வாழ்க வளமுடன் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் வாழ்க வளமுடன்!

Wednesday, January 09, 2019

புத்திசாலி எங்கிருந்தாலும் தன் காரியத்தை சாதிப்பான்

ஒரு சிறைக்கைதிக்கு அவனுடைய மனைவி கடிதம் எழுதியிருந்தாள்.!!!அன்புள்ள கணவருக்கு.. நீங்கள் கடத்தல் வழக்கில் சிறை சென்ற பிறகு நானும் குழந்தைகளும் வருமானமின்றி தவிக்கிறோம்.நம் வீட்டின் பின்னால் உள்ள கற்பாறை மண்டிய நிலத்தைப் பண்படுத்தி, தோட்டம் அமைத்து காய்கறி பயிரிட்டு குடும்பத்தை நடத்திச் செல்லலாம் என்று எண்ணுகிறேன்.. ஆனால் நிலத்தை தோண்டும் வழிதான் தெரியவில்லை.

கைதி பதில் எழுதினான்.அன்பே.. குடும்பச் செலவுக்காக வேறு ஏதாவது வழி செய்து கொள். பின்னாலிருக்கும் நிலத்தில் கை வைக்காதே. அங்குதான் நான் கடத்திய தங்கக் கட்டிகளைப் புதைத்து வைத்துள்ளேன்.. நீ ஏதாவது செய்யப் போக, பிறகு எனக்கு வைத்த இடம் மறந்து விடும்.. 

ஒரு வாரத்துக்குப் பின் மனைவியிடமிருந்து கடிதம்.அன்புள்ள கணவருக்கு.. யாரோ ஒரு கூட்டத்தினர் பொக்லைன் இயந்திரத்துடன் வந்து நம் கொல்லைப் புறத்தைத் தோண்டி பாறைகளையெல்லாம் அகற்றினர்.. இப்போது நிலம் சீராகி விட்டது. ஆனால் தங்கக் கட்டிகள் எதுவும் இல்லையே..?

கைதி திரும்பவும் மனைவிக்கு எழுதினான்.அன்பே.. அவர்கள் காவல் துறையினர்.. நான் உனக்கு எழுதிய கடிதத்தைப் படித்துவிட்டு தங்கம் தேடும் ஆவலில் தோண்டியிருப்பார்கள்.. ஆனால் உண்மையில் தங்கம் எதுவும் நான் புதைத்து வைக்கவில்லை.. இப்போது நீ காய்கறித் தோட்டம் பயிரிடு..!! புத்திசாலி எங்கிருந்தாலும் தன் காரியத்தை சாதிப்பான்.,

His wife wrote a letter to a prisoner. !!! Dear Husband .. After you go to jail in the case of kidnapping, I and my children are without income. I think that we can plant a rocky ground behind our house, plant a garden and plant a vegetable and plant a family .. But there is no way to dig the land. The prisoner replied. Dear .. Make any other way for family expenses. Do not hold hands on the back ground. That's where I've been burying the gold tumors. You go to do something, and then I forget the place I've been given. Let's leave a wife after a week. Dear Husband .. Someone came up with a pokeline machine and dug our rocks and removed all the rocks. Now the land has changed. But there is no gold tumor .. The prisoner returned to his wife. Dear .. they are police .. I read the letter that you wrote and drank in the desire for gold .. But in fact nothing gold I did not bury .. Now you plant vegetable garden !! A wise man will accomplish his work anywhere.

Monday, January 07, 2019

தர்மம் வேறு வியாபாரம் வேறு!!

செட்டி நாட்டு வீதியொன்றில் கீரை விற்றுகொண்டு செல்கிறாள் ஒரு பெண். வீட்டு வாசலில் மகனோடு அமர்ந்திருந்த தாய், கீரை வாங்க அவளை கூப்பிடுகிறாள். ஒரு கட்டு கீரை என்ன விலை....? ஓரணாம்மா
ஓரணாவா....? அரையணாதான் தருவேன். அரையணான்னு சொல்லி நாலு கட்டு கொடுத்திட்டு போ இல்லம்மா வராதும்மா
அதெல்லாம் முடியாது. அரையணாதான் பேரம் பேசுகிறாள் அந்த தாய்.பேரத்திற்கு ஒத்துக்கொள்ளாத அந்த பெண் கூடையை எடுத்துக்கொண்டு சிறிது தூரம் சென்றுவிட்டு
மேல காலணா போட்டு கொடுங்கம்மா என்கிறாள்
முடியவே முடியாது. கட்டுக்கு அரையணாதான் தருவேன் என்று பிடிவாதம் பிடித்தாள். கீரைக்காரி சிறிது யோசனைக்கு பிறகு சரிம்மா உன் விருப்பம் என்று கூறிவிட்டு நாலு கட்டு கீரையை கொடுத்துவிட்டு ரெண்டணா காசை வாங்கி கொண்டு கூடையை தூக்கி தலையில் வைக்க போகும் போது கீழே சரிந்தாள்.என்னடியம்மா காலை ஏதும் சாப்பிடல...? என்று அந்த தாய் கேட்க இல்லம்மா போய்தான் கஞ்சி காய்ச்சிணும் சரி. இரு இதோ வர்றேன்.என்று கூறிவிட்டு வீட்டுக்குள் சென்றவள், திரும்பும்போது ஒரு தட்டில் ஆறு இட்லியும், சட்னியோடு வந்தாள். இந்தா சாப்ட்டு போ என்று கீரைக்காரியிடம் கொடுத்தாள். எல்லாவற்றையும் பார்த்துகொண்டிருந்த அந்த தாயினுடைய மகன் ஏம்மா அரையணாவுக்கு பேரம் பேசுனிங்க.. ஒரு இட்லி அரையணான்னு வச்சுகிட்டாக்கூட ஆறு இட்லிக்கு ரெண்டரையணா வருதும்மா.....? என்று கேட்க அதற்கு அந்த தாய், வியாபாரத்துல தர்மம் பார்க்ககூடாது, தர்மத்துல வியாபாரம் பார்க்ககூடாதுப்பா என்று கூறினாள்...!!!,

A girl who sells lettuce in a country street. Mother, sitting in the doorstep of the house, calls her to buy the lettuce.What is the price of a bangle ...? Okramma Oranawa .... I will give you Arunanatan. is not it home? That can not be done. The mother talks about the bargain. Take a little girl away from the girl's basket, which does not agree to the deal
"Waiting to put it on the top"
"I can not do it. After a little idea, let's say, "Okay, your wish," gave up the four chestnuts and got Rendah's coconut and fell down when the basket was put on the head. The mother asks, "What's it for breakfast morning?"
Sister Idly came along with Satni in a tray when she went back home and said, "Oh, come on mushroom gas." She gave this to the litterrise called  "This Chapu Goo The mother's son, who was watching everything, said, "Amma bargain Aryana .. A idli ayanananu vattukkitta six idli rendrana come to ask that the mother," do not look at the business, do not look in the business of charity!

Saturday, January 05, 2019

முயற்சி தொடராமல் இருப்பவர்களுக்கான பதிவு

ஒரு இடத்தில் யானைகள் நிறைய கட்டப்பட்டிருந்தன.அந்த வழியே போன ஒருவன், யானைகளை பார்த்தபடியே சென்றான்.ஒரே ஒரு மெல்லிய சங்கிலி மட்டும் தான் யானைகளின் காலில் கட்டி இருந்தது, இவ்வளவு பெரிய உருவம் கொண்ட யானை அதை அறுத்து கொண்டு போகாதா என்று வியந்தான்.
அருகில் இருந்த பாகனிடம்,
இந்த யானைகள் இதை அறுத்து கொண்டு போகாதா..!?
என்று கேட்டான்.

அவன் சிரித்தபடி, இந்த யானைகள் குட்டியாக இருக்கும்போது இதில்தான் கட்டிவைத்தோம். அப்போது அது எவ்வளவோ இழுத்து பார்த்தும், இந்த சங்கிலியை அறுக்க முடியவில்லை. யானைகள் பெரிதாக பெரிதாக தன்னால் இதை அறுக்க முடியாது என்கிற எண்ணமும் சேர்ந்தே வளர்ந்தது. இப்போது அந்த எண்ணம் மனதில் பதிந்து, அறுக்கும் முயற்சியை கைவிட்டுவிட்டது. அறுக்க முயற்சிப்பதேயில்லைஎன்று சொன்னான்.

அந்த மனிதன் ஆச்சரியப்பட்டான், இந்த யானைகள் ஒரு நிமிடத்தில் இந்த சங்கிலியை அறுத்து கொண்டு போகலாம்.ஆனால் அவைகள் அதற்கான முயற்சியை செய்வதில்லை அதனாலேயே அவைகள் கட்டுண்டு கிடக்கின்றன.

இந்த யானைகள் போல் நம்மில் எத்தனை பேர் முன்பு சில முறை தோற்றதனால், மீண்டும் முயற்சிக்காமலேயே துவண்டு போகிறோம். முயற்சிப்பதையே விட்டு விடுகிறோம். சிந்தித்துப்பாருங்கள்!,

Friday, January 04, 2019

தாழ்வு மனப்பான்மை உள்ளவர்களுக்காக

தன்னைப்பற்றி தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் இதை முழுவதும் படிக்கவும்

தன்னைப்பற்றி தாழ்வு மனப்பான்மை கொண்ட ஒருவன் கடவுளை வேண்டி தவமிருந்தபின் அவன் முன்னே கடவுள் தோன்றினார்.அவன் கடவுளிடம் என்னை ஏன் இப்படி படைத்தீர்கள்?

என் வாழ்க்கையின் மதிப்பு தான் என்ன என்று கேட்டான்.

கடவுள் அவனிடம் ஒரு சிகப்பு கல்லை கொடுத்து இதன் மதிப்பை அறிந்துவா ஆனால் விற்கக்கூடாது என்றார்.அவன் அக்கல்லை ஒரு ஆரஞ்சு பழ வியாபாரியிடம் காண்பித்ததற்கு, அக்கல்லுக்கு பதில் ஒரு டஜன் ஆரஞ்சு பழங்கள் கொடுப்பதாக கூறினான்.

அதையே ஒரு உருளைக்கிழங்கு வியாபாரியிடம் கேட்டதற்கு ஒரு மூடை கிழங்கு தருவதாக சொன்னான்.நகைக்கடையில் காண்பித்ததற்கு 50000 பொற்காசுகள் தருவதாக சொல்லவே, இவன் மறுக்க, ஒரு லட்சம் பொற்காசுகள் தருவதாக சொன்னான்.

மீண்டும் அந்த கல்லை எடுத்துக்கொண்டு ஆபரண கற்கள் வியாபாரியிடம் காண்பித்து அதன் மதிப்பை கேட்டான்.அக்கல்லை வாங்கி பலமுறை பரிசோதித்துவிட்டு இந்த அருமையான் மாணிக்க கல் உனக்கு எங்கே கிடைத்தது?ஒட்டு மொத்த உலகத்தையே விற்றுகொடுத்தாலும் இந்த கல்லுக்கு ஈடு இணை இல்லை என்று கூறினார்.

குழப்பமடைந்த நம் நண்பன் கடவுளை பார்த்து நடந்ததை எல்லாம் கூறினான்.அதற்கு கடவுள் சொன்னார், பார்த்தாயா, ஒரே கல்லுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மதிப்பு கொடுத்தனர்.ஆனால், கடைசியாக அந்தக்கல்லின் உண்மையான மதிப்பை ஒருவர் தான் சொன்னார்.

அதேபோல் உன்னை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி குறைத்து மதிப்பீடு செய்வர் அதற்கெல்லாம் கவலைப்படாதே!உன் உண்மையான மதிப்பை அறிபவரை விரைவில் கண்டறிவாய், மனம் தளராதே என்று கூறி மறைந்தார்.

கடவுளின் படைப்பில் ஒவ்வொருவரும் அபூர்வமானவரே!

தாழ்வு மனப்பான்மை கொள்ளல் கூடாது!
நம்மைப்பற்றி உயர்ந்த எண்ணம் நமக்கு முதலில் வேண்டும்.

ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் சிறப்பு மிக்கவரே!
உங்களுக்கு நிகர் நீங்களே!யாரும் உங்களுக்கு இணை கிடையாது!,

God had appeared before him when a person with inferiority in himself had to seek God. Why did you create me like this to God?

What is the value of my life?

God told him to give him a red stone and know the value and not sell it. He told him that he was paying a dozen fruits of fruit to an orange fruit merchant.

He told me that a potato was given to a bucket business. He said that he would give 500,000 golden coins to the jewelery to give him a million pounds.

Again he took the stone and asked the jewelery to show the value of the jewelry. Where did you get this gemstick stone with a lot of inspection after checking it? He said that even though the stone was sold to the whole world,

Our messy friend told God everything that happened. And God said, "Did you see each one of the same stones? But last one said the true value of that rock.

Do not worry about each and every one of you evaluate each model! You will soon find out the true value of your true value and say that you do not mind.

Everyone in God's creation is rare!

Do not take the inferiority attitude!
First of all we want to have a high opinion about ourselves.

Everyone is a special one!
You're right! Nobody is your partner!