தேவையான பொருட்கள்:
இளம் தளிராக உள்ள முருங்கைக் கீரை - 1 கப்
சின்ன வெங்காயம்
- 4
மிளகு - 10
சீரகம் - 1 ஸ்பூன்
பூண்டு - 2 பல்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* முருங்கைக் கீரையை 5 கப் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
* முருங்கைக் கீரை நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், மிளகு,
சீரகம், பூண்டு, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
* சூப் பதத்திற்கு வந்தவுடன் இறக்கி பரிமாறவும். இந்த சூப் மிகவும் ஆரோக்கியமானது.
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து-
பிறகு அந்த பாலை நன்றாக வடிகட்டி சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சி
அடையும் .
முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி பொடியாக்க காலையில் கஷாயம்-செய்து அதனுடன் பனைவெல்லத்தை கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும் , நரம்புகள் புத்துணர்ச்சி பெறும்.
முருங்கைப் பூவுடன் பசும்பாலை சேர்த்து நன்றாக காய்ச்சி காலை மாலை என்று இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் கண்ணில் ஈரப்பசை அதிகமாகும் , கண்
பார்வை குறைபாடு நீங்கும்.
முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.
முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும்.
முருங்கைக் கீரையை வாங்கி நன்றாக ஆய்ந்தெடுத்து பருப்பு சேர்த்தோ, சேர்க்கா மலோ சமைத்துச் சாப்பிட, தாய்மார்களுக்கு தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும். இவ்விதம் மூன்று நாளைக்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால் நல்லபலன் கிடைக்கும்...
முருங்கைக் கீரையைச் சுத்தமாக ஆய்ந்து, அதை அம்மியில் வைத்துத் தட்டி எடுத்து கையில் வைத்துச் சாறு பிழிய வேண்டும். அந்த சாற்றில் ஒரு அவுன்ஸ் (ஷீக்ஷீ) அரை அவுன்ஸ் எடுத்து அத்துடன் சிறிதளவு உப்புச் சேர்த்துக் கலக்கிக் குடிக்க வேண்டும். சிறிது நேரத்தில் பித்த நீர் வாந்தியாக வெளியேறிவிடும். இந்த சிகிச்சையை வாரத்திற்கு ஒரு தரம் அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறைதான் செய்ய வேண்டும்...
முருங்கைச் சாறு எடுத்து அத்துடன் சிறிதளவு உப்புச் சேர்த்து கரைத்து குழந்தையானால், அரைச் சங்களவும், பெரியவர்களானால் இரண்டு சங்களவும் கொடுத்தால் சிறிது நேரத்தில் வயிற்று உப்புசம் நீங்கும்... முருங்கைக் கீரைகளை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இடுப்பு வலி, வாதமூட்டுவலி முதலியவற்றிற்கு ஒத்தடம் கொடுக்கலாம்... முருங்கைக் கீரையையும், மிளகையும் சேர்த்து அரைத்து சாறு எடுத்து தலைவலிக்குத் தடவ குணம் காணலாம்... வீக்கங்களின் மீது பூச, வீக்கம் குறைவதைக் கண்கூடாகக் காணலாம்...
அடிவயிற்றுவலி, பெண்களுக்கு ஏற்படும் சூதக வயிற்றுவலி போன்றவற்றிற்கு முருங்கைக் கீரைச் சாற்றை ஒரு சங்கு அளவு தினமும் மூன்று வேலை உண்டு வந்தால் மிகப் பலன் கிடைக்கும்...
முருங்கைக் கீரையினால் தயார் செய்யப்படும் சூரணம், உஷ்ண பேதிக்கு மிகச் சிறந்த மருந்தாகும்... முருங்கைக் கீரையை உருவிய பின் நிற்கும் ஈர்க்குடன் கறிவேப்பிலை ஈர்க்கையும் சேர்த்து கசாயம் செய்து சாப்பிடலாம்... இக்கசாயம் வயிற்றில் உள்ள பூச்சிகளைப் போக்கும் தன்மையுடையது... உடலில் உண்டான நீர்க் கோவையை நீக்கி விடும்...
முருங்கைக் கீரையோடு இரு துண்டுப் பூண்டு, ஒரு துண்டு மஞ்சள், உப்பு, மிளகு அரைத்துச் செய்யப்பட்ட மருந்து நாய்க்கடி நஞ்சை நீக்கும் மருந்தாகப் பயன்படுகிறது...
சர்க்கரை வியாதியை நீக்கும் ஆற்றல் முருங்கைக் கீரைக்கு உண்டு. முருங்கைக் கீரையுடன் போதிய அளவு எள் சேர்த்துச் சமைத்து உண்டு வர, கடுமையான சர்க்கரை நோய் விலகி, உடல் நலம் பெறும்...
இரத்த விருத்திக்கு மிகவும் பயன்படக் கூடியதுதான் முருங்கைக் கீரை... அதனால் அன்றாட உணவில் தவறாது முருங்கைக் கீரையைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இதுவரை முருங்கைக் கீரையின் மருத்து வத்தை நீங்கள் சரியாகத் தெரிந்துகொள்ளாமல் இருந்திருக்கலாம்; இனிமேலாவது அதை நம் உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால், அதனால் எண்ணற்ற பலன்களை அடை யலாம்... மேன்மையான. ஆரோக்கியத்துடன் வாழலாம்... நோய்க்கு ஆட்படாத மனிதனின் முதுமை நிச்சயமாக தள்ளிப் போகும்... என்றும் இளமையாய் வாழலாம்... என்ன சொல்வது சரிதானே...!