தன்னைப்பற்றி தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் இதை முழுவதும் படிக்கவும்
தன்னைப்பற்றி தாழ்வு மனப்பான்மை கொண்ட ஒருவன் கடவுளை வேண்டி தவமிருந்தபின் அவன் முன்னே கடவுள் தோன்றினார்.அவன் கடவுளிடம் என்னை ஏன் இப்படி படைத்தீர்கள்?
என் வாழ்க்கையின் மதிப்பு தான் என்ன என்று கேட்டான்.
கடவுள் அவனிடம் ஒரு சிகப்பு கல்லை கொடுத்து இதன் மதிப்பை அறிந்துவா ஆனால் விற்கக்கூடாது என்றார்.அவன் அக்கல்லை ஒரு ஆரஞ்சு பழ வியாபாரியிடம் காண்பித்ததற்கு, அக்கல்லுக்கு பதில் ஒரு டஜன் ஆரஞ்சு பழங்கள் கொடுப்பதாக கூறினான்.
அதையே ஒரு உருளைக்கிழங்கு வியாபாரியிடம் கேட்டதற்கு ஒரு மூடை கிழங்கு தருவதாக சொன்னான்.நகைக்கடையில் காண்பித்ததற்கு 50000 பொற்காசுகள் தருவதாக சொல்லவே, இவன் மறுக்க, ஒரு லட்சம் பொற்காசுகள் தருவதாக சொன்னான்.
மீண்டும் அந்த கல்லை எடுத்துக்கொண்டு ஆபரண கற்கள் வியாபாரியிடம் காண்பித்து அதன் மதிப்பை கேட்டான்.அக்கல்லை வாங்கி பலமுறை பரிசோதித்துவிட்டு இந்த அருமையான் மாணிக்க கல் உனக்கு எங்கே கிடைத்தது?ஒட்டு மொத்த உலகத்தையே விற்றுகொடுத்தாலும் இந்த கல்லுக்கு ஈடு இணை இல்லை என்று கூறினார்.
குழப்பமடைந்த நம் நண்பன் கடவுளை பார்த்து நடந்ததை எல்லாம் கூறினான்.அதற்கு கடவுள் சொன்னார், பார்த்தாயா, ஒரே கல்லுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மதிப்பு கொடுத்தனர்.ஆனால், கடைசியாக அந்தக்கல்லின் உண்மையான மதிப்பை ஒருவர் தான் சொன்னார்.
அதேபோல் உன்னை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி குறைத்து மதிப்பீடு செய்வர் அதற்கெல்லாம் கவலைப்படாதே!உன் உண்மையான மதிப்பை அறிபவரை விரைவில் கண்டறிவாய், மனம் தளராதே என்று கூறி மறைந்தார்.
கடவுளின் படைப்பில் ஒவ்வொருவரும் அபூர்வமானவரே!
தாழ்வு மனப்பான்மை கொள்ளல் கூடாது!
நம்மைப்பற்றி உயர்ந்த எண்ணம் நமக்கு முதலில் வேண்டும்.
ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் சிறப்பு மிக்கவரே!
உங்களுக்கு நிகர் நீங்களே!யாரும் உங்களுக்கு இணை கிடையாது!,
God had appeared before him when a person with inferiority in himself had to seek God. Why did you create me like this to God?
What is the value of my life?
God told him to give him a red stone and know the value and not sell it. He told him that he was paying a dozen fruits of fruit to an orange fruit merchant.
He told me that a potato was given to a bucket business. He said that he would give 500,000 golden coins to the jewelery to give him a million pounds.
Again he took the stone and asked the jewelery to show the value of the jewelry. Where did you get this gemstick stone with a lot of inspection after checking it? He said that even though the stone was sold to the whole world,
Our messy friend told God everything that happened. And God said, "Did you see each one of the same stones? But last one said the true value of that rock.
Do not worry about each and every one of you evaluate each model! You will soon find out the true value of your true value and say that you do not mind.
Everyone in God's creation is rare!
Do not take the inferiority attitude!
First of all we want to have a high opinion about ourselves.
Everyone is a special one!
You're right! Nobody is your partner!
No comments:
Post a Comment