வாழ்க வளமுடன் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் வாழ்க வளமுடன்!

Monday, November 03, 2014

TN EDUCATIONAL FLASH NEWS




Sent from Samsung Mobile


-------- Original message --------
From: கல்விச் செய்தி
Date:2014/11/03 1:54 AM (GMT+05:30)
To: bliccenter@gmail.com
Subject: KALVI SAITHI-TN EDUCATIONAL FLASH NEWS

KALVI SAITHI-TN EDUCATIONAL FLASH NEWS


போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் நிற்க தேவையில்லை: தானாக பச்சைக்கு மாறும் விளக்குகள் - பெங்களூருவில் அறிமுகம்

Posted: 02 Nov 2014 07:24 AM PST

ஆம்புலன்ஸ், தீயணைப்புத் துறை வாகனங்கள் வரும்போது தானாகவே சிவப்பு சிக்னல் பச்சை சிக்னலாக மாறும் தொழில்நுட்பம் பெங்களூருவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக பெங்களூர் மாநகர போக்குவரத்துத் துறை காவல் கூடுதல் ஆணையர் எம்.ஏ.சலிம் கூறியதாவது:
சமீபகாலமாக பெங்களூரில் போக்குவரத்து நெரிசல் அதி கரித்து வருகிறது. தினமும் சுமார் 2 கோடி எண்ணிக்கையிலான வாகனங்கள் பெங்களூருவின் சாலைகளில் பயணிக்கின்றன. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

புதிய சாலைகளையும் புதிய மேம்பாலங்களையும் கட்டினால்கூட போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. ஆம்புலன்ஸ் வாகனங்கள்கூட போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பி,வேகமாக செல்ல முடிவதில்லை. இதேபோல அவசரமாக செல்ல வேண்டிய தீயணைப்பு வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு போக முடியவில்லை.

இதனை தவிர்க்கும் வகையில் பெங்களூரு மாநகர போக்கு வரத்து துறை பல்வேறு திட்டங் களை தீட்டி அமல்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கினால் சிக்னலை மாற்றும் வகையில் தொலைபேசி எண் சேவையை அறிமுகப்படுத் தினோம்.அதன்படி சம்பந்தப்பட்ட வாகனங்களின் ஓட்டுநர் கட்டுப்பாட்டு அறையை தொலைபேசியில் தொடர்பு கொண்டால் உடனடியாக சிக்னல் மாறி அவர்கள் செல்ல முடியும்.

ஆட்டோமேட்டிக் சென்சார் கருவிகள்

அதனைக் காட்டிலும் சற்று மேம்பட்ட வளர்ந்த நாடுகளில் பயன்படுத்தப்படக்கூடிய போக்குவரத்து சிக்னல் முறையை பெங்களூருவில் அமல்படுத்த இருக்கிறோம். அதன் மூலம் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் சிக்னலில் காத்திருக்காமல் அவை வந்த உடனே சிவப்பு விளக்கு பச்சை விளக்காக மாறும். இதன் மூலம் செல்ல வேண்டிய இடத்துக்கு வேகமாக செல்ல முடியும்.

பெங்களூரின் முக்கியமான சாலைகளில் உள்ள 353 சிக்னல்களில் ரூ.75 கோடி செலவில் ஆட்டோமேட்டிக் சென்சார் கருவிகள் பொருத்தப்பட உள்ளன. இந்த கருவிகள் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களின் மேல் சுழலும் விளக்கை அடையாளம் கண்டு அதற்கான பாதையில் போக்குவரத்தை திறக்கும் வகையில் பச்சை சிக்னலுக்கு மாறும்.

இந்த கருவிகள் விஐபிகளின் வாகனங்கள் வந்தாலும் வழிவிடாது. ஆம்புலன்ஸ் போன்ற அவசர வாகனங்களுக்கு மட்டுமே வழிவிடும். இத்தகைய நடைமுறைகள் வளர்ந்த நாடுகளில் அமலில் இருக்கிறது. இந்தியாவில் முதல்முறையாக பெங்களூருவில் இந்த சிக்னல் சென்சார் திட்டம் கொண்டுவரப்படுகிறது.

இதற்கான தயாரிப்புப் பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு இந்த ஆண்டு இறுதிக்குள் அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.

கல்விச்செய்தி ஒரே ஆண்டில் 2 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை!!!

Posted: 01 Nov 2014 07:44 PM PDT


அன்பார்ந்த கல்விச்செய்தி வாசக நண்பர்களே!

உங்களது பெரும் ஆதரவுடன் மிக குறுகிய காலத்தில்  www.Kalviseithi.net தொடங்கப்பட்டு ஒரே ஆண்டில் 2 கோடி பார்வையாளர்களை கடந்து தொடர்ந்து

தமிழக கல்விசார்ந்த வலைதளங்களில் முதன்மையாக திகழ்ந்து வருகிறது.

கல்விச்செய்தியின் இந்த வளர்ச்சிக்கு என்றும் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் வாசக நண்பர்கள்,ஆசிரிய பெருமக்கள்,மாணவச்செல்வங்கள் மற்றும் கல்விசார் இணைய நண்பர்கள் அனைவருக்கும் கல்விச்செய்தியின் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி...

Special Thanks To...

Mr.Mani Arasan

Mr.Sri

Mr.Vijaya Kumar Chennai

Mr. A ALEXANDER SOLOMON Aas


(நாம் அறிந்ததை உலகறியச்செய்வோம் நீங்கள் அறிந்த கல்வி தொடர்பான செய்திகள்,பாடக்குறிப்புகளை Kalviseithi.net@Gmail.com என்ற E-mail முகவரிக்கு அனுப்புங்கள் நாம் அதனை உலகறியச்செய்யலாம்.)

கல்வி தொடர்பான அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தொடர்ந்து நமது இணைய தொடர்பில் இருக்கவும்.

விரைவில் பல புதிய மாற்றங்களுடன் என்றென்றும் கல்விச்சேவையில் உங்கள் கல்விச்செய்தி...

நன்றி
அன்புடன் கல்விச்செய்தி

பள்ளி திறந்து 5 மாதமாகியும் இலவச பொருள் சப்ளை இல்லை

Posted: 01 Nov 2014 06:20 PM PDT


பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லாபொருட்களின் தரத்தை சோதிக்க புதிய நடைமுறை பின்பற்றப்படுவதால், பள்ளி திறந்து, ஐந்து மாதங்களாகியும் பாடநூல் மற்றும் சீருடை தவிர மற்ற பொருட்கள் வழங்க முடியவில்லை. இதனால், மாணவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, இலவச பாடநூல், சத்துணவு, காலனி, சீருடை, பஸ் பாஸ், லேப்--டாப், சைக்கிள், புத்தகப்பை, கணித உபகரணம், வண்ண பென்சில், கம்பளி சட்டை, புவியியல் வரைபடம் உள்ளிட்ட, 14 வகையான பொருட்களை வழங்கியது.

தரமற்றவை சப்ளை :

மாணவர்களுக்கான நலத்திட்ட உதவிகளை கொள்முதல் செய்வது, அதன் தரத்தை பரிசோதிப்பது, பள்ளி வாரியாக சப்ளை செய்வது உள்ளிட்ட பணியை பள்ளிக்கல்வித்துறை செய்ததால், விலையில்லா பொருட்களில் தரமற்றவை சப்ளை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனால், பள்ளிக்கல்வித்துறையிடம் இருந்து, பாடநூல் சப்ளை, தமிழ்நாடு பாடநூல் கழகத்திடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டது.அதற்காக, கடந்த, 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம், தமிழ்நாடு பாடநூல் கழகம் என்ற பெயரை மாற்றி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணி கழகம் என, பெயர்மாற்றம் செய்யப்பட்டு, சீருடை தவிர மற்ற விலையில்லா பொருட்கள் கொள்முதல் செய்து, பள்ளிக்கு மாணவருக்கு சப்ளை செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்பின், புதிய நடைமுறை நடப்பு கல்வியாண்டில் தான் நடைமுறைக்கு வருகிறது. இதன்படி, பாடநூல் மற்றும் சீருடை தவிர, மற்ற விலையில்லா பொருட்கள், நடப்பாண்டுக்கு, பள்ளி வாரியாக சப்ளை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், அவற்றை மாணவர் களுக்கு பள்ளி வாரியாக வழங்க முடியாத நிலை உள்ளதால், பள்ளி திறந்து ஐந்து மாதங்களாகியும், விலையில்லா பொருட்கள் மாணவர்களுக்கு சென்றடையாத நிலையே நீடிக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக, டெண்டர்தாரரால் சப்ளை செய்யப்பட்ட பொருட்கள் தரமானதாக உள்ளதாஎன்பதை ஆய்வுசெய்யும் புதிய நடைமுறை.

கல்வி அதிகாரிகள் கூறியதாவது:

பள்ளிக்கு டெண்டர் தாரரால் அனுப்பப்படும் பொருட்களில், ?? ஆயிரம் ஒரு சேம்பிள் எடுத்து, அந்தந்த வட்டார அலுவகத்தில் (தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்) பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்களிடம் இருந்து தகுதியான தரச்சான்று பெற்ற பின்னர் தான், மாணவர்களுக்கு வழங்கப்படும்.

இந்த கூடுதல் பணிகளால், நடப்பாண்டு சப்ளை செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜூன் மாதம் பாடநூல் மற்றும் சீருடை வழங்கியது போல், மற்ற பொருட்களுக்கும் டெண்டர் விடப்பட்டிருந்தால், முன்கூட்டியே சப்ளை செய்திருக்கலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தேசிய திறனாய்வு தேர்வு : 1.47 லட்சம் பேர் பங்கேற்பு.

Posted: 01 Nov 2014 06:17 PM PDT


பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு, இன்று, மாநிலம் முழுவதும், 350 மையங்களில் நடக்கிறது. 1.47 லட்சம் மாணவ, மாணவியர், தேர்வை எழுதுகின்றனர்.
மத்திய அரசு, நாடு முழுவதும், 10ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு, போட்டித் தேர்வை நடத்தி, தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு, பிளஸ் 1 முதல், பிஎச்.டி., வரை, கல்வி உதவித் தொகை வழங்குகிறது. இரண்டு கட்டங்களாக, தேர்வு நடத்தப்படுகிறது. முதல் கட்ட தேர்வு, இன்று நடக்கிறது.

மத்திய அரசின் ஏஜன்சியாக, தமிழக அரசு தேர்வுத்துறை நடத்தும் இத்தேர்வில், 1 லட்சத்து 47 ஆயிரம் மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர்.காலை, 9:30 மணி முதல், 11:00 மணி வரை, திறனறிதல் தேர்வும், 11:30மணி முதல், பகல், 1:00 மணி வரை, படிப்புத் திறன் தேர்வும் நடக்கிறது. ஒவ்வொரு தேர்வும், தலா, 90 கேள்விகள், தலா, ஒரு மதிப்பெண் வீதம், 90 மதிப்பெண்களுக்கு, 'அப்ஜக்டிவ்' முறையில், கேள்வி - பதில்கள் தரப்பட்டு, சரியான விடையை தேர்வு செய்யும் முறையில், தேர்வு நடத்தப்படுகிறது.

162 காலி பணியிடங்களுக்கு சிவில் நீதிபதிக்கான தேர்வு தொடங்கியது.

Posted: 01 Nov 2014 06:05 PM PDT


டிஎன்பிஎஸ்சி தமிழக சிவில் நீதிமன்றங்களில் காலியாக உள்ள 162 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி வெளியிட்டது. இத்தேர்வுக்கு சுமார் 9,439 வக்கீல்கள் விண்ணப்பித்திருந்தனர்.
இத்தேர்வுக்கான எழுத்து தேர்வு நவம்பர் 1, நவம்பர் 2ம் தேதி நடைபெறும் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் 35 மையங்களில் இத்தேர்வுதொடங்கியது. சென்னையில் 9 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் வக்கீல்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை டி.என். பி.எஸ்.சி.தலைவர்(பொறுப்பு) பாலசுப்பிரமணியன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.பின்னர், பாலசுப்பிரமணியன் அளித்த பேட்டியில் சென்னையில் ஐகோர்ட் நீதிபதிகள் 'திடீர்' ஆய்வு மேற்கொண்டனர். இத்தேர்வில் வெற்றி பெறுவோர் அடுத்த கட்டமாக நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதில், வெற்றி பெறுபவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். இப்பணிகள் அனைத்தும் 2 மாதத்துக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் ' என்றார்.

கல்வித்துறைக்கு எதிரான நிலுவையில் 2,000 வழக்குகள்

Posted: 01 Nov 2014 05:42 PM PDT


பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி துறைக்கு எதிராக, வழக்குகள்அதிகரித்து வருகின்றன. ஓய்வு பெற்ற ஆசிரியர் மற்றும் பணியில் உள்ள ஆசிரியர்களால், 2,000த்திற்கும் மேற்பட்ட வழக்குகள், நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.
அரசு ஊழியர், 12 லட்சம் பேரில், 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர், கல்வித்துறையில் பணி புரிகின்றனர். பெரிய துறையாக, பள்ளி கல்வித்துறை இருப்பதாலோ என்னவோ, வழக்குகளுக்கும் பஞ்சம் கிடையாது.

வழக்குகள் எண்ணிக்கை :

பதவி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்ட பணிகளைக் கூட, மாவட்ட கல்வி அதிகாரிகள், சரியாக செய்வதில்லை என, ஆசிரியர் சங்க நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர்.இதன் காரணமாக, நாளுக்கு, நாள், கல்வித்துறைக்கு எதிராக வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை வழங்கும் தீர்ப்புகளை, உடனுக்குடன் அமல்படுத்தவும், கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.இதனால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அதிகாரிகள் ஆஜராகி, நீதிபதிகளின் கேள்விகணைகளுக்கும் ஆளாகி வருகின்றனர்.கடந்த, 27ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர், சபிதா ஆஜரானார். ஆசிரியர்களுக்கு, சிறப்பு நிலை அந்தஸ்து வழங்குவது தொடர்பாக, சென்னைஉயர் நீதிமன்றம், ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது. இதை அமல்படுத்த நடவடிக்கை எடுக்காததால், சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தனர்.இதில், நீதிபதிகள், பல்வேறு கேள்விகளை எழுப்பியதால், செயலர் சபிதா, நெளிய வேண்டிய நிலை ஏற்பட்டது.தற்போதையநிலவரப்படி, அரசாணை எண், 216 தொடர்பான வழக்குகள் (ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு, தேர்வு நிலை, சிறப்பு நிலைக்கான பணப்பலன் வழங்குவது) மற்றும் இதர வழக்குகள் என, 2,000த்திற்கும் அதிகமானவழக்குகள், நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலர், ரைமாண்ட் பேட்ரிக் கூறியதாவது:

*.எந்த ஒரு வழக்காக இருந்தாலும், கடைசி பிரதிவாதியாக, மாவட்ட அளவில் உள்ள ஒரு அதிகாரி தான் இருப்பார். பெரும்பாலும், பதவிஉயர்வு, ஊக்க ஊதியம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளால், வழக்குகள் வருகின்றன.

*.இந்த பிரச்னைகள் வராத அளவிற்கு, மாவட்ட அளவில் உள்ள அதிகாரிகள் செயல்படுவதில்லை. மேலும், வழக்கில், பதில் மனு தயாரிக்கும் பணி, மாவட்ட அதிகாரியிடமே தரப்படுகிறது.திணறுகின்றனர் எவ்வித சட்ட அறிவும், அனுபவமும் இல்லாத மாவட்ட அதிகாரிகள், பதில் மனுவை தாக்கல் செய்ய திணறுகின்றனர்.

*.யாரையாவது பிடித்து, பல ஆயிரம் ரூபாயை, எப்படியோ செலவழித்து, பதில் மனுவை தாக்கல் செய்கின்றனர். இதிலும், பல ஓட்டைகள் இருக்கும். வழக்குகளின் நிலையை, தொடர்ந்து கண்காணிக்கவும், ஆள் கிடையாது. இதனால், அவ்வளவு எளிதில், வழக்கு முடிவுக்கு வருவதில்லை. இறுதியில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடும் அளவிற்கு, நிலைமை முற்றுகிறது. அப்போது தான், விஷயம், உயர் அதிகாரிகள் வரை செல்கிறது.

*.ஒவ்வொரு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலகங்களில், ஒருசட்ட அலுவலரை நியமிக்க வேண்டும். அவர், கல்வித்துறையை அறிந்தவராகவும் இருக்க வேண்டும். இப்படி செய்தால், ஓரளவு, வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க பொதுச்செயலர்,சாமி சத்தியமூர்த்தி கூறியதாவது:உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள், ஒரு முடிவை எடுக்கும் முன், விரிவாக விவாதிப்பது இல்லை.எடுத்தோம், கவிழ்த்தோம் என, முடிவை எடுப்பதும், பின் மாற்றுவதையும்,வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் தான், வழக்குகள் குவிந்துகொண்டே இருக்கின்றன.இவ்வாறு, சாமி கூறினார்.

சட்ட அலுவலர் நியமனம் இழுபறி:

பள்ளி கல்வித்துறையில், நாகராஜன் என்பவர், சட்ட அலுவலராக பணியாற்றி வருகிறார். வழக்குகளை உடனுக்குடன் முடிப்பதற்கு வசதியாக, மேலும், இரு சட்ட அலுவலர்கள் நியமனம் செய்யப்படுவர் என, சட்டசபையில் அறிவித்து, ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிறது. இதுவரை நியமனம் செய்யவில்லை.நாகராஜன் கூறுகையில், ''ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு,ஒரு சட்ட அலுவலரும், உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்குகளை கவனிக்க, ஒரு சட்ட அலுவலரும் நியமனம் செய்யப்படுவர் என, தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை, நியமனம் நடக்கவில்லை,'' என்றார்.

எப்போது வெளிவரும் VAO தேர்வு முடிவுகள்: தேர்வர்கள் அதிருப்தி.

Posted: 01 Nov 2014 05:37 PM PDT


கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிந்து 4 மாதங்களுக்கு மேலாகியும்இதுவரை தேர்வு முடிவு வெளியிடப்படாததால் தேர்வர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்பட்டது.
காலியாக இருந்த 2,342 காலிப்பணியிடங்களுக்கு மாநிலம் முழுவதிலிருந்தும் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வை எழுதினர். தேர்வு எழுதிய ஒருசில நாள்களிலேயே கீ ஆன்சர் எனப்படும் மாதிரி விடைத்தாளையும் தேர்வாணையம் வெளியிட்டது. தேர்வு முடிவுகள் 3 மாதங்களில் வெளியாகிவிடும் என தேர்வாணையம் அறிவித்திருந்தது. ஆனால், தேர்வு முடிந்து 4 மாதங்கள் ஆகியும் இதுவரை தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுவதால் தேர்வெழுதியவர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். இதுகுறித்து, தேர்வெழுதியவர்கள் கூறியதாவது: தேர்வாணையம் வெளியிட்ட மாதிரி விடைகளை வைத்து பார்க்கும்போது எங்களுக்கு நிச்சயம் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, தேர்வு முடிவுக்காக காத்திருக்கிறோம். தேர்வு முடிந்த 3 மாதத்தில் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 4 மாதங்களாகியும் தேர்வு முடிவு வெளியாகவில்லை. கட்டாயம் தேர்ச்சி பெற்று வேலை வாங்கி விடலாம் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளவர்கள் வேறு பணிக்கு செல்லாமல் தேர்வு முடிக்காக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், அடுத்தபடியாக குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பும் வெளியாகிவிட்டது. கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் வெற்றி பெற்று விட்டால் மீண்டும் குரூப்-4 தேர்வை எழுத வேண்டி இருக்காது. குறைந்தபட்சம் குரூப்-4 தேர்வுக்கு முன்பாவது கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவுகளை வெளியிட அரசுப் பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் அல்லது முன்கூட்டியே கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவு வெளியானால் பயிற்சி மையத்திலாவது சேர்ந்து குரூப்-4 தேர்வுக்கு தயார் ஆகலாம் என்றனர்.

ஏடிஎம்களில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்வசூல் : புதிய நடைமுறை அமல்

Posted: 01 Nov 2014 05:34 PM PDT


ஏடிஎம் மையங்களில் மாதம் ஒன்றுக்கு 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால்ஒவ்வொரு முறைக்கும் ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும் திட்டம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது.
வங்கி வாடிக்கையாளர் ஒருவர் தான் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏடிஎம்களில் பணம் எடுக்கும் நடைமுறைக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுபாட்டை விதித்ததுள்ளது. அதன்படி, ஒருவர் கணக்கு வைத்துள்ள வங்கி ஏடிஎம் மையங்களில் மாதம் ஒன்றுக்கு 5 முறை மட்டுமே பணம் எடுக்கவோ, இருப்பு எவ்வளவு இருக்கிறது என்பதை பார்க்கவோ அல்லது மினி ஸ்டேட்மென்ட் எடுக்கவோ முடியும். இதற்கு கட்டணம் இல்லை.

ஐந்து முறைக்கு மேல் பணம் எடுக்கவோ அல்லது இருப்பு உள்ளிட்ட விவரங்களை அறியவோ ஏடிஎம்மை பயன்படுத்தினால் அதற்கு கட்டணம் வசூலிக்கப்படும். அதன்படி ஒவ்வொரு முறைக்கும் ரூ.20 வசூலிக்கப்படும். மேலும், பிற வங்கிகளின் ஏடிஎம்களில் 3 முறை மட்டுமே கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கலாம். இது ஏற்கனவே 5 முறை இருந்தது. இந்த நடைமுறை சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களுரூ, ஐதாரபாத் ஆகிய 6 நகரங்களில்நேற்று முதல் செயல்பாட்டிற்கு வந்தது. இதற்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி ஏற்கனவே வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை தவிர தமிழகத்தின் பிற இடங்களில் பூஜ்யம் இருப்பு வைக்க அனுமதியுள்ள எஸ்பி கணக்கு வைத்துள்ளவர்களுக்கு தற்போதுள்ள நடைமுறையே தொடரும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தகுதியான ஆசிரியர்களை உருவாக்க ரூ.300 கோடி : யு.ஜி.சி., துணை தலைவர் தேவராஜ் தகவல்

Posted: 01 Nov 2014 05:32 PM PDT


'பல்கலைகளுக்கு தகுதியான ஆசிரியர்களை அளிக்க, முதற்கட்டமாக, 1,000ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி அளிக்கப்படுகிறது; இதற்கு, 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது' என, பல்கலைக்கழக மானியக் குழு என்ற யு.ஜி.சி.,யின் துணைத் தலைவர் தேவராஜ் தெரிவித்தார்.

சென்னை பல்கலை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த தேவராஜ் கூறியதாவது:
41 நிகர்நிலை பல்கலைகள் பிரச்னை குறித்து? நாடு முழுவதும், 41நிகர்நிலை பல் கலைகள் மீண்டும் ஆய்வு செய்யப்படு கிறது. அப்பல்கலைகளில், தகுதியான ஆசிரியர்கள் இல்லை என்பது தான் பிரச்னை. இதற்காக தான், தகுதிவாய்ந்த ஆசிரியர்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.தகுதியான ஆசிரியர்களை உருவாக்கும் புதிய திட்டம் என்ன?ஆசிரியர்கள் தகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 12வது ஐந்தாண்டுதிட்டத்தில், 1,000 தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய, ஆந்திரமாநிலம், காக்கி நாடாவில், பல்கலை ஆசிரியர் கல்வி மையம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதற்கு, முதற்கட்டமாக, 300 கோடி ரூபாய்ஒதுக்கப்பட்டு உள்ளது. இதுதவிர, மனிதவள மேம்பாட்டுத் துறை, 5,000 ஆசிரியர்களை உருவாக்குகிறது. பல்கலைகள், யு.ஜி.சி.,யிடம்ஒப்பந்தம் செய்து கொண்டு, ஆசிரியர்களை கேட்டால், நாங்கள் அளிப்போம்.அவர்களுக்கான சம்பளம் முழுவதையும்,யு.ஜி.சி.,யே அளிக்கும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

கல்வி மையங்கள் மூடப்படும்!

பல்கலைகள் தொலைதூரக் கல்வி பெயரில், ஆங்காங்கே அமைக்கும் கல்வி மையங்களுக்கு, யு.ஜி.சி., கடிவாளம் போட்டுள்ளது.

இதுகுறித்து, அதன் துணைத் தலைவர் தேவராஜ் கூறியதாவது: மாநில அரசின் சட்ட அடிப்படையில், தொலைதூரக் கல்வி நிறுவனங்கள், மாநிலத்திற்குள் மட்டுமே செயல்பட முடியும். பார்லி., அனுமதி பெற்றிருந்தால், நாடு முழுவதும் கல்வி மையங்கள் அமைக்கலாம்.நிகர்நிலை பல்கலைகள், தொலைதூரக் கல்வி மையங்களை துவக்க முடியாது. அனுமதியின்றி துவக்கினால், நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களும் குறிப்பிட்ட பகுதிக்குள் மட்டுமே செயல்பட முடியும். கல்வி மையங்கள்பெயரில் தப்பு நடப்பதை, தடுத்து நிறுத்தி, அவற்றை மூட வேண்டும். நாங்கள், தொலைதூரக் கல்விக்கு எதிரானவர்கள் இல்லை. ஆன் - லைன் படிப்புகளை, அதிகளவில் கொண்டு வர வேண்டும் என்பதே, எங்கள் முடிவு.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

TATA - ஊதிய வழக்கின் தீர்ப்பு படி இடைநிலை ஆசிரியருக்கு கிடைக்கும் ஊதிய நிர்ணய மாதிரி பட்டியல் .

Posted: 01 Nov 2014 09:48 PM PDT

TATA - ( தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ) ஊதிய வழக்கின் தீர்ப்பு படி இடைநிலை ஆசிரியரின் '' டிப்ளமோ '' கல்வி தகுதிக்கு ஏற்ப ஊதியம் 9300 + 4200 என 1.1.2006 முதல் மாற்றம் செய்யப்பட்டால் 2009 ல் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியருக்கு கிடைக்கும் ஊதிய நிர்ணய மாதிரி பட்டியல்
.

No comments:

Post a Comment