வாழ்க வளமுடன் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் வாழ்க வளமுடன்!

Sunday, November 02, 2014

ஆசிரியர் மன்றம் (TAM)



தமிழக ஆசிரியர் மன்றம் (TAM)


எப்போது எல்லாம் பான் கார்டு தேவை?

Posted: 01 Nov 2014 11:50 PM PDT


வருமான வரி செலுத்தும்ஒவ்வொரு இந்தியரும் நிரந்தரக் கணக்கு எண் (PAN-Permanent Account Number) பெற்றிருப்பது அவசியம்.
இந்த பான் கார்டு எண்சில செயல்பாடுகளின்போது அவசியம் தேவைப்படுகின்றது.இந்தஇடங்களில் பான் கார்டு எண்இருந்தால்
மட்டுமே நம் வேலைகள்அங்கே பூர்த்தியாகும். எந்தெந்த செயல்பாடுகளுக்கு அவசியம் பான் கார்டுதேவை என்பதை இங்கே பார்க்கலாம்.

அவசியம்தேவை
* ஐந்துலட்சம் ரூபாய்க்குமேல் மதிப்புள்ள அசையாச் சொத்துக்களை வாங்கும்போதோ, விற்கும்போதோ பான் எண் தேவைப்படும்.

* ரூ.50,000 மதிப்பில் வங்கியில் சேமிப்புக் கணக்கு அல்லது வைப்புநிதி ஆரம்பிக்கும்போது தேவைப்படும்.

* தங்கும்விடுதிகள் மற்றும் உணவகங்களில் கட்டணமாக25,000 ரூபாய்க்குமேல் செலுத்தும்போது தேவைப்படும்.

* வெளிநாட்டுபயணச் செலவுக்காக 25,000 ரூபாய்க்குமேல் பணமாகச் செலுத்தும்போது தேவைப்படும்.

* வங்கியில்கிரெடிட் கார்டு அல்லது டெபிட்கார்டுகளுக்கு விண்ணப்பிக்கும்போது தேவைப்படும்.

* 50,000 ரூபாய்க்குஅதிகமான தொகையை மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, கடன் பத்திரங்கள்போன்ற முதலீடுகளில் முதலீடு செய்யும்போது தேவைப்படும்.

* காப்பீட்டுத்திட்டங்களுக்குச் செலுத்தும் பிரீமியம் 50,000 ரூபாய்க்குமேல் அதிகமாக இருக்கும்போது தேவைப்படும்.

* தங்கம், வைரம், வெள்ளி போன்றவை ஐந்துலட்சம் ரூபாய்க்குமேல் வாங்கும்போது தேவைப்படும்.

கறுப்புப்பணம் தடைபடும்
மேலே சொன்ன எல்லா செயல்பாடுகளின்போதும்அவசியம் பான் கார்டு எண்தேவைப்படுகிறது. இதுபோன்ற செயல்பாடுகளில் பான் கார்டுகள் அங்கம்வகிப்பதற்கு மிக முக்கிய காரணம்கறுப்புப் பணம் ஊடுருவுதலைத் தடைசெய்வதற்காகத்தான்.
நமது அனைத்து பரிவர்த்தனைகளும் பான்கார்டு எண் மூலம் வருமானவரித் துறையால் கண்காணிக்கப் படும். இருப்பினும் இந்தச்செயல்பாடுகளில் பல தரப்புகளில் காணப்படும்அலட்சிய போக்கு காரணத்தால் இன்றையநிலையில் கறுப்புப் பணம் களையப்படுவதாகத் தெரியவில்லை. இதற்கு இன்னொரு முக்கிய காரணம்லஞ்சம், கணக்கில் வராத வருவாய்.

பான் கார்டு இருந்தால்...
சரி, ஒருவர் பான் கார்டுவாங்கியதால், அவரும் வருமான வரிகட்ட வேண்டுமா என்றால், கிடையாது. நிதி ஆண்டில் வருமானம், தற்போதைய நிலையில் ரூ. 2.5 லட்சம் தாண்டும்போதுதான்வரி கட்ட வேண்டும். பான்கார்டு வைத்திருப்பதில் இன்னொரு நன்மை உண்டு. அதை அனைத்து அரசு மற்றும்அரசு சாராத நிறுவனங்களில் அடையாளஅட்டையாகப் பயன்படுத்தலாம்

FLASH NEWS : TET 5% மதிப்பெண் தளர்வு பணிடங்கள் நிரப்ப இடைக்கால தடை நோட்டிஸ் நகல்

Posted: 01 Nov 2014 11:47 PM PDT


5% மதிப்பெண்தளர்வு மூலம் ஆசிரியர் தகுதிதேர்வில் வெற்றி பெற்றுள்ள  திரு பாரதி ராஜாஎன்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில்
தாக்கல்செய்த மனுவில் அவர் 5% மதிப்பெண்தளர்வு மூலம் வெற்றி பெற்றுள்ளார். தற்போது பாண்டிச்சேரி அரசு வெளியிட்ட SC ST ஆசிரியர்பட்டியலில் 90 க்கு மேல் 
பெற்றவர்களைகொண்டு ஆசிரியர் பணியிடம் நிரப்ப அறிவிப்பு இருந்தது   மேலும்90 க்கு மேல் பெற்றவர்கள் பட்டியலில்
இடம் பெற்று இருந்தனர். இதனால்ஆசிரியர் நியமனத்தில் தமிழ் நாடு அரசைபின்பற்றும் பாண்டிச்சேரி அரசு வெளியிட்ட  பட்டியலில் 5% மதிப்பெண் தளர்வுடன் இல்லை. எனவே இந்தபணியிடங்களுக்கு இடைக்கால தடை விதிக்க கோரியிருந்தார்.

சென்னைஉயர்நீதிமன்றம் பாண்டிச்சேரி பள்ளி கல்வித்துறை மற்றும்தமிழ் நாடு ஆசிரியர் தேர்வுவாரியம் ஆகியவற்றிற்கு   பணியிடங்கள்நிரப்புவதற்கு இடைக்கால தடை விதித்து நோட்டிஸ்




Computer Instructor District Wise Seniority List

Posted: 01 Nov 2014 09:48 PM PDT


State Level Computer Instructor Tentative Seniority List


District wise Seniority List (Real Copy):

District wise Seniority List (Typed Copy):

Thanks to 
Mr. MANOHARAN M, TNCSBED ASSOCIATION, KARUR.
&
Mr. Manogar Paneer Selvam, Tiruvannamalai Dt.
&
Mr. Suresh Thellar, Tiruvannamalai Dt.
&
Mr. Rajendran, Dindigul Dt.
&
Mr. Elankilli Vallavan, Kanchipuram Dt.

தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ..... தினமும் 16மணிநேரங்கள் பணியாற்றும் அவலநிலை

Posted: 01 Nov 2014 09:19 PM PDT


தமிழகத்தில்செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளில்விடுதியில் தங்கி வேலைப்பார்க்கும் இளங்கலை,முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் காலை 4 மணிமுதலே தங்களுக்கானவகுப்புகளை கவனிக்க பாடம் நடத்ததேர்வை கண்காணிக்க சிறப்பு வகுப்பு எனஇரவு 10மணிவரை மற்றும் அதற்குமேலும் தொடர்ந்து பணியாற்றிவருவதாக தகவல்கள்
கிடைத்துள்ளன..
இதற்காகஅவர்களுக்கு தனியார் பள்ளி நிர்வாகங்களால்குறைவான ஊதியமே அளிக்கப்படுவதாகவும் ஆனால்அடிமைகளை நடத்துவது போல் பணிச்சுமை கொடுப்பதாகவும்ஆய்வில் தெரியவந்துள்ளது.. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட மதியம்1 மணிவரையிலும் பின்னர் இரவு 8 மணிமுதல்10.30வரை வகுப்புகளை எடுக்க வற்புறுத்துவதாகவும் தகவல்கள்கிடைத்துள்ளன.. இதனை தடுக்க அரசுமுயற்சி மேற்கொள்ள வேண்டும்.. 8 மணிநேரத்திற்கு மேல் வேலைபார்க்க கட்டாயப்படுத்துவதுசட்டப்படி பெருங்குற்றம் என்கிற நிலையில் இதுபோல்தங்களின்சுய லாபத்திற்காக பட்டதாரிகளை பாடாய் படுத்தும் தனியார்பள்ளிகளுக்குஅரசு உடனடியாக எச்சரிக்கை விடுக்க வேண்டும்.. இல்லாவிடில்பல பட்டதாரிகள் மனஅழுத்தத்திற்கு ஆளாகி நோயாளிகளாக மாறிவிடுவர்...... கல்விக்கட்டணத்தை நிர்ணயிக்க மட்டுமே நடவடிக்கை எடுக்கும்தமிழக அரசு...இதுபோன்ற செயல்களில்ஈடுபடும் தனியார்பள்ளி நிர்வாகங்களை கண்டிக்க தனிகவனம் செலுத்தாதது வருத்தமளிக்கிறது.. விரைந்து இதற்கென .நடவடிக்கை எடுக்குமா.. ??என்ற எதிர்பார்ப்பில் தனியார்பள்ளிகளில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் உள்ளனர்..

பள்ளி நிர்வாகங்களுக்கு கர்நாடக முதல்வர் எச்சரிக்கை

Posted: 01 Nov 2014 09:18 PM PDT


குழந்தைகள்மீதான பாலியல்: தனியார் பெங்களூரு; குழந்தைகள்மீதான பாலியல் பலாத்கார சம்பவங்கள்அதிகரித்து வருவதை தொடர்ந்து தனியார்பள்ளிகளுக்கு முதலமைச்சர் சித்தராமையா கடும் எச்சரிக்கை
விடுத்திருக்கிறார். மேலும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனஅவர் எச்சரித்து உள்ளார்.குழந்தைகள் பள்ளிக்குள்சென்று விட்டால் பள்ளி நிர்வாகம் தான்அனைத்து பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ள வேண்டும்என்றார்.6 வயது குழந்தைக்கு பாலியல்தொல்லை தந்த ஆசிரியரை போலீசார்நேற்று முன்தினம் கைது செய்துவிட்டனர்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:பள்ளி குழந்தைகளின் பாதுகாப்புக்குதேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாநிலஅரசு எடுத்து வருகிறது. இவ்விஷயத்தில்பெற்றோர், பொதுமக்கள் பயப்பட வேண்டியது இல்லை. குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைசம்பவங்கள் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் தலைகுனிய வைத்துள்ளது. மிருகங்கள் கூட இதுபோன்ற செயலில்ஈடுபடுவது கிடையாது.
இந்த சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ்கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். குழந்தைகள் மீது நடைபெறும் பாலியம்சம்பவங்களில் குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை கிடைக்கவிரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். இவ்வாறு முதலமைச்சர் சித்தராமையாகூறினார்.

தகுதியான ஆசிரியர்களை உருவாக்க ரூ.300 கோடி : புதிய திட்டம் என்ன?

Posted: 01 Nov 2014 09:14 PM PDT


பல்கலைகளுக்குதகுதியான ஆசிரியர்களை அளிக்க, முதற்கட்டமாக, 1,000 ஆசிரியர்கள்தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி அளிக்கப்படுகிறது; இதற்கு, 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது' என, பல்கலைக்கழக மானியக் குழு என்றயு.ஜி.சி.,யின்துணைத் தலைவர் தேவராஜ்
தெரிவித்தார்.

சென்னைபல்கலை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த தேவராஜ் கூறியதாவது:
41 நிகர்நிலைபல்கலைகள் பிரச்னை குறித்து? நாடுமுழுவதும், 41 நிகர்நிலை பல் கலைகள் மீண்டும்ஆய்வு செய்யப்படு கிறது. அப்பல்கலைகளில், தகுதியானஆசிரியர்கள் இல்லை என்பது தான்பிரச்னை. இதற்காக தான், தகுதிவாய்ந்தஆசிரியர்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தகுதியானஆசிரியர்களை உருவாக்கும் புதிய திட்டம் என்ன?
ஆசிரியர்கள்தகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 12வது ஐந்தாண்டுதிட்டத்தில், 1,000 தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய, ஆந்திரமாநிலம், காக்கி நாடாவில், பல்கலைஆசிரியர் கல்வி மையம் உருவாக்கப்பட்டுஉள்ளது. இதற்கு, முதற்கட்டமாக, 300 கோடிரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதுதவிர, மனிதவளமேம்பாட்டுத் துறை, 5,000 ஆசிரியர்களை உருவாக்குகிறது. பல்கலைகள், யு.ஜி.சி.,யிடம் ஒப்பந்தம் செய்துகொண்டு, ஆசிரியர்களை கேட்டால், நாங்கள் அளிப்போம். அவர்களுக்கானசம்பளம் முழுவதையும்,
யு.ஜி.சி.,யேஅளிக்கும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

கல்வி மையங்கள் மூடப்படும்!
பல்கலைகள்தொலைதூரக் கல்வி பெயரில், ஆங்காங்கேஅமைக்கும் கல்வி மையங்களுக்கு, யு.ஜி.சி., கடிவாளம்போட்டுள்ளது.
இதுகுறித்து, அதன் துணைத் தலைவர் தேவராஜ்கூறியதாவது: மாநில அரசின் சட்டஅடிப்படையில், தொலைதூரக் கல்வி நிறுவனங்கள், மாநிலத்திற்குள்மட்டுமே செயல்பட முடியும். பார்லி., அனுமதி பெற்றிருந்தால், நாடு முழுவதும் கல்விமையங்கள் அமைக்கலாம்.
நிகர்நிலைபல்கலைகள், தொலைதூரக் கல்வி மையங்களை துவக்கமுடியாது. அனுமதியின்றி துவக்கினால், நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களும் குறிப்பிட்ட பகுதிக்குள் மட்டுமே செயல்பட முடியும். கல்வி மையங்கள் பெயரில் தப்பு நடப்பதை, தடுத்து நிறுத்தி, அவற்றை மூட வேண்டும். நாங்கள், தொலைதூரக் கல்விக்கு எதிரானவர்கள் இல்லை. ஆன் - லைன்படிப்புகளை, அதிகளவில் கொண்டு வர வேண்டும்என்பதே, எங்கள் முடிவு.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

பாடங்களில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரை

Posted: 01 Nov 2014 09:10 PM PDT


பத்தாம்வகுப்பு தமிழ் மாணவர்களுக்கு கோவைபீளமேடு பி.எஸ்.ஜி.,சர்வஜனா மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள்அறிவுரை வழங்கினர்.பங்கஜம், தமிழ்: ஆசிரியர்கள் தரும் குறிப்பினை பின்பற்றினால்அதிக மதிப்பெண் பெற முடியும். நுால்ஆசிரியர் பெயர்,
நுால்களின் பெயர்களைமனதில் பதிய வைப்பதன் மூலம், ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு எளிதில் விடையளிக்கலாம். மனப்பாடப்பகுதியினைஎழுதிப்பார்த்து பயிற்சி மேற்கொள்வதன் மூலம்பிழையின்றி எழுத முடியும். இதனால், முழு மதிப்பெண் பெற முடியும். கடிதம், கட்டுரை பகுதிகளில், திரும்ப திரும்ப வரக்கூடியகேள்விகளானது சிறுசேமிப்பு, மழை நீர் சேமிப்புபோன்ற தலைப்புகளில் வரும். உட்தலைப்பிட்டு எழுதினால், கட்டுரை வினாக்களில் முழு மதிப்பெண் பெறமுடியும்.
மெஹர்னிசா, ஆங்கிலம்: ஆங்கிலப்பாடம் கடினமானது அல்ல; புரிந்து படித்தால்எளியது. நோட்மேக்கிங் பகுதியில், எளிதாக மதிப்பெண் பெறநோட்ஸ், உட்தலைப்பு போன்றவை தெளிவாக எழுதவேண்டும். விளம்பரப்பகுதி வினாக்களில், முகவரி, படம் வரைதல், சலுகை, தள்ளுபடி போன்றவைகளை எழுதுவதன் மூலம் முழு மதிப்பெண்ணைபெற முடியும். இலக்கணப்பிழையின்றி எழுத வேண்டும்.
மீனலோச்னி, அறிவியல்: கடினமான பாடத்தை முதலில்படிக்கலாம். படம் வரைந்து பாகம்குறி வினா மற்றும் கொடுத்தபடத்தில் பாகம் குறி போன்றவினாக்களுக்கு விடையளிப்பதற்கு முதலில், படங்களையும், பாகங்களையும் மனதில் பதிய வைக்கவேண்டும். அதற்கு அடிக்கடி படங்களைவரைந்து பழகிக்கொள்ள வேண்டும். புத்தகத்தில்,மஞ்சள், நீலம், ப்ரவுன்போன்ற கலர்களில், கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளை படிப்பதன் மூலம் அறிவியல் விஞ்ஞானிகள்பெயர், காரணங்களை அறிதல் போன்றவை தெரிந்துகொள்ள முடியும். ஐந்து மதிப்பெண் வினாவிற்குவிதிகள், அட்டவணை, படம், வினாக்களுக்கு விளக்கமளித்தல்போன்றவைகளை பிழையின்றி பதிலளிக்க வேண்டும். அறிவியலை ஆர்வமாக படித்தால், 100க்கு100 என்ற இலக்கு வெகுதுாரத்தில் இல்லை. அறிவியல் பாடத்தை ஐந்து அல்லதுஆறு முறை முழுமையாக படித்திருந்தால், ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு எளிதில் விடையளிக்கலாம்.
மஞ்சுளா, சமூக அறிவியல்: தேர்ந்தெடுத்து எழுதுக, பொருத்துக உள்ளிட்ட52 ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு புத்தகத்தை முழுமையாக படிப்பதன் மூலம் விடையளிக்க முடியும். காலக்கோடு வரைக பகுதியில், 1900 முதல்1950 வரை உள்ள காலக்கட்டங்களில், நடந்தமுக்கிய சம்பவங்கள் வினாக்களில் கேட்கப்படும். வரைபடம் பகுதியில், ஆசியாவரைபடம் முக்கியமானது. இதில், நாடுகளுக்கு புள்ளிகள்வைக்கக்கூடாது. நகரங்களுக்கு கண்டிப்பாக புள்ளி வைக்க வேண்டும். வினா எண் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். சிகரங்கள், மலைத்தொடர்களுக்கு குறியீடுகள் குறிப்பிட வேண்டும். ஆறுகள், பாலைவனங்கள், மண்வகைகள், பருவகாற்று வீசும் திசைகள், தீவுகள், மலைத்தொடர், பீடபூமி இவைகளை தொடர்புபடுத்தி படிக்கும்போது முழு மதிப்பெண் பெறமுடியும். ஐந்து மதிப்பெண் வினாக்களுக்குஉட்தலைப்பு, ஆண்டுகள், தலைவர்களின் பெயர்கள், முக்கிய நிகழ்வுகள், இடங்கள்ஆகியவற்றை அடிக்கோடிட்டு காட்டுவதால், அதிக மதிப்பெண் பெறலாம். கடைசி பத்து நிமிடங்கள் விடைத்தாள்சரிபார்ப்பதற்காக ஒதுக்க வேண்டும்.
பாலசுப்ரமணியம், கணிதம்: கணிதம் முதல் பாடத்தில்மட்டும் 15 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படும். எனவே அப்பகுதிக்கு மாணவர்கள்முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பத்துபாடங்களில் 120 ஒரு மதிப்பெண் வினாக்கள்உண்டு. அதனை நன்கு படித்தால், முழு மதிப்பெண் பெறலாம். நேர மேலாண்மையை பின்பற்றவேண்டும்.

கல்வித்துறைக்கு எதிரான வழக்குகள் எண்ணிக்கை அதிகரிப்பு: நிலுவையில் 2,000 வழக்குகள் இருப்பதால் சிக்கல்

Posted: 01 Nov 2014 09:07 PM PDT


பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்விதுறைக்கு எதிராக, வழக்குகள் அதிகரித்துவருகின்றன. ஓய்வு பெற்ற ஆசிரியர்மற்றும் பணியில் உள்ள ஆசிரியர்களால், 2,000த்திற்கும் மேற்பட்ட வழக்குகள், நிலுவையில்
இருப்பதாக கூறப்படுகிறது.

அரசு ஊழியர், 12 லட்சம் பேரில், 3 லட்சத்திற்கும்மேற்பட்டோர், கல்வித்துறையில் பணி புரிகின்றனர். பெரியதுறையாக, பள்ளி கல்வித்துறை இருப்பதாலோஎன்னவோ, வழக்குகளுக்கும் பஞ்சம் கிடையாது.

வழக்குகள்எண்ணிக்கை :
பதவி உயர்வு, ஊதிய உயர்வுஉள்ளிட்ட பணிகளைக் கூட, மாவட்ட கல்விஅதிகாரிகள், சரியாக செய்வதில்லை என, ஆசிரியர் சங்க நிர்வாகிகள் குற்றம்சாட்டுகின்றனர்.இதன் காரணமாக, நாளுக்கு, நாள், கல்வித்துறைக்கு எதிராக வழக்குகள் எண்ணிக்கைஅதிகரித்தபடி உள்ளன. சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைவழங்கும் தீர்ப்புகளை, உடனுக்குடன் அமல்படுத்தவும், கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.இதனால், நீதிமன்ற அவமதிப்புவழக்கில், அதிகாரிகள் ஆஜராகி, நீதிபதிகளின் கேள்விகணைகளுக்கும்ஆளாகி வருகின்றனர்.கடந்த, 27ம் தேதி, சென்னைஉயர் நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பள்ளி கல்வித்துறை முதன்மைசெயலர், சபிதா ஆஜரானார். ஆசிரியர்களுக்கு, சிறப்பு நிலை அந்தஸ்து வழங்குவதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம், ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது. இதைஅமல்படுத்த நடவடிக்கை எடுக்காததால், சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தனர்.இதில், நீதிபதிகள், பல்வேறு கேள்விகளை எழுப்பியதால், செயலர் சபிதா, நெளிய வேண்டியநிலை ஏற்பட்டது.தற்போதைய நிலவரப்படி, அரசாணை எண், 216 தொடர்பானவழக்குகள் (ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு, தேர்வு நிலை, சிறப்புநிலைக்கான பணப்பலன் வழங்குவது) மற்றும் இதர வழக்குகள்என, 2,000த்திற்கும் அதிகமான வழக்குகள், நிலுவையில்இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலர், ரைமாண்ட் பேட்ரிக் கூறியதாவது:
*எந்த ஒரு வழக்காக இருந்தாலும், கடைசி பிரதிவாதியாக, மாவட்ட அளவில் உள்ளஒரு அதிகாரி தான் இருப்பார். பெரும்பாலும், பதவி உயர்வு, ஊக்கஊதியம், ஊதிய உயர்வு உள்ளிட்டபிரச்னைகளால், வழக்குகள் வருகின்றன.

*இந்த பிரச்னைகள் வராத அளவிற்கு, மாவட்டஅளவில் உள்ள அதிகாரிகள் செயல்படுவதில்லை. மேலும், வழக்கில், பதில் மனு தயாரிக்கும்பணி, மாவட்ட அதிகாரியிடமே தரப்படுகிறது.திணறுகின்றனர் எவ்வித சட்ட அறிவும், அனுபவமும் இல்லாத மாவட்ட அதிகாரிகள், பதில் மனுவை தாக்கல் செய்யதிணறுகின்றனர்.

*யாரையாவதுபிடித்து, பல ஆயிரம் ரூபாயை, எப்படியோ செலவழித்து, பதில் மனுவை தாக்கல்செய்கின்றனர். இதிலும், பல ஓட்டைகள் இருக்கும். வழக்குகளின் நிலையை, தொடர்ந்து கண்காணிக்கவும், ஆள் கிடையாது.
இதனால், அவ்வளவு எளிதில், வழக்கு முடிவுக்கு வருவதில்லை. இறுதியில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடும் அளவிற்கு, நிலைமை முற்றுகிறது. அப்போது தான், விஷயம், உயர் அதிகாரிகள் வரை செல்கிறது.
*ஒவ்வொருமாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் மற்றும்முதன்மைக் கல்வி அலுவலகங்களில், ஒருசட்ட அலுவலரை நியமிக்க வேண்டும். அவர், கல்வித்துறையை அறிந்தவராகவும் இருக்க வேண்டும். இப்படிசெய்தால், ஓரளவு, வழக்குகளின் எண்ணிக்கையைகுறைக்கலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்சங்க பொதுச்செயலர், சாமி சத்தியமூர்த்தி கூறியதாவது:உயர் பொறுப்பில் இருக்கும்அதிகாரிகள், ஒரு முடிவை எடுக்கும்முன், விரிவாக விவாதிப்பது இல்லை. எடுத்தோம், கவிழ்த்தோம் என, முடிவை எடுப்பதும், பின் மாற்றுவதையும், வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் தான், வழக்குகள்குவிந்துகொண்டே இருக்கின்றன.இவ்வாறு, சாமி கூறினார்.

சட்ட அலுவலர் நியமனம் இழுபறி:
பள்ளி கல்வித்துறையில், நாகராஜன் என்பவர், சட்ட அலுவலராக பணியாற்றிவருகிறார். வழக்குகளை உடனுக்குடன் முடிப்பதற்கு வசதியாக, மேலும், இரு சட்டஅலுவலர்கள் நியமனம் செய்யப்படுவர் என, சட்டசபையில் அறிவித்து, ஆறு மாதங்களுக்கு மேல்ஆகிறது. இதுவரை நியமனம் செய்யவில்லை.நாகராஜன் கூறுகையில், ''ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு, ஒருசட்ட அலுவலரும், உயர் நீதிமன்ற மதுரைகிளை வழக்குகளை கவனிக்க, ஒரு சட்ட அலுவலரும்நியமனம் செய்யப்படுவர் என, தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை, நியமனம் நடக்கவில்லை,'' என்றார்.

மூலத்துறை மாணவனின் முத்தான பேச்சை காணத்தவறாதீர்...

Posted: 01 Nov 2014 04:20 AM PDT


கோவை மாவட்டம், மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவனின் "மாநில அளவில் முதல்பரிசு வாங்கிய திருக்குறள் பேச்சுப்போட்டியின்நிகழ்ச்சி"  நவம்பர்2,9,16 &23 ஆகிய நாட்களில் காலை
9:30 முதல் 10:00 மணி வரை  மக்கள் டிவியில் ஒளிபரப்பாகிறது.
      மாணவனின் பேச்சை காணத்தவறாதீர்.