக பார்மட் செய்யப்படும்.

Control + “&” (அல்லது Control + Shift + “6”):அப்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனைச் சுற்றி சிறிய பார்டர் அமைக்கப்படும்.

எக்ஸெல் - ஆல்ட்+ஷிப்ட்: எக்ஸெல் தொகுப்பில் ஆல்ட்+ஷிப்ட் கீகளுடன் பங்சன் கீகளை அழுத்தினால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளை இங்கே பார்க்கலாம்

F1 +ALT+SHIFT : புதிய ஒர்க் ஷீட் ஒன்று திறக்கப்படும்.

F2 +ALT+SHIFT : அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒர்க்புக் சேவ் செய்யப்படும்.

F3 +ALT+SHIFT: நெட்டு மற்றும் படுக்கை வரிசை லேபிள்கள் பயன்படுத்தி பெயர்களை உருவாக்கலாம்.

F6 +ALT+SHIFT ஒன்றுக்கு மேற்பட்ட ஒர்க்புக் விண்டோக்கள் திறக்கப்பட்டிருப்பின் தற்போதைய ஒர்க்புக்கிற்கு முந்தைய ஒர்க்புக் விண்டோ திறக்கப்படும்.

F9 +ALT+SHIFT திறந்திருக்கும் அனைத்து ஒர்க் ஷீட்களிலும் அனைத்து ஒர்க் புக்குகளிலும் அனைத்து கால்குலேஷன்களும் செயல்படுத்தப்படும்.

F10 +ALT+SHIFT ஸ்மார்ட் டேக்கிற்கான மெனு மற்றும் மெசேஜ் திறக்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்மார்ட் டேக் திறக்கப்பட்டிருந்தால் அடுத்த டேக் சென்று அதற்கான மெனு மற்றும் மெசேஜ் திறக்கப்படும்.

F11+ALT+SHIFT: மைக்ரோசாப்ட் ஸ்கிரிப் எடிட்டர் திறக்கப்படும்.

F12 +ALT+SHIFT: பிரிண்ட் டயலாக் பாக்ஸ் திறக்கப்படும்

வேர்டில் எண்களை எழுத்தால் எழுத வேண்டுமா

வேர்டில் எண்களை எழுத்தால் எழுத வேண்டுமா

பக்கங்களில் தாவிச் செல்ல: மிக நீளமான டாகுமெண்ட்டில், வேகமாக பக்கங்களைச் சுழற்றிச் செல்ல, நமக்கு மவுஸில் உள்ள சிறிய சக்கரம்
உதவுகிறது. இரண்டு பட்டன்களுக்கிடையே இந்த சிறிய சக்கரம் நமக்குத் தரப்படுகிறது. மவுஸை டாகுமெண்ட்டில் வைத்து, இந்தச் சிறிய சக்கரத்தினை அழுத்தி இழுத்தால், பக்கங்கள் வேகமாக, நாம் நகர்த்துவதற்கு ஏற்ப, கீழாகவோ, மேலாகவோ நகர்ந்து செல்லும். ஆனால், இப்போது வரும் சில மவுஸ் சாதனங்களில், இந்த வீல் இருப்பதில்லை. இருப்பினும் இந்த வசதியைப் பெறுவதற்கு சில செட்டிங்ஸ் அமைப்புகள் உள்ளன. அவற்றைப் பார்க்கலாம்.

1. Tools மெனுவிலிருந்து Customize என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Customize டயலாக் பாக்ஸைக் காட்டும்.

2. இதில் Commands என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். வேர்ட் கட்டளைகள் சில வரிசையாகத் தரப்படும்.

3. இந்த பட்டியலின் இட்து பக்கம் All Commands என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.

4. வலது பக்கம் உள்ள பிரிவில் AutoScroll என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.

5. இந்த AutoScroll ஆப்ஷனை உங்கள் டூல்பார்கள் உள்ள இடத்திற்கு இழுத்துச் செல்லவும். மவுஸ் பட்டனை விட்டுவிட்டால், AutoScroll என்னும் பெயருடன் ஒரு பட்டன் டூல்பார்களில் தோன்றுவதைப் பார்க்கலாம்.

6. தொடர்ந்து Close என்பதில் கிளிக் செய்து Customize டயலாக் பாக்ஸை மூடவும்.

இந்த புதிய கட்டளையைப் பயன்படுத்த, புதிய டூல் பார் பட்டனில் கிளிக் செய்திடவும். அவ்வாறு செய்திடுகையில், வலது பக்கம் உள்ள நெட்டு வாக்கில் உள்ள பார் மாறும். புதிய இரட்டை அம்புக் குறி ஒன்று தோன்றும். இந்த அம்புக்குறியினை மேலாகவும் கீழாகவும் ஸ்குரோல் பாரில் நகர்த்துவதன் மூலம், டாகுமென்ட் எவ்வளவு வேகமாக நகர்த்தப்பட வேண்டும் என்பதனை முடிவு செய்து செட் செய்திடலாம். இந்த வேகமாக நகர்த்தும் செயல்பாட்டிலிருந்து விடுபட எஸ்கேப் கீயை அழுத்துங்கள். அல்லது மவுஸ் பட்டனை அழுத்துங்கள்.

பக்க எண்கள் சொற்களாக: வேர்ட் தொகுப்பில் உருவாக்கப்பட்ட டாகுமெண்ட்களில் பக்க எண்களை எளிதாக இடுகிறோம். மெனு பாரில் சென்று இன்ஸெர்ட் கிளிக் செய்து Page Numbers தேர்ந்தெடுத்தால் கிடைக்கும் மெனுவில் நம் விருப்பப்பட்ட இடத்தில் பக்க எண்கள் தோன்றும்படி செய்துவிடலாம். இந்த பக்க எண்கள் இலக்கங்களாகத் தான் இருக்கும். இவற்றை எண்களுக்கான சொற்களாக வைத்துக் கொள்ளச் சிலருக்கு ஆவலாக இருக்கும். அந்த ஆசையைப் பூர்த்தி செய்திட கீழ்க்கண்டபடி செயல்படவும்.

1. வழக்கம்போல பக்க எண்களை இணைக்கவும்.

2. அதன் பின் பக்க எண்ணுக்குரிய பீல்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கு பக்க எண் அருகே கர்சரைக் கொண்டு சென்று இருமுறை கிளிக் செய்திடவும். பக்க எண் பேஜ் ஹெடர் அல்லது புட்டரில் தான் இருக்கும். இப்போது அந்த இடம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்டு புள்ளிகள் கொண்ட கோடுகளால் கட்டம் கட்டப்பட்டு காட்டப்படும். இதில் எண் இருக்கும்.

3. இனி இந்த எண்ணுக்கான பீல்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அது எங்கே இருக்கிறது என்று கேட்கிறீர்களா? இந்த எண் அருகே கர்சரைக் கொண்டு சென்று ஷிப்ட்+எப்9 அழுத்தவும். எண்ணுக்கான பீல்டு கிடைக்கும். பீல்டு தேர்ந்தெடுக்கப்பட்டு கிரே கலரில் காட்டப்படும். பீல்டில் PAGE என்று தெரியும். இது தான் அதனுடைய குறியீடு.

4. இனி இந்த குறியீட்டிற்குப் பதிலாக \* CardText என டைப் செய்திடவும்.

5. பின் மீண்டும் எப்9 கீ அழுத்தினால் எண் இலக்கமாக இருப்பது மாற்றம் பெற்று எழுத்தில் கிடைக்கும். எடுத்துக் காட்டாக முதல் பக்கத்தில் 1 - என்பதற்குப் பதிலாக One என இருக்கும்.

எண்களை எழுத்தால் எழுத: வேர்ட் புரோகிராமில் டாகுமெண்ட்களை அமைக்கும் போது, எண்களை டெக்ஸ்ட்டுடன் பயன்படுத்த வேண்டியது இருந்தால், ஒற்றை இலக்கமாக இருப்பின், இலக்கத்தினை எழுத்தில் எழுதுவதே சிறந்தது. "He ate 7 biscuits" என்று எழுதுவதைக் காட்டிலும் "He ate seven biscuits," என எழுதுவதே சிறந்தது. நீங்கள் விரும்பினால், வேர்ட் மேற்கொள்ளும் இலக்கண சோதனையையும் (Grammar) இதற்கேற்றபடி மாற்றி அமைக்கலாம். இதனை மேற்கொள்ள கீழ்க்குறித்தபடி அமைக்கவும்.

1. ஆபீஸ் பட்டன் கிளிக் செய்து,அடுத்து Word Options என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது வேர்ட் Word Options டயலாக் பாக்ஸைக் காட்டும்.

2. இந்த டயலாக் பாக்ஸின் இடது பக்கத்தில் உள்ள Proofing என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும்.

அடுத்து Settings பட்டனில் கிளிக் செய்திடவும். வேர்ட் Grammar Settings டயலாக் பாக்ஸைக் காட்டும். இங்கு ஆப்ஷன் பட்டியலில் கீழாகச் செல்லவும். இதில் Numbers ஆப்ஷன் வரை செல்லவும். இதில் டிக் அடையாளம் ஒன்றை ஏற்படுத்தவும்.

பின்னர் கிராமர் மற்றும் வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸ்களை மூடி வெளியேறவும்.

கண்ட்ரோல் கட்டளைகள்:

Ctrl+a: டாகுமெண்ட் முழுவதையும் தேர்ந்தெடுக்க.

Ctrl+b: அழுத்தமான (Font Bold) வடிவில் எழுத்தமைக்க.

Ctrl+c: தேர்ந்தெடுத்ததை, கோப்பினை நகலெடுக்க (copy ).

Ctrl+d: ஓர் எழுத்தின் (Font) வடிவை மாற்றி அமைக்க.

Ctrl+e: நடுவே டெக்ஸ்ட் அமைக்க.

Ctrl+f: குறிப்பிட்ட சொல் அல்லது டெக்ஸ்ட் அமைந்துள்ள இடத்தைக் கண்டறிந்து, அதன் இடத்தில் வேறு ஒரு சொல் அமைக்க. மீண்டும் தேடலைத் தொடர.

Ctrl+g: ஓரிடம் செல்ல.

Ctrl+h: (ஒன்றின் இடத்தில்) மற்றொன்றை அமைத்திட (Replace)

Ctrl+i: எழுத்து / சொல்லை சாய்வாக அமைக்க .

Ctrl+j: பத்தி ஒன்றை இருபக்கமும் சீராக, நேராக அமைக்க.

Ctrl+k: ஹைப்பர் லிங்க் ஒன்றை ஏற்படுத்த.

Ctrl+l: பத்தி ஒன்றை இடது பக்கம் சீராக நேராக அமைக்க.

Ctrl+m: பத்தியினை இடதுபுறமாக சிறிய இடம் விட.

Ctrl+n: புதிய டாகுமெண்ட் உருவாக்க.

Ctrl+o: டாகுமெண்ட் ஒன்றைத் திறக்க.

Ctrl+p: டாகுமெண்ட் ஒன்றை அச்சடிக்க

Ctrl+q: பத்தி அமைப்பை நீக்க.

Ctrl+r: பத்தியினை வலது புறம் சீராக, நேராக அமைக்க.

Ctrl+s: தானாக, டாகுமெண்ட் பதியப்பட.

Ctrl+t:பத்தியில் இடைப்பட்ட இடத்தில் இடைவெளி அமைக்க.

Ctrl+u: டெக்ஸ்ட்டில் அடிக்கோடிட.

Ctrl+v: தேர்ந்தெடுத்ததை ஒட்டிட.

Ctrl+w: டாகுமெண்ட்டை மூடிட.

Ctrl+x: தேர்ந்தெடுத்ததை அழிக்க, நீக்கிட.

Ctrl+y: இறுதியாக மேற்கொண்ட செயல்பாட்டினை மீண்டும் மேற்கொள்ள.

Ctrl+z: இறுதியாக மேற்கொண்ட செயல்பாட்டிற்கு மாறாக மேற்கொள்ள.

பிரிண்ட் பிரிவியூவில் எடிட்: வேர்ட் டாகுமெண்ட் ஒன்று அச்சில் எப்படிக் காட்சி அளிக்கும் என்று காண, பிரிண்ட் பிரிவியூ என்ற வசதியை வேர்ட் தருகிறது. இதில் அந்த டாகுமெண்ட்டில் உள்ள அனைத்து பார்மட்டிங் வேலைகளையும் ஒரே நேரத்தில் காணலாம். நெட்டு வரிசைகள், பாராக்கள், ஹெடர் மற்றும் புட்டர் மற்றும் படங்கள் என அனைத்தையும் காணலாம். இப்படி பார்க்கும் போது அதில் திருத்தங்கள் மேற்கொள்ள நாம் விரும்பலாம். இதே தோற்றத்தில், திருத்தங்களையும் மேற்கொள்ள வசதி உள்ளது. ஆனால் எப்படி மேற்கொள்வது என்பதுதான் பலருக்குப் புரியாத புதிராய் உள்ளது. அதை இங்கு பார்க்கலாம்.

வேர்ட் 2007 தொகுப்பில், பிரிண்ட் பிரிவியூ டூல்பாரில் கிடைக்கும் பிரிவியூ குரூப்பில், Magnifier டூலை, டிக் அடையாளத்தை எடுத்துவிட்டு நீக்கவும். இவ்வாறு செய்தவுடன், ஏற்கனவே பிரிவியூ தோற்றத்தில் காணப்படும் கர்சர் வழக்கமான ஐ-பீம் போலக் காட்சி அளிக்கும். டாகுமெண்ட் நார்மல் வியூவில் கிடைக்கும். உடன் டாகுமெண்ட்டை எடிட் செய்திடலாம்.