வாழ்க வளமுடன் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் வாழ்க வளமுடன்!

Thursday, November 20, 2014

KALVI SAITHI-TN EDUCATIONAL FLASH NEWS




Sent from Samsung Mobile


KALVI SAITHI-TN EDUCATIONAL FLASH NEWS


ஆண்கள் தினம் இன்று

Posted: 19 Nov 2014 07:30 AM PST

ஆண்டுதோறும்நவம்பர் 19-ந் தேதி சர்வதேசஆண்கள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. பெண்கள் தினம், குழந்தைகள் தினத்தில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதுபோல, ஆண்கள் தினத்தை ஆண்கள்நலனை காக்கும் வகையில் இந்த தினம்கடைப்பிடிக்கப்படுகிறது.
உலகில் ஆண்களைக் கெளரவப்படுத்தவும்ஆண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக் குறித்தவிழிப்புணர்வு கருதியும் இது கொண்டாடப்படுகிறது. மகத்தானதியாகங்கள் பல புரிந்து வரும்ஆண்குலத்தின் பெருமையை சமுதாயம் அங்கீகரிக்க இந்த நாள் ஒருநினைவு படுத்தும் நாளாகவும் அமைகிறது.
ஆண்களுக்கென்றுஏன் ஒரு தனியான நாள்கொண்டாடப்பட வேண்டும்?" என்னும் கேள்வி இன்னும்சிலருக்கு எழுகிறது. அதை சிலர் கேலிவேறு செய்கிறார்கள் – "ஆண்களுக்கென்ன கேடு, தனியாக ஒருநாள் வேறு ஒன்று தேவையா?" – என்று!
ஏன் அப்படி? அனைத்து சிறப்புக்களும்பெண்களை முன்னிறுத்தித்தான் செய்யப்பட வேண்டும் என்னும் மனப்போக்கு மக்கள்மனத்தில் ஆழப் பதிந்து நிற்கிறது. ஆணுக்கும் பிரச்னைகள் உண்டு, அவனுக்கும் தீமைகள்இழைக்கப் படுகின்றன என்பதை நம் சமூகம்அங்கீகரிக்கவே ஒரு போராட்டம் நடத்தவேண்டியகட்டாயம் ஏற்பட்டுள்ளது!
இந்தஆண்கள் தினத்தை அனுசரிக்கும் நோக்கங்களில்சில:
ஆண்கள்மற்றும் இளைஞர்களின் சுகாதார மேம்பாடு, ஆண், பெண் இருபாலரும் சம உரிமையுடன் மனமொருமித்தசெயல்பாடு போன்றவற்றை வேண்டுவது, ஆணினத்தின் வழி காட்டுதலுக்கு நேர்மையும், மனத்திண்மையும் ஒருங்கே கொண்ட முன்மதிரிகளை அடையாளம் காண்பது
அனைத்துத் துறைகளிலும் கடினமான செயல்பாடுகளில் தங்களைஈடுபடுத்திக் கொண்டு, பல இடர்களுக்குமத்தியில் முழுமையான அர்ப்பணிப்புடன் பணி புரிந்துவரும் ஆணினத்தின்சாதனைகளை அடையாளம் கண்டு அதற்கு நியாயமாகக்கிட்டவேண்டிய அங்கீகாரத்தை சமுதாயத்திலிருந்து பெறுதல்
வரலாறு தோன்றிய காலத்திலிருந்து ஆண்என்பவன் சமுதாயத்தின் காப்பாளனான, சமூகத்தின் அடிப்படைத்தேவைகளை தன் உழைப்பால் பூர்த்திசெய்பவனாக அறியப்படுகிறான் (the role of a protector and provider). அதுதான்ஆணின் முக்கிய கடமையாக கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆணின் இந்த மிகமுக்கிய பங்களிப்பு சமூகத்தில் எந்தவித அங்கீகாரத்தையும் பெறவில்லை. இந்த அடிப்படை மனப்பான்மையின் நீட்சியாகத்தான் தன்னை விட்டு வெளியேறியமுன்னாள் மனைவிக்கும் பராமறிப்புத்தொகை, ஜீவனாம்சம் என்ற வகைகளில், அவன்கப்பம் கட்டி அழவேண்டிய கட்டாயத்திற்குஅவனைத் தள்ளும் சட்டங்களும் தீர்ப்புக்களும்அமைகின்றன! இத்தகைய தவறான போக்கைஎதிர்த்து குரல் கொடுக்கும் நாளாகஇந்த ஆண்கள் தினம் அமைகிறது
முக்கியமாகஇன்றைய நிலையில் இந்திய ஆண்கள் எதிர்கொள்ளும்சட்டபூர்வ பயங்கரவாதத்தையும், ஆண்களை பொருளாதார ரிதியிலும்மன ரீதியாகவும் கொடுமைப் படுத்தும் போக்கையும், பல ஆணெதிர் சட்டங்களின்செயல்பாடுகளால் இந்திய ஆண்கள் தொடர்ந்துஎதிர் கொள்ளும் சித்திரவதைகளையும், ஆணினத்தையே அழிக்கச் செய்யும் ஒரு பால் சார்புநிலையையும் எதிர்த்துப் போராடுவது
இந்தியாவில்தற்போதைய கணக்குப்படி ஆண்டுக்கு 55 ஆயிரம் ஆண்கள் தற்கொலைசெய்துகொள்கிறார்கள். இவர்களில் 40 சதவீதம் பேர் பெண்களால்பாதிக்கப்பட்டுதான் உயிரை இழக்கிறார்கள். பெண்கள்ஆண்டுக்கு 28 ஆயிரம் பேர் தான்தற்கொலை செய்கிறார்கள்.
எனவே, புள்ளி விவர கணக்கை பார்த்தால், தற்போது பெண் ஆதிக்கம் தான்அதிகமாக உள்ளது என்பதை தெரிந்துகொள்ள முடியும். வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டம்பெண்களுக்கு சாதகமாக உள்ளது. அதைதவறாக பயன்படுத்தி கணவன்மார்கள் கைது செய்யப்படுகிறார்கள்.

கணவர்கள் மட்டுமல்ல, அவர்களின் தாய், தந்தையும், சகோதரிகளும்கூட கைதாகிறார்கள். வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தில்தவறு செய்யும் பெண்கள் மீதும் நடவடிக்கைஎடுக்க வேண்டும்.இதேபோல, பெண்கள் வன்கொடுமைதடுப்பு சட்டமும் ஆண்களுக்கு எதிராக தவறாக பயன்படுத்தப்படுகிறது. கணவர்கள் முறைத்து பார்த்தால்கூட உடனே புகார் கொடுத்துவிடுகிறார்கள். இந்த சட்டங்களால் அமைச்சராக இருந்த ஒருவரும் பாதிக்கப்பட்டார். எம்.பி. ஒருவரும், நீதிபதிஒருவரும்கூட பாதிக்கப்பட்டதை செய்திகளாக பார்த்துள்ளோம்.
எனவேவரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தையும், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தையும் தவறாகபயன்படுத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி வரும்அமைப்பினர் அதிகமாகி வருகிறார்கள்


விடுப்பு தொடர்பான பிற விதிகள்

Posted: 18 Nov 2014 10:22 PM PST

விடுப்பு தொடர்பான பிற விதிகள்



TNPSC-IV-பொதுத் தமிழ் - 1

Posted: 19 Nov 2014 03:45 AM PST

திருவருட்பா
கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்என்
எண்ணில் கலந்தே இருக்கின்றான் - பண்ணில்
கலந்தான்என் பாட்டில் கலந்தான் உயிரில்
கலந்தான் கருணை கலந்து


* திருவருட்பாவை எழுதியவர் - இராமலிங்க அடிகளார்
* சிறப்பு பெயர் -  திருவருட்பிரகாச வள்ளலார்
* பிறப்பிடம் - கடலூர் மாவட்டம் மருதூரில் பிறந்தவர்.
* பெற்றோர் -  இராமையா - சின்னமையார்
* வாழ்ந்த காலம்: 05.10.1823 - 30.01.1874
* எழுதிய நூல்கள்: ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறைகண்ட வாசகம்.
* பசித்துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க இராமலிங்க அடிகளார் அமைத்தது - அறச்சாலை
* அறிவு நெறி விளங்க வள்ளலார் நிறுவியது - ஞானசபை
* சமர சன்மார்க்க நெறிகளை வழங்கியவர் - இராமலிங்க அடிகளார்.
* இராமலிங்க அடிகளார் பாடிய பாடலின் தொகுப்பிற்கு பெயர் - திருவருட்பா.
* வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய மனம் கொண்டவர் - இராமலிங்க அடிகளார்
*  வள்ளலார் பாட்டை "மருட்பா" என்று கூறியவர் - ஆறுமுக நாவலர்.
*  கடவுளை "கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்", என்றும் "உயிரில் கலந்தான் கருணை கலந்து" என்றும் பாடியவர் - இராமலிங்க அடிகளார்.
*  நூல்கள்: ஜீவகாரூன்ய ஓழுக்கம், மனுமுறை கண்ட வாசகம்.
*  வள்ளலாரின் பாடல்கள் அனைத்தும் திருவருட்பா என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.

* சிறப்பு: சமரச சன்மார்க்க நெறியை வழங்கினார்.
*  மத நல்லிணக்கத்திற்கு சன்மார்க்க சங்கத்தையும், உணவளிக்க அறச்சாலை, அறவுநெறி விளங்க ஞான சபையையும் நிறுவினார்.
* வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய  கருணை மனம் இவருடையது.
*  கருணை நிறைந்த இறைவன் என் கண்ணில், சிந்தனையில், எண்ணத்தில், பாட்டில், பாட்டின்  இசையில், என் உயிரில் கலந்து இருக்கிறான்.

அறிவுரைப் பகுதி: திருக்குறள்: அன்புடைமை
சொற்பொருள்:
ஆர்வலர் - அன்புடையவர்
புன்கணீர் - துன்பம் கண்டு பெருகும் கண்ணீர்
என்பு - எலும்பு. இங்கு உடல், பொருள், ஆவியைக் குறிக்கிறது.
வழக்கு - வாழ்க்கை நெறி
நண்பு - நட்பு
மறம் - வீரம், கருணை (வீரம் இரண்டிற்குமே
அன்புதான் அடிப்படை என்பது பொருள்)
அன்பிலது - அன்பில்லாத உயிர்கள்
என்பிலது - எலும்பில்லாதது(புழு)
பூசல் தரும் - வெளிப்பட்டு நிற்கும்
ஆருயிர் - அருமையான உயிர்
ஈனும் - தரும்
ஆர்வம் - விருப்பம் (வெறுப்பை நீக்கி விருப்பத்தை
உண்டாக்கும் என்று பொருள்)
வையகம் - உலகம்
என்ப - என்பார்கள்
புறத்துறுப்பு - உடல் உறுப்புகள்
எவன் செய்யும் - என்ன பயன்?
அகத்துறுப்பு - மனத்தின் உறுப்பு, அன்பு

பிரித்து எழுதுக:
அன்பகத்தில்லா = அன்பு + அகத்து + இல்லா -
அன்பு உள்ளத்தில் இல்லாத
வன்பாற்கண் = வன்பால் + கண் - பாலை நிலத்தில்
தளிர்த்தற்று - தளிர்த்து + அற்று - தளிர்த்ததுபோல
வற்றல்மரம் - வாடிய மரம்

*  இவரின் காலம் கி.மு. 31 என்று கூறுவர்.
*  இதனை தொடக்கமாக கொண்டே திருவள்ளுவர் ஆண்டு கண்க்கிடப்படுகிறது.
*  சிறப்பு பெயர்: தெய்வப்புலவர், நாயனார், செந்நாப்போதர்
*  இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என மூன்று பெரும் பிரிவுகளை உடையது.
* அதிகாரங்கள்: 133
* அதிகாரத்திற்கு 10 குறட்பாக்கள் வீதம் 1330 குறட்பாக்கள் உள்ளன.
* இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
*  திருக்குறளின் வேறு பெயர்கள்: உலக பொதுமறை, முப்பால், தமிழ்மறை. உலகப் பொதுமறை எனப் போற்றப்படுகிறது.
* திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை: கிறித்து ஆண்டு (கி.பி) + 31 = திருவள்ளுவர் ஆண்டு.
எடுத்துக்காட்டு: 2013 + 31 = 2044. கி.பி.2013ஐத் திருவள்ளுவர் ஆண்டு 2044 என்று கூறுவோம்.

உரைநடை: தமிழ்த்தாத்தா உ.வே.சா.
*  உ.வே.சா ஓலைசுவடி வேண்டி ஒருவரிடம் உரையாடிய நிகழ்ச்சி நடைபெற்ற இடம் ஈரோடு மாவட்டம் கொடுமுடி.
*  ஊர் - திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுறம்
*  இயற்பெயர் - வேங்கடரத்தினம்
*  ஆசிரியர் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை.
*  அவரின் ஆசிரியர் வைத்த பெயர் - சாமிநாதன்
*  உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகனான  சாமிநாதன் என்பதன் சுருக்கமே உ.வே.சா
*  இவரின் தந்தை - வேங்கடசுப்பையா
*  காலம் - 19.02.1855 முதல் 28.04.1942
*  1942 இல் உ..வே.சா நூல்நிலையம் சென்னை பெசன்ட் நகரில் துவங்கப்பட்டது.
*  உ.வே.சா நினைவு இல்லம் உத்தமதானபுரத்தில் உள்ளது.
*  உ.வே.சா அவர்களின் தமிழ்ப் பணிகள் வெளிநாட்டு அறிஞர்களான ஜி.யு.போப், சூலியல் வின்சோன் ஆகியோர் பெரிதும் பாராட்டியுள்ளனர்.
*  இந்திய அரசு 2006 ஆம் ஆண்டு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
*  பனை ஓலையைப் பக்குவப்படுத்தி, அதில் எழுத்தானி கொண்டு எழுவர். அவ்வாறு எழுத்தப்பட்ட ஓலைக்கு ஓலைச்சுவடி என்று பெயர்.
*  ஓலை கிழியாமல் எழுதுவதற்காக ஓலைச்சுவடி எழுத்துகளில் புள்ளி இருக்காது;  ஒற்றைக்கொம்பு, இரட்டைகொம்பு வேறுபாடு இருக்காது.
*  ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படும் சில இடங்கள்: 1. கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், சென்னை. 2. அரசு ஆவணக் காப்பகம், சென்னை. 3. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை 4. சரசுவதி நூலகம், தஞ்சாவூர்.
*  குறிஞ்சிப்பாட்டு - பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று; இதன் ஆசிரியர் கபிலர்.
*  தம் வாழ்க்கை வரலாற்றை ஆனந்தவிகடன் இதழில் தொடராக எழுதினார். அஃது என் சரிதம் என்னும் பெயரில் நூலாக வெளிவந்தது.
*  ஓலைச்சுவடிகளைத் தேடி வந்த பெரியவர் - உ.வே.சா
*  உ.வே.சா. தம் வாழ்நாள் முழுவதும் ஓய்வில்லாமல் பதிப்பு பணியை மேற்கொண்டார்.
*  உ.வே.சா. அவர்களை நாம் தமிழ்த்தாத்தா என அன்போடும் உரிமையோடும் அழைக்கின்றோம்.
*  ஓலைச்சுவடிகளை ஆடிப்பெருக்கு விடியற்காலையில் ஆற்றில் விட்டனர்.
*  குறிஞ்சிப்பாட்டில் இடம்பெற்றுள்ள பூக்களின் எண்ணிக்கை - தொண்ணூற்று ஒன்பது
*  உ.வே.சா பதிப்பித்த நூல்கள்:
எட்டுத்தொகை - 8
பத்துப்பாட்டு - 10
சீவகசிந்தாமணி - 1
சிலப்பதிகாரம் - 1
மணிமேகலை - 1
புராணங்கள் - 12
உலா - 9
கோவை - 6
தூது - 6
வெண்பா நூல்கள் - 13
அந்தாதி - 3
பரணி - 2
மும்மணிக்கோவை - 2
இரட்டைமணிமாலை - 2
பிற பிரபந்தங்கள் - 4

துணைப்பாடம்: கடைசிவரை நம்பிக்கை
* கடைசிவரை நம்பிக்கை இச்சிறுகதை அரவிந்த் குப்தா எழுதிய டென் லிட்டில் பிங்கர்ஸ் என்ற தொகுப்பில் உள்ளது.
* சடகோ சகாகி, 11 வயது ஜப்பான் நாட்டுச் சிறுமி.
* ஜப்பானில் ஹிரோமிமாவிக்கு அருகில் பெற்றோருடன் வசித்து வந்தாள்.
* அணுகுண்டு வீச்சால் ஏற்பட்ட கதிர்வீசின் காரணமாக சடகோவிற்கு புற்றுநோய் பாதிப்பு * ஏற்பட்டது.
* சடகோவின் தோழி சிசுகோ, சடகோவிடம் காகிதத்தால் செய்யப்பட்ட கொக்குகள் ஆயிரம் செய்தால் நோய் குணமாகும் என்றாள். இது நம் நாட்டு நம்பிக்கை என்று கூறினாள்.
* ஜப்பானியர் வணங்கும் பறவை - கொக்கு.
* காகிதத்தால் உருவங்கள் செய்யும் ஜப்பானியர் ஒரிகாமி என்று கூறுவர்.
* 1955 அக்டோபர் 25ல் நல்ல சடகோ இறந்தாள்.
* மொத்தம் 644 காகித கொக்குகள் உருவாக்கி இருந்தாள்.
* சடகோவின் தோழிகள் கூடி மீதமுள்ள 356 காகித கொக்குகள் செய்து எண்ணிக்கையை ஆயிரம் ஆக்கினர். சடகோவின் விருப்பத்தை நிறைவு செய்தனர்.
* சடகோவிற்காக அவள் தோழிகள் பொதுமக்களிடம் நிதி திரட்டி நினைவாலயம் கட்டினர். அதனுள் சடகோவிற்கு சிலை எழுப்பினர்.
* அதன் பெயர் குழந்தைகள் அமைதி நினைவாலயம்.
* நினைவாலயத்தில் எழுதப்பட்ட வாசகம் -  உலகத்தில் அமைதி வேண்டும்! இது எங்கள் கதறல்! இது எங்கள் வேண்டுதல்!

முக்கிய செய்தி - நவ., 25, 26ல் பட்டதாரி ஆசிரியர்கள் கலந்தாய்வு

Posted: 18 Nov 2014 08:49 PM PST

மதுரையில் கள்ளர் சீரமைப்பு துறை பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி நியமன கலந்தாய்வு நவ., 25, 26ல் நடக்கிறது. இணை இயக்குனர் அமுதவல்லி தெரிவித்துள்ளதாவது:

மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் செயல்படும் இத்துறை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பும், நியமன கலந்தாய்வும் இளங்கோ மாநகராட்சி பள்ளியில் நவ., 25, 26ல் நடக்கின்றன. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்டு இவ்வலுவலகத்தால் அழைப்பு கடிதம் கிடைக்கப் பெற்றவர்கள் அசல் கல்வி சான்றுகளுடன் காலை 9 மணிக்கு கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

ஆய்வுக்கூட்டத்தில் கல்வித்துறை அமைச்சர் பங்கேற்கிறார்!!!

Posted: 18 Nov 2014 08:47 PM PST


அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான 24.11.2014 அன்று நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் கல்வித்துறை அமைச்சர் பங்கேற்கிறார்.

தினம் ஒரு திருக்குறள் .

Posted: 18 Nov 2014 08:43 PM PST

பேதைமை என்பதுஒன்று யாதெனின் ஏதம்கொண்டு
ஊதியம் போக விடல்.
பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்குக் கெடுதியானதைக் கைக்கொண்டு ஊதியமானதைக் கைவிடுதலாகும். 
 
திருக்குறள் (எண்: 831) 
அதிகாரம்: பேதைமை

உங்க வீட்டில் நீங்க ஒரே பெண் குழந்தையா? – அப்டீன்னா உங்களுக்கு கல்வி உதவித்தொகை நிச்சயம்!

Posted: 18 Nov 2014 08:37 PM PST


DELHI:- சுவாமி விவேகானந்தா ஒற்றைப் பெண் குழந்தைக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி)அறிமுகப்படுத்தியுள்ளது. சமூக அறிவியல் மற்றும் அறிவியலில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் பெண்களுக்கு இந்த உதவித்தொகை அறிவித்துள்ளது.
கல்வி கொள்கையின் முக்கிய குறிக்கோளாக பெண்கள் கல்வி மேம்பாடு விளங்குகிறது. சமூகத்தில் பெண்களுக்கு சமஉரிமை வழங்க வேண்டியது அவசியமாகும்.

அந்தவகையில் குடும்பத்தில் ஒற்றைப் பெண் குழந்தைக்கான சிறப்பு சலுகையை இந்திய அரசு வழங்கி வருகின்றது. அங்கீகாரம் பெற்ற பல்கலை, கல்லூரி, கல்வி நிறுவனங்களில் சமூக அறிவியல் மற்றும் அறிவியலில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவிகள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மாதம்தோறும் ரூபாய் 8 ஆயிரமும், மூன்று மற்றும் நான்காம் ஆண்டுகளில் ரூபாய் 10 ஆயிரம் வழங்கப்படும். சூழ்நிலை அடிப்படையில் ஐந்தாம் ஆண்டும் உதவித்தொகை நீட்டிக்கப்படும். இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பவர் குடும்பத்தில் ஒரு பெண் குழந்தையாக இருக்க வேண்டும். முழுநேர படிப்பை மேற்கொள்பவராக இருக்க வேண்டும். நவம்பர் 31 ஆம் தேதிக்குள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க கடைசி தேதியாகும். கூடுதல் தகவல்களுக்கு யுஜிசி இணையதளத்தை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thanks With Warm Regards….
By Anandan S.
Dharmapuri Dt.

பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கான சிறப்புச்செய்தி (17 / 11 / 2014):

Posted: 18 Nov 2014 08:27 PM PST


சென்னையில் இன்று (17 / 11 / 2014) தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள்சங்கத்தின் சேர்மன் திரு. சோலை M ராஜா அவர்கள் தலைமையில் சங்கத்தின்முக்கிய நிர்வாகிகள், கல்வி அமைச்சர், முதன்மைக்கல்விச் செயலாளர், SSAதிட்ட இயக்குனர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளைச் சந்தித்து பகுதிநேரசிறப்பாசிரியர்களின் நிலை குறித்து கலந்துரையாடினர்.
இதில், மாநில அமைப்பாளர் திரு. கு.சேசுராஜா, மாநிலத் துணை அமைப்பாளர்திரு.ஆனந்தராஜ், மாநிலத் தலைவர் திரு.ஜெயச்சந்திர பூபதி, மாநில செயலாளர்திரு. D.ராஜா தேவகாந்த் மற்றும் மாநில பொருளாளர் திரு.ஜான்சன் ஆகியோர்இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.இச்சந்திப்பில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் முக்கிய நிர்வாகிகள்60க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.கலந்துரையாடலில் நமது முக்கிய கோரிக்கைகள் அனைத்தும் முன்வைக்கப்பட்டன.

இக்கலந்துரையாடலின் முடிவுகள் :

1. மத்திய அரசிடமிருந்து நிதியானது ஒருபகுதி மட்டுமே வந்துள்ளது.முழுத்தொகையும் வந்தவுடன் ஊதிய உயர்வு வழங்கப்படும். ஊதிய உயர்வு ரூ.2000 /- விரைவில் வழங்கப்படும். நிலுவைத்தொகையானது ஏப்ரல் 2014 முதல்கணக்கிட்டு வழங்கப்படும்.

2. மாற்றுப்பணிக்கு, முதன்மைக்கல்வி அலுவலர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடுசெய்து, அதன்பின் அறிவிப்பு வெளியிடப்படும்.

3. அதனைத் தொடர்ந்து ஊதியம் முழுமையாக ECS முறையில் வழங்குவதற்கு ஏற்பாடுசெய்யப்படும்.

4.பணிநிரந்தரம் குறித்து மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்து முடிவுசெய்யப்படும்.என்று தெரிவிக்கப்பட்டது.

* * * முக்கிய இணைப்பு ***

இறுதியாக மாண்புமிகு கல்வி அமைச்சர் திரு. கே.சி. வீரமணி அவர்கள் நாளைஅல்லது நாளை மறுநாள் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி ஒன்றுவந்து சேரும். செய்தித்தாளைப் பாருங்கள். நான் கையெழுத்திட்டு விட்டேன்என்று தெரிவித்தார்.

by
பொன். சங்கர்

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு எழுதுவோர் கவனத்துக்கு

Posted: 18 Nov 2014 05:27 PM PST


முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வுக்கான பூர்த்தி செய்தவிண்ணப்பங்களை, நேரில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் 1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான எழுத்து தேர்வை, வரும் ஜன., 10ம் தேதி நடத்துகிறது. இம்மாதம் 10ம் தேதி முதல் இதற்கான விண்ணப்பம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், மையம் அமைத்து 50 ரூபாய் விலையில் விற்கப்படுகிறது.திருப்பூர் முதன்மை கல்வி அலுவலக மையத்தில், இதுவரை2,973 விண்ணப்பங்கள் விற்றுள்ளன. முதல் கட்டமாக வந்த 1,600 விண்ணப்பங்கள் விற்று தீர்ந்த நிலையில், இரண்டாம் கட்டமாக 2,400 விண்ணப்பங்கள் வரவழைக்கப்பட்டன.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் இருப்பில் உள்ளதால், வரும் 26ம் தேதி வரை, ஆசிரியர் பணிக்கான எழுத்து தேர்வு எழுத விரும்புவோர், விண்ணப்பம் பூர்த்தி செய்து அளிக்கலாம்.பூர்த்தி செய்த விண்ணப்பத்தை தபாலில் அனுப்பக்கூடாது; வாங்கிய மையத்திலேயே, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்குமாறும், அதற்கான ஒப்புகை சீட்டை பெற்றுக் கொள்ளுமாறும், விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நேற்று வரை, மொத்தம் 293 பேர் விண்ணப்பங்களை இம்மையத்தில் அளித்துள்ளனர். வரும் 26ம் தேதி மாலை5.00 மணி வரை, இங்கு விண்ணப்பம் பெறப்படும்.அனைத்து விண்ணப்பங்களையும் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்பிய பின், அடுத்த மாத இறுதியிலோ அல்லது ஜன., முதல் வாரத்திலோ, எழுத்து தேர்வுக்கான ஹால் டிக்கெட் குறித்த அறிவிப்பு வெளியாகும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

"நெட்' தேர்வு முடிவு வெளியீடு

Posted: 18 Nov 2014 05:09 PM PST

பல்கலைக்கழக, கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதித் தேர்வான "நெட்' தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கு முதுநிலை பட்டப் படிப்பை முடித்து, ஆராய்ச்சிப் படிப்பை (பி.எச்.டி.) முடித்திருக்க வேண்டும். அல்லது முதுநிலை பட்டப் படிப்பை முடித்து தேசிய அளவில் நடத்தப்படும் "நெட்' தகுதித் தேர்வு அல்லது மாநில அளவில் நடத்தப்படும் "செட்' தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

இதில் "நெட்' தேர்வு ஆண்டுக்கு இரு முறை ஜூன், டிசம்பர் மாதங்களில் நடத்தப்படுகிறது. இதுவரை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நடத்தி வந்த இந்தத் தேர்வை, இப்போது 2014 டிசம்பர் மாதம் முதல் சி.பி.எஸ்.சி. (மத்திய இடநிலை கல்வி வாரியம்) நடத்துகிறது. இந்த நிலையில், 2014 ஜூன் மாதம் நடத்தப்பட்ட "நெட்' தேர்வுக்கான முடிவுகளை யுஜிசி இப்போது வெளியிட்டுள்ளது. இந்த முடிவுகள் www.ugcnetonline.in என்ற இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன.

அனைவருக்கும் கல்வித் திட்டம்: 1- 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நிகழாண்டில் முக்கியத்துவம்

Posted: 18 Nov 2014 05:07 PM PST

ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கல்விக்கு நிகழாண்டு முக்கியத்துவம் வழங்க அனைவருக்கும் கல்வித் திட்ட மாநில இயக்ககம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், மாணவர்களுக்கு மிகக் குறைந்த வயதிலேயே மொழியறிவு, கணித அறிவு போன்றவற்றில் புரிதலை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதுதொடர்பாக அந்த வட்டாரங்கள் கூறியது:

கணிதம், ஆங்கிலம், தமிழ், அறிவியல் பாடங்களில் மேல் வகுப்புகளுக்கு உதவும் வகையில், பல்வேறு புதிய பிரிவுகளைக் கொண்ட செயல் வழிக் கற்றல் அட்டைகள் நிகழாண்டில் வழங்கப்பட உள்ளன. ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு புதிய முறையில் வகுப்புகளை எடுப்பது தொடர்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளன.

இப்போது தமிழ் பாடத்தில் பயிற்சிகள் நிறைவடைந்துள்ளன. ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடங்களில் விரைவில் பயிற்சிகள் வழங்கப்படும். இந்தப் பயிற்சிகளின் மூலம் 5, 6-ஆம் வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களின் கற்றல் திறன் மேம்படுத்தப்படும்.

கணக்கெடுப்பு: அனைவருக்கும் கல்வித் திட்டம் சார்பில், பள்ளி செல்லாக் குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு இப்போது நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகளின்படி, தமிழகம் முழுவதும் 44 ஆயிரம் குழந்தைகள் பள்ளிகளுக்குச் செல்லவில்லை. இப்போதைய கணக்கெடுப்பில், புதிதாக மாணவர்கள் பள்ளிகளிலிருந்து இடையிலேயே நின்றிருந்தால், அவர்கள் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்படுவர். வெளி மாநிலத் தொழிலாளர்களின் குழந்தைகள் குறித்து வரும் ஏப்ரல் மாதத்தில் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்தக் குழந்தைகளுக்காக, அவரவர் தாய்மொழியில் சிறப்பு மையங்கள் நடைபெற்று வருகின்றன.

ரூ.2 ஆயிரம் கோடி: அனைவருக்கும் கல்வித் திட்டம் சார்பில் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களுக்காக நிகழாண்டு மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த ஒதுக்கீடு கடந்த ஆண்டை விட அதிகம் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன

சித்தா உள்பட இந்திய மருத்துவப் படிப்புகளில் கூடுதல் இடங்களுக்கு நவம்பர் 21-ல் கலந்தாய்வு

Posted: 18 Nov 2014 05:07 PM PST

சித்தா, யுனானி உள்பட இந்திய மருத்துவப் படிப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கும், கூடுதல் இடங்களுக்குமான கலந்தாய்வு வரும் 21-ஆம் தேதி நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய மருத்துவம்-ஹோமியோபதித் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு, கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, 5 அரசு கல்லூரிகளில், 13 காலியிடங்களும், 20 சுய நிதிக் கல்லூரிகளில் 132 காலியிடங்களும் உள்ளன. சென்னை அரசு யோகா-இயற்கை மருத்துவக் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டில் கூடுதலாக 10 இடங்கள் உயர்த்தப்பட்டு அரசு உத்தரவு பெறப்பட்டுள்ளது.

எனவே அதனையும் சேர்த்து மொத்தம் 155 இடங்களுக்கு கலந்தாய்வு வரும் 21-ஆம் தேதி நடைபெறும்.

இதில் கலந்து கொள்ள சிலருக்குத் தகுதிகள் கிடையாது. அதன்படி, கடந்த அக்டோபரில் நடைபெற்ற கலந்தாய்வில் பங்கு கொள்ளாதவர்கள், முந்தைய கலந்தாய்விற்கு வந்து, பதிவேட்டில் கையெழுத்துப் போட்டு விருப்பப் படிவம் சமர்ப்பிக்காதவர்கள், தனது சுற்றின்போது அரசு கல்லூரிகளில் இடமிருந்தும் அதனைத் தேர்வு செய்யாமல் தனது சொந்த விருப்பத்தின் பேரில் அதனை எழுத்தால் தெரிவித்து தனியார் சுயநிதி ஆயுஷ் மருத்துவ கல்லூரியினைத் தேர்வு செய்து இட ஒதுக்கீட்டு உத்தரவைப் பெற்றவர்கள் ஆகியோர் கலந்தாய்வில் பங்கேற்க முடியாது.

கலந்து கொள்ளத் தகுதியானவர்கள்: முந்தைய கலந்தாய்வில் கலந்து கொண்டு, அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்காததால் மற்ற சுயநிதிக்கல்லூரிகளைத் தேர்வு செய்யாமல் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள், தனது சுற்றின்போது இட ஒதுக்கீட்டு உத்தரவு பெற்று உரிய கல்லூரியில் இணைந்தோர் ஆகியோர் கலந்தாய்வில் பங்கேற்க தகுதியானவர்கள்.

முந்தைய கலந்தாய்வில் கலந்து கொண்டு ரூ.5,500-க்கான வரைவோலை செலுத்தி இட ஒதுக்கீட்டு உத்தரவு பெற்று கல்லூரியில் இணைந்தோர் மறுபடியும் கேட்பு வரைவோலை செலுத்த தேவையில்லை. ஆயினும், முந்தைய கலந்தாய்வில் கலந்து கொண்டு காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் இந்தக் கலந்தாய்வில் இட ஒதுக்கீட்டு உத்தரவு பெறும் போது ரூ.5,500-க்கான வரைவோலையை, ஏதேனும் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் "இயக்குநர், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை, சென்னை 106' என்ற பெயரில் நவம்பர் 11-ஆம் தேதிக்குப் பிறகு எடுத்ததாக சென்னையில் மாற்றத்தக்கதாக செலுத்த வேண்டும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கன்வாடிப் பணியாளர் நியமனத்துக்கு இடைக்காலத் தடை

Posted: 18 Nov 2014 05:07 PM PST

அங்கன்வாடிப் பணியாளர் நியமனத்துக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.

மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், எம்.புளியங்குளத்தைச் சேர்ந்த மீனலட்சுமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ராஜா இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

மனு விவரம்: தமிழகத்தில் அங்கன்வாடிப் பணியாளர்கள், உதவியாளர்களை நியமிக்க மாவட்ட வாரியாக நேர்காணல் நடைபெற்று வருகிறது.

2013 ஆகஸ்ட் 28-ஆம் தேதி வெளியான அரசாணை வழிகாட்டுதல்படி மாவட்ட ஆட்சியர்கள், திட்ட அலுவலர்கள் இதற்கான பணிகளை மேற்கொள்கின்றனர்.

இந்த நேர்காணல் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நாளில் நடைபெறவில்லை. சில மாவட்டங்களில் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளனர். சில மாவட்டங்களில் நேர்காணல் முடிந்துள்ளது.

இந்தப் பணி நியமனம் தொடர்பாக பொது அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

குறிப்பாக, பணியாளர்கள் காலிப் பணியிடம் எண்ணிக்கை, இட ஒதுக்கீடு விவரம் ஆகியவை குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. பத்திரிகைகள் மூலம் பொது அறிவிப்பு வெளியிட்டு இருந்தால்தான் தகுதியுள்ள அனைவரும் இதில் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும்.

மேலும், அந்தந்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள்தான் இதற்குத் தகுதியுடையவர்கள் என்பதும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது. இந்தப் பணிகளுக்கு யார் யாரை நியமிக்க வேண்டும் என அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் முன்கூட்டியே நிர்ணயிப்பதாகத் தெரிகிறது.

எனவே, இட ஒதுக்கீடு முறை, காலிப் பணியிட எண்ணிக்கை போன்ற விவரங்களுடன் கூடிய பொது அறிவிப்பு வெளியிட்டு, அதன் அடிப்படையில் அங்கன்வாடிப் பணியாளர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மனு, நீதிபதி டி.ராஜா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், அரசாணை 140, 43 ஆகியவற்றின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இடஒதுக்கீடு முறைப்படியே பணியாளர்கள் நியமிக்க இந்த உத்தரவுகள் வகை செய்கின்றன.

ஒரு பணியிடத்துக்கு 10 மடங்கு வீதம் விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளதால் அரசாணை குறித்த தகவல் மக்களைச் சென்றடைந்துள்ளது என்பது உறுதியாகிறது. மேலும், பணிநியமனம் தொடர்பான அரசாணையை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்படவில்லை என்றார். இதை ஏற்க மறுத்த நீதிபதி, அங்கன்வாடிப் பணியாளர் நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்தார்.

மேலும், மனுவுக்கு சமூகநலம், சத்துணவுத் திட்டத் துறைச் செயலர், சமூகநலத் துறை ஆணையர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட ஆணையர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டார்.

சிறப்பு கவுன்சிலிங் நடத்த ஆசிரியர்கள் வலியுறுத்தல்

Posted: 18 Nov 2014 05:04 PM PST

'கல்வித் துறைக்கு மாறுதல் கேட்டு காத்திருக்கும் கள்ளர் பள்ளி ஆசிரியர்களுக்கு நவ., 25க்கு முன் சிறப்பு கவுன்சிலிங் நடத்த வேண்டும்,' என இணை இயக்குனர் அமுதவல்லியிடம் ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.

தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க கள்ளர் பிரிவு மாநில செயலாளர் அன்பழகன், மாவட்ட செயலாளர் ஸ்ரீரங்கநாதன் கூறியதாவது: மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கள்ளர் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் 109 பேர் பள்ளிக் கல்வித் துறை மாறுதல் கேட்டு ஆறு ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். கள்ளர் பிரிவில் 140 ஆசிரியர் காலிப் பணியிடங்களும் உள்ளன. தற்போது இத்துறையில் காலியான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி நியமன கவுன்சிலிங் நவ., 25, 26ல் நடக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கவுன்சிலிங் நடத்தும் முன் கல்வி துறைக்கு மாற்றம் கேட்டு சொந்த மாவட்டங்களுக்கு திரும்புதற்காக காத்திருக்கும் 109 ஆசிரியர்களுக்கு துறை மாறுதல் உத்தரவுகள் வேண்டும். நவ.,25, 26ல் நடக்கும் கவுன்சிலிங்கில் அதிக இடங்கள் காலியாக இருக்கும். இதுகுறித்து இணை இயக்குனரிடம் வலியுறுத்தினோம், என்றனர்.

பிளஸ் 2, 10ம் வகுப்பு விடைத்தாள் பக்கம் குறைப்பு: தேர்வு இயக்குனரகம் அறிவிப்பு

Posted: 18 Nov 2014 05:03 PM PST

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு விடைத்தாள்களின் பக்கங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு உள்ளது.

தேர்வு எழுதும் மாணவர்கள், நேர விரயம் மற்றும் கண்காணிப்பாளரின் கவனத்தை கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டு முதல், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விடைத்தாளை இணைத்து வழங்கப்பட்டது. எழுதாத பக்கங்களில், கிராஸ் கோடு போட அறிவுறுத்தப்பட்டது. விடைத்தாள்களில் எழுதாத பக்கங்கள் அதிகரித்ததை அடுத்து, தேர்வுத் துறைக்கு கூடுதல் செலவினம் ஏற்பட்டது. இதை தவிர்க்கும் வகையில், தற்போது ஒவ்வொரு பாடத்துக்கும் உரிய விடைத்தாள்கள், குறைத்து வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜ், பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: வரும் 2015ல், நடைபெறவுள்ள உள்ள பிளஸ் 2 மொழிப்பாடங்களுக்கு, 40 பக்கங்களுக்கு பதில், 32 பக்கங்கள் கொண்ட விடைத்தாளில், 30 பக்கங்கள் எழுதும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. விலங்கியல், தாவரவியல் பாடங்களில், 52க்கு பதில், 44; கம்ப்யூட்டர் சயின்ஸ், 40க்கு, 32; அக்கவுன்டன்சி, 54க்கு, 46; இதர பாடங்களுக்கு, 40 பக்கங்களும் வழங்கப்பட உள்ளன. இதேபோல், 10ம் வகுப்பு தேர்வில், மொழிப்பாடங்களுக்கு, 32க்கு, 24; தமிழ் இரண்டாம் தாளில் ரயில்வே முன்பதிவு, ரத்து படிவம், வங்கியில் பணம் செலுத்தும் படிவம், வங்கியில் பணம் பெறும் படிவம் ஆகிய படிவங்கள் தனித்தனியாக வழங்காமல், முதன்மை விடைத்தாளில் முதல் நான்கு பக்கங்களில் அச்சிடப்பட்டு வழங்கப்பட உள்ளது. சமூக அறிவியலில், முதன்மை விடைத்தாளில் முதல் நான்கு பக்கங்களில், இரண்டு இந்திய வரைபடங்கள், ஒரு ஐரோப்பா வரைபடம், ஒரு ஆசிய வரைபடம் அச்சிடப்பட்டு சேர்த்து வழங்கப்பட்டு உள்ளது. கணிதம், அறிவியல் பாடங்கள் பழையபடியே, 30 பக்கங்கள் வழங்கப்பட்டாலும், முதல் பக்கத்தில் கேம்ப் எண், பண்டல் எண், பாக்கெட் எண் போன்ற விவரங்களும் இடம் பெற்றிருக்கும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

போக்குவரத்துக் கழக பணிக்கு 3.32 லட்சம் பேர் விண்ணப்பம்

Posted: 18 Nov 2014 05:03 PM PST

அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுனர், நடத்துனர் போன்ற பணிகளுக்கு 3.32 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழக அரசு போக்கு வரத்துக் கழகங்களில் சமீபத்தில் பணிநியமன அறிவிப்பு வெளியிடப் பட்டது. ஓட்டுனர், நடத்துனர், இளநிலை உதவியாளர், தொழில் நுட்பவியலாளர் என பல தரப்பிலும் பணி நியமனம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. முன்பு, வேலை வாய்ப்பு அலுவலக பதிவுதாரர் பட்டியல் பெறப்பட்டு, பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் நடந்தது. இந்தமுறை, பதிவுதாரர் மட்டுமின்றி, பதிவு செய்யாத தகுதியுள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

குவிந்த இளைஞர்கள்:

மாநில அளவில் 7 கோட்டங்களிலும் பல ஆயிரம் பணியிடங்களுக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. போக்குவரத்து அலுவலகங்களில் இளைஞர் கூட்டம் திரண்டது. நீண்ட வரிசையில் நின்று விண்ணப்பங்களை பெற்றனர். மதுரை கோட்டத்தில் தற்போது வரை 30 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்றுள்ளன. மாநிலத்தில் 3.32 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறையினர் தெரிவித்தன. நவ., 20 வரை விண்ணப்பங்கள் விற்பனையாகும். டிச., 8 வரை பூர்த்தியான விண்ணப்பங்கள் பெறப்படும். வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் நியமனம் இருக்கும்போது ஒரு பணியிடத்திற்கு 5 பேர் வரை பட்டியல் அனுப்பி அதில் கல்வி, தொழில் தகுதிகள் மற்றும் பதிவுமூப்பு அடிப்படையில் தேர்வு செய்வர்.

வி.ஐ.பி.,க்கள் பரிந்துரை:

இப்போது 'ஓப்பன் டூ ஆல்' என்ற வகையில் ஒவ்வொரு கோட்டத்திலும் பல ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். எனவே பணியிட எண்ணிக்கைக்கு ஏற்ப பலரை 'பில்டர்' செய்ய வேண்டும். அதற்கு தேர்வுக் குழு அமைக்கப்படலாம். அதன்பின், பணிநியமனம் நடக்கும். வேலை வாய்ப்பு பதிவு தேவையில்லை என்பதால், இதில் அரசியல் விளையாடும். வி.ஐ.பி.,க்களின் பரிந்துரை ஏற்கப்பட வாய்ப்புள்ளதால், அவர்களை இளைஞர்கள் 'துரத்த' துவங்கி விட்டனர்.

ஆகாஷ் ஏவுகணை சோதனை இரண்டாம் முறை வெற்றி

Posted: 18 Nov 2014 05:02 PM PST

தரையிலிருந்து பாய்ந்து சென்று, விண்ணில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும், 'ஆகாஷ்' ஏவுகணையின் சோதனை, நேற்று இரண்டாவது நாளாக வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

ஒடிசா மாநிலம் பாலாசோரில் உள்ள தளத்திலிருந்து செலுத்தப்பட்ட ஏவுகணை, நிர்ணயித்த இலக்கை வெற்றிகரமாக தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். நேற்று முன்தினமும் இதே ரக ஏவுகணையின் சோதனையின் நடைபெற்றது. இந்த வாரம் முழுவதும், இந்த ரக ஏவுகணைகளின் சோதனை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகாஷ் மத்திய தர ஏவுகணையானது, 60 கிலோ வெடிபொருட்களுடன் தரையிலிருந்து புறப்பட்டுச் சென்று, 25 கி.மீ., தூரத்தில், வான்வெளியில் உள்ள விமானம் போன்றவற்றை தாக்கி அழிக்க வல்லது. ஒரே நேரத்தில், பல இலக்குகளையும், இதன்மூலம் அழிக்க முடியும். ஒருங்கிணைந்த ஏவுகணை மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த ரக ஏவுகணைகளை, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கி உள்ளது. வான்வெளி யில் இருந்து தரையில் உள்ள இலக்கை நோக்கி வீசக்கூடிய இந்த ரக ஏவுகணைகள் ஏற்கனவே ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

ஆங்கில பள்ளியை மூட எதிர்ப்பு: மாணவர்கள் மனு

Posted: 18 Nov 2014 05:01 PM PST

உரிகம் ஐந்து விளக்கு பகுதியில், 100 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த பி.இ.எம்.எல்., ஆங்கில பள்ளியை காப்பாற்ற வலியுறுத்தி, மாணவர்கள் ஊர்வலமாக சென்று, தங்கவயல் கல்வி அதிகாரியிடம் மனு வழங்கினர்.
தங்கவயல், உரிகம் ஐந்து விளக்கு பகுதியில், 100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு இயங்கி வந்த, பி.ஜி.எம்.எல்., ஆங்கில பள்ளியில், பல்வேறு பகுதிகளில் இருந்தும், 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். தங்க சுரங்கம் மூடப்பட்ட பின்னர், சுரங்க நிறுவனத்துக்கு சொந்தமான பி.ஜி.எம்.எல்., மருத்துவமனையும், பி.ஜி.எம்.எல்., அரசு பள்ளியும் மூடப்பட்டு விட்டன. தற்போது, பி.இ.எம்.எல்., அரசு ஆங்கில உயர்நிலைப் பள்ளியையும் மூடி விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகும். இந்நிலையில், பள்ளி மாணவர்கள், ரயில் நிலையம், ராபர்ட்சன்பேட்டை சுராஜ்முள் சர்க்கிள், காந்தி சர்க்கிள் மற்றும் ராஜ்குமார் சர்க்கிள் வழியாக, கல்வி அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று, கல்வி அதிகாரி வெங்கட்ராம ரெட்டியிடம் மனு வழங்கினர்.

வாரம் 22 மணி நேரம் பாடம் நடத்த வேண்டும்: புதிய உத்தரவுக்கு விரிவுரையாளர்கள் எதிர்ப்பு

Posted: 18 Nov 2014 05:01 PM PST

அரசு முதல்நிலை கல்லூரிகளில், தற்போது, பாடம் நடத்தி வரும், 16 மணி நேரத்தை, 22 மணி நேரமாக அதிகரித்து, அரசு உத்தரவிட்டுள்ளதற்கு, விரிவுரையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கல்லூரி விரிவுரையாளர்: தற்போது, வாரம் ஒன்றில், 16 மணி நேரம் பாடம் நடத்துவதற்கும், ஆறு மணி நேரம், ஆய்வு செய்வதற்கும், கல்லூரி விரிவுரையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கல்லூரிகளில், ஆய்வு நடத்துவதற்கான வசதிகள் ஏதுமில்லாததால், இனி, அந்த, ஆறு மணி நேரத்தையும், பாடம் நடத்துவதற்காக, பயன்படுத்த வேண்டும். அதாவது, வாரம்தோறும், 22 மணி நேரம் பாடம் நடத்த வேண்டும் என, கல்லூரி கல்வி நடவடிக்கை துறை (டி.சி.இ.,) புதிய உத்தரவு ஒன்றை, பிறப்பித்துள்ளது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து, விரிவுரையாளர்கள் கூறியதாவது: வாரத்தில், 16 மணி நேரம் பாடம் நடத்திய பின், ஆறு மணி நேரம் ஆய்வுக்காக பயன்படுத்தலாமென்று, யூ.ஜி.சி., விதிமுறைகள் அனுமதித்துள்ளது. விரிவுரையாளர்கள், அடுத்த கட்ட பதவி உயர்வுக்கு, துணை பேராசிரியர் பதவியிலிருந்து, இணை பேராசிரியர் பதவி பெற, 300 வகையான பாட திட்டங்களில் ஆய்வு செய்து, சர்வதேச ஜர்னல்களில் வெளியிட்டாக வேண்டும். இந்த ஆய்வுக்கு, அதிகநேரம் தேவைப்படுகிறது என்பதால், புதிய உத்தரவை அரசு திரும்ப பெற வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

புதிய உத்தரவு:

கர்நாடகா அரசு கல்லூரி ஆசிரியர்கள் சங்க தலைவர், பிரகாஷ் கூறியதாவது: இந்த புதிய உத்தரவை திரும்ப பெறும்படி, உயர் கல்வித்துறை அமைச்சர் தேஷ்பாண்டேவுக்கு கடிதம் அனுப்பி உள்ளோம். பாட திட்டங்களிலும் மாறுதல் ஏற்பட்டுள்ளதால், ஆய்வு செய்ய அதிக நேரம் தேவைப்படுகிறது. தற்போது, ஏதாவது புள்ளி விவரங்களை தெரிவித்தால், அது சரியா என்பதை, மாணவர்கள், உடனடியாக ஆன் - லைன் மூலம் பரிசோதிக்கின்றனர். விரிவுரையாளர் தரும் தகவல்கள் பழையதாக இருந்தால், புதிய தகவல்களை மாணவர்கள் தருகின்றனர். ஒரு மணி நேர வகுப்பில் பாடம் நடத்த, நாங்கள் அதிகம் படிக்க வேண்டியுள்ளது. மாணவர்களை, முட்டாளாக்க முடியாது. அரசு விதித்துள்ள புதிய உத்தரவை திரும்ப பெறும் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார். மேலவை துணைத் தலைவர் புட்டண்ணா கூறுகையில், ''இந்த உத்தரவில், அர்த்தமே இல்லை. கல்வியாண்டின் மத்தியில், டி.சி.இ., இப்படியொரு உத்தரவு அனுப்புவதற்கோ, பாட நேரத்தை நிர்ணயிப்பதற்கோ அதிகாரமில்லை. மாநில நிதித்துறை பரிந்துரையை மட்டுமே வெளியிட வேண்டும். இது, யூ.ஜி.சி., சம்பந்தப்பட்டதாகும். இந்த உத்தரவை திரும்ப பெறாவிட்டால், போராட்டம் நடத்துவேன்,'' என்றார்.

சிவில் சர்வீஸ் தேர்வர்களின் உச்ச வயது வரம்பு குறைப்பு?

Posted: 18 Nov 2014 05:00 PM PST

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், யு.பி.எஸ்.சி., நடத்தும், சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுபவர்களுக்கான உச்ச வயது வரம்பை குறைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தற்போதைய நடைமுறையின் படி, பொதுப் பிரிவை சேர்ந்தவர்கள், 30 வயது வரையிலும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள், 33 வயது வரையிலும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள், 35 வயது வரையிலும் இந்த தேர்வை எழுதலாம். இந்த நடைமுறையில், மத்திய அரசு மாற்றத்தை கொண்டு வரவிருக்கிறது. அதன்படி, பொதுப்பிரிவினருக்கான உச்ச வயது வரம்பு, 26 ஆகவும், ஓ.பி.சி.,யினருக்கு, 28 மற்றும் எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு, 29 ஆகவும் குறைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதேபோல், ஒருவர் எத்தனை முறை இந்த தேர்வை எழுதலாம் என்பதிலும் மாற்றம் கொண்வரப்பட உள்ளது. அதன்படி, இனிமேல், சிவில் சர்வீஸ் தேர்வுகளை, பொதுப் பிரிவினர், மூன்று முறையும், ஓ.பி.சி., பிரிவை சேர்ந்தவர்கள், ஐந்து முறையும், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர், ஆறு முறையும் மட்டுமே எழுத முடியும். இதற்கான அறிவிப்பு, எந்த நேரத்திலும் வெளியாகலாம்.

Welcome Tamilnadu Teachers Friendly Blog




Sent from Samsung Mobile


Welcome Tamilnadu Teachers Friendly Blog


மத்திய அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் பற்றி டிசம்பர் 11-ல் முடிவு

Posted: 19 Nov 2014 04:43 PM PST

இரயில்வே, பாதுகாப்புத் துறை உட்பட மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர் கள் இணைந்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவது பற்றி டிசம்பர் 11-ம் தேதி டெல்லியில் நடைபெறும் சிறப்பு மாநாட்டில் முடிவு செய்யப்பட உள்ளதாக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் தேசிய பொதுச் செயலாளர் எம்.கிருஷ்ணன் தெரிவித்தார்.


மத்திய அரசு ஊழியர்களின் 50 சதவீத அகவிலைப்படியை அடிப் படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும்; 7-வது ஊதியக் குழுவின் இறுதி முடிவுக்கு முன்பாக மத்திய அரசு ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்; மத்திய அரசு அலுவல கங்களில் காலியாக உள்ள 6 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் சார்பில் நாடு முழு வதும் மாநிலத் தலை நகரங்களில் நேற்று தர்ணா போராட்டங்கள் நடைபெற்றன.

அந்த வகையில் சென்னையில் அண்ணா சாலை தலைமை தபால் நிலைய வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சம்மேளனத்தின் தேசிய பொதுச் செயலாளர் எம்.கிருஷ்ணன் பங்கேற்று பேசினார்.

"அரசு ஊழியர்களின் அக விலைப்படியில் 50 சதவீதத்தை அடிப்படை ஊதியத்துடன் இணைப்பது என்பது தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது. இப்போதும் அதேபோல் 50 சதவீத அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படும் என்பது மத்திய அரசு ஏற்றுக் கொண்ட கோரிக்கையாகும். ஆகவே, ஏற்றுக் கொண்ட கோரிக் கையை அமல்படுத்தக் கோரி இன்று நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

ஊழியர்களின் நலன்களைப் பாதிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுவதால் இன்று அனைத்துத் துறை ஊழியர்களும் ஓரணியில் திரளும் நிலைமை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ரயில்வே, பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த தொழிற்சங்கங்களும் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்துடன் இணைந்து போராட முன்வந்துள்ளன.

இந்நிலையில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் பற்றி முடிவு செய்வதற்காக மத்திய அரசு ஊழியர் சங்கங்களின் சிறப்பு மாநாடு டிசம்பர் 11-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. அந்த மாநாட்டின் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் வலிமை நரேந்திர மோடி அரசுக்கு உணர்த்தப்படும்" என்றார் கிருஷ்ணன்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சம்மேள னத்தின் மாநிலத் தலைவர் ஜே.ராம மூர்த்தி, மாநிலப் பொதுச் செயலாளர் எம்.துரைபாண்டியன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் எஸ்.பால சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

பள்ளிக்கல்வி அமைச்சருடனான பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சந்திப்பின் எதிரொலி

Posted: 19 Nov 2014 04:41 PM PST

அநைவருக்கும் கல்வி இயக்கத்தின் திட்ட அறிக்கையில் வெளியான பகுதிநேர ஆசிரியர்களின் ஊதிய உயர்வு ஏப்ரல் 2014 முதல் முன் தேதியிட்டு வழங்கப்பட வாய்ப்பு. நிலுவைத் தொகையும் ECS முறையில் வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது.

மொழிப்பாடத்திற்கும் பேசுதல், கேட்டல், படித்தல் திறனுக்கு 20 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் : தமிழாசிரியர் கழகத்தினர் வலியுறுத்தல்

Posted: 19 Nov 2014 04:46 PM PST


Very good happy news to Part time instructors????

Posted: 19 Nov 2014 04:44 PM PST

Very good happy news to Part time instructors to Government Schools under SSA appointment Salary is increased from Rs.5000/- to Rs.7000/- from April 2014 on wards G.O. No. (Ms) 186 Dated:18.11.2014.

Source : FB

பள்ளிக்கல்வி - தமிழகத்தில் உள்ள திறந்தநிலை பல்கலைக்கழகங்கள் வாயிலாக இளநிலைப் பட்டப்படிப்பு படிக்காமல் நேரடியாக வழங்கப்படும் முதுகலை பட்டப்படிப்பு பெற்ற ஆசிரியர்களுக்கு உயர்க்கல்வி தகுதிகாக ஊக்க உதிய உயர்வு வழங்கிட அனுமதித்து வெளியிடப்பட்ட அரசாணை எண்.307 பள்ளிக் கல்வி (இ2) துறை நாள்.15.12.2000ஐ இரத்து செய்தல் ஆணை வெளியீடு

Posted: 19 Nov 2014 09:16 AM PST

பாட நேரம் அதிகரிப்பிற்கு விரிவுரையாளர்கள் எதிர்ப்பு

Posted: 19 Nov 2014 02:23 AM PST


அரசு முதல்நிலை கல்லூரிகளில், தற்போது பாட நேரம் வாரத்திற்கு 16 மணிநேரமாக உள்ளது. இதை 22 மணி நேரமாக அதிகரித்து, அரசு உத்தரவிட்டுள்ளதற்கு, விரிவுரையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


கல்லூரி விரிவுரையாளர்: தற்போது, வாரம் ஒன்றில், 16 மணி நேரம் பாடம் நடத்துவதற்கும், ஆறு மணி நேரம் ஆய்வு செய்வதற்கும், கல்லூரி விரிவுரையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கல்லூரிகளில், ஆய்வு நடத்துவதற்கான வசதிகள் ஏதுமில்லாததால், இனி அந்த ஆறு மணி நேரத்தையும், பாடம் நடத்துவதற்காக பயன்படுத்த வேண்டும். அதாவது, வாரம்தோறும் 22 மணி நேரம் பாடம் நடத்த வேண்டும் என, கல்லூரி கல்வி நடவடிக்கை துறை (டி.சி.இ.,) புதிய உத்தரவு ஒன்றை, பிறப்பித்துள்ளது.

இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து விரிவுரையாளர்கள் கூறியதாவது:

வாரத்தில், 16 மணி நேரம் பாடம் நடத்திய பின், ஆறு மணி நேரம் ஆய்வுக்காக பயன்படுத்தலாமென்று, யூ.ஜி.சி., விதிமுறைகள் அனுமதித்துள்ளது. விரிவுரையாளர்கள், அடுத்த கட்ட பதவி உயர்வுக்கு, துணை பேராசிரியர் பதவியிலிருந்து, இணை பேராசிரியர் பதவி பெற, 300 வகையான பாட திட்டங்களில் ஆய்வு செய்து, சர்வதேச ஜர்னல்களில் வெளியிட்டாக வேண்டும். இந்த ஆய்வுக்கு, அதிகநேரம் தேவைப்படுகிறது என்பதால், புதிய உத்தரவை அரசு திரும்ப பெற வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

புதிய உத்தரவு:

கர்நாடகா அரசு கல்லூரி ஆசிரியர்கள் சங்க தலைவர், பிரகாஷ் கூறியதாவது:

இந்த புதிய உத்தரவை திரும்ப பெறும்படி, உயர் கல்வித்துறை அமைச்சர் தேஷ்பாண்டேவுக்கு கடிதம் அனுப்பி உள்ளோம். பாட திட்டங்களிலும் மாறுதல் ஏற்பட்டுள்ளதால், ஆய்வு செய்ய அதிக நேரம் தேவைப்படுகிறது.

தற்போது, ஏதாவது புள்ளி விவரங்களை தெரிவித்தால், அது சரியா என்பதை மாணவர்கள், உடனடியாக ஆன் - லைன் மூலம் பரிசோதிக்கின்றனர். விரிவுரையாளர் தரும் தகவல்கள் பழையதாக இருந்தால், புதிய தகவல்களை மாணவர்கள் தருகின்றனர்.

ஒரு மணி நேர வகுப்பில் பாடம் நடத்த, நாங்கள் அதிகம் படிக்க வேண்டியுள்ளது. மாணவர்களை, முட்டாளாக்க முடியாது. அரசு விதித்துள்ள புதிய உத்தரவை திரும்ப பெறும் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

மேலவை துணைத் தலைவர் புட்டண்ணா கூறுகையில், "இந்த உத்தரவில், அர்த்தமே இல்லை. கல்வியாண்டின் மத்தியில், டி.சி.இ., இப்படியொரு உத்தரவு அனுப்புவதற்கோ, பாட நேரத்தை நிர்ணயிப்பதற்கோ அதிகாரமில்லை. மாநில நிதித்துறை பரிந்துரையை மட்டுமே வெளியிட வேண்டும். இது, யூ.ஜி.சி., சம்பந்தப்பட்டதாகும். இந்த உத்தரவை திரும்ப பெறாவிட்டால், போராட்டம் நடத்துவேன்," என்றார்.

ஆங்கில பள்ளி மூடப்படுவதற்கு மாணவர்கள் எதிர்ப்பு

Posted: 19 Nov 2014 02:23 AM PST


உரிகம் ஐந்து விளக்கு பகுதியில், 100 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த பி.இ.எம்.எல்., ஆங்கில பள்ளியை காப்பாற்ற வலியுறுத்தி, மாணவர்கள் ஊர்வலமாக சென்று, தங்கவயல் கல்வி அதிகாரியிடம் மனு வழங்கினர்.


தங்கவயல், உரிகம் ஐந்து விளக்கு பகுதியில், 100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு இயங்கி வந்த, பி.ஜி.எம்.எல்., ஆங்கில பள்ளியில், பல்வேறு பகுதிகளில் இருந்தும், 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். தங்க சுரங்கம் மூடப்பட்ட பின்னர், சுரங்க நிறுவனத்துக்கு சொந்தமான பி.ஜி.எம்.எல்., மருத்துவமனையும், பி.ஜி.எம்.எல்., அரசு பள்ளியும் மூடப்பட்டு விட்டன.

தற்போது, பி.இ.எம்.எல்., அரசு ஆங்கில உயர்நிலைப் பள்ளியையும் மூடி விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகும். இந்நிலையில், பள்ளி மாணவர்கள், ரயில் நிலையம், ராபர்ட்சன்பேட்டை சுராஜ்முள் சர்க்கிள், காந்தி சர்க்கிள் மற்றும் ராஜ்குமார் சர்க்கிள் வழியாக, கல்வி அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று, கல்வி அதிகாரி வெங்கட்ராம ரெட்டியிடம் மனு வழங்கினர்.

வெளிமாநில குழந்தை தொழிலாளர்களுக்கு விடிவு காலம்!

Posted: 19 Nov 2014 02:22 AM PST


அடிப்படை கல்விக்கு வாய்ப்பு கிடைக்காத, வெளிமாநில குழந்தை தொழிலாளர்களுக்காக, கோவை மாவட்டத்தில் சிறப்பு பள்ளி துவங்கப்பட்டுள்ளது. இவை முறையாக செயல்படுத்தப்பட்டால், அவர்கள் கொத்தடிமைகளாக உருவாகும் நிலை தடுக்கப்படலாம்.


பள்ளி செல்லும் வயதில், வேலைக்கு செல்லும் சிறுவர்களை மீட்கவே, குழந்தை தொழில் முறை ஒழிப்பு திட்டம் செயல்படுகிறது. இதன் மூலம் மீட்கப்படும் சிறுவர்களை, குழந்தைகள் நலக்குழு முன்னிலையில் ஒப்படைத்து, பாதுகாப்பான தங்குமிடம், உணவு, பள்ளி செல்லும் வாய்ப்பு என பல்வேறு வசதிகள் செய்து தரப்படுகின்றன.

இருப்பினும், வெளி மாநிலத்தவர் வருகையால், குழந்தை தொழிலாளர் முறைக்கு, முற்றுப்புள்ளி வைக்க முடியாத சூழலே நிலவி வருகிறது. இதை கட்டுப்படுத்தும் விதமாக, மாவட்ட குழந்தை தொழிலாளர் தடுப்பு திட்டம், இரு ஆண்டுகளாக பணிகளை துவக்கியுள்ளது.

நகரின் மையப்பகுதிகளில் மீட்கும் சிறுவர்களை தனியாகவும், கிராமப்புற பகுதிகளில், கொத்தடிமைகளாக வேலை செய்த சிறார்களை தனியாகவும், மீட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பிட்ட தொழிலுக்காக, வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கையே அதிகம் என்பது ஆய்வுகளில் தெரியவந்தது.

இச்சிறுவர்களை மீட்டு, முறைசார் பள்ளிகளுக்கு அனுப்பி படிக்க வைத்தாலும், மீண்டும் பழைய தொழிலுக்கே திரும்பிவிடுகின்றனர். இதைத்தடுக்க, குறிப்பிட்ட தொழில் செய்யும் பகுதிகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சுந்தராபுரம், காந்திநகர் பகுதிகளில், கட்டட தொழிலுக்காகவும், தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், பாக்கு தொழிலுக்கும், பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் தோட்ட வேலைக்கும், கணுவாய் பகுதியில் செங்கல் சூளை வேலைக்காகவும், குடும்பம் குடும்பமாக, பீகார், ஒரிசா, அசாம் மக்கள் வந்து தங்கியுள்ளனர்.

அவர்களது குழந்தைகளில் பெரும்பகுதியினர், அடிப்படை கல்விகூட பெறுவதில்லை. அவர்களது நலனுக்காக, கடந்தாண்டு காந்தி நகரில் சிறப்பு பள்ளி அமைத்து, 50 மாணவர்கள் அடிப்படை கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டது. நடப்பாண்டில் தொண்டாமுத்தூரில் சிறப்பு பள்ளி அமைத்து, 50 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அரசு பள்ளிகளில் சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் ஆய்வு

Posted: 19 Nov 2014 02:20 AM PST


அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்ட நிதி மூலம் அரசு பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டு பணிகள் குறித்து சென்னை ஐ.ஐ.டி.,பேராசிரியர்கள் ஆய்வு செய்தனர்.


விருதுநகர் மாவட்டத்தில் 177 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டம்(ஆர்எம்எஸ்ஏ) நிதிமூலம் பல்வேறு மேம்பாட்டுப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சமீபத்தில் 38 பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், 18 பள்ளிகளில் கழிப்பறைகள், 10 பள்ளிகளில் குடிநீர் வசதி செய்துதரப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்பணிகளுக்காக மத்திய அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட நிதி, பணிகள் நடந்துள்ள விதம், தரம் ஆகியவை குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட சென்னை ஐ.ஐ.டி.,பேராசிரியர்கள் கோவிந்த அரசன், பூபால பாலகிருஷ்ணன் நேற்றுமுன்தினம் ஆய்வை துவக்கினர்.

பத்து நாட்கள் ஆய்வு நடத்தி அதன் அறிக்கையை அந்த அமைச்சகத்திடம் சமர்ப்பிப்பர் என, மாவட்ட கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத உச்ச வயதுவரம்பு குறைப்பு?

Posted: 19 Nov 2014 02:19 AM PST


மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வுகளை எழுபவர்களுக்கான உச்ச வயது வரம்பை குறைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


தற்போதைய நடைமுறையின்படி, பொதுப் பிரிவை சேர்ந்தவர்கள் 30 வயது வரையிலும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் 33 வயது வரையிலும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் 35 வயது வரையிலும் இந்த தேர்வை எழுதலாம்.

இந்த நடைமுறையில், மத்திய அரசு மாற்றத்தை கொண்டு வரவிருக்கிறது. அதன்படி, பொதுப்பிரிவினருக்கான உச்ச வயது வரம்பு, 26 ஆகவும், ஓ.பி.சி.,யினருக்கு, 28 மற்றும் எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு, 29 ஆகவும் குறைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதேபோல், ஒருவர் எத்தனை முறை இந்த தேர்வை எழுதலாம் என்பதிலும் மாற்றம் கொண்வரப்பட உள்ளது. அதன்படி, இனிமேல், சிவில் சர்வீஸ் தேர்வுகளை, பொதுப் பிரிவினர் மூன்று முறையும், ஓ.பி.சி., பிரிவை சேர்ந்தவர்கள் ஐந்து முறையும், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் ஆறு முறையும் மட்டுமே எழுத முடியும். இதற்கான அறிவிப்பு, எந்த நேரத்திலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் 24.11.2014 மற்றும் 25.11.2014 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது

Posted: 19 Nov 2014 02:20 AM PST







பள்ளிக்கல்வி - அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் 24.11.2014 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது

Posted: 18 Nov 2014 11:02 PM PST

புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள நண்பர்களின் கவனத்திற்கு-இந்த வாரம் அரியலூர் மாவட்டம்

Posted: 18 Nov 2014 10:19 PM PST


புதிய ஓய்வூதியம் பாதிப்பு குறித்து  ஒவ்வொரு வாரமும் ஒரு மாவட்டம்  -பற்றிய பதிப்பு வெளியிடப்படும்   -இந்த வாரம் அரியலூர்   மாவட்டம் -புதிய ஓய்வூதியம் பாதிப்பு குறித்து  புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள நண்பர்களின் கவனத்திற்கு எடுத்து கூறுங்கள்.

பிளஸ் 2, 10ம் வகுப்பு விடைத்தாள் பக்கம் குறைப்பு: தேர்வு இயக்குனரகம் அறிவிப்பு

Posted: 18 Nov 2014 07:26 PM PST

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு விடைத்தாள்களின் பக்கங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு உள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள், நேர விரயம் மற்றும் கண்காணிப்பாளரின் கவனத்தை கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டு முதல், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விடைத்தாளை இணைத்து வழங்கப்பட்டது. எழுதாத பக்கங்களில், கிராஸ் கோடு போட அறிவுறுத்தப்பட்டது.
விடைத்தாள்களில் எழுதாத பக்கங்கள் அதிகரித்ததை அடுத்து, தேர்வுத் துறைக்கு கூடுதல் செலவினம் ஏற்பட்டது. இதை தவிர்க்கும் வகையில், தற்போது ஒவ்வொரு பாடத்துக்கும் உரிய விடைத்தாள்கள், குறைத்து வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜ், பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: வரும் 2015ல், நடைபெறவுள்ள உள்ள பிளஸ் 2 மொழிப்பாடங்களுக்கு, 40 பக்கங்களுக்கு பதில், 32 பக்கங்கள் கொண்ட விடைத்தாளில், 30 பக்கங்கள் எழுதும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. விலங்கியல், தாவரவியல் பாடங்களில், 52க்கு பதில், 44; கம்ப்யூட்டர் சயின்ஸ், 40க்கு, 32; அக்கவுன்டன்சி, 54க்கு, 46; இதர பாடங்களுக்கு, 40 பக்கங்களும் வழங்கப்பட உள்ளன. இதேபோல், 10ம் வகுப்பு தேர்வில், மொழிப்பாடங்களுக்கு, 32க்கு, 24; தமிழ் இரண்டாம் தாளில் ரயில்வே முன்பதிவு, ரத்து படிவம், வங்கியில் பணம் செலுத்தும் படிவம், வங்கியில் பணம் பெறும் படிவம் ஆகிய படிவங்கள் தனித்தனியாக வழங்காமல், முதன்மை விடைத்தாளில் முதல் நான்கு பக்கங்களில் அச்சிடப்பட்டு வழங்கப்பட உள்ளது. சமூக அறிவியலில், முதன்மை விடைத்தாளில் முதல் நான்கு பக்கங்களில், இரண்டு இந்திய வரைபடங்கள், ஒரு ஐரோப்பா வரைபடம், ஒரு ஆசிய வரைபடம் அச்சிடப்பட்டு சேர்த்து வழங்கப்பட்டு உள்ளது. கணிதம், அறிவியல் பாடங்கள் பழையபடியே, 30 பக்கங்கள் வழங்கப்பட்டாலும், முதல் பக்கத்தில் கேம்ப் எண், பண்டல் எண், பாக்கெட் எண் போன்ற விவரங்களும் இடம் பெற்றிருக்கும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிளஸ் 2, 10ம் வகுப்பு விடைத்தாள் பக்கம் குறைப்பு: தேர்வு இயக்குனரகம் அறிவிப்பு
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு விடைத்தாள்களின் பக்கங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு உள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள், நேர விரயம் மற்றும் கண்காணிப்பாளரின் கவனத்தை கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டு முதல், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விடைத்தாளை இணைத்து வழங்கப்பட்டது. எழுதாத பக்கங்களில், கிராஸ் கோடு போட அறிவுறுத்தப்பட்டது. விடைத்தாள்களில் எழுதாத பக்கங்கள் அதிகரித்ததை அடுத்து, தேர்வுத் துறைக்கு கூடுதல் செலவினம் ஏற்பட்டது. இதை தவிர்க்கும் வகையில், தற்போது ஒவ்வொரு பாடத்துக்கும் உரிய விடைத்தாள்கள், குறைத்து வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜ், பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: வரும் 2015ல், நடைபெறவுள்ள உள்ள பிளஸ் 2 மொழிப்பாடங்களுக்கு, 40 பக்கங்களுக்கு பதில், 32 பக்கங்கள் கொண்ட விடைத்தாளில், 30 பக்கங்கள் எழுதும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. விலங்கியல், தாவரவியல் பாடங்களில், 52க்கு பதில், 44; கம்ப்யூட்டர் சயின்ஸ், 40க்கு, 32; அக்கவுன்டன்சி, 54க்கு, 46; இதர பாடங்களுக்கு, 40 பக்கங்களும் வழங்கப்பட உள்ளன. இதேபோல், 10ம் வகுப்பு தேர்வில், மொழிப்பாடங்களுக்கு, 32க்கு, 24; தமிழ் இரண்டாம் தாளில் ரயில்வே முன்பதிவு, ரத்து படிவம், வங்கியில் பணம் செலுத்தும் படிவம், வங்கியில் பணம் பெறும் படிவம் ஆகிய படிவங்கள் தனித்தனியாக வழங்காமல், முதன்மை விடைத்தாளில் முதல் நான்கு பக்கங்களில் அச்சிடப்பட்டு வழங்கப்பட உள்ளது. சமூக அறிவியலில், முதன்மை விடைத்தாளில் முதல் நான்கு பக்கங்களில், இரண்டு இந்திய வரைபடங்கள், ஒரு ஐரோப்பா வரைபடம், ஒரு ஆசிய வரைபடம் அச்சிடப்பட்டு சேர்த்து வழங்கப்பட்டு உள்ளது. கணிதம், அறிவியல் பாடங்கள் பழையபடியே, 30 பக்கங்கள் வழங்கப்பட்டாலும், முதல் பக்கத்தில் கேம்ப் எண், பண்டல் எண், பாக்கெட் எண் போன்ற விவரங்களும் இடம் பெற்றிருக்கும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அங்கன்வாடி ஊழியர்கள் நியமனத்துக்கு தடை - மதுரை ஐகோர்ட்

Posted: 18 Nov 2014 10:22 PM PST

தமிழகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் நியமனத்திற்கு, மதுரை ஐகோர்ட் கிளை இடைக்காலத் தடை விதித்தது. திருமங்கலம் எம்.புளியங்குளம் மீனாலட்சுமி தாக்கல் செய்த மனு: சமூக நலத்துறை சார்பில், அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் காலியிடங்களை நிரப்ப, அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதனடிப்படையில் கலெக்டர்கள், திட்ட அலுவலர்கள் நியமன நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 2013 ஆக., 28ல் அரசு உத்தரவில், 'மாவட்ட வாரியாக, நேர்காணல் மூலம் மட்டுமே பணி நியமனம் மேற்கொள்ள வேண்டும்' என, உள்ளது. தற்போதைய பணி நியமன நடைமுறையில், மாவட்டந்தோறும் எத்தனை பணியாளர்கள் நியமிக்க உள்ளனர்; இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படுமா என்ற விவரங்களை தெளிவுபடுத்தவில்லை. நேர்காணலுக்கு முன்பே யார் யாரை நியமிப்பது என, அரசியல்வாதிகள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அங்கன்வாடி பணியிடங்களை பொது அறிவிப்பின்றி, நேர்காணல், வசிப்பிடம் அடிப்படையில் தேர்வு செய்வது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. பொது அறிவிப்பு வெளியிடாமல், இடஒதுக்கீடு பின்பற்றாமல் அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்களை நியமனம் செய்ய தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டிருந்தார். நீதிபதி டி.ராஜா முன், மனு விசாரணைக்கு வந்தது. அரசு கூடுதல் வழக்கறி ஞர் முகமது முகைதீன், 'அரசாணைப்படி பொது அறிவிப்பு வெளியிடத் தேவையில்லை. தற்போது மாவட்ட அளவில் தான் நியமனம் மேற்கொள்ளப்படுகிறது. மாநிலம் முழுவதும் நியமனத்திற்கு தடை கோர முடியாது' என்றார். பணி நியமனம் மேற்கொள்ள தடை விதித்த நீதிபதி, சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை செயலர், சமூக நலத்துறை கமிஷனருக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டார்.