மெமரி கார்டு சரி செய்வது எப்படி.
மெமரி கார்டு திடீரென எரர் மெசேஜ் காட்டும் போது பயம் கொள்ள வேண்டாம், அனேகமாக அவற்றில் இருக்கும் தகவல்கள் தொலைய வாய்ப்புகள் குறைவு தான். உங்களிடம் கணினி மற்றும் கார்டு ரீடர் இருந்தால் கரப்ட் ஆன மெமரி கார்டை சுலபமாக சரி செய்துவிடலாம்.
*மென்பொருள் *
முதலில் டேட்டா ரிக்கவரி ப்ரோகிராம் ஒன்றை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யவேண்டும். முதலில் முக்கியமான தகவல்களை மீட்க வேண்டும்.
*கார்டு ரீடர் *
யுஎஸ்பி கார்டு ரீடரில் மெமரி கார்டை செருகி கணினியில் பொருத்த வேண்டும்.
*ரிக்கவரி *
டேட்டா ரிக்கவரி ப்ரோகிரம் மூலம் கரப்ட் ஆன மெமரி கார்டில் இருந்து தகவல்களைரிக்கவர் செய்ய முயற்சி செய்யலாம்.
*விண்டோஸ் *
விண்டோஸ் கணினி மூலம் சரி செய்ய, முதலில் மெமரி கார்டை கார்டு ரீடரை கொண்டுகனெக்ட் செய்ய வேண்டும்.
*கம்ப்யூட்டர் *
ஸ்டார்ட் மெனு சென்று Computer என க்ளிக் செய்ய வேண்டும்.
*மெமரி கார்டு *
கணினியில் டிவைசஸ் மற்றும் ரிமூவபிள் ஸ்டோரேஜ் பகுதியில் உங்களது மெமரி கார்டுகாணப்படும்.
*கமான்ட் ப்ராம்ப்ட்*
டெஸ்க்டாப்பில் ⊞ Win+R பட்டன்களை க்ளிக் செய்து cmd என டைப் செய்து OK பட்டனைக்ளிக் செய்ய வேண்டும்.
*செக் டிஸ்க் *
கமான்ட் ப்ராம்ப்ட் ஸ்கிரீனில் chkdsk m: /r, என டைப் செய்ய வேண்டும், இங்குm: வார்த்தை உங்களது மெமரி கார்டை குறிக்கும், அதன் பின் ↵ Enter பட்டனைக்ளிக் செய்ய வேண்டும்
No comments:
Post a Comment