வாழ்க வளமுடன் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் வாழ்க வளமுடன்!

Friday, February 08, 2019

வாழ்க்கை போதனை

*"வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை:"*

*இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது,,.*

*வாழ்வென்பது உயிர் உள்ளவரை.........!!!*

*தேவைக்கு செலவிடு........*

*அனுபவிக்க தகுந்தன அனுபவி......*

*இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய் மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.....*

*இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை......*

*போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை......*

*ஆகவே.......*

*அதிகமான சிக்கனம் அவசியமில்லை...*

*மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே...*

*உயிர் பிரிய தான் வாழ்வு......*

*ஒரு நாள் பிரியும்.....*

*சுற்றம்,*

*நட்பு,*

*செல்வம்..*

*எல்லாமே பிரிந்து விடும்...*

*உயிர் உள்ளவரை ஆரோக்கியமாக இரு......*

*உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே.....*

*உன் குழந்தைகளை பேணு......*

*அவர்களிடம் அன்பாய் இரு.......*

*அவ்வப்போது பரிசுகள் அளி......*

*அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே........*

*அடிமையாகவும் ஆகாதே.........*

*பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட,*

*பாசமாய் இருந்தாலும்,*

*பணி* *காரணமாகவோ,*

*சூழ்நிலை கட்டாயத்தாலோ,*

*உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம் புரிந்து கொள்.......!!!*

*அதைப்போல பெற்றோரை மதிக்காத குழந்தைகள் உன் சொத்து பங்கீட்டுக்கு-சண்டை போடலாம்......*

*உன் சொத்தை தான் அனுபவிக்க,*

*நீ சீக்கிரம் சாக வேண்டுமென வேண்டிக் கொள்ளலாம்..*

*பொறுத்துக் கொள்..*

*அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்,*

*கடமை,*

*அன்பை அறியார்,*

*அவரவர் வாழ்வு,*

*அவரவர் விதிப்படி என அறிந்துகொள்..*

*இருக்கும்போதே குழந்தைகளுக்கு கொடு,*

*ஆனால்......*

*நிலைமையை அறிந்து*
*அளவோடு கொடு..*

*எல்லாவற்றையும்* *தந்துவிட்டு பின்*
*கை ஏந்தாதே,*

*எல்லாமே இறந்த பிறகு என,*

*உயில் எழுதி*
*வைத்திராதே..*

*நீ எப்போது இறப்பாய்*
*என - எதிர்பார்த்து*
*காத்திருப்பர்..*

*எனவே கொடுப்பதை கொடுத்து விடு,*

*தரவேண்டியதை பிறகு கொடு..*

*மாற்ற முடியாததை மாற்ற முனையாதே,*

*மற்றவர் குடும்ப நிலை கண்டு பொறாமையால் வதங்காதே.....!!!*

*அமைதியாக மகிழ்ச்சியோடு இரு.......*

*பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு..*

*நண்பர்களிடம் அளவளாவு.*

*நல்ல உணவு உண்டு.....*

*நடை பயிற்சி செய்து.....*

*உடல் நலம் பேணி......*

*இறை பக்தி கொண்டு......*

*குடும்பத்தினர் - நண்பர்களோடு கலந்து உறவாடி மனநிறைவோடு வாழ்..*

*இன்னும்......*

*இருபது,*

*முப்பது,*

*நாற்பது ஆண்டுகள்..*

*சுலபமாக ஓடிவிடும்...!!*

*வாழ்வை கண்டு களி...!!*

*ரசனையோடு வாழ்.....!!*

*வாழ்க்கை வாழ்வதற்கே,....!!*

*வாழ்க்கை வளம் பெற இத்தகைய செயல்களை கடைபிடியுங்கள்....*

பேராசை பெருநஷ்டம்

ஒரு முயல் காட்டில் உள்ள ஒரு மரத்தடியில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது.அப்போது அங்கே ஒரு சிங்கம் மிகுந்த பசியுடன் வந்தது.அந்த சிங்கம் தூங்கிக் கொண்டிருந்த முயலைக் கொன்று பசியைத் தீர்த்துக் கொள்ள எண்ணியது.அதே நேரத்தில் அந்த வழியாக ஒரு மான் செல்வதைச் சிங்கம் பார்த்துவிட்டு முயலைவிட மான் பெரியது.அதனால் மானை சாப்பிட ஆசைப்பட்டது.அந்தச் சிங்கமானது மானைத் துரத்திப்பிடிக்க ஓடியது

 சிங்கமானது அந்தக் கலைமானை வெகுதூரம் விரட்டிக்கொண்டு போயும் அதனைப் பிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தது.சரி முயலையாவது கொன்று தின்னலாம் என்று முயல் தூங்கிய இடத்திற்கு வந்துப் பார்த்தால் அங்கு முயலைக் காணவில்லை. . மானை துரத்தி ஓடிய  சத்தத்தைக் கேட்டு தூங்கிய முயல் விழித்துக் கொண்டது. தனக்கு உள்ள ஆபத்தைப் புரிந்து கொண்டு ஓடி ஒளிந்து கொண்டது.
முயலைக் காணாத சிங்கம் ஏமாற்றத்துடன் எனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்.கைக்கு கிடைத்ததை விட்டு விட்டு பேராசையால் உள்ளதையும் இழந்துவிட்டேனே என்று எண்ணித் தன்னையே நொந்து கொண்டது.

 நீதி :
பேராசைப் பட்டால் கிடைப்பதும் கிடைக்காமல் போகும்.,

 A rabbit was sleeping on a tree in the forest. Then there was a lion who was very hungry. The lion thought to kill the rabbits who were sleeping and settled hunger. At the same time, the deer is bigger than the lion to see a lion passing through it. So he wanted to eat the deer. The lion ran to drive the deer. The rabbit woke up to hear the noise. Having understood the danger in her and ran away.

 The lion was going to drive the artist far away and could not catch it. If the rabbit was sleeping, he could not kill him. The lion that has not seen it is disappointing and I still have to. I was left with the hand and got rid of the greed itself.

 Justice:
Getting rid of greed will not be available.

Thursday, February 07, 2019

பலம் எது பலவீனம் எது

*தப்பு கணக்கு போடாதீங்க*

ஜப்பானிய சாமுராய் வீரன் ஒருவன் இருந்தான்.

அவன் வீட்டில் எலித் தொல்லை மிகவும் அதிகமிருந்தது.

அதிலும் குறிப்பாக..

ஒரு முரட்டு எலி அந்த வீட்டில் இருந்த உணவுப் பொருட்களைத் திருடித் தின்றபடியே இருந்தது.

வீட்டுப் பூனையால் அந்த எலியைப் பிடிக்கவே முடியவில்லை.

அத்துடன் பூனையை அந்த எலி பாய்ந்து தாக்கிக் காயப்படுத்தியது.

ஆகவே...

சாமுராய் தனது அண்டை வீட்டில் இருந்த இரண்டு பூனைகளை அழைத்து வந்து முரட்டு எலியைப் பிடிக்க முயற்சி செய்தான்...

இரண்டு பூனைகளும் முரட்டு எலியைத் துரத்தின.

ஆனால்...

அந்த முரட்டு எலி ஆவேசத்துடன் பாய்ந்து தாக்கி அந்தப் பூனைகளையும் காயப்படுத்தியது.

முடிவில் சாமுராய் தானே அந்த எலியைக் கொல்வது என முடிவு செய்து...

ஒரு தடியை எடுத்துக் கொண்டு போய்த் துரத்தினான்.

எலி அவனிடம் இருந்து தப்பி தப்பி ஒடியது.

முடிவில் குளியலறைப் பொந்துக்குள் ஒளிந்து கொண்டது.

அவன் குனிந்து அதனைத் தாக்க முயற்சித்தான்.

ஆனால்...

வேறொரு வழியாக எலி வெளியே வந்து அவன் மீதும் பாய்ந்து தாக்கியது.

அதில் அவனும் காயம் அடைந்தான்.

‘ஒரு முரட்டு எலியை நம்மால் பிடிக்க முடியவில்லையே, நாமெல்லாம் ஒரு சாமுராயா..?

என அவமானம் அடைந்தான்.

அவனது மனவேதனையை அறிந்த ஒரு நண்பர்...

"நண்பா அருகில் உள்ள மலையில் ஒரு கிழட்டு பூனை இருக்கிறது..

அந்தப் பூனையால் எந்த எலியையும் பிடித்து விட முடியும்..’’

என ஆலோசனை சொன்னார்.

சாமுராயும் வேறு வழியில்லாமல் அந்தக் கிழட்டுப் பூனையைத் தேடிப் போய் உதவி கேட்டான்.

உடனே பூனையும் சாமுராய்க்கு உதவி செய்வதாக ஒப்புக் கொண்டது.

அதன்படி மறுநாள் சாமுராய் வீட்டுக்கு அந்தக் கிழட்டு பூனை வருகை தந்தது.

பூனை இருப்பதை அறிந்த எலி..

தயங்கித் தயங்கி வெளியே வந்தது.

கிழட்டு பூனை தன் இடத்தை விட்டு நகரவேயில்லை.

எலி தைரியமாக அங்குமிங்கும் ஒடுவதும் வெண்ணெய்க் கட்டிகளைத் திருடித் தின்பதுமாகயிருந்தது..

மற்ற பூனைகளாவது எலியைத் துரத்த முயற்சியாவது செய்தன.

ஆனால்....

இந்தக் கிழட்டுப் பூனையோ இருந்த இடத்தை விட்டு அசையவே மறுக்கிறதே என சாமுராய் அதன் மீது எரிச்சல் அடைந்தான்.

ஒருநாள் முழுவதும் அந்தப் பூனை அசையமல் அப்படியே இருந்தது.

மறுநாள்....

வழக்கம் போல எலி வளையை விட்டு வெளியே வந்தது.

சமையலறையில் போய் இனிப்பு உருண்டைகளை ஆசையாக தின்று விட்டு மெதுவாக திரும்பியது.

அடுத்த நொடி திடீரென பாய்ந்த அந்த கிழட்டு பூனை ஒரே அடியில் அந்த எலியைப் பிடித்து கடித்து கொன்று போட்டது.

சாமுராய் அதை எதிர் பார்க்கவேயில்லை.

இவ்வளவு பெரிய முரட்டு எலியை ஒரே அடியில் எப்படி அந்தக் கிழட்டு பூனை வீழ்த்தியது என வியப்படைந்தான்.

இந்தச் செய்தியை அறிந்து கொண்ட பூனைகளெல்லாம் ஒன்றுகூடி,...

"எப்படி இந்த முரட்டுஎலியைக் கொன்றாய்?

இதில் என்ன சூட்சுமம உள்ளது....?’’

எனக் கேட்டன.

"ஒரு சூட்சுமமும் இல்லை.

நான் பொறுமையாக காத்திருந்தேன்.

நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை அந்த எலி நன்றாக அறிந்திருந்தது.

ஆகவே..,

அது தன்னைத் தற்காத்துக் கொள்ளப் பழகியிருந்தது.

நான் நிதானமாக, பொறுமையாக காத்துக் கிடந்த போது அது என்னைச் செயலற்றவன் என நினைத்துக் கொண்டது.

ஆயுதத்தை விட பல மடங்கு வலிமையானது நிதானம்.

எதிரி நாம் செய்யப் போவதை ஊகிக்க முடிந்தால் அது நமது பலவீனம்.

"வலிமையானவன் தனது சரியான சந்தர்ப்பத்துக்காக காத்துக்கொண்டு தான் இருப்பான்!’’ என்றது அந்த கிழட்டு பூனை.

அப்போது மற்றோரு பூனை கேட்டது,...

‘‘நான் பாய்ந்து தாக்குவதற்கு பல ஆண்டுகள் பயிற்சி எடுத்திருக்கிறேன்.

என் நகங்கள் கூட கூர்மையானவை.

ஆனாலும் என்னால் ஏன் அந்த முரட்டு எலியைக் கொல்ல முடியவில்லை!’’

உன் பலத்தை போலவே எலியும் தன்னை காத்துக்கொள்ளப் பழகியிருக்கிறது..."

எல்லா எலிகளும் பூனைகளுக்குப் பயந்தவை இல்லை. நான் ஒரு பூனை என்ற அகம்பாவம் உன்னிடம் மேலோங்கியிருக்கும்.

ஆகவே...

ஒரு எலி திரும்பி தாக்க முயற்சிக்கிறது என்றதுமே நீ பயப்படத் தொடங்கியிருப்பாய்.

ஆகவே உன்னை துரத்தி அடித்து எலி காயப்படுத்தியது.

"ஆவேசமாக கூச்சலிடுபவர்கள். கோபம் கொள்கிறவர்கள்,

அவசரக்காரர்கள் தங்களின் பலவீனத்தை உலகுக்கு வெளிச்சமிட்டு காட்டுகிறார்கள்.

பலவான் தனது பேச்சிலும்,செயலிலும், அமைதியாகவே இருப்பான்..

உலகம் அவனை பரிகசிக்கவும் கூடும்..

ஆனால்...

தகுந்த நேரத்தில் அவன் தன் திறமையை நிரூபித்து வெற்றியடைவான்!’’

என்றது கிழட்டு பூனை.

சாமுராய்களுக்கு மட்டுமில்லை சாமானியர்களுக்கும் இந்தக் கதை பொருந்தக்கூடியதே.

மற்ற பூனைகளிடம் இல்லாத ஒரு தனித் திறமையும் கிழட்டுப் பூனையிடம் கிடையாது.

ஆனால்...

அது தன்பலத்தை மட்டுமே நம்பாமல் எதிரியின் பலவீனத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டது.

வாய்ச் சவடால் விடுவதை விட காரியம் செய்து முடிப்பது முக்கியம் என அனுபவம் அதற்கு உணர்த்தியிருந்தது.

காத்திருப்பது முட்டாள்தனமில்லை என அந்தப் பூனை உணர்ந்திருந்தது.

வெற்றியை தீர்மானிப்பது வெறும் ஆயுதங்களில் மட்டுமே இல்லை.

மனத் தெளிவும், நிதானமும், தகுந்த நேரத்தில் தன் திறமையை முழுமையாக வெளிப்படுத்துவதேயாகும்.

*நம் பலம் மட்டும் நம் பலமில்லை,*

*நமது எதிரியின் பலவீனமும் நமது பலம் தான்...*

நன்றி

குறை கூறாதீர் அது உங்கள் தகுதியை குறைக்கும்

அடுத்தவரை குறை சொல்வதே நம்மில் அனைவருக்கும் பெரிய ஆனந்தமாக இருக்கும் . அதிலும் நாம் சரியாக செய்து அடுத்தவர் தவறாக செய்தால் இன்னும் சந்தோசமாக அடுத்தவரிடம் சொல்லிக்கொண்டு இருப்போம் .சில பேருக்கு எதைச் செய்தாலும் நிறைவே ஏற்படாது. அதிலும் அவர்கள் ஒரு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலோ, ஆசிரியர் பதவியிலோ இருந்துவிட்டால் அவருக்குக் கீழே இருப்பவர்களின் கதி அதோ கதிதான். அது சரியில்லை, இது சரியில்லை என்று கூறி அவர்களின் உயிரை எடுத்து விடுவார். அதாவது தனக்கும் சரியாக செய்யத் தெரியாது, செய்கிறவர்களையும் நிம்மதியாக இருக்க விடமாட்டார்கள். குறை சொல்வது என்பது மனிதனுக்கு இயற்கையாவே அமைந்த குறைபாடு. அடுத்தவர்களை மட்டம் தட்டுவதன் மூலம் தனது உயரத்தை அதிகரிக்கச் செய்யும் முயற்சிதான் இந்தக் குறை சொல்லுதல்.

இது ஆழ்மனதில் உறைந்து கிடக்கும் விரோத எண்ணத்தின் காரணமாகவே இதுபோன்ற குறை சொல்லல் என்னும் மோசமான செயல்பாடு வந்து ஒட்டிக் கொள்கிறது. பொதுவாகத் தனக்கு வேண்டியவர்களாக இருந்தால் அவர்கள் மிகப் பெரிய தவறு செய்திருந்தாலும் அது கண்ணுக்குத் தெரிவதில்லை. அதேநேரத்தில் பிடிக்காதவர் களாக இருந்தால் அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் குறையைக் காண முயல்வது மனித இயல்பு.‘மாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடம்’ என்பார்கள்.இது மாமியார் _ மருமகளுக்கு மட்டுமல்ல, அத்தனை பேர்களுக்குமே பொருந்தும்.மற்றவர்களுக்குக் கிடைக்கும் நற்பெயர், பெருமை, வளர்ச்சி, புகழ், சந்தோஷம் போன்றவை மனதிற்குள் பொறாமை தீயைக் கொளுத்திப் போடும். அந்த நெருப்பே மளமளவென்று விரிந்து பரவி எரித்து நாசமாக்கும். தனது வேலையைத் தக்க வைத்துக் கொள்ளவும், தனது பதவி உயர்வை அடையவும், உயரதிகாரிகளிடம் நல்ல பெயரைத் தட்டிச் செல்ல வேண்டுமென்ற ஆசையும், வேகமும் துளிர்விடும். அப்போது அடுத்தவர்களை அழித்தால் மட்டுமே இது சாத்தியம் என்று தோன்றும். எனவே அவர்களைப் பற்றிய தப்பான விமர்சனங்கள் வேண்டுமென்றே அவர்களால் முன்னெடுக்கப்படும். அச்சத்தின் காரணமாகவே குறை கூறுதல் என்ற நிலையைக் கடைப்பிடிக்கிறார்கள் பலரும்.

தனது பொறுப்புகளை தட்டிக் கழிக்க விரும்பும்போது முதலில் வந்து நிற்பது இந்தக் குறை சொல்லுதல்தான்.பொதுவாகக் குறைசொல்லும் போக்கு ‘ஈகோ’வில் இருந்துதான் தொடங்குகிறது. ஒருவரிடம் ஈகோ என்னும் அரக்கன் நுழைந்து விட்டால் மற்றவர்களிடம் உள்ள குறைகளை அவர்கள் பூதக்கண் ணாடியை வைத்துக் கொண்டு தேடுவார்கள். இல்லாத ஒன்றை இருப்பதுபோல ஜோடனை செய்துவிடுவார்கள்.பிறருடைய கவனத்தை ஈர்ப்பதற்காகவே மற்றவர்களைக் குறை சொல்லும் மனிதர்களும் உண்டு. தாழ்வு மனப்பான்மை உடையவர்கள் தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். பலருக்கு முன்பாக தான் மட்டும் தனியாகத் தெரிய வேண்டும் என்பதற்காகவே அவர்கள் இவ்வாறு அதிரடியாகக் குறை சொல்கிறார்கள்.

தன்னை புத்திசாலியாகக் காட்டிக் கொள்வதற்காகவும் இப்படிப் பட்ட இழிவு செயலில் சிலர் ஈடுபடுவது உண்டு. அடுத்தவர்களின் குறைகளைக் கண்டுபிடித்துச் சொல்லிவிட்டால் தான்

புத்திசாலியாக மாறிவிடுவதாக இவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள்.

கடையில் பொருட்கள் வாங்கச் செல்லும்போது வேண்டுமென்றே விற்பனையாளரைக் குறை சொல்வார்கள். மானேஜரிடம் போய், ‘‘என்ன சேல்ஸ்மேனை வேலைக்கு வைத்திருக்கிறீர்கள்? முதலில் அவனை வீட்டுக்கு அனுப்புங்கள். எதற்குமே லாயக்கில்லை’’ என்று சொல்வார்கள்.

அந்தக் கடையில் குவிந்திருக்கும் அத்தனை பேரின் பார்வையும் தன் பக்கமாகத் திரும்ப வேண்டும் என்பது மட்டுமே அப்போது அவரது ஆசையாக இருக்கும்.

‘வாய்ப்பு வந்து வாசல் கதவைத் தட்டும்போது கூட 'சப்தமாகக் கதவைத் தட்டுகிறது' என்று குறை சொல்பவர்கள் இருக்கிறார்கள்’ என்கிறார் ஆஸ்கார் ஒயில்டு.நன்மை கிடைக்கும்போதுகூட அந்தத் தீய பழக்கம்தான் முன்னால் வந்து நிற்கிறது. பொதுவாகக் குறை சொல்லும் தன்மை ஆண்களை விடவும் பெண்களிடமே அதிகமாகக் காணப்படுவதாக சிலர் கூறுவது உண்டு. ஆனால் உண்மை அதுவன்று. குறை சொல்லும் பழக்கத்திற்கு ஆண், பெண் என்று பாலின வேறுபாடுகள் கிடையாது என்பதே உண்மை.ஒருநாள் தன் கணவனை காய் வாங்கி வருமாறு கேட்டுக் கொண்டாள் மனைவி.அவனும் கடைக்குப் போய் வெண்டைக்காய் வாங்கி வந்தான்.

காயைப் பார்த்த மனைவி கோபப்பட்டாள், ‘‘என்ன காய் வாங்கி வந்திருக்கீங்க? அத்தனையும் முத்தலாக இருக்கு. நல்ல காயா வாங்கத் தெரியாதா?’’ என்று சீறினாள். அப்புறம் இன்னொரு நாளும் காய் வாங்கி வருமாறு கேட்டுக் கொண்டாள் மனைவி. அவனும் அப்படியே கடைக்குச் சென்று பிஞ்சு வெண்டைக் காயாகப் பார்த்துப் பார்த்து வாங்கி வந்தான். காயைப் பார்த்த மனைவி, ‘‘என்ன இது! வெண்டைக்காய் இவ்வளவு பிஞ்சாக இருக்கு. இதை எப்படி சமைப்பது. நொடியில் கூழாகிடுமே! காயைக் கூட நல்லதாப் பார்த்து வாங்கத் தெரியாத நீங்க என்னதான் ஆபிசுல கிழிக்கிறீங்களோ!’’ என்று  இன்றும் கோபமாகக் கத்தினாள் மனைவி.

அவன் நொந்து போனான்.அப்புறம் மற்றொரு நாள் காய் வாங்கச் சென்றவன், எப்படி வாங்கினாலும் மனைவி குறை சொல்லிக் கொண்டே இருப்பதால் அன்று அங்கு காய் வாங்க வந்திருந்த ஒரு பெண்ணிடம் சொல்லி நல்ல வெண்டைக்காயாக வாங்கி வந்தான்.

இன்று எப்படியும் மனைவி தன்னைக் குறை சொல்ல மாட்டாள் என்று உறுதியாக நம்பினான்.

பையைப் பிரித்துப் பார்த்த மனைவி, ‘‘உங்களுக்கு வெண்டைக் காயை விட்டால் வேறு காயே வாங்கத் தெரியாதா?’’ என்று கத்தினாள்.ஆக, குறை சொல்கிறவர்கள் நீங்கள் எப்படிக் கஷ்டப்பட்டு உழைத்தாலும் நல்ல பெயரை எடுக்கவே முடியாது.அதே நேரத்தில் குறை சொல்லிக் கொண்டே இருப்பவர்கள் தங்கள் வாழ்வில் உண்மையான சந்தோஷத்தைப் பெறவே  முடியாது.