சிம் கார்டுகள்
நாம் 1100 காலத்தில் பயன்படுத்திய சிம்கார்டுகள் தற்காலத்தில் மிகப்பெரிய உருவ அளவு கொண்டதாக கருதப்படுகின்றன. ஏனெனில் பெரும்பாலான ஸ்மாரட் போன் நிறுவனங்கள் தங்கள் போன்களில் மைக்ரோ சிம் எனப்படும், அளவில் சிறிய சிம்கார்டுகளை பொருத்த மட்டுமே போனில் இடம் அமைத்திருப்பர்.
இயல்பான சிம்மின் அளவில் பாதியாக இருக்கும் இவ்வகை சிம்களை நாம் இருவகைகளில் பெறலாம். சிம்களை வெட்டும் கட்டர்களைக் கொண்டு இயல்பான சிம்மை தேவையான அளவிற்கு வெட்டுவதன் மூலமோ அல்லது உங்கள் போன் நிறுவனத்திடம் டூப்ளிகேட் சிம்கார்டினை மைக்ரோ சிம் அளவிலும் பெறலாம்.
சிம் வெட்டப்பட்டு பயன்படுத்தப்படுவதே இன்று அதிகம் தேர்வு செய்யப்படுகிறது. இது எளிய முறையாக உள்ளபோதும், வெட்டப்படும் சிம்மில் இடப்பெயர்வு இருக்க வாய்ப்புகள் உள்ளன. இதனால் உங்கள் சிம்மானது அடிக்கடி நெட்வொர்க் சிக்னல் மற்றும் டேட்டா கனக்ஷனை இழக்கவோ அல்லது விட்டுவிட்டு பெறவோ வாய்ப்புகள் உள்ளன. இதனால் கூடுதல் பேட்டரியும் செலவு செய்யப்படும். எனவே இயலுமாயின் உங்கள் சிம் நிறுவனத்திடம் இருந்து சுமார் 150ரூபாய் செலவில் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட புதிய மைக்ரோ சிம்மினை வாங்கி பயன்படுத்துங்கள்.
இவ்வாறு சிறியதாக வெட்டப்பட்ட சிம்களை பழைய போன்களில் அப்படியே பயன்படுத்த இயலாது. இதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிம் கன்வெர்ட்ர்கள் எனப்படும் இயல்பான சிம் அளவில் உள்ள வெட்டப்பட்ட அட்டைகளின் உள்ளே பொருத்தியே பயன்படுத்த முடியும்.
பெரும்பாலான புதிய தலைமுறை ஐ போன்கள் (ஆப்பிள்) மைக்ரே சிம்மைவிட அளவில் சிறிய சிம்களை பயன்படுத்துகின்றன. இவை நேனோ சிம்கள் என்று அழைக்கப்படும்