-------- Original message --------
From: கல்விச் செய்தி
Date:2014/11/18 3:11 AM (GMT+05:30)
To: bliccenter@gmail.com
Subject: KALVI SAITHI-TN EDUCATIONAL FLASH NEWS
KALVI SAITHI-TN EDUCATIONAL FLASH NEWS |
- விடுப்பு ஊதியம்
- ஊழ்+அல்
- இன்ஷுரன்ஸ் பாலிசி… தவிர்க்க வேண்டிய தவறுகள்!
- மாணவ, மாணவியரின் பாதுகாப்பிற்காக 113 விதிமுறைகள் தயார்!
- பள்ளிகளில் அதிகரிக்கும் வன்முறை; மாணவர்களுக்கு சிறப்பு 'கவுன்சிலிங்'
- ஆதரவற்ற நலிந்த குழந்தைகளுக்கு உதவிக்கரம் நீட்டிவரும் "மைம்''
- TNPSC:குரூப்-4 தேர்வு: 4,963 காலிப் பணியிடங்களுக்கு 13.38 லட்சம் பேர் போட்டி.
- ஆசிரியர் காலிப்பணியிடங்கள்: பல்கலைக்கழகங்களுக்கு மானியக் குழு உத்தரவு
- அனைத்து பள்ளிகளிலும் தண்ணீர் வசதியுடன் கழிப்பறை: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
- தொழிற்கல்வி ஆசிரியர்களின் கூடுதல் சம்பளத்தை பிடித்தம் செய்ய கூடாது
- அரசு வாகனங்களில் சிவப்பு, நீல நிற விளக்குகளை யார் பயன்படுத்தலாம்?
- புதுக்கோட்டையில் அறிவியல் கண்காட்சி: பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு
- செல்ஃபோனில் இணைய வசதி: 3 ஆண்டில் 7 மடங்கு பெருகும்!
- தபால்துறையை பல்வேறு சேவை வழங்கும் அமைப்பாக மாற்ற திட்டம்
- மாநில மனித உரிமை ஆணையத் தலைவராக டி.மீனாகுமாரி நியமனம்
- பார்வையற்ற மாணவர்கள் நலனில்அக்கறை காட்டும் டில்லி பல்கலை
- மாணவ, மாணவியரின் பாதுகாப்புக்கு 113 அம்சங்கள்:மாநில அரசு உத்தரவில் சட்ட வரைவு வெளியீடு
- 1,330 குறட்பாக்களும் தலைகீழ் பாடம்: எல்லப்பன் பயிற்சியில் அசத்தும் மாணவர்கள்
Posted: 17 Nov 2014 10:22 AM PST |
Posted: 17 Nov 2014 07:52 AM PST ஊழல் என்ற சொல், ஊழ்+அல் என்று பிரிக்கப்படும். ஊழ் என்பது விதி. அதுஇயற்கை விதியாகவும் இருக்கலாம், மனிதனால் இயற்றப்பட்டதாகவும் இருக்கலாம். அல் என்றால் அல்லாதது; புறம்பானது என்று பொருள். ஊழல்என்பது விதிகளுக்குப் புறம்பானது என்று அறிகிறோம். விதிக்கு மாறானது ஒரு நிறுவனத்தில்பரவலாக நடைபெறுகிறது என்றால், அந்நிறுவனம் அழியும் நிலையை நோக்கிபோய்க் கொண்டிருக்கிறது.இன்று, நம் நாட்டில்ஊழல் மலிந்துவிட்டது என்று கூறுகின்றனர். 'ஊழல்உலகு எங்கும் வியாபித்துள்ளது; எல்லாநாடுகளிலும் உள்ளது போலவே நம்நாட்டிலும் இருக்கிறது. அதை ஒழிக்க முடியாது; அதோடு நாம் வாழ வேண்டியதுதான். ஊழல் மூலம் நாம் நமக்குவேண்டியதைச் சாதித்து கொள்ள வேண்டியதுதான். அகப்பட்டால்தானே திருடன் என்பதால், நமக்குவாய்ப்பு கிடைத்தால் நாமும் அகப்படாமல் ஊழலில்ஈடுபட்டு பொருள் சேர்ப்பதுதான் புத்திசாலித்தனம்' என்று பலர் நினைக்கின்றனர்.ஊழல்என்பது புற்று நோய் போன்றது. புற்று நோய் வந்த பின், மற்ற நல்ல சதை, தசைகளைவளரவிடாது, புற்றுநோய் தாக்கப்பட்ட சதை, தசை மட்டுமேஎப்படி வளரு மோ அப்படிஊழல் புகுந்த நிறுவனத்திலும், நாட்டிலும்ஊழல் புரிபவர்கள் எண்ணிக்கையும், ஊழலின் பரிமாண மும்பெருகும்; நல்லோரின் எண்ணிக்கை குறையும். ஒரு நிலையில் ஊழலின்பரிமாணம் தாங்க முடியாததாகி, ஊழல்மலிந்த நிறுவனம்,சமுதாயம், நாடு அழிந்து போகும். கீழ்மக்கள் தவறு செய்யாமல் இருப்பதற்குகாரணம், அகப்பட்டுக் கொள்வோமோ, தண்டனை கிடைக்குமோ என்றஅச்சம் தான்.நம் நாட்டில்எப்போதும், இப்போது போல ஊழல்மலிந்திருந்தது என்று சிலர் கூறுவதுஉண்மையல்ல. முன்பு, ஊழல் தலைகாட்டினால் ஊழல் செய்தவர் தண்டிக்கப்பட்டார். அவர் பணியாற்றிய நிறுவனத்தில், நேர்மையானவர் பதவியை ஏற்றார். மறுபடியும்நிறுவனம் நேர்மையைக் கடைப்பிடித்தது. அந்த நிலையே நாம்வேண்டத்தக்கது.நமக்கு ஒரு பிரச்னையைதீர்க்க வேண்டியுள்ளது, அதற்கு உதவி தேடுகிறோம்; கிடைக்கவில்லை. உதவி வரும் என்றுஓரளவுக்கு மேல் காத்து இருப்பதில்பயனில்லை. சோர்வு இல்லாது முயலவேண்டும்; பிரச்னையைத் தீர்க்க எவ்வாறு செயலில்இறங்க வேண்டும் என்று சிந்திப்போம்.இதுசெய்வதற்கு அருமையானது என்று சோர்வு கொள்ளாது, முயன்றால் பெருமை நம்மை வந்துஅடையும் என்றார் வள்ளுவர் (குறள்611). மேலும் அவர், அறிய வேண்டியதைஅறிந்து முயலாதிருப்பதே பழி என்கிறார் (618).நமக்குபழி வராதிருக்க, நாம் ஏற்ற முறையைஅறிந்து செயலில் இறங்கி வெற்றிகாண்போம். பதவியுடன் வருவது பொறுப்பு; அந்தபொறுப்பை நிறைவேற்ற தேவையானது அதிகாரம். இன்று, பதவியைத் தேடுவதேஅதிகாரத்திற்கு என்று பலரும் கருதுகின்றனர். ஆனால், நம் இலக்கியங்கள், பதவிஎன்றால் அதற்கு என்று கடமைகள்உண்டு. அவற்றை நிறைவேற்ற முடியவில்லைஎன்றால், தானாகவே முன் வந்துபதவி விலகவேண்டும் என்று அறிவுறுத்துகின்றன.இன்றுஆட்சிக்கு வந்துள்ள, வர முயல்பவர்கள் யாவரையும்மக்களாகிய நாம், 'அந்த பதவிக்குபல கடமை கள் உண்டு. அவை யாவையும் உங்களுக்குத் தெரியுமா? அக்கடமைகளை ஆற்ற தேவைப்படும் திறமைகளைநீங்கள் வளர்த்துக் கொண்டீர்களா?' என்று கேட்க வேண்டும்.அவர்கள் தங்கள் திறமைகளைவளர்த்துக் கொள்ள நாம் ஊக்கப்படுத்தவேண்டும்; உதவ வேண்டும். இக்கருத்தை, அனைத்து மக்களும் உணரச்செய்ய வேண்டும்.மேலும், நாம் தேர்ந்துஎடுத்து ஆட்சிக்கு அனுப்பியவர், செம்மையாகச் செயல்படவில்லை; நாம் அறிவுறுத்தியும் அவர்தன் தரத்தை மேம்படுத்திக் கொள்ளவில்லைஎன்றால், அவர் தொடர்ந்து ஆட்சிசெய்யாமல் விலகச் செய்வதும் நம்கடமை. காந்திஜி, 'ஒத்துழையாமை' இயக்கத்தின் மூலம், சூரியன் அஸ்தமிக்காதஉலகத்தின் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை ஆண்ட ஆங்கிலேயர்களை, நம்நாட்டை விட்டு வெளியேற்றினார். அதேபோல, நாம் நினைத்தால் ஊழல்செய்பவர்கள் தொடர்ந்து ஆட்சி செய்ய முடியாமல்ஓடச் செய்ய முடியும்.ஆட்சிப்பொறுப்பில் இருப்பவரிடம் நாம் என்ன எதிர்பார்க்கவேண்டும்? தகுதி, நற்பண்புகள், பொறுப்புகளை நிறைவேற்றும் செயல் திறமை, இலவசங்கள்அளிப்பது, மக்கள் நலத்திட்டம் என்றுசொல்ல இயலாது. இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டில் பரந்துகெடுக உலகு இயற்றியான் (குறள்1062) என்றார் வள்ளுவர்.இப்பரந்த உலகில் மற்றவரிடம் கையேந்தித்தான்உயிர் வாழ வேண்டும் என்றநிலையில் சிலர் இருக்கத்தான் வேண்டும்என்றால், இவ்வுலகை படைத்தவன் கெடுவானாக. நம் மக்கள் உலகைப்படைத்தவன் இறைவன். ஆட்சி செய்பவர்கண் கண்ட இறைவன் என்றுநம்புகின்றனர். ஆகவே, இலவசத்தை எதிர்நோக்கும்மக்கள் சிலர் ஒரு நாட்டில்இருக்கின்றனர் என்றால், அது கண் கண்டதெய்வமான ஆட்சி செய்பவருக்கு இழுக்கு.இன்றைய சூழலில் மக்கள்நல அரசு, மக்கள் அனைவருக்கும்உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும், தரமான கல்வியும், தேவையான உடல்நல வசதிகளும் கிடைக்கச்செய்ய வேண்டும். அதாவது, அவற்றைப் பெற்றுக்கொள்ளத் தேவைப்படும் அளவுக்கு, அவர்களின் இயற்கையான திறமைகளை மேம்படுத்த வேண்டும்.தேவைப்படும் தகுதிகள், நற்பண்புகள், திறன்களை அனைத்துக் குழந்தைகளும் பெறும் வாய்ப்பு அளிக்கப்படவேண்டும். அதாவது, அனைவருக்கும் கல்விவசதிகள் செய்யப்பட வேண்டும். தரமான கல்வி பெற்றமக்கள் வாழும் நாட்டில், நல்லரசு(வல்லரசு அல்ல) நிலவும். மக்கள்அனைவரும் மகிழ்ச்சி நிறைந்த நல்வாழ்வு வாழ்வர்; அங்கு, சாந்தி நிலவும். நம் கண் எதிரே தவறுநடப்பதை நாம் காண்கிறோம்; தவறுஎன்பதை உணர்கிறோம். நாம் என்ன செய்யவேண்டும் என்றும் நமக்குத் தெரிகிறது; ஆனால், செயலில் இறங்கத் தயங்குகிறோம். வரலாற்றைப் பார்த்தால், ஒரு சில தீயவர்களால்சமுதாயங்கள் அழியவில்லை. சமுதாயத்தில் உள்ள பல நல்லவர்கள்தீமையைக் கண்டும் வாளா இருந்ததேகாரணம் என்பது விளங்கும். யாராவதுஒருவர் முதல் கல்லை எடுத்துஎறிய வேண்டும். அதன் பின், பலரும்செயலில் இறங்குவர். அந்த முதல் கல்லைஎறிபவர் ஏன் நாமாக இருக்கக்கூடாது? இ-மெயில்: muthukumaran28531@yahoo.com - ச.முத்துக்குமரன் - கல்வியாளர், முன்னாள் துணைவேந்தர் பாரதிதாசன் பல்கலைக்கழகம் |
இன்ஷுரன்ஸ் பாலிசி… தவிர்க்க வேண்டிய தவறுகள்! Posted: 17 Nov 2014 04:49 AM PST நம்மில்பெரும்பாலானவர்கள் லைஃப் மற்றும் ஹெல்த்இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல்தவிர்த்துவருவது ஒருபுறம் இருக்க, ஏற்கெனவே எடுத்திருப்பவர்கள்தங்கள் எதிர்கால பாதுகாப்புக்கு எந்த வகையிலும் உறுதிசெய்யாத ஏதேதோ பாலிசிகளை எடுத்துவைத்திருக்கிறார்கள். இதற்குக் காரணம், இன்ஷூரன்ஸ் குறித்துதெளிவான புரிதல் இல்லாததால் செய்யும்தவறுகளால்தான். இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது நாம் செய்யும் தவறுகளையும், அதற்கான தீர்வுகளையும் பார்ப்போம். வரிச் சலுகை! நம்மில்பலர் வரிச் சலுகைக்காக இன்ஷூரன்ஸ்பாலிசி எடுக்கிறோம். ஆனால், இன்ஷூரன்ஸ் என்பதுஎதிர்கால பாதுகாப்புக்குத்தானே தவிர, வரிச் சலுகைகிடைக்கும் என்பதற்காக அல்ல. இந்த மனநிலையைமக்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். மற்றவர்களின்ஆலோசனை! பல சமயங்களில் நமக்கு தேவையான இன்ஷூரன்ஸ்பாலிசியை நாமே முடிவு செய்துஎடுக்காமல், மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு எடுக்கிறோம். இப்படிசொல்கிறவர்கள் நிதி ஆலோசகர்களாக இருந்தாலும்பரவாயில்லை. ஆனால், இன்ஷூரன்ஸ் பற்றிஎதுவுமே தெரியாத நண்பர்கள், உறவினர்கள்சொல்வதைக் கேட்டு பாலிசி எடுப்பதுமிகவும் தவறு. குறைந்தபிரீமியம்! குறைந்தபிரீமியத்தில் கிடைக்கிறது என்பதற்காக எந்த இன்ஷூரன்ஸ் பாலிசியையும்எடுக்கத் தேவையில்லை. தேவை இருந்து, நல்லபலன்களுடன் குறைந்த பிரீமியத்தில் பாலிசிகிடைத் தால், அதைத் தாராளமாகவாங்கலாம். தெரிந்துகொண்டுகையெழுத்திடுங்கள்! பாலிசிஎடுக்கும்போது படிவத்தை நாமே நிரப்பாமல் கையெழுத்துமட்டும் போட்டுத்தருவது. இதனால் தான் அந்தபாலிசி குறித்த எல்லா விவரங்களும்பாலிசிதாரருக்குத் தெரியாமல் போகிறது. அதேபோல, காப்பீட்டுப் பத்திரத்தில், சுயதகவல்கள், வாரிசுதாரர் மற்றும் விதிமுறைகளைச் சரிபார்த்துஅதன்பிறகு கையெழுத்துப் போடுவதே நல்லது. குறைந்தகாப்பீடு; அதிக பிரீமியம்! நம்மில்பலர் குறைந்த காப்பீட்டுக்கு அதிகபிரீமியத்தைக் கட்டுவது மாதிரி யான பாலிசியைவைத்திருக்கிறார்கள். காரணம், பாலிசி எடுக்கும்போதுஇந்த பாலிசியின் மூலம் எவ்வளவு இழப்பீடுகிடைக்கும், அதற்கான விதிமுறைகளும் நிபந்தனைகளும்என்னென்ன என்பதைத் தெரிந்துகொள்ளத் தவறி விடுகிறோம். குறைந்தபிரீமியத்தில், அதிக காப்பீடு தரும்டேர்ம் பாலிசி களைத் தேர்வுசெய்வதே சரி. முக்கியதகவல்களை மறைப்பது! இன்ஷூரன்ஸ்படிவத்தை நாமே பூர்த்தி செய்தாலும், முக்கியத் தகவல்கள், நோய்கள், முந்தைய மருத்துவ வரலாறு, வேறு காப்பீடுகள் பற்றிய தகவல்களைத் தெரிவிக்காமல்விட்டுவிடுகிறோம் அல்லது மறைத்து விடுகிறோம். இது தவறு. நம்மை பற்றியஎந்த முக்கிய தகவலையும் நாம்மறைக்கவே கூடாது. முக்கியமாற்றங்கள்! முகவரிமாற்றம், வாரிசுதாரர் மாற்றம், தொடர்புகொள்ளும் தகவல் மாற்றம் நிகழும்போதுஅதை உடனே காப்பீட்டு நிறுவனத்துக்குத்தெரியப் படுத்த வேண்டும். ஆனால், இதைச் செய்யாமல் விட்டுவிடுகிறார்கள். இன்ஷூரன்ஸ்முதலீடு அல்ல! சிலர் குழந்தைகள் பெயரில் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்து, அவர்களின்கல்விச் செலவுக்கும், திருமணச் செலவுக்கும் பயன்படும் என்று நினைக்கிறார்கள். இந்தமனநிலை முற்றிலும் தவறானது. குழந்தையின் கல்வி, திருமணத் தேவைகளுக்கு தனியாக முதலீடு செய்யவேண்டுமே தவிர, இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கக் கூடாது. முதலீட்டை யும், இன்ஷூரன்ஸையும் போட்டுக்குழப்பிக்கொள்ளக் கூடாது. ரைடர்கள்முக்கியம்! முக்கியஇன்ஷூரன்ஸ் பாலிசி களுக்கு ரைடர்என்று சொல்லப்படுகிற துணை பாலிசிகள் இருக்கும். இந்தத் துணை பாலிசிகள் உருவாக்கப்பட்டதன்நோக்கமே, பாலிசிதாரருக்கு கூடுதல் பயன் தரவேண்டும்என்பதினால்தான். ஆனால், இதற்கு பிரீமியம்தனியாகச் செலுத்த வேண்டுமே என்றுநினைத்து, பலரும் இந்தத் துணைபாலிசிகளை எடுக்காமல் விட்டுவிடுகிறார்கள். இது பெரிய தவறு. பிரீமியம் கொஞ்சம் அதிகமாகக் கட்டினாலும், இழப்பீடு அதிகம் கிடைப்பதை நாம்கவனிக்கத் தவறக்கூடாது. எந்தெந்தநோய்களுக்கு கிடைக்கும்? ஹெல்த்இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துவிட்டால், எல்லாவிதமானநோய்களுக்கும் க்ளைம் கிடைக்கும் என்றுபலரும் நினைக்கிறார்கள். எல்லா நோய்களுக்கும் இதில்க்ளைம் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. மெடிக்ளைம் பாலிசி எடுக்கும்போது அந்தபாலிசியில் எந்த நோய்களுக்கு எல்லாம்க்ளைம் கிடைக்கும், எந்தெந்த நோய்களுக்கு க்ளைம் கிடைக்காது என்பதையும்தெளிவாக கேட்டுத் தெரிந்துகொண்டால், பிற்பாடு ஏமாற்றத்தைத் தவிர்க்கலாம். மருத்துவமனைவிவரங்களைக் கவனிக்க! ஹெல்த்இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது முக்கியமாகக்கவனிக்க வேண்டியது, மருத்துவமனைப் பட்டியல் விவரம். இதைக் கவனிக்காமல்விடுவதால், அவசர நேரங்களில் அருகில்இருக்கும் மருத்துவமனைகளை விட்டுவிட்டு, எங்கோ இருக்கும் மருத்துவமனைகளைத் தேர்வு செய்துவிடுவோம். அலுவலகத்தைச்சார்ந்திருக்க வேண்டாம்! வேலை பார்க்கும் நிறுவனத்தில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்திருந்தால், தனியாக இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதைத் தவிர்த்துவிடுகிறார்கள். இது முற்றிலும் தவறு. எதிர்பாராமல் அந்தநிறுவனத்தில் இருந்து நீக்கப் பட்டாலோஅல்லது நாமாக விலகினாலோ இன்ஷூரன்ஸ்இல்லாத நிலை ஏற்படும். அந்தசமயத்தில்திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டால், அதற்கானசெலவை நம் கையிலிருந்து கட்டவேண்டிய நிலை ஏற்படும். இதைத்தவிர்ப்பதற்கு போதுமான கவரேஜ் உள்ளபாலிசிகளை தனியாக எடுத்துக்கொள்வது நலம். வேண்டும்காலந்தவறாமை! சரியானநேரத்தில் பிரீமியம் செலுத்தாமல் விடுவதன் மூலம் சிலர் இன்ஷூரன்ஸ்பாலிசிகளை காலாவதியாக விட்டுவிடுகின்றனர். பிரீமியம் கட்டுவதில் காலந்தவறாமை மிக முக்கியம். சிலர்தாங்கள் எடுத்த இன்ஷூரன்ஸ் பாலிசிகள்பற்றி குடும்ப உறுப்பினர்களிடம் எதுவும்சொல்வ தில்லை. இதுவும் தவறு. எல்லா இன்ஷூரன்ஸ் பாலிசிகளையும் குடும்ப உறுப்பினர்களிடம் அவசியம்எடுத்துச் சொல்ல வேண்டும். காப்பீட்டுப்பத்திரங்களைப் பாதுகாப்பாகவும் வைத்திருக்க வேண்டும். மேற்சொன்னஇந்தத் தவறுகளை தவிர்த்தால்தான், இன்ஷூரன்ஸ்மூலம் கிடைக்கும் முழுப் பலனையும் மக்கள்அனுபவிக்க முடியும். லைஃப் இன்ஷூரன்ஸ் முதிர்வு தொகைக்கு 2% டிடிஎஸ் பிடித்தம்! நடப்பு2014-15ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலின்போது, வரிச்சலுகைக்கு உட்படாத லைஃப் இன்ஷூரன்ஸ்பாலிசி முதிர்வு தொகைக்கு 2 சதவிகிதம் டிடிஎஸ் (Tax Deducted at Source) பிடித்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இது, அக்டோபர்1-ம் தேதி அமல்படுத்தப்பட்டது. அதாவது, நீங்கள் எடுத்திருக்கும் பாலிசிக்குச் செலுத்தும் ஆண்டு பிரீமியத்தைபோல் 10 மடங்குகவரேஜ் இருக்கும் பாலிசிகளுக்கு இந்த வரிப் பிடித்தம்பொருந்தாது. 10 மடங்குக்கு கீழ் கவரேஜ் இருக்கும்பாலிசிகளுக்கு மட்டும் டிடிஎஸ் 2 சதவிகிதம்பிடித்தம் செய்யப்படும். இதில் பான் கார்டுஎண் கொடுக்கவில்லை என்றால், 20 சதவிகிதம் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். |
மாணவ, மாணவியரின் பாதுகாப்பிற்காக 113 விதிமுறைகள் தயார்! Posted: 17 Nov 2014 04:05 AM PST பள்ளி, கல்லூரிகளில், மாணவ, மாணவியரின் ஆரோக்கியம், அடிப்படை வசதிகள், தனிப்பட்ட பாதுகாப்பு, போக்கு வரத்து வசதிஉள்ளிட்ட அனைத்து விஷயங்கள் தொடர்பாக, 113 விதிமுறைகளை வகுத்துள்ள கல்வித்துறை, அதற்கான வரைவு பிரதியை வெளியிட்டுள்ளது. கருத்துக்கள்: இந்த விதிமுறைகள் குறித்து, வரும், 25ம் தேதிக்குள் ஆலோசனைகள், கருத்துக்களை தெரிவிக்கும்படி பெற்றோர், கல்வி வல்லுனர்கள், கல்விநிறுவனங்களிடம் கேட்டுள்ளது. சமீபத்தில், பள்ளி, கல்லூரி மாணவியர்மீதான பாலியல் வன்முறை சம்பவங்களுக்குப்பின், மாணவ, மாணவியரின் பாதுகாப்புக்காக, கர்நாடக அரசு வழி காட்டுநெறிமுறைகளை வெளியிட்டது. இதை தொடர்ந்து, கர்நாடகஉயர் நீதிமன்ற உத்தரவின்படி, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர்அலுவலகமும் விதிமுறைகளை வெளியிட்டது. இத்தனைக்கு பின்னரும், பெங்களூருவில், சிறுமியர் மீதான பாலியல் வன்முறைகுற்றங்கள் குறையவில்லை. இதை தீவிரமாக எடுத்துக்கொண்ட அரசு, முதன் முறையாகபள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரின்பாதுகாப்புக்காக, சட்ட விதிமுறைகளை அமல்படுத்தமுன்வந்துள்ளது. இதன் மூலம், கல்விநிறுவனங்களுக்கு சட்டத்தினாலேயே, கடிவாளம் போட அரசு முன்வந்துள்ளது. சட்ட விதிமுறை, 3 பகுதிகளைகொண்டுள்ளது. 71 பக்கம் கொண்ட, சட்டவரைவு கல்வித்துறையின் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் பகுதியில், பள்ளி, ஆசிரியர்கள், கல்விநிறுவனங்கள், பெற்றோர், மாணவர்களின் பொறுப்பு பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அடிப்படை வசதிகள்: அடுத்த பகுதியில், பாதுகாப்புநடவடிக்கைகள், அதை செயல்படுத்துவது தொடர்பாகவிரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசி பகுதியில், பள்ளிகளில்கட்டாயமாக தேவைப்படும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட மற்றஅம்சங்கள் குறித்து விரிவாக தெரிவிக்கப் பட்டுள்ளது. கல்வித்துறை குறிப்பிட்டுள்ள, 113 அம்சங்களில், 94 அம்சங்களை கட்டாயமாக பின்பற்ற வேண்டுமென்றும், சட்ட வரைவில் உத்தரவிடப்பட்டுள்ளது. குழந்தை தொழிலாளர்கள் தடை சட்டம், குழந்தைகள்நியாய சட்டம், குழந்தைகள் உரிமைகள்பாதுகாப்பு சட்டம், குழந்தை திருமணதடைச் சட்டம், கல்வி உரிமைசட்டம், போஸ்கோ சட்டம், ஐ.நா., சபையின் வழிகாட்டுதலின்படியும், இந்த சட்ட வரைவு அமைக்கப்பட்டுள்ளது. கல்வித்துறை மற்றும் சட்டதுறையின் வல்லுனர்கள்ஒருங்கிணைந்து, இந்த சட்ட வரைவுதயாரிக்கப்பட்டுள்ளது. |
பள்ளிகளில் அதிகரிக்கும் வன்முறை; மாணவர்களுக்கு சிறப்பு 'கவுன்சிலிங்' Posted: 17 Nov 2014 04:03 AM PST தமிழகத்தில், பள்ளி மாணவர்கள் மத்தியில், சினிமா, 'டிவி', மொபைல் போன், இன்டர்நெட் உள்ளிட்ட, பல்வேறு காரணங்களால், வன்முறைசம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில், மாணவர்கள் ஈடுபடும் குற்றச்சம்பவங்கள், பெருமளவில் அதிகரித்துவிட்டது. மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள திடீர் வன்முறை எண்ணங்களால், பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சாதாரண பிரச்னைகளுக்கு கூட, மாணவர்கள் வன்முறையிலும், கொலைவெறித் தாக்குதலிலும் ஈடுபடும் காரணத்தை அறிந்து, உடனடி தீர்வு காணவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், 1300க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகள் செயல்பட்டுவருகின்றன. இதில், ஆறு லட்சம்மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளிஆசிரியரை தாக்குதல், மிரட்டுதல் போன்ற சம்பவங்கள் கோவைமாவட்டத்திலும், ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, உயர்நிலை மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடம் வன்முறை சம்பவங்கள் தலைதூக்குவதை காணமுடிவதாக, ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மாணவர்களை பென்சில், பேனாவால் குத்துதல், விளையாட்டு பாடவேளை நேரங்களில், திட்டமிட்டுபந்தால் எறிந்து தாக்குதல் போன்றசெயல்களில் ஈடுபடுவதாகவும் பெற்றோர் தரப்பில் புகார் செய்யப்படுகிறது. இதில், மாணவியரும் விதிவிலக்கல்ல. கல்விக் கூடங்களில் வன்முறை கலாசாரத்தை தடுக்கும்முயற்சியில், நடமாடும் உளவியல் ஆலோசனை மையத்தின்மண்டல உளவியல் நிபுணர் உதவியோடுமாணவர்களுக்கு, 'சிறப்பு கவுன்சிலிங்' வழங்கப்பட்டுவருகிறது. ஒரு சில பள்ளிகளில் ஆசிரியர், தலைமையாசிரியர் மற்றும் மாணவர்கள் மத்தியில்சரியான உறவுமுறை அமையாததன் காரணமாக, மாணவர்களின் மனப்போக்கு மாறுவதுடன், கல்வித்தரமும் பாதிக்கப்படுகின்றது. மண்டல உளவியல் நிபுணர் அருள்ஜோதிகூறுகையில்,"மாணவர்கள் மத்தியில், கவனிக்கும் தன்மை குறைந்து வருகிறது. பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்ட பின்பே, மாணவர்களின் கவனத்தைஒருங்கிணைக்க முடிகிறது. குறிப்பாக, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளிடம் சிறியஅளவிலான வன்முறை சம்பவங்களை தொடர்ந்துகாண முடிகிறது. இதை கண்டுகொள்ளாமல் விடும்பட்சத்தில், பெரும் விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியுள்ளது. தற்போது, சில பள்ளிகளில் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் காணப்படும் முரண்பாடுகள் மாணவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால், ஆசிரியர்களுக்கு பயிற்சிகள்வழங்கி வருகிறோம். மாணவர்கள் மத்தியில், சிறிதளவில் உருபெற்றிருக்கும் வன்முறைகளை களைய, அனைத்து பள்ளிகளிலும், பிரச்னைகளுக்குரிய மாணவர்களை கண்டறிந்து தனிப்பட்ட முறையில் கவுன்சிலிங் வழங்க திட்டமிட்டுள்ளோம். மேலும், பெற்றோர்களின் பங்களிப்பு மிகவும் வருத்தமளிக்கும் வகையில்உள்ளது. தங்களது பிள்ளைகளின் நிலையைஅறிந்துகொள்ள பள்ளிக்கு அழைத்தாலும், வருவதில்லை. இதுபோன்ற குடும்பச் சூழலே பெரும்பாலான பிள்ளைகளுக்குஅதிகப்படியான வன்முறை உணர்வுகளை தூண்டுகின்றது. இவ்வாறு, அவர் தெரிவித்தார் |
ஆதரவற்ற நலிந்த குழந்தைகளுக்கு உதவிக்கரம் நீட்டிவரும் "மைம்'' Posted: 16 Nov 2014 10:05 PM PST "G மைம்" ஸ்டுடியோவின் நிர்வாக இயக்குனர் மைம்கோபி . மைம் கலையை உயிர்முச்சாக கொண்டு அக்கலையை வளரும்இளைய தலைமுறைக்கு கொண்டு சென்று அதில்வெற்றியையும் கண்டு வருபவர் .சினிமாவுக்குரியநடிப்பு பயிற்ச்சியையும் கற்ப்பித்து வருபவர் .தான் மட்டுமே சமுதாயத்தில்மேலோங்கி இருக்க வேண்டும் என்றபெரும்பாலான மனிதர்களுக்கு மத்தியில் ஆதரவற்ற ,நலிந்த ஊனமுற்ற குழந்தைகளுக்குஅவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் கடந்தஇரண்டு வருடமாக "மா " என்ற நிகழ்ச்சியைநடத்தி இந்த தெய்வ குழ்ந்தைகளுக்குஉதவிக்கரம் நீட்டி வருகின்றார் . இந்த நிகழ்ச்சியில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு துறைகளில் பணியாற்ற்றுபவர்கள் இக்குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்றநோக்கத்தில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.சென்னை காமராஜர் அரங்கத்தில் நவம்பர் 16 தேதி நடைபெற்ற இந்தநிகழ்ச்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள்நடைபெற்றது பிரத்யேகமாக" மா "என்ற நிகழ்ச்சிபார்வையாளர்களை கண் கலங்க வைத்தது, இயக்குனர் பிரபு சாலமன் , பாண்டிராஜ் , ரஞ்சித் ,பாலாஜி மோகன் , நடிகர்கார்த்தி, காளி , ஜான் விஜய், அசோக் , கலையரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் "அன்பு மலர் "இல்லத்தில்உள்ள 61 குழந்தைகளுக்கு ஒரு ஆண்டிற்கான கல்வித்தொகைவழங்கப்பட்டது .. யாரேனும்இக்குழந்தைகளுக்கு உதவ விரும்புவோர் தொடர்புகொள்ள "ஜி"மைம் ஸ்டுடியோ மைம் கோபி -09884032100 அஜித் – 09841236904 கோம்ஸ் -09884500004 |
TNPSC:குரூப்-4 தேர்வு: 4,963 காலிப் பணியிடங்களுக்கு 13.38 லட்சம் பேர் போட்டி. Posted: 16 Nov 2014 09:20 PM PST டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில், 4,963 காலிப் பணியிடங்களுக்கு 13 லட்சத்து 38 ஆயிரத்து 254 தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்திருப்பதாக டிஎன்பி எஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா தெரிவித்தார். சிலர் ஒன்றுக்கு இரண்டு முறை விண்ணப்பிக்கும் வாய்ப்பு இருப்பதால் இந்த எண்ணிக்கை சற்று குறையக் கூடும் என்றும் அவர் கூறினார். கடந்த ஆண்டு நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வுக்கு 16 லட்சம் பேர் விண்ணப்பித் திருந்தனர். டிசம்பர் 21-ம் தேதி தேர்வு தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் வரித்தண்டலர், நிலஅளவர், வரைவாளர் ஆகிய பதவிகளில் 4,963 காலியிடங்களை நிரப்புவதற் காக டிசம்பர் 21-ம் தேதி குரூப்-4 தேர்வு நடைபெற உள்ளது.இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் அக்டோபர் 14-ம் தேதி தொடங்கி கடந்த 12-ம் தேதி நள்ளிரவு 11.59 மணியுடன் முடிவடைந்தது. குரூப்-4 தேர்வு எழுத குறைந்த பட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி என்ற காரணத்தினாலும், நேர்முகத் தேர்வு இல்லாததால் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றாலே அரசு வேலை உறுதி என்பதாலும் எப்போதுமே இத்தேர்வுக்கு கடுமையான போட்டியிருக்கும்.எஸ்எஸ்எல்சி முடித்தவர்க ளைக் காட்டிலும், பட்டப் படிப்பு, பட்டமேற்படிப்பு, பிஇ, பிஎல் உள்ளிட்ட தொழில்கல்வி படித்தவர் களும் குரூப்-4 தேர்வுக்கு அதிக எண்ணிக்கையில் விண்ணப் பிப்பது வழக்கம். கடந்த ஆண்டு குரூப்-4 தேர்வில் முதலிடத் தைப் பிடித்தவர் ஒரு பொறியி யல் பட்டதாரி என்பது குறிப்பிடத் தக்கது.மொத்தம் 13 லட்சத்து 38 ஆயிரத்து 254 மாணவர்கள் போட்டி போடுகிறார் கள். தேர்வுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளதால் தேர்வர் கள் முழு மூச்சுடன் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். மாணவ-மாணவிகள் அதற்கான தயாரிப்பில் முழு முயற்சியுடன் ஈடுபட்டுள்ளனர். தனியார் பயிற்சி மையங்களில் குரூப்-4 தேர்வுக்கான வகுப்புகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.தேர்வுக்கு இன்னும் 5 வாரங்களே இருப்பதால் சில மையங்களில் அதிவிரைவு பயிற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. வகுப்புகள், மாதிரி தேர்வுகள், நண்பர்களுடன் குழுவிவாதம் என தேர்வர்கள் முழு மூச்சுடன் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். தற்போதைய போட்டிநிலை, அரசு பணித் தேர்வுகள் குறித்து அதிகரித்திருக்கும் விழிப்புணர்வு, பயிற்சி மையங்கள் உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கட் ஆப் மார்க் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. |
ஆசிரியர் காலிப்பணியிடங்கள்: பல்கலைக்கழகங்களுக்கு மானியக் குழு உத்தரவு Posted: 16 Nov 2014 09:16 PM PST மத்திய, மாநில, தனியார் பல்கலைக்கழகங்களும் அதன்கீழ் செயல்படும் கல்லூரிகளும், வரும் கல்வியாண்டிற்குள் அனைத்து ஆசிரியர் காலியிடங்களையும் நிரப்பியிருக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது. அதிக அளவில் காலியிடங்கள் இருக்கும் காரணத்தால் தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டே அந்த இடங்கள் ஈடு செய்யப்பட்டு வருகிறது என்றும் இதனால் முழுமையான கற்பித்தல் முறை பாதிக்கப்படுவதாகவும் யு.ஜி.சி. தெரிவித்துள்ளது. எனவே, அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் நிரந்தரப் பணியாளர்கள் கொண்டு வரும் கல்வியாண்டிற்குள் நிரப்பப்பட வேண்டும் எனவும் யு.ஜி.சி கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், நிரப்பப்படும் பணியிடங்கள் இடஒதுக்கீட்டின் அடிப்படையிலும் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறும் பல்கலைக்கழகத்திற்கு பொது மேம்பாட்டு நிதி நிறுத்தி வைக்கப்படும் எனவும் அண்மையில் யு.ஜி.சி., அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் எச்சரித்துள்ளது. |
அனைத்து பள்ளிகளிலும் தண்ணீர் வசதியுடன் கழிப்பறை: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு! Posted: 16 Nov 2014 08:54 PM PST தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறைகளை அமைக்கவும், குடிநீர்வசதி ஏற்படுத்தவும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரை கிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்த சி.ஆனந்தராஜ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு விவரம்: கல்வித்துறைக்காக அரசு ஆயிரக்கணக்கான கோடி நிதி ஒதுக்கீடு செய்கிறது. ஆனால், பயனற்ற கழிப்பறைகளை சரி செய்வது கிடையாது. மேலும் புதிதாக கழிப்பறை வசதிகளும் செய்து தரப்படுவதில்லை.மாணவ, மாணவிகள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதால் தொற்று நோய் வருகிறது. அனைத்து பள்ளிகளிலும் குடிநீர், கழிப்பறை வசதிகளை 6 மாதத்தில் செய்து கொடுக்க வேண்டும் என கடந்த 2012-ல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த ஆண்டு தமிழக அரசு கல்வித்துறைக்கு ரூ.17 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.தமிழகத்தில் 37,032 பள்ளிகள் உள்ளன. இதில் 4375 பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் இல்லை. மாணவர்கள் பயிலும் 4060 பள்ளிகளில் கழிப்பறை இல்லை. மாணவிகள் பயிலும் 898 பள்ளிகளிலும், ஆண்கள் பயிலும் 1189 பள்ளிகளிலும் கழிப்பறைகள் பயனற்று உள்ளன. இந்தக் குறைபாடுகளை களையக்கோரி கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அனைத்து அரசுப் பள்ளி களிலும் கழிப்பறை வசதி செய்து கொடுக்கவும், பயனற்று உள்ள கழிப்பறைகளை சீரமைக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி வி.தன பாலன் கொண்ட அமர்வுமுன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி வாதிட்டார். விசாரணைக்குப் பின் தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவு:அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கழிப்பறை வசதி செய்வது தொடர்பாக அளித்த மனுவை மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறை அமைக்க வேண்டும். கழிப்பறையை சரியாக பராமரிக்க போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும். இவற்றுடன் பள்ளிகளில் சுத்தமான குடிநீர்வசதியும் ஏற்படுத்த வேண்டும்.அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை வசதி ஏற்படுத்த எவ்வளவு நாட்கள் ஆகும் என்பதை அரசு தெரிவிக்க வேண்டும். பள்ளிகளில் கழிப்பறை, குடிநீர் வசதி ஏற்படுத்துவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.கழிப்பறை விவரங்களை கல்வித்துறை இணையதளத் தில் வெளியிட வேண்டும் என உத்தர விட்ட தலைமை நீதிபதி, வழக்கை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்தார். |
தொழிற்கல்வி ஆசிரியர்களின் கூடுதல் சம்பளத்தை பிடித்தம் செய்ய கூடாது Posted: 16 Nov 2014 05:38 PM PST திருவாரூர் மற்றும் தஞ்சை மாவட்டங்களை சேர்ந்த 7 தொழிற்கல்வி ஆசிரியர்கள் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 1990 முதல் 1994 வரை நாங்கள் 7 பேரும் அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டோம். தொழிற்கல்வி ஆசிரியர் என்பதால் பதவி உயர்வு இல்லை. அதனால், எங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களுக்குரிய சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், 6வது சம்பள கமிஷன் பரிந்துரையில் எங்களுக்கு சிறப்பு நிலை சம்பளம் தரப்பட்டது. இந்நிலையில், சிறப்பு நிலை சம்பளத்தை தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு வழங்கியது தவறு என்று தணிக்கைத் துறை அறிக்கை அளித்தது. இதையடுத்து, நாங்கள் வாங்கிய கூடுதல் சம்பள தொகையை பிடித்தம் செய்ய தமிழக நிதித்துறை செயலாளர் கடந்த ஆகஸ்ட் 22ல் அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் கடிதம் எழுதினார். இதன் அடிப்படையில், எங்களுக்கு வழங்கப்பட்டகூடுதல் சம்பளத்தொகையை வசூலிக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. எனவே, எங்களின் சம்பளத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, 'கூடுதலாக வழங்கப்பட்ட சம்பளத்தை திரும்பப் பெறப் போவதாக தலைமைஆசிரியர்கள், மனுதாரர்களுக்கு எழுத்துப்பூர்வமாக வழங்காதபட்சத்தில், எப்படி அந்தநடவடிக்கைக்கு தடை விதிக்க முடியும்?' என்று கேட்டார். அதற்கு மனுதாரர்களின் வக்கீல் ஆர்.முருகபாரதி, வாய்மொழியாகத்தான் தலைமை ஆசிரியர்கள், மனுதாரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். எழுத்துப்பூர்வமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அதை எதிர்த்து வழக்கு தொடரும் நிலை ஏற்படும். எனவேதான் இப்போதே இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார். இதையடுத்து நீதிபதி, 'தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட கூடுதல் சம்பளத்தை பிடிக்க இடைக்கால தடை விதித்ததுடன் இந்த வழக்கில் 8 வாரங்களுக்குள் நிதித்துறை செயலாளர், பள்ளி கல்வித்துறை செயலாளர், பள்ளி கல்வி இயக்குனர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார். |
அரசு வாகனங்களில் சிவப்பு, நீல நிற விளக்குகளை யார் பயன்படுத்தலாம்? Posted: 16 Nov 2014 05:35 PM PST தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலாளர் அபூர்வ வர்மா பிறப்பித்துள்ள உத்தரவு: சுழலும் சிவப்பு விளக்குளை மாநில கவர்னர்கள், முதல்வர்கள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, சட்டப்பேரவை தலைவர், மாநில அமைச்சர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆகிய 6 பேர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். சுழலும் வகையில் இல்லாமல் சாதாரண சிவப்பு விளக்குகளை சட்டப்பேரவை துணை தலைவர், தலைமை செயலாளர், ஆலோசனை குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர், மாநில ஆலோசனை குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர், மாநில சிறுபான்மை ஆணையத்தின் தலைவர், மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர், மாநில சட்ட ஆணையத்தின் தலைவர், மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தின் தலைவர், மாநில தேர்தல் ஆணையர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர், சென்னை உயர் நீதிமன்ற அரசு தலைமை வழக்கறிஞர், மாநில திட்ட ஆணையத் தின் துணை தலைவர், தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் ஆகிய 14 பேர் மட்டுமே பயன்படுத்தலாம்.இதே போல நீல நிற சுழலும் விளக்குகளை போலீஸ் டி.ஜி.பி., கூடுதல் டி.ஜி.பிக்கள், ஐ.ஜி.க்கள், டி.ஐ.ஜி.க்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்கள், மாநகர கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், கான்வாய்க்கு முன் பாதுகாப்புக்காக செல்லும் வாகனங்கள், கூடுதல் ஆணையர்கள், கூடுதல் கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள், கூடுதல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் (சட்டம், ஒழுங்கு) பயன்படுத்தி கொள்ளலாம்.சில அதிகாரிகள் பணி காரணமாக சாலை வழியாக செல்லும் போது அவர்கள் தடுக்கப்படாமல் இருக்க நீல வண்ணம் கொண்ட சுழலும் விளக்குகளை பயன்படுத்தி கொள்ளலாம். அதன்படி, அரசு துறை செயலாளர்கள், துறை தலைவர்கள், மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி ஆணையர்கள், பொது துறை நிறுவனங்கள், வாரியங்களின் தலைவர்கள், மாவட்ட நீதிபதிகள், பெருநகர முதன்மை நீதிபதிகள், உயர்நீதிமன்ற பதிவாளர்கள், கூடுதல் கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர்கள், துணை கலெக்டர்கள், வருவாய் கோட்டாட்சியர், மாநகராட்சி மேயர்கள், மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் ஆகிய 11 பேர் மட்டுமே பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் அவசர காலங்களில் இயக்கக்கூடிய தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை வாகனங்கள், போக்குவரத்து துறையின் அமலாக்க பிரிவு வாகனங்கள், காவல்துறையின் ரோந்து வாகனங்கள் ஆகியவை சிவப்பு, நீலம், வெள்ளை என்ற மூன்று வகையான நிறங்களில் எதையும் பயன்படுத்தி கொள்ளலாம். அதே சமயம் ஆம்புலன்ஸ் வாகனங்களை ஊதா நிற கண்ணாடியை கொண்ட ஒளிரும் சிவப்பு விளக்குகளுடன் பயன்படுத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. |
புதுக்கோட்டையில் அறிவியல் கண்காட்சி: பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு Posted: 16 Nov 2014 09:22 PM PST புதுக்கோட்டையில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மாவட்ட அளவிலான கண்காட்சியில் 109 அறிவியல் சார்ந்த படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. புதுகோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த இந்த அறிவியல் கண்காட்சி, மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 102 பள்ளிகளில் இருந்து மாணவ- மாணவியர் பங்கேற்றனர். இந்த கண்காட்சியில் விவசாயப் பாதுகாப்பு, மழை வளத்தைப் பெருக்குதல், விண்வெளி ஆராய்ச்சி, சூரிய ஒளி சக்தியை பயன்படுத்தி மின்சாரம் தயாரித்தல் உள்ளிட்ட தலைப்புகளின் கீழ், அறிவியல் சார்ந்த படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. இதில் சிறந்த படைகள் கவுரவிக்கப்பட்டன. இந்த கண்காட்சியை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், சுப்பிரமணியன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு, மாணவர்களைப் பாராட்டினர். |
செல்ஃபோனில் இணைய வசதி: 3 ஆண்டில் 7 மடங்கு பெருகும்! Posted: 16 Nov 2014 09:20 PM PST இந்தியாவில் மொபைல் ஃபோன்கள் மூலமாக இணையதள வசதி பெறுவோர் எண்ணிக்கை இன்னும்3 ஆண்டுகளில் 50 கோடியை தொடும் என (clsa) ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.இது தற்போது இருப்பதை விட 7 மடங்கு அதிகம் என்றும் அந்த நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது. இணையதளம் பார்ப்பது, மின்னஞ்சல் அனுப்புவது, இசை கேட்பது, காட்சிகளைப் பதிவிறக்கம் செய்வது, பொருட்கள் வாங்குவது உள்ளிட்ட சேவைகளை மொபைல் ஃபோன் மூலம் பெறுவது அதிவேகமாக அதிகரித்து வருவதாக கூறியுள்ள அந்த ஆய்வு, குறைந்த விலையிலான ஸ்மார்ட்ஃபோன்கள் சந்தையில் கிடைப்பதே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளது. தற்போது 13 சதவீத இந்தியர்கள் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்தும் நிலையில் இன்னும் 4 ஆண்டுகளில் இது 41 சதவிகிதமாக அதிகரிக்கும் என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. |
தபால்துறையை பல்வேறு சேவை வழங்கும் அமைப்பாக மாற்ற திட்டம் Posted: 16 Nov 2014 09:21 PM PST இந்திய தபால் துறையை பல்வேறு வகை சேவைகள் தரும் ஒரு அமைப்பாக மாற்ற மத்திய அரசுதிட்டமிட்டுள்ளது.நாடெங்கும் மூலை முடுக்கெங்கும் பரந்து விரிந்துள்ள தபால் அலுவலகங்கள் மூலம் புதிதாக எது போன்ற சேவைகளைத் தர முடியும் என மத்திய அமைச்சகங்களுக்கு இடையில் ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தபால்காரர் மூலம் பல்வேறு விதமான சேவைகளுக்கான கட்டண வசூலிப்பு சேவை, தகவல்களை பதிவு செய்வது என பல்வேறு வசதிகளை தபால் அலுவலகம் மூலம் தர அரசு பரிசீலிக்கிறது. ஆன்லைன் ஷாப்பிங் மேற்கொள்பவர்களுக்கு பொருட்களை வீடுகளுக்கு வினியோகிக்கும் பணியை மேற்கொள்ள தபால் துறை ஏற்றது என மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதற்கிடையில் தபால் அலுவலகங்களை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வது குறித்து பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ள சிறப்புக் குழு இந்தாண்டு இறுதியில் தனது பரிந்துரையை அளிக்க உள்ளது. |
மாநில மனித உரிமை ஆணையத் தலைவராக டி.மீனாகுமாரி நியமனம் Posted: 16 Nov 2014 04:59 PM PST மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி டி.மீனாகுமாரியை நியமித்து, தமிழக ஆளுநர் கே.ரோசய்யா உத்தரவிட்டார். இதுதொடர்பாக சனிக்கிழமை வெளியான தமிழக அரசிதழில் கூறியிருப்பது: மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி டி.மீனாகுமாரி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பதவி ஏற்கும் நாளில் இருந்து 5 ஆண்டுகளோ அல்லது அவரின் 70 வயது வரையோ பதவி வகிப்பார். இதில் எது முன்பு வருகிறதோ, அதுவே கணக்கில் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேகாலயா உயர் நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர் டி.மீனாகுமாரி. அதற்கு முன்பு, ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம், பாட்னா உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் அவர் இருந்துள்ளார். தமிழக மனித உரிமை ஆணையத்தின் தலைவர் பதவி கடந்த 3 ஆண்டுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில், மனித உரிமை ஆணையத் தலைவரை நியமிக்கும்படி கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அறிவுரைத்தது. அதன்படி தற்போது மீனாகுமாரி நியமிக்கப்பட்டுள்ளார். |
பார்வையற்ற மாணவர்கள் நலனில்அக்கறை காட்டும் டில்லி பல்கலை Posted: 16 Nov 2014 04:58 PM PST பார்வையற்ற மாணவர்களின் நலனுக்காக, பல்கலை நுாலகங்களில், அதிநவீன தொழில்நுட்பத்தை அமல்படுத்தும் முயற்சியில், டில்லி பல்கலைக் கழக நிர்வாகம் ஈடுபட்டு உள்ளது. பார்வையற்ற மாணவர்கள், புத்தகங்களை படித்து, பாடங்களை அறிந்து கொள்வதற்காக, மற்றவரின் உதவியை எதிர்பார்க்கும் சூழல் உள்ளது. இதனால், அவ்வகை மாணவர்கள், பல நேரங்களில் சிரமத்திற்கு ஆளாக வேண்டிஉள்ளது. பார்வையற்ற மாணவர்களின் சிரமத்தை போக்கும் வகையில், பல்கலை நுாலகங்களில், அதிநவீன தொழில்நுட்பத்தை செயல்படுத்த, டில்லி பல்கலை முன் வந்துள்ளது. அதன்படி, 'இன்குளூசிவ் பிரின்ட் அக்சஸ் புராஜக்ட்' என்ற புதிய திட்டத்தை, பல்கலை நுாலகங்களில் செயல்படுத்த துவங்கி உள்ளனர். இத்திட்டத்தில் பயன்படுத்தப்படும், அதிவேக 'லெக்சைர்' கேமரா, புத்தகங்களில் இடம் பெற்றுள்ள பாடங்களை ஸ்கேன் செய்து, அதை வார்த்தை வடிவில் மாற்றம் செய்து தரும்.இதனால், பார்வையற்ற மாணவர்கள், மற்றவரின் உதவியின்றி, தங்கள் பாடங்களை செவி வழியாகக் கேட்டு, படித்து முடிக்க முடியும். இத்திட்டத்தை, பல்கலைக்கு சொந்தமான அனைத்து துறை நுாலகங்களிலும் அமல்படுத்தும் பணியில், டில்லி பல்கலை நிர்வாகம் ஈடுபட்டு உள்ளது.தற்போது, ஆங்கிலம், இந்தி மொழிகளில் உள்ள பாடங்களை, அதிநவீன கேமராவின் மூலம் செவி வழிப்பாடங்களாக கற்க முடியும். இத்திட்டம் ஏற்கனவே வெளிநாடுகளில் அமலில் உள்ள போதிலும், நம் நாட்டில், முதல் முறையாக டில்லி பல்கலையில் செயல்படுத்தப்பட்டுஉள்ளது.தேவைக்கேற்ப, மற்ற பல்கலைகளும், இந்த திட்டத்தை செயல்படுத்தினால், ஏராளமான பார்வையற்ற மாணவர்கள் பயனடைவார்கள் என, டில்லி பல்கலை நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர். |
மாணவ, மாணவியரின் பாதுகாப்புக்கு 113 அம்சங்கள்:மாநில அரசு உத்தரவில் சட்ட வரைவு வெளியீடு Posted: 16 Nov 2014 04:57 PM PST பெங்களூரு:பள்ளி, கல்லுாரிகளில் மாணவ, மாணவியரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, 113 அம்சங்கள் அடங்கிய விதிமுறைகளை அமல்படுத்த, கர்நாடக மாநில அரசு தீர்மானித்துள்ளது. இதற்கான சட்ட வரைவு வெளியிடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லுாரிகளில், மாணவ, மாணவியரின் ஆரோக்கியம், அடிப்படை வசதிகள், தனிப்பட்ட பாதுகாப்பு, போக்கு வரத்து வசதி உள்ளிட்ட அனைத்து விஷயங்கள் தொடர்பாக, 113 விதிமுறைகளை வகுத்துள்ள கல்வித்துறை, அதற்கான வரைவு பிரதியை வெளியிட்டுள்ளது. கருத்துக்கள்:இந்த விதிமுறைகள் குறித்து, வரும், 25ம் தேதிக்குள் ஆலோசனைகள், கருத்துக்களை தெரிவிக்கும்படி பெற்றோர், கல்வி வல்லுனர்கள், கல்வி நிறுவனங்களிடம் கேட்டுள்ளது.சமீபத்தில், பள்ளி, கல்லுாரி மாணவியர் மீதான பாலியல் வன்முறை சம்பவங்களுக்குப் பின், மாணவ, மாணவியரின் பாதுகாப்புக்காக, கர்நாடக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. இதை தொடர்ந்து, கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் அலுவலகமும் விதிமுறைகளை வெளியிட்டது. இத்தனைக்கு பின்னரும், பெங்களூருவில், சிறுமியர் மீதான பாலியல் வன்முறை குற்றங்கள் குறையவில்லை. இதை தீவிரமாக எடுத்துக்கொண்ட அரசு, முதன் முறையாக பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியரின் பாதுகாப்புக்காக,சட்ட விதிமுறை களை அமல்படுத்த முன்வந்துள்ளது. இதன் மூலம், கல்வி நிறுவனங்களுக்கு சட்டத்தினாலேயே, கடிவாளம் போட அரசு முன் வந்துள்ளது. சட்ட விதிமுறை, 3 பகுதிகளை கொண்டுள்ளது. 71 பக்கம் கொண்ட, சட்ட வரைவு கல்வித்துறையின் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் பகுதியில், பள்ளி, ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள், பெற்றோர், மாணவர்களின் பொறுப்பு பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அடிப்படை வசதிகள்:அடுத்த பகுதியில், பாதுகாப்பு நடவடிக்கைகள், அதை செயல்படுத்துவது தொடர்பாக விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசி பகுதியில், பள்ளிகளில் கட்டாயமாக தேவைப்படும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட மற்ற அம்சங்கள் குறித்து விரிவாக தெரிவிக்கப் பட்டுள்ளது.கல்வித்துறை குறிப்பிட்டுள்ள, 113 அம்சங்களில், 94 அம்சங்களை கட்டாயமாக பின்பற்ற வேண்டுமென்றும், சட்ட வரைவில் உத்தரவிடப்பட்டுள்ளது. குழந்தை தொழிலாளர்கள் தடை சட்டம், குழந்தைகள் நியாய சட்டம், குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டம், குழந்தை திருமண தடைச் சட்டம், கல்வி உரிமை சட்டம், போஸ்கோ சட்டம், ஐ.நா., சபையின் வழிகாட்டுதலின்படியும், இந்த சட்ட வரைவு அமைக்கப்பட்டுள்ளது. கல்வித்துறை மற்றும் சட்டதுறையின் வல்லுனர்கள் ஒருங்கிணைந்து, இந்த சட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. |
1,330 குறட்பாக்களும் தலைகீழ் பாடம்: எல்லப்பன் பயிற்சியில் அசத்தும் மாணவர்கள் Posted: 16 Nov 2014 09:00 PM PST உலகெல்லாம் உணர்ந்து ஓதுதற்கு எளியனாய்' உயர்ந்திருக்கிறான், வான்புகழ் கொண்ட வள்ளுவன். உரலில் இடித்த புளி, அளவில் சுருங்கி, கரைத்தால், வீரியமாய் விரிவதுபோல், குறளில் இட்ட பொருளை கொடுத்த வள்ளுவனை எண்ணி, தமிழன்னை தலை கோதி பெருமை கொள்வாள். பேதமும், பேதைமையும் இல்லாத கருத்துகளை, நாதம் போல் குழைத்து தந்த வள்ளுவனை, நாவிருக்கும் தமிழர் அனைவரும் போற்ற வேண்டும். தாயுள்ளத்தோடு, வள்ளுவத்தை ஏற்க வேண்டும் என, பலரை உணர வைத்த தருணம் மிகவும் உணர்ச்சி மயமானது. 'மம்மி' என்றும், 'டாடி' என்றும் அழைத்து, 'டம்மி'யாகி விட்டதடா 'டமில்' என, கும்மியடிப்பவர்களின் எண்ணங்களை, அம்மிக்குழவியில் இட்ட கொப்பரையாய் நசுக்கின, அங்கே மழலையரின் குரல். ஆம்... பூவில் தேன் சொட்டுவதை போல், நாவில் சொட்டியது நல்ல தமிழ். வள்ளுவனின் அத்தனை குறட்பாக்களும், மையம் கொண்ட புயல் மழையாய் கொட்டுகிறது. ஈற்றுச்சீர் போதுமே! அங்கு... கோடை மழையில் நனைந்த மரங்களாய் தளிர்க்கிறது, குறளில் நனைந்தவர்களின் மனதில் தமிழ்! நனைந்த இடம், சென்னை பல்கலையின் கூட்ட அரங்கு. 'அடடா...! பாலைவனமாய் கிடந்ததடா மனம். இனி, நம் பிள்ளைகளுக்கும் குறள் சொல்லிக் கொடுக்க வேண்டும். தமிழமுதை அள்ளிக் கொடுக்க வேண்டும்' என, பெற்றோர் முடிவெடுக்கின்றனர். அதற்கு காரணமானோர், ஹேமலதா, பொற்செல்வி, ராமகிருஷ்ணன் என்னும், ஏழாம் வகுப்பு படிக்கும், மாணவர்கள். அவர்கள், 1330 குறட்பாக்களையும், மனனம் செய்திருக்கின்றனர். 30, 800, 145... ஏதாவது ஒரு எண்ணை சொன்னால், அந்த எண்ணுக்குரிய குறட்பாக்களை, தயங்காமல் உடனடியாக சொல்கின்றனர். ஈற்றுச்சீரை சொன்னால், அந்த குறட்பாவை சொல்லி விடுகின்றனர். அதிகாரத்தின் தலைப்பை சொன்னால், அதற்கு முன், பின் உள்ள அதிகாரங்களையும் சேர்த்து, அவற்றில் உள்ள குறட்பாக்களையும் சொல்லி அசத்துகின்றனர். கோடை வெயிலில் அடிபட்டவன், ஆலமரத்தடி காற்றில் நனைவது போல், சொக்கி கிடக்கின்றனர், மாணவர்களின் திறமையை சோதித்த அத்தனை பேரும். அந்த பிஞ்சுகளிடம் கேட்டோம்: ''படிக்க எத்தனையோ செய்யுட்கள் தமிழில் இருக்க, ஏன், திருக்குறளை படித்தீர்கள்?'' ''அளவில் சிறிதாய், அர்த்தத்தில் பெரிதாய், அனைவருக்கும் பொதுவாய் இருப்பது திருக்குறள் மட்டுமே என்பதால், தேர்ந்தெடுத்தேன்,'' என்றான், மாணவன் ராமகிருஷ்ணன். வள்ளுவனின் ஆசி! ''நாவை மடித்து, நல்ல தமிழ் பேச, மனதை குவித்து ஒருங்கிணைக்க, மனப்பாடம் செய்யும் சக்தியை வளர்க்க, கோபம் குறைக்க ஏதாவது படி, என்றனர், என் பெற்றோர். நான் திருக்குறள் படித்தேன்,'' என்றாள் சிறுமி, ஹேமலதா. ''ஓய்வு நேரம் பயனளிக்க, ஒவ்வொரு மேடையிலும் பரிசு பெற, கேட்பவரை வசியப்படுத்தி, பிரமிக்க வைக்க, ஆசைப்பட்டேன். எளிதாய் கிடைத்தது, திருக்குறளே,'' என்றாள், பொற்செல்வி. ''செல்லும் இடமெல்லாம் சிறப்பு கிடைக்கிறது. பெரிய மனிதரெல்லாம் பாராட்டுகின்றனர். மாலையும், மரியாதை யும் கூடுகிறது. எல்லாம் வள்ளுவனின் ஆசி,'' என, புளகாங்கிதமடைகின்றனர் பெற்றோர். 'சரி... என்னதான் முயற்சி இருந்தாலும், சீர் பிரித்து படிக்க முறையாக பயிற்சி அளிக்க வேண்டாமா?' என்றால், ''எங்களுக்கு, எல்லப்பன் இருக்கும் வரை, ஏன் அந்த கவலை?'' என வினவி, கைநீட்டினர் அவரை. பழுத்த மரமாய், அடக்கமாய் இருந்த எல்லப்பனிடம், ''குறள் கற்பிக்கும் பணியை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?' என்றோம். அவர் கூறியதாவது: எத்தனையோ வேலைகளை செய்து விட்டேன். அத்தனை வேலையிலும் இல்லாத திருப்தி, குறள் சொல்லி கொடுக்கும் போது, கிடைக்கிறது. 'பொருளில்லார்க்கு இவ்வு ல கம் இல்லை' என்று மொழிந்த இறவா புலவனின் வரிகளை படித்த பின்பும், பொருளீட்டுவதிலும், பொருள் இருக்க வேண்டும் என, நினைத்தேன். அதனால் தான், குறள் கற்பித்தலை செய்து வருகிறேன். குறள் கற்பிப்பது வெறும் பணி அல்ல. மரம் வளர்ப்பது போன்ற சேவை. இப்போது, நான் திருக்குறள் என்னும் விதையை இளைய மனங்கள் என்னும் நாற்றங்காலில் பதியம் செய்கிறேன். அவர்களுக்குள், ஊறிக்கிடக்கும் இந்த விதை, நாளை விருட்சமாய் விரிந்து, சமூகத்தில் பல மாற்றங்களை உருவாக்கும். நான், வளர்ப்பது மரங்களை அல்ல; நடமாடும் நூலகங்களை. அவர்கள், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னுள்ள தமிழை, அடுத்தடுத்த தலைமுறைக்கு, பரிமாற்றம் செய்வர். பொருளுக்காய், பொருளில்லா பொருளாய் மாறி வாழும் வாழ்வில், பொருள் உள்ள, பொறுப்புள்ள வாழ்வை அவர்கள் வாழ்வர் என்ற நம்பிக்கை எனக்குண்டு. தமிழை, அடுத்த தலைமுறையிடம் நிலைநிறுத்த, தாத்தா வள்ளுவனை துணைக்கு அழைக்கிறேன். பரிசு பெற்ற 43 பேர்! இதனால், 'இது' கிடைக்கும் என, நான் இதை செய்யவில்லை. இதுவரை, குழந்தைகளை வைத்து, ஆயிரத்துக்கும் அதிகமான நிகழ்ச்சிகளை நடத்தி விட்டேன். என்னிடம் பயின்ற, 70க்கும் அதிகமான மாணவர்கள், அனைத்து குறட்பாக்களையும் சொல்வர். அவர்களில், 43 பேர், தமிழக அரசின் 10 ஆயிரம் ரூபாய் பணப்பரிசையும், பாராட்டு சான்றிதழையும் பெற்றுள்ளனர். நான், குறள் பயிற்சி மட்டுமல்லாமல், நினைவாற்றலை, வேடிக்கையாக வளர்க்கும் கவனகம் நிகழ்ச்சி, பொது அறிவு பயிற்சிகளையும் நடத்துகிறேன். பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் எனக்கு, முழு ஒத்துழைப்பு கொடுக்கின்றனர். இவ்வாறு, எல்லப்பன் தெரிவித்தார். |
You are subscribed to email updates from கல்விச் செய்தி To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |