வாழ்க வளமுடன் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் வாழ்க வளமுடன்!

Friday, September 15, 2017

மருத்துவமும் ஆன்மீகமும்!


வியாதி என்பது ஆன்மாவில் உள்ளது. 

அது கண்ணுக்கும், கருவிக்கும் எப்போதும் தெரியாது. 

அதில் ஒன்று எழுந்தாலும், உயிரில் காட்டும். 

அது கண்ணுக்கும், கருவிக்கும், தெரியாது, 

அந்த ஒன்றை வைத்து குறி மூலம் ஆன்மா பாதிப்பை உணர்ந்துக் கொள்ள உதவும் இடம் தான் இது. 

குறி நோயின் (அடையாளம்) வைத்து தான் கண்டுபிடிக்கனும். ஏனென்றால் ஆன்மாவிற்கு வேறு வழியில்லை. 

ஆகவே தான் அந்த குறிக்கு தக்க மருந்து இரண்டாவது புத்தகத்தில் இருக்கிறது. 

குறிக்கேற்றவாறு மருந்து கொடுத்தால் நோய் போய்விடும். 

இப்போதும், மியாசம் உறக்கத்துக்கு பழைய படி சென்று விடும். 

ஆகவே ஆன்மா கண்ணுக்கு தெரியாது. 

அதை காக்கும் சக்தி வைட்டல் போர்ஸ், அதை தாக்கும் மியாசம் (நோய்) இவை எப்போதும் கண்ணுக்கும், கருவிக்கும் தெரியாது. 

இப்படி ஹானிமேன், அவர்கள் இதை தான் உன்னிப்பாக கவனித்து பார்த்தார். 

நோய் தானாகவே குணமாகிய இயற்கை விந்தையை கண்டு முதலில் அதிர்ந்து போனார். பிறகு மகிழ்ந்து இயற்கைக்கு நன்றி செலுத்தினார். வந்த நோய்கள் அதன் கெடு காலம் முடிந்து தானாகவே தணிந்திருக்கா விட்டால் மனித இனமே (அ) உயிரினமே அழிந்து போய் இருக்குமே? 

ஆகவே ஆஹா என்ன இயற்கையின் பெருங்கருணை என்று வியந்து மகிழ்ந்து நெகிழ்ந்து போனார். இதனால் தான் அவருக்கு கொடுக்கப்பட்ட துன்பங்கள் அவரை பாதிக்க வில்லை என்று தெரிகிறது அல்லவா? 

இது போல் நமது நாட்டில் தோன்றிய ஞானிகள் பிரம்ம இரகசியத்தை உணர்ந்திருக்கிறார்கள். 

மற்றும் இந்த நம்மை காக்கும் தெய்வீக சக்தியைப் பற்றி திருமூலர் அவர்கள் பசு என்கிறார். 

ஆதிசங்கரரும் அத்வைதம் என்றும், 

ஒளவையார் பரமாய சக்தி என்றும், 

இயேசு கர்த்தர் என்றும், 

நபிகள் அல்லா என்றும், 

வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி என்றும், 

வேதாத்திரி மகரிஷி அவர்கள் சுத்த வெளி என்றும், 

வைணவம் விஷ்ணு என்றும், 

சைவம் சிவம் என்றும், 

இவை எல்லாமே ஒரே பொருளை தான் தருகிறது. 

ஆகவே இந்த அபூர்வ சக்தியை தான் ஹானிமேன் வைட்டல் போர்ஸ் என்று கூறுகிறார். 

வேதங்களின் உட்பொருளும், இறைவன் இதையே இது தான் என்று வேதங்களும் கூறுகிறது. 

ஆகவே ஹானிமேன் அவர்களும், ஹோமியோபதியின் அடிப்படைக் கருத்து இது தான். 

மேலே கண்ட எல்லாவற்றிற்கும் பேராதாரமான இறை சக்தியை ஒரே வார்த்தையில் சுருக்கி, இன்றைய விஞ்ஞான காலத்திற்கு பொருந்தும் படியான சொல்லாக வான்காந்தமென்று அழைக்கின்றோம். 

ஆதி சங்கரர் அவர்கள் இதை அத்வைதம் என்று கூறிவிட்டு,

 உடலுக்குள் இயங்கும் இந்த சக்தியை தான் துவைதம் என்று கூறுகிறார். 

அதாவது இறைவனுடைய சக்தி உடலுக்குள் இயங்கும் போது அதே சக்தியை தான் துவைதம் என்கிறார். 

இந்த இடத்தில் வேதாத்திரி மகரிஷி கூறும் போது “அவனில் தான் நீ, உன்னில் அவன்” என்கிறார். 

இதே பொருளை தான் மற்றவர்களும், 

ஆத்மா, ஆன்மா, பதி, பெருமாள், அடியார், உயிர், மனம், புத்தி, அகம்காரம், சித்தம், ஆனந்தம், உள்ளம் என்று பலர் கூறுகின்ற இப்பொருளை 

உடலுக்குள் இருக்கும் உயிர் சக்தியை ஜீவகாந்தம் என்று கூறுலாம்.

 இப்படி சுருக்கி தெளிவாக கூறியவர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் தான். 

இவர் மெய்ஞானத்தையும், விஞ்ஞானத்தையும், மருத்துவத்தையும் இணைக்க வேண்டும் என்றார்.

 பல விஷயங்களை இணைத்தும் கூறிவிட்டார். 

இப்படி வான்காந்தத்தின் ஒரு பகுதி ஜீவகாந்தமாக மாறி உடலை இயக்குகின்றது. 

அப்புறம் ஏன் இந்த உடலானது துன்பப்பட வேண்டும். 

வான்காந்தத்திலிருந்து அது தூண்டப்பட்டு அனுபவிக்க வேண்டும், என்ற காரணத்தினால் உடலை எடுத்து இயங்கும் போது (வாழும் போது) இயக்கத்தின் காரணமாக பிறருக்கு சில கஷ்டங்கள் நேர்ந்து விடுகிறது.

 அந்த கஷ்டத்தின் வருத்தம் தான் குறிப்பிட்ட வரையே வந்து சேர்கிறது. 

இது அவரது ஜீவகாந்தத்தில் பதிந்து விடுகிறது. 

(எப்படி பதிகின்றது என்றால் எல்லாமே அலை இயக்கம் தானே*) 

ஜீவகாந்தம் தானே உடலையும்; இயக்குகின்றது. 

இப்போது ஜீவகாந்தம் அதிகமாகின்றது. 

இந்த பதிவுகள் கண்களுக்கும், கருவிகளுக்கும் தெரியுமா? 

தெரியாது.) ஏன் என்றால் கண்களும், கருவிகளும், 

பஞ்ச பூதங்களில் மண், நீர், நெருப்பு, காற்று இந்த நான்கில் தான் கருவிகள் செய்ய முடியும். 

ஐந்தாம் பூதமான விண், அதில் செய்ய முடியாது. இதை ஞானிகளால் உணர்ந்து கூறத்தான் முடியும்.

விண்ணிலும், ஒரு மெலிந்த சக்தி தான் காந்த சக்தி, 

ஆகவே இந்த ஜீவகாந்தத்தில் தான் இடையூருகள் பதிவாக பதிகின்றது. 

உடலெங்கும், இயங்குகின்ற ஜீவகாந்தம் தான் ஒரு பெட்டகத்தை அமைத்து (கருமையம்) என்ற இடத்தில் சேகரிக்கின்றது. 

இதில் எத்தனை பதிவுகள் பதியும் என்றால், பல கோடான, கோடியான பதிவுகள் பதியும். 

ஓர் அறிவு முதல் 6 அறிவு வரை பிறவற்றிற்கு செய்த இடையூறுகள், நம் முன்னோர்கள் செய்த இடையூரல்கள், நம் கருமையத்தில் பதிந்துள்ளன. 

இது எவ்வளவு பதிந்தாலும், கணக்காகாது, 

இவை நிழல் விண்ணால் ஆனது. 

ஓர் உடல் வயதாகியோ, இடைப்பட்ட காலத்தில் உயிர் விலகிவிட்டால் அந்த உடல்; தான் மண்ணாகவோ, சாம்பலாகவோ போகும். 

அந்த உயிர் என்ற ஜீவகாந்தம் மையத்தில் இருக்கும், கருமையம் மீண்டும் ஓர் உடலை எடுத்து கொள்கிறது. 

இப்போது நாம் செய்த பாவமும் பதிந்து கொண்டே வரும். 

இதனை சமஸ்கிருதத்தில் சஞ்சித கர்மம், பிரார்த்த கருமம் என்றும், 

தமிழர் பழைய வினை, புதிய வினை என்கிறோம். 

இப்போது கவனித்து பாருங்கள் உடலை இயக்கி கொண்டிருப்பது, உயிர் என்ற ஜீவகாந்தம். 

இந்த சக்தி கண்ணுக்கு தெரியாது. உயிரை எது தடை செய்ய முடியும். 

அது போல் கண்ணுக்கு தெரியாத பாவம் என்ற ஒரு தீய சக்தி தான் இந்த ஜீவகாந்தத்ததை தடுக்கும்.

அது எந்த உடல் உறுப்பில் தடுக்குதோ, அது தான் வியாதி என்கிறோம்.

 இது தான் ஆங்கிலத்தில் DIS + EASY = DISEASE என்கிறோம். 

அலோபதி மருத்துவம் உடலை பார்கிறது. 

அதை துல்லியமாக பார்க்க கருவியின் உதவியை தேடுகிறது. 

ஆனால் இங்கு நன்கு சிந்தித்து பாருங்கள். 

உடலையே இயக்குவது உயிர். அதை தடைசெய்வது மியாசம்என்ற பாவம். 

அதற்குள் சென்று பதிவை நீக்க வேண்டும் என்று ஹோமியோபதி மருத்துவம் சொல்கிறது. 

இதையும், மனதால் தான் உணர்ந்து கொண்டு மருந்து கொடுக்க முடியும். 

இதை ஹலோபதி மருத்துவம் ஏற்றுக் கொள்வதில்லை.

 காரணம் ஹலோபதி மருத்துவத்தில் சாட்சி, தடயம், உருவமும் தேவை, 

ஆனால் எந்த காலத்தில் ஜீவகாந்தத்தையும், கருமையத்தில் உள்ள பாவப்பதிவுகளை காண எந்த கருவிகள் தான் செய்ய முடியும்? 

எனவே தான் அதை ஏற்று கொள்வதில்லை. 

உதாரணம் ஒரு கொலை நடந்து விடுகிறது. 

அந்த கொலையாளி நான் தான் கொலை செய்தேன் என்ற வாக்குமூலம் இல்லை. 

சந்தேகத்தின் பேரில் அவரை விசாரித்து பார்த்ததில் அவர் தான் செய்ததற்கு தடயமும், சாட்சிகளும் இல்லை. 

அவனை விசாரித்த நீதிபதி இப்போது என்ன செய்வார். 

அவன் தான் கொலையாளி என்று மனதில் பட்டாலும், தடயமும், சாட்சியும் இல்லாததால் அவனை நிரபராதி என்று கூறி விடுதலை செய்ய வேண்டி வரும் அல்லவா? 

ஆகவே சத்தியம் வேறு, சட்டம் வேறு. 

இப்படி தான் ஹோமியோபதி மருந்துகளும், வியாதிகளும். (உயிரையும்) எப்போதும், யாராலும் கருவிகள் கொண்டும் எக்காலத்திலும் கண்டுபிடிக்க முடியாது. 

அதனால் ஹோமியோபதி மருத்துவத்தில் சத்தியம், தத்துவம் இருக்கிறது.

 ஆனால் நிருபித்து காட்ட முடியாது. உணர தான் முடியும். 

அலோபதி மருத்துவத்தில் உடலுக்கு மருந்தும், உப்பிய உறுப்பை அறுத்தெடுக்க கத்தியையும், சட்டத்தையும், சாட்சிகளையும், அறிவியல், விஞ்ஞானம், தடயம் இவைகளை எல்லாம், பார்த்து மருந்து கொடுப்பது 
அலோபதி மருத்துவம். 

ஆனால் இது அலோபதிக்கும், ஹோமியோபதிக்கும் உள்ள எதிரும், புதிருமான வித்தியங்களாகும். 

இயற்கையின் சக்தியை உணர்ந்த மகாத்மா காந்திஜீ அவர்கள் இளமையில் தனது மனைவி குழந்தையோடு ஆப்பிரிக்காவில் இருந்தார். 

தனது குழந்தைக்கு விடாமல் காய்ச்சல் அடித்துக் கொண்டு வந்தது. அதற்கு வைத்தியமே செய்யவில்லை.

தானாகவே இயற்கையே வந்து குணப்படுத்தி விடும் என நம்பிருந்தார்.

 ஆனால் அவரது மனைவியோ, அக்கம், பக்கம் உள்ளவர்களோ, இப்படியே இருந்தால் குழந்தைக்கு வலிப்பு வந்து மரணம் அடையும் என்று மிரட்டிக்கொண்டே இருந்தார்கள். 

ஆனால் இவர் இயற்கையை உணர்ந்தவர்.

 (ஆத்மா என்றால் உயிர், மகா என்றால் பெரிய. இவரை மகாத்மா என்று சொல்கிறோம்.

 இந்த இடத்தில் வோதத்திரி மகரிஷி கூறுவதாவது:- உடலுக்குள் இருக்கும் உயிரை ஜுவகாந்தம் என்றும், வெளியில் இருக்கும் உயிரை வான்காந்தம் என்று சொல்கிறார்.) 

வெளியில் இருக்கும் (அ) வான்காந்தத்தை (உயிரை) உணர்ந்தவர். 

ஆகவே தான் அவரை மகாத்மா என்று சொல்கிறோம். 

4 ஆவது நாளாக இரவு வரை காய்ச்சல் விடாததால் அனைவரும் இவரை திட்டி சபிக்க தொடங்கி விட்டனர். 

கலங்கி போன இவர் நள்ளிரவு கடற்கரைக்கு தானாக நடந்து போய்விட்டார். 

அங்கு கருங்கல் சிறு, ஜல்லிகளை கொட்டி பரப்பி வைக்கப்பட்டிருந்தது. கருங்கல் ஜல்லியின் மேல் படுத்து கொண்டார். 

அப்படியே தன் குழந்தைக்கு குணமாகலையே என்று எண்ணினார். 

பின்பு வீட்டுக்கு வந்து பார்த்த போது குழந்தைக்கு காய்ச்சல் நின்று விட்டது. 

இங்கிருந்து நாம் ஒன்றை சிந்தித்து பார்க்க வேண்டும்.

 அதாவது உடலையும், மனதையும் வருத்தினால் வேண்டியதை இயற்கை கொடுத்து விடும். 

ஆகவே நம் வட நாட்டு கோவில்களில் ஆணிகள் தலைகீழ் அடித்த செருப்புகளின் மீது, இறைவன் மீது நம்பிக்கை வைத்தால் கால்கள் எதுவும் ஆகாது. 

நாக்கில் வேல் குத்திக்கு கொள்வதும், இப்படி மனதை ஒருமைபடுத்திக் கொள்ளும் போது இயற்கை காக்கிறது. 

மகாபாரதத்தில் பீஸ்மரும் அம்பு படுக்கையில் படுத்திருக்கும் போது இப்படி தான் இருக்கும். 

வள்ளலார் அவர்களும் இறைவனை அருட்பெருஞ்ஜோதி  என்கிறார். 

இது போன்ற வேண்டுதலின் போது பெரிய கருணையே வடிவமான இறைவன் நம்மை காக்கிறது என்கிறார். 

வேதாத்திரி மகரிஷி அவர்களும், மெஸ்மர் அவர்களும் இங்கு இதை மனோசக்தி என்று கூறுகிறார்கள். 

எல்லாவற்றிற்கு அடிப்படை காரணம் இயற்கை தான் காரணம் என்று கூறுகிறது.

 ஜோதி, ஜோதி என்று கூறிய வள்ளலார் அவர்களும் கடைசியில் இயற்கை என்று கூறிவிட்டார்.

 வேதாத்திரி மகரிஷி அவர்களும் பாவங்கள் பல நீ செய்து கொண்டே பரமனை (கடவுள்) வேண்டுவதால் உன்னை விட்டு விடுமோ இயற்கை நியதி என்கிறார். 

ஆகவே ஒவ்வொன்றிலும் இயற்கை நியதி இருக்கிறது. 

நியதி மாறினால் இவைகள் அழிந்து போகும்.

 இதை தான் வேதாத்திரி மகரிஷி அவர்களும் சுத்தவெளி என்று கூறுகிறார். 

அதிலிருந்து தான் எல்லா உயிரினங்களும் தோன்றுகிறது என்றும், ஒவ்வொரு உயிhpனங்களுக்குள்ளும் இறைச்சக்தி இருக்கிறது என்று கூறுகிறார். 

ஆகவே ஹானிமேன் அவர்கள் மனோசக்திக்கு இயற்கை சக்தி ஆகிய தொடர்புகளை விவரித்து கூறுகிறார். 

மியாசம் என்பதை பற்றி தெரிந்து கொள்ள ஆர்கனான் ஆப் மெடிசன் என்று கூறுகிறார். 

புத்தகம் 2ல் குறிப்புகளை பார்த்துக் கொள்ள வேண்டும். 

மேலும் விளக்கம் வேண்டுமெனில் CHRONIC DISEASE 1 TO 97 கேஸ்களை பார்த்துக் கொள்ளுங்கள்