வாழ்க வளமுடன் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் வாழ்க வளமுடன்!

Wednesday, March 04, 2015

குழந்தைகளுக்கு கூகுளில் புது வசதி

குழந்தைகளுக்கு கூகுளில் புது வசதி

அவ்வப்போது ஏதேனும் புதுமையான வசதிகளைத் தன் வாடிக்கையாளர்களுக்குத் தருவது, கூகுள் நிறுவனத்தின் வாடிக்கை. அந்த
வகையில், சென்ற திங்கள் கிழமை, குழந்தைகள் பாதுகாப்பாகப் பயன்படுத்தவென, யு ட்யூப் கிட்ஸ் (YouTube Kids) என்ற பெயரில் அப்ளிகேஷன் ஒன்றை, ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் இயங்குவதற்கென தயாரித்து வழங்கியுள்ளது. குழந்தைகள் மற்றும் சிறுவர்களை இலக்காகக் கொண்டு இந்த அப்ளிகேஷன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. இதன் மூலம், சிறுவர்கள், தாங்கள் தேடி அறிய விரும்பும் தளங்களைப் பாதுகாப்பாகவும், எளிதாகவும் பெற முடியும். இந்த அப்ளிகேஷன் மூலம் இணையதளத்தில் தேடுகையில், சிறுவர்கள் பார்க்கக் கூடாத தளங்கள் மறைக்கப்படும். குழந்தைகளும், சிறுவர்களும் பார்க்கக் கூடிய, தேடப்படும் பொருள் சார்ந்த தளங்கள் மட்டுமே காட்டப்படும்.
இந்த அப்ளிகேஷனில் மூன்று சிறப்பம்சங்கள் உள்ளன:

1. பளிச் என்ற பெரிய படங்கள்: மிகப் பெரிய அளவிலான ஐகான்கள், அதைக் காட்டிலும் பெரிய படங்கள் காட்டப்படுவதால், குழந்தைகள் மிக எளிதாக, படங்களை, ஐகான்களைத் தேர்ந்தெடுக்கலாம். இதில் ஒலி வழி தேடல் (voice search) என்னும் டூல் இருப்பதால், குழந்தைகளுக்குச் சரியாக டைப் செய்திடத் தெரியாவிட்டாலும், தஙகளுக்குத் தேவையானவற்றைக் குரலில் வெளிப்படுத்தியும் பிரியப்பட்ட வீடியோவினைத் தேடிப் பெறலாம் என கூகுள் அறிவித்துள்ளது. குழந்தைகளின் மழலைப் பேச்சினை எப்படி, இந்த டூல் அறிந்து தேடல் விடைகளைத் தரும் என்பது கேள்விக் குறியே.

2. குடும்பத்தை மையமாகக் கொண்ட தகவல்கள்: இந்த புதிய டூல், குடும்பங்களை மையமாகக் கொண்ட தகவல்களைத் தருவதாகக் கூகுள் அறிவித்துள்ளது. எனவே, குழந்தைகளும், சிறுவர்களும் பார்க்கக் கூடிய படங்கள் மட்டுமே காட்டப்படும் என்பதால், பெற்றோர்கள் சற்று நிம்மதிப் பெருமூச்சு விடலாம். அத்துடன், கூகுள் சிறுவர்களுக்கான விடியோ படங்கள் தயாரிப்பவர்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, தொடர்ந்து வீடியோ படங்களை அப்லோட் செய்திட வழி மேற்கொண்டுள்ளது.

3. பெற்றோர்களின் கட்டுப்பாடு: யு ட்யூப் கிட்ஸ் டூல், பெற்றோர்கள் மேற்கொள்ளக் கூடிய கட்டுப்பாட்டிற்கான வழிகளுடன் (parental control). பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளிடம் டேப்ளட் பி.சி.க்களைத் தரும் முன், அவர்கள் பார்க்கக் கூடிய நேரத்தினை அமைத்துவிட்டுப் பின்னர் தந்துவிடலாம்.

அது மட்டுமின்றி, தேடல் சாதனத்தின் இயக்கத்தினையும் குறிப்பிட்ட நேரத்திற்கு முடக்கி வைக்கலாம். குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் வகையில், யு ட்யூப் இயக்கத்தினை மாற்றத் திட்டமிடும் கூகுள் நிறுவனத்தின் முதல் கட்ட முயற்சி இந்த யு ட்யூப் கிட் என எடுத்துக் கொள்ளலாம். இந்த டூல் தொடர்ந்து, மேலும் பல வசதிகளைத் தரும் வகையில், மேம்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment