வாழ்க வளமுடன் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் வாழ்க வளமுடன்!

Wednesday, March 11, 2015

தொப்பையை குறைக்க என்ன செய்யலாம்

தொப்பையை குறைக்க என்ன செய்யலாம்

தொப்பையைக் குறைக்க உணவுகளுக்கு அடுத்தபடியாக உதவுவது உடற்பயிற்சி தான். எனவே தொப்பையைக் குறைக்க உதவும் உணவுகளுடன்,
தினமும் உடற்பயிற்சியையும் தவறாமல் மேற்கொண்டு வந்தால், நிச்சயம் தொப்பையைக் குறைக்கலாம்.

அதிலும் உங்களுக்கு ஜிம் சென்று உடற்பயிற்சி செய்ய நேரமில்லையா? எந்த ஒரு கருவிகளின் உதவியும் இல்லாமல் ஈஸியான உடற்பயிற்சியின் மூலமே தொப்பையைக் குறைக்கலாம். வயிற்றில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகளை பார்க்கலாம். உடற்பயிற்சி செய்யும் போது, கலோரிகளானது கரைக்கப்பட்டு, உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் கரைந்து, தொப்பையும் குறைய ஆரம்பிக்கும்.

தொப்பையைக் குறைக்க கடுமையான உடற்பயிற்சி தான் அவசியம் என்பதில்லை. தினமும் எளிய உடற்பயிற்சியான ரன்னிங்/வாக்கிங்கை மேற்கொண்டாலே, கொழுப்பை கரைக்கலாம். ஆனால் ரன்னிங்/வாக்கிங் மேற்கொள்ளும் போது, நாளுக்கு நாள் கொஞ்சம் கொஞ்சமாக தூரத்தை அதிகரிப்பதுடன், உடற்பயிற்சிக்கு முன்னும், பின்னும் வாம்ப் அப் செய்து உடலை ரிலாக்ஸ் செய்ய மறக்க வேண்டாம்.

உங்களால் உடற்பயிற்சி இயந்திரங்களை வாங்க முடிந்தால், நீள் பயிற்சி கருவியை வாங்கி தினமும் உடற்பயிற்சி செய்து வாருங்கள். இந்த உடற்பயிற்சி இயந்திரம் தொப்பையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இந்த இயந்திரத்தில் தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்தால், 300 கலோரிகளை கரைக்கலாம்.

உங்கள் வீட்டில் சைக்கிள் இருந்தால், தினமும் அதிகாலையில் சிறிது தூரம் சைக்கிளில் வெளியே பயணம் செய்யுங்கள். ஏனெனில் சைக்கிள் ஓட்டுவதன் மூலம், கால்கள் வலிமையடைவதுடன், குனிந்தவாறு ஓட்டுவதால் வயிற்றில் உள்ள கொழுப்புக்களும் கரையும்.

எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கக் கூடிய நன்மைகள்!!!

எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கக் கூடிய நன்மைகள்!!!
      எலுமிச்சை சாற்றை

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் இளஞ்சூடான எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கக் கூடிய நன்மைகள்!!!

1. எமது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது...
எலுமிச்சையில் நிறைய விட்டமின் சீ அடங்கியுள்ளதால் , தடிமன் முதலிய சிறு நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. பொட்டாசியம் மூளை, நரம்பு கடத்துகையை சீராக்கிறது. குருதிச் சுற்றோட்டத்தை கட்டுப்படுத்துகிறது.

2. உடலின் pH ஐ சீராக்குகிறது...
எலுமிச்சைச் சாறில் சிட்ரிக் அமிலம் இருக்கிறது. ஆயினும், சமிபாட்டு செயன்முறையால், அது மூலச்சேர்க்கையாக மாறி, உடலின் அமிலத்தன்மையை நீக்குகிறது...

3. உடல் எடையைக் குறைக்கிறது...
எலுமிச்சையில் உள்ள பெக்டின் நார்ப்பொருள் பசியைக் குறைக்கிறது. மூலத்தன்மையுள்ள உணவுகளை அதிகம் உண்பவர்கள் மெலிவான உடல்வாகை கொண்டிருப்பது நிருபணமான உண்மை...

4. சமிபாட்டை வேகப்படுத்துகிற து...

5. சிறுநீர்த் தொகுதியைச் சுத்திகரிக்கிறத ு.

6. தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்களைக் குறைக்கிறது.

7. வாய்த்துற்நாற்ற த்தை போக்கி, சீரான சுவாசம் தருகிறது...

8. நுரையீரல் தொற்றுக்களை குறைக்கிறது.

9. Stress ஐ குறைக்கிறது.
இது விட்டமின் சீ காரணமாய் இருக்கலாம் என்பது தியறி. ஆனால் நிருபிக்கப்படவில்லை.

10. காலையில் டீ அல்லது கோப்பி குடிக்கும் கெட்ட பழக்கத்தை நீக்குகிறது.