இந்த தூண் விழுந்தால் உலகம் அழிந்துவிடுமாம்?... உண்மைதானா?
இந்து மத நம்பிக்கைகள் மற்றும் அமானுஷ்யங்களில் இன்றளவும் பல அறிவியல் உண்மைகளால் தீர்க்க முடியாத பல புதிர்களை உள்ளடக்கியே இருக்கிறது.
அப்படிப்பட்ட ஒரு இடம் தான் மகாராஷ்டிராவில் காணப்படும் ஹரிஷ் சந்திரகேஷ்வரர் கோயில் உள்ளது.
ஆறாம் நூற்றாண்டில் கலாசூரி பேரரசால் கட்டப்பட்ட இந்த கோவிலுக்கு அருகில் கேதாரேஷ்வரர் என்ற குகையும் உண்டு.
அந்த குகைக்குள் சென்றால் பல ஆச்சர்யங்கள் உள்ளன. உள்ளே நீரினால் சூழப்பட்ட ஐந்தடி நீளமுடைய சிவலிங்கம் உண்டு.
இந்த நீர் மிகவும் குளிர்ச்சியானது என்பதால், இதைக்கடந்து அந்த லிங்கத்தை அடைவது கடினம் என்கிறார்கள்.
சிவலிங்கத்தைச் சுற்றிலும் 4 தூண்கள் இடம்பெற்றுள்ளன. அவை 4 யுகங்களையும் குறிப்பினவாம்.
இவை சக்தியுகம், கிருதயுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் ஆகிய 4 யுகங்களையும் இந்த நான்கு தூண்களும் குறிப்பதாகக் கூறப்படுகிறது.
ஒவ்வொரு யுகங்களும் முடியும் தருவாயில் ஒவ்வொரு தூணாக இங்கு இடிந்து விழுகிறதாம். அந்தவகையில் இதுவரை மூன்று தூண்களும் இடிந்து விழுந்திருப்பதாகவும், தற்போது நடைமுறையில் இருக்கும் கலியுகம் முடியும் தருவாயில் இந்த ஒற்றைத்தூணும் இடிந்துவிழும் என்றும் இந்த தூண் இடிந்து விழுந்தால் உலகம் அழிந்துவிடும் என்றும் நம்பப்படுகிறது.
No comments:
Post a Comment