Welcome Tamilnadu Teachers Friendly Blog |
- மத்திய அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் பற்றி டிசம்பர் 11-ல் முடிவு
- பள்ளிக்கல்வி அமைச்சருடனான பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சந்திப்பின் எதிரொலி
- மொழிப்பாடத்திற்கும் பேசுதல், கேட்டல், படித்தல் திறனுக்கு 20 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் : தமிழாசிரியர் கழகத்தினர் வலியுறுத்தல்
- Very good happy news to Part time instructors????
- பள்ளிக்கல்வி - தமிழகத்தில் உள்ள திறந்தநிலை பல்கலைக்கழகங்கள் வாயிலாக இளநிலைப் பட்டப்படிப்பு படிக்காமல் நேரடியாக வழங்கப்படும் முதுகலை பட்டப்படிப்பு பெற்ற ஆசிரியர்களுக்கு உயர்க்கல்வி தகுதிகாக ஊக்க உதிய உயர்வு வழங்கிட அனுமதித்து வெளியிடப்பட்ட அரசாணை எண்.307 பள்ளிக் கல்வி (இ2) துறை நாள்.15.12.2000ஐ இரத்து செய்தல் ஆணை வெளியீடு
- பாட நேரம் அதிகரிப்பிற்கு விரிவுரையாளர்கள் எதிர்ப்பு
- ஆங்கில பள்ளி மூடப்படுவதற்கு மாணவர்கள் எதிர்ப்பு
- வெளிமாநில குழந்தை தொழிலாளர்களுக்கு விடிவு காலம்!
- அரசு பள்ளிகளில் சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் ஆய்வு
- சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத உச்ச வயதுவரம்பு குறைப்பு?
- தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் 24.11.2014 மற்றும் 25.11.2014 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது
- பள்ளிக்கல்வி - அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் 24.11.2014 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது
- புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள நண்பர்களின் கவனத்திற்கு-இந்த வாரம் அரியலூர் மாவட்டம்
- பிளஸ் 2, 10ம் வகுப்பு விடைத்தாள் பக்கம் குறைப்பு: தேர்வு இயக்குனரகம் அறிவிப்பு
- அங்கன்வாடி ஊழியர்கள் நியமனத்துக்கு தடை - மதுரை ஐகோர்ட்
மத்திய அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் பற்றி டிசம்பர் 11-ல் முடிவு Posted: 19 Nov 2014 04:43 PM PST இரயில்வே, பாதுகாப்புத் துறை உட்பட மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர் கள் இணைந்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவது பற்றி டிசம்பர் 11-ம் தேதி டெல்லியில் நடைபெறும் சிறப்பு மாநாட்டில் முடிவு செய்யப்பட உள்ளதாக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் தேசிய பொதுச் செயலாளர் எம்.கிருஷ்ணன் தெரிவித்தார். மத்திய அரசு ஊழியர்களின் 50 சதவீத அகவிலைப்படியை அடிப் படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும்; 7-வது ஊதியக் குழுவின் இறுதி முடிவுக்கு முன்பாக மத்திய அரசு ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்; மத்திய அரசு அலுவல கங்களில் காலியாக உள்ள 6 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் சார்பில் நாடு முழு வதும் மாநிலத் தலை நகரங்களில் நேற்று தர்ணா போராட்டங்கள் நடைபெற்றன. அந்த வகையில் சென்னையில் அண்ணா சாலை தலைமை தபால் நிலைய வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சம்மேளனத்தின் தேசிய பொதுச் செயலாளர் எம்.கிருஷ்ணன் பங்கேற்று பேசினார். "அரசு ஊழியர்களின் அக விலைப்படியில் 50 சதவீதத்தை அடிப்படை ஊதியத்துடன் இணைப்பது என்பது தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது. இப்போதும் அதேபோல் 50 சதவீத அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படும் என்பது மத்திய அரசு ஏற்றுக் கொண்ட கோரிக்கையாகும். ஆகவே, ஏற்றுக் கொண்ட கோரிக் கையை அமல்படுத்தக் கோரி இன்று நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். ஊழியர்களின் நலன்களைப் பாதிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுவதால் இன்று அனைத்துத் துறை ஊழியர்களும் ஓரணியில் திரளும் நிலைமை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ரயில்வே, பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த தொழிற்சங்கங்களும் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்துடன் இணைந்து போராட முன்வந்துள்ளன. இந்நிலையில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் பற்றி முடிவு செய்வதற்காக மத்திய அரசு ஊழியர் சங்கங்களின் சிறப்பு மாநாடு டிசம்பர் 11-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. அந்த மாநாட்டின் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் வலிமை நரேந்திர மோடி அரசுக்கு உணர்த்தப்படும்" என்றார் கிருஷ்ணன். இந்த ஆர்ப்பாட்டத்தில் சம்மேள னத்தின் மாநிலத் தலைவர் ஜே.ராம மூர்த்தி, மாநிலப் பொதுச் செயலாளர் எம்.துரைபாண்டியன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் எஸ்.பால சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். |
பள்ளிக்கல்வி அமைச்சருடனான பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சந்திப்பின் எதிரொலி Posted: 19 Nov 2014 04:41 PM PST |
Posted: 19 Nov 2014 04:46 PM PST |
Very good happy news to Part time instructors???? Posted: 19 Nov 2014 04:44 PM PST |
Posted: 19 Nov 2014 09:16 AM PST |
பாட நேரம் அதிகரிப்பிற்கு விரிவுரையாளர்கள் எதிர்ப்பு Posted: 19 Nov 2014 02:23 AM PST அரசு முதல்நிலை கல்லூரிகளில், தற்போது பாட நேரம் வாரத்திற்கு 16 மணிநேரமாக உள்ளது. இதை 22 மணி நேரமாக அதிகரித்து, அரசு உத்தரவிட்டுள்ளதற்கு, விரிவுரையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கல்லூரி விரிவுரையாளர்: தற்போது, வாரம் ஒன்றில், 16 மணி நேரம் பாடம் நடத்துவதற்கும், ஆறு மணி நேரம் ஆய்வு செய்வதற்கும், கல்லூரி விரிவுரையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கல்லூரிகளில், ஆய்வு நடத்துவதற்கான வசதிகள் ஏதுமில்லாததால், இனி அந்த ஆறு மணி நேரத்தையும், பாடம் நடத்துவதற்காக பயன்படுத்த வேண்டும். அதாவது, வாரம்தோறும் 22 மணி நேரம் பாடம் நடத்த வேண்டும் என, கல்லூரி கல்வி நடவடிக்கை துறை (டி.சி.இ.,) புதிய உத்தரவு ஒன்றை, பிறப்பித்துள்ளது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து விரிவுரையாளர்கள் கூறியதாவது: வாரத்தில், 16 மணி நேரம் பாடம் நடத்திய பின், ஆறு மணி நேரம் ஆய்வுக்காக பயன்படுத்தலாமென்று, யூ.ஜி.சி., விதிமுறைகள் அனுமதித்துள்ளது. விரிவுரையாளர்கள், அடுத்த கட்ட பதவி உயர்வுக்கு, துணை பேராசிரியர் பதவியிலிருந்து, இணை பேராசிரியர் பதவி பெற, 300 வகையான பாட திட்டங்களில் ஆய்வு செய்து, சர்வதேச ஜர்னல்களில் வெளியிட்டாக வேண்டும். இந்த ஆய்வுக்கு, அதிகநேரம் தேவைப்படுகிறது என்பதால், புதிய உத்தரவை அரசு திரும்ப பெற வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர். புதிய உத்தரவு: கர்நாடகா அரசு கல்லூரி ஆசிரியர்கள் சங்க தலைவர், பிரகாஷ் கூறியதாவது: இந்த புதிய உத்தரவை திரும்ப பெறும்படி, உயர் கல்வித்துறை அமைச்சர் தேஷ்பாண்டேவுக்கு கடிதம் அனுப்பி உள்ளோம். பாட திட்டங்களிலும் மாறுதல் ஏற்பட்டுள்ளதால், ஆய்வு செய்ய அதிக நேரம் தேவைப்படுகிறது. தற்போது, ஏதாவது புள்ளி விவரங்களை தெரிவித்தால், அது சரியா என்பதை மாணவர்கள், உடனடியாக ஆன் - லைன் மூலம் பரிசோதிக்கின்றனர். விரிவுரையாளர் தரும் தகவல்கள் பழையதாக இருந்தால், புதிய தகவல்களை மாணவர்கள் தருகின்றனர். ஒரு மணி நேர வகுப்பில் பாடம் நடத்த, நாங்கள் அதிகம் படிக்க வேண்டியுள்ளது. மாணவர்களை, முட்டாளாக்க முடியாது. அரசு விதித்துள்ள புதிய உத்தரவை திரும்ப பெறும் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார். மேலவை துணைத் தலைவர் புட்டண்ணா கூறுகையில், "இந்த உத்தரவில், அர்த்தமே இல்லை. கல்வியாண்டின் மத்தியில், டி.சி.இ., இப்படியொரு உத்தரவு அனுப்புவதற்கோ, பாட நேரத்தை நிர்ணயிப்பதற்கோ அதிகாரமில்லை. மாநில நிதித்துறை பரிந்துரையை மட்டுமே வெளியிட வேண்டும். இது, யூ.ஜி.சி., சம்பந்தப்பட்டதாகும். இந்த உத்தரவை திரும்ப பெறாவிட்டால், போராட்டம் நடத்துவேன்," என்றார். |
ஆங்கில பள்ளி மூடப்படுவதற்கு மாணவர்கள் எதிர்ப்பு Posted: 19 Nov 2014 02:23 AM PST உரிகம் ஐந்து விளக்கு பகுதியில், 100 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த பி.இ.எம்.எல்., ஆங்கில பள்ளியை காப்பாற்ற வலியுறுத்தி, மாணவர்கள் ஊர்வலமாக சென்று, தங்கவயல் கல்வி அதிகாரியிடம் மனு வழங்கினர். தங்கவயல், உரிகம் ஐந்து விளக்கு பகுதியில், 100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு இயங்கி வந்த, பி.ஜி.எம்.எல்., ஆங்கில பள்ளியில், பல்வேறு பகுதிகளில் இருந்தும், 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். தங்க சுரங்கம் மூடப்பட்ட பின்னர், சுரங்க நிறுவனத்துக்கு சொந்தமான பி.ஜி.எம்.எல்., மருத்துவமனையும், பி.ஜி.எம்.எல்., அரசு பள்ளியும் மூடப்பட்டு விட்டன. தற்போது, பி.இ.எம்.எல்., அரசு ஆங்கில உயர்நிலைப் பள்ளியையும் மூடி விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகும். இந்நிலையில், பள்ளி மாணவர்கள், ரயில் நிலையம், ராபர்ட்சன்பேட்டை சுராஜ்முள் சர்க்கிள், காந்தி சர்க்கிள் மற்றும் ராஜ்குமார் சர்க்கிள் வழியாக, கல்வி அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று, கல்வி அதிகாரி வெங்கட்ராம ரெட்டியிடம் மனு வழங்கினர். |
வெளிமாநில குழந்தை தொழிலாளர்களுக்கு விடிவு காலம்! Posted: 19 Nov 2014 02:22 AM PST அடிப்படை கல்விக்கு வாய்ப்பு கிடைக்காத, வெளிமாநில குழந்தை தொழிலாளர்களுக்காக, கோவை மாவட்டத்தில் சிறப்பு பள்ளி துவங்கப்பட்டுள்ளது. இவை முறையாக செயல்படுத்தப்பட்டால், அவர்கள் கொத்தடிமைகளாக உருவாகும் நிலை தடுக்கப்படலாம். பள்ளி செல்லும் வயதில், வேலைக்கு செல்லும் சிறுவர்களை மீட்கவே, குழந்தை தொழில் முறை ஒழிப்பு திட்டம் செயல்படுகிறது. இதன் மூலம் மீட்கப்படும் சிறுவர்களை, குழந்தைகள் நலக்குழு முன்னிலையில் ஒப்படைத்து, பாதுகாப்பான தங்குமிடம், உணவு, பள்ளி செல்லும் வாய்ப்பு என பல்வேறு வசதிகள் செய்து தரப்படுகின்றன. இருப்பினும், வெளி மாநிலத்தவர் வருகையால், குழந்தை தொழிலாளர் முறைக்கு, முற்றுப்புள்ளி வைக்க முடியாத சூழலே நிலவி வருகிறது. இதை கட்டுப்படுத்தும் விதமாக, மாவட்ட குழந்தை தொழிலாளர் தடுப்பு திட்டம், இரு ஆண்டுகளாக பணிகளை துவக்கியுள்ளது. நகரின் மையப்பகுதிகளில் மீட்கும் சிறுவர்களை தனியாகவும், கிராமப்புற பகுதிகளில், கொத்தடிமைகளாக வேலை செய்த சிறார்களை தனியாகவும், மீட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பிட்ட தொழிலுக்காக, வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கையே அதிகம் என்பது ஆய்வுகளில் தெரியவந்தது. இச்சிறுவர்களை மீட்டு, முறைசார் பள்ளிகளுக்கு அனுப்பி படிக்க வைத்தாலும், மீண்டும் பழைய தொழிலுக்கே திரும்பிவிடுகின்றனர். இதைத்தடுக்க, குறிப்பிட்ட தொழில் செய்யும் பகுதிகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சுந்தராபுரம், காந்திநகர் பகுதிகளில், கட்டட தொழிலுக்காகவும், தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், பாக்கு தொழிலுக்கும், பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் தோட்ட வேலைக்கும், கணுவாய் பகுதியில் செங்கல் சூளை வேலைக்காகவும், குடும்பம் குடும்பமாக, பீகார், ஒரிசா, அசாம் மக்கள் வந்து தங்கியுள்ளனர். அவர்களது குழந்தைகளில் பெரும்பகுதியினர், அடிப்படை கல்விகூட பெறுவதில்லை. அவர்களது நலனுக்காக, கடந்தாண்டு காந்தி நகரில் சிறப்பு பள்ளி அமைத்து, 50 மாணவர்கள் அடிப்படை கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டது. நடப்பாண்டில் தொண்டாமுத்தூரில் சிறப்பு பள்ளி அமைத்து, 50 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். |
அரசு பள்ளிகளில் சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் ஆய்வு Posted: 19 Nov 2014 02:20 AM PST அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்ட நிதி மூலம் அரசு பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டு பணிகள் குறித்து சென்னை ஐ.ஐ.டி.,பேராசிரியர்கள் ஆய்வு செய்தனர். விருதுநகர் மாவட்டத்தில் 177 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டம்(ஆர்எம்எஸ்ஏ) நிதிமூலம் பல்வேறு மேம்பாட்டுப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சமீபத்தில் 38 பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், 18 பள்ளிகளில் கழிப்பறைகள், 10 பள்ளிகளில் குடிநீர் வசதி செய்துதரப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்பணிகளுக்காக மத்திய அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட நிதி, பணிகள் நடந்துள்ள விதம், தரம் ஆகியவை குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட சென்னை ஐ.ஐ.டி.,பேராசிரியர்கள் கோவிந்த அரசன், பூபால பாலகிருஷ்ணன் நேற்றுமுன்தினம் ஆய்வை துவக்கினர். பத்து நாட்கள் ஆய்வு நடத்தி அதன் அறிக்கையை அந்த அமைச்சகத்திடம் சமர்ப்பிப்பர் என, மாவட்ட கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். |
சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத உச்ச வயதுவரம்பு குறைப்பு? Posted: 19 Nov 2014 02:19 AM PST மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வுகளை எழுபவர்களுக்கான உச்ச வயது வரம்பை குறைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதைய நடைமுறையின்படி, பொதுப் பிரிவை சேர்ந்தவர்கள் 30 வயது வரையிலும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் 33 வயது வரையிலும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் 35 வயது வரையிலும் இந்த தேர்வை எழுதலாம். இந்த நடைமுறையில், மத்திய அரசு மாற்றத்தை கொண்டு வரவிருக்கிறது. அதன்படி, பொதுப்பிரிவினருக்கான உச்ச வயது வரம்பு, 26 ஆகவும், ஓ.பி.சி.,யினருக்கு, 28 மற்றும் எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு, 29 ஆகவும் குறைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதேபோல், ஒருவர் எத்தனை முறை இந்த தேர்வை எழுதலாம் என்பதிலும் மாற்றம் கொண்வரப்பட உள்ளது. அதன்படி, இனிமேல், சிவில் சர்வீஸ் தேர்வுகளை, பொதுப் பிரிவினர் மூன்று முறையும், ஓ.பி.சி., பிரிவை சேர்ந்தவர்கள் ஐந்து முறையும், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் ஆறு முறையும் மட்டுமே எழுத முடியும். இதற்கான அறிவிப்பு, எந்த நேரத்திலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. |
Posted: 19 Nov 2014 02:20 AM PST |
Posted: 18 Nov 2014 11:02 PM PST |
புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள நண்பர்களின் கவனத்திற்கு-இந்த வாரம் அரியலூர் மாவட்டம் Posted: 18 Nov 2014 10:19 PM PST புதிய ஓய்வூதியம் பாதிப்பு குறித்து ஒவ்வொரு வாரமும் ஒரு மாவட்டம் -பற்றிய பதிப்பு வெளியிடப்படும் -இந்த வாரம் அரியலூர் மாவட்டம் -புதிய ஓய்வூதியம் பாதிப்பு குறித்து புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள நண்பர்களின் கவனத்திற்கு எடுத்து கூறுங்கள். |
பிளஸ் 2, 10ம் வகுப்பு விடைத்தாள் பக்கம் குறைப்பு: தேர்வு இயக்குனரகம் அறிவிப்பு Posted: 18 Nov 2014 07:26 PM PST பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு விடைத்தாள்களின் பக்கங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு உள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள், நேர விரயம் மற்றும் கண்காணிப்பாளரின் கவனத்தை கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டு முதல், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விடைத்தாளை இணைத்து வழங்கப்பட்டது. எழுதாத பக்கங்களில், கிராஸ் கோடு போட அறிவுறுத்தப்பட்டது. விடைத்தாள்களில் எழுதாத பக்கங்கள் அதிகரித்ததை அடுத்து, தேர்வுத் துறைக்கு கூடுதல் செலவினம் ஏற்பட்டது. இதை தவிர்க்கும் வகையில், தற்போது ஒவ்வொரு பாடத்துக்கும் உரிய விடைத்தாள்கள், குறைத்து வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜ், பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: வரும் 2015ல், நடைபெறவுள்ள உள்ள பிளஸ் 2 மொழிப்பாடங்களுக்கு, 40 பக்கங்களுக்கு பதில், 32 பக்கங்கள் கொண்ட விடைத்தாளில், 30 பக்கங்கள் எழுதும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. விலங்கியல், தாவரவியல் பாடங்களில், 52க்கு பதில், 44; கம்ப்யூட்டர் சயின்ஸ், 40க்கு, 32; அக்கவுன்டன்சி, 54க்கு, 46; இதர பாடங்களுக்கு, 40 பக்கங்களும் வழங்கப்பட உள்ளன. இதேபோல், 10ம் வகுப்பு தேர்வில், மொழிப்பாடங்களுக்கு, 32க்கு, 24; தமிழ் இரண்டாம் தாளில் ரயில்வே முன்பதிவு, ரத்து படிவம், வங்கியில் பணம் செலுத்தும் படிவம், வங்கியில் பணம் பெறும் படிவம் ஆகிய படிவங்கள் தனித்தனியாக வழங்காமல், முதன்மை விடைத்தாளில் முதல் நான்கு பக்கங்களில் அச்சிடப்பட்டு வழங்கப்பட உள்ளது. சமூக அறிவியலில், முதன்மை விடைத்தாளில் முதல் நான்கு பக்கங்களில், இரண்டு இந்திய வரைபடங்கள், ஒரு ஐரோப்பா வரைபடம், ஒரு ஆசிய வரைபடம் அச்சிடப்பட்டு சேர்த்து வழங்கப்பட்டு உள்ளது. கணிதம், அறிவியல் பாடங்கள் பழையபடியே, 30 பக்கங்கள் வழங்கப்பட்டாலும், முதல் பக்கத்தில் கேம்ப் எண், பண்டல் எண், பாக்கெட் எண் போன்ற விவரங்களும் இடம் பெற்றிருக்கும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பிளஸ் 2, 10ம் வகுப்பு விடைத்தாள் பக்கம் குறைப்பு: தேர்வு இயக்குனரகம் அறிவிப்பு பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு விடைத்தாள்களின் பக்கங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு உள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள், நேர விரயம் மற்றும் கண்காணிப்பாளரின் கவனத்தை கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டு முதல், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விடைத்தாளை இணைத்து வழங்கப்பட்டது. எழுதாத பக்கங்களில், கிராஸ் கோடு போட அறிவுறுத்தப்பட்டது. விடைத்தாள்களில் எழுதாத பக்கங்கள் அதிகரித்ததை அடுத்து, தேர்வுத் துறைக்கு கூடுதல் செலவினம் ஏற்பட்டது. இதை தவிர்க்கும் வகையில், தற்போது ஒவ்வொரு பாடத்துக்கும் உரிய விடைத்தாள்கள், குறைத்து வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜ், பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: வரும் 2015ல், நடைபெறவுள்ள உள்ள பிளஸ் 2 மொழிப்பாடங்களுக்கு, 40 பக்கங்களுக்கு பதில், 32 பக்கங்கள் கொண்ட விடைத்தாளில், 30 பக்கங்கள் எழுதும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. விலங்கியல், தாவரவியல் பாடங்களில், 52க்கு பதில், 44; கம்ப்யூட்டர் சயின்ஸ், 40க்கு, 32; அக்கவுன்டன்சி, 54க்கு, 46; இதர பாடங்களுக்கு, 40 பக்கங்களும் வழங்கப்பட உள்ளன. இதேபோல், 10ம் வகுப்பு தேர்வில், மொழிப்பாடங்களுக்கு, 32க்கு, 24; தமிழ் இரண்டாம் தாளில் ரயில்வே முன்பதிவு, ரத்து படிவம், வங்கியில் பணம் செலுத்தும் படிவம், வங்கியில் பணம் பெறும் படிவம் ஆகிய படிவங்கள் தனித்தனியாக வழங்காமல், முதன்மை விடைத்தாளில் முதல் நான்கு பக்கங்களில் அச்சிடப்பட்டு வழங்கப்பட உள்ளது. சமூக அறிவியலில், முதன்மை விடைத்தாளில் முதல் நான்கு பக்கங்களில், இரண்டு இந்திய வரைபடங்கள், ஒரு ஐரோப்பா வரைபடம், ஒரு ஆசிய வரைபடம் அச்சிடப்பட்டு சேர்த்து வழங்கப்பட்டு உள்ளது. கணிதம், அறிவியல் பாடங்கள் பழையபடியே, 30 பக்கங்கள் வழங்கப்பட்டாலும், முதல் பக்கத்தில் கேம்ப் எண், பண்டல் எண், பாக்கெட் எண் போன்ற விவரங்களும் இடம் பெற்றிருக்கும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. |
அங்கன்வாடி ஊழியர்கள் நியமனத்துக்கு தடை - மதுரை ஐகோர்ட் Posted: 18 Nov 2014 10:22 PM PST தமிழகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் நியமனத்திற்கு, மதுரை ஐகோர்ட் கிளை இடைக்காலத் தடை விதித்தது. திருமங்கலம் எம்.புளியங்குளம் மீனாலட்சுமி தாக்கல் செய்த மனு: சமூக நலத்துறை சார்பில், அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் காலியிடங்களை நிரப்ப, அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் கலெக்டர்கள், திட்ட அலுவலர்கள் நியமன நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 2013 ஆக., 28ல் அரசு உத்தரவில், 'மாவட்ட வாரியாக, நேர்காணல் மூலம் மட்டுமே பணி நியமனம் மேற்கொள்ள வேண்டும்' என, உள்ளது. தற்போதைய பணி நியமன நடைமுறையில், மாவட்டந்தோறும் எத்தனை பணியாளர்கள் நியமிக்க உள்ளனர்; இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படுமா என்ற விவரங்களை தெளிவுபடுத்தவில்லை. நேர்காணலுக்கு முன்பே யார் யாரை நியமிப்பது என, அரசியல்வாதிகள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அங்கன்வாடி பணியிடங்களை பொது அறிவிப்பின்றி, நேர்காணல், வசிப்பிடம் அடிப்படையில் தேர்வு செய்வது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. பொது அறிவிப்பு வெளியிடாமல், இடஒதுக்கீடு பின்பற்றாமல் அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்களை நியமனம் செய்ய தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டிருந்தார். நீதிபதி டி.ராஜா முன், மனு விசாரணைக்கு வந்தது. அரசு கூடுதல் வழக்கறி ஞர் முகமது முகைதீன், 'அரசாணைப்படி பொது அறிவிப்பு வெளியிடத் தேவையில்லை. தற்போது மாவட்ட அளவில் தான் நியமனம் மேற்கொள்ளப்படுகிறது. மாநிலம் முழுவதும் நியமனத்திற்கு தடை கோர முடியாது' என்றார். பணி நியமனம் மேற்கொள்ள தடை விதித்த நீதிபதி, சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை செயலர், சமூக நலத்துறை கமிஷனருக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டார். |
You are subscribed to email updates from tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
No comments:
Post a Comment