வாழ்க வளமுடன் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் வாழ்க வளமுடன்!

Thursday, November 06, 2014

Welcome Tamilnadu Teachers Friendly Blog




Sent from Samsung



Welcome Tamilnadu Teachers Friendly Blog


Date:2014/11/06 9:12 AM (GMT+05:30)
To: bliccenter@gmail.com
Subject: Welcome Tamilnadu Teachers Friendly Blog


நேரடி உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பணி: 2 ஆண்டுகளாக நேரடி நியமனம் இல்லை: பி.எட். பட்டதாரிகள் ஏமாற்றம்

Posted: 05 Nov 2014 07:30 PM PST

கடந்த 2 ஆண்டுகளாக நேரடி உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பணி நியமனம் நடைபெறாததால் பி.எட். பட்டதாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தொடக்கக் கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள் (ஏ.இ.இ.ஓ.) ஒன்றிய வாரியாக தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளை நிர்வகிக்கின்றனர்.

பள்ளிகளை ஆய்வு செய்வது, மாணவர்களின் கல்வி நிலை மற்றும் அரசு நலத்திட்டங்களின் செயல்பாடுகளை கண்காணித்தல், ஆசிரியர்களின் சம்பளம், அட்வான்ஸ், லோன் போன்றவற்றுக்கு ஒப்புதல் அளிப்பது, பொது வருங்கால வைப்புநிதி (ஜிபிஎஃப்), பங்களிப்பு ஓய்வூதிய நிதி (சிபிஎஃப்) மற்றும் ஓய்வூதிய கணக்கு வழக்குகளை பராமரிப்பது உள்ளிட்ட பணிகளை அவர்கள் செய்கிறார்கள்.
உதவி தொடக்கக் கல்வி அதிகாரி நியமனத்தில் 60 சதவீத இடங்கள் பதவி உயர்வு மூலமாகவும், எஞ்சிய 40 சதவீத இடங்கள் நேரடி நியமனம் மூலமாகவும் நிரப்பப்படுகிறது. குறிப்பிட்ட துறைத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணிமூப்பு அடிப்படையில் உதவி தொடக்கக் கல்வி அதிகாரியாக பதவி உயர்வு பெறுகின்றனர்.
இப்பணிக்கு முன்பு 100 சதவீதமும் பதவி உயர்வு மூலமாக நிரப்பப்பட்டு வந்தன. நேரடி நியமன முறை கடந்த 2009-ம் ஆண்டுதான் அறிமுகப்படுத்தப்பட்டது.
அப்போது உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பணிக்கு நேரடியாக 67 பேர் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, 2-வது நேரடி நியமனம் 2012-ம்ஆண்டு 34 பேர் (2010-2011-ம் ஆண்டுக்கான காலியிடங்கள்) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக உதவி தொடக்கக் கல்வி அதிகாரி நேரடி நியமனம் நடைபெறவில்லை. இதனால், பிஎட் பட்டதாரிகள் ஏமாற்றத்தில் உள்ளனர். 2011-2012, 2012-2013, 2013-2014 என 3 கல்வி ஆண்டுகளுக்கான காலியிடங்களை நிரப்ப வேண்டியுள்ளது.
நடப்பு கல்வி ஆண்டையும் (2014-2014) சேர்த்தால் 4 ஆண்டுகள் ஆகிவிடும்.
பி.எட். பட்டதாரிகள் எதிர்பார்ப்பு
நேரடி உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பணியிடங்கள் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வரலாறு, புவியியல் என வெவ்வேறு பாடங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். குறிப்பிட்ட பாடத்தில் பிஏ அல்லது பிஎஸ்சி பட்டப் படிப்புடன் பிஎட் பட்டம் பெற்றிருப்பவர்கள் தேர்வெழுதலாம்.
வயது 35-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி வகுப்பினர் மட்டும் 40 வயது வரை அனுமதிக்கப்படுகிறார்கள். 4 கல்வி ஆண்டுகளுக்குரிய நேரடி உதவி தொடக்கக் கல்வி அதிகாரி காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்று பி.எட். பட்டதாரிகள் எதிர்பார்க்கிறார்கள்.

1988 - 1995 காலகட்டத்தில் ஓய்வு: 60 ஆயிரம் அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் திருத்தி அமைப்பு

Posted: 05 Nov 2014 07:28 PM PST

1988-ஆம் ஆண்டு ஜூன் 6-ஆம் தேதிக்கும், 1995 -ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் ஓய்வு பெற்ற சுமார் 60,000 தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்த அரசாணையை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டுள்ளது.

இந்த அரசாணையின்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட ஓய்வூதியர்களின் ஓய்வூதிய கருத்துருக்கள் இந்திய தணிக்கை, கணக்குத் துறை மாநில முதன்மை கணக்காயர் (கணக்கு, பணிவரவு) அலுவலகத்தில் பெறப்பட்டுள்ளன.
இதில் தங்கள் கருத்துருக்களை திரும்பப் பெற்றவர்களும், இனி அனுப்பும் ஓய்வூதியதாரர்களும் தங்கள் துறை அலுவலர்கள் மூலம் ஓய்வூதிய கொடுப்பாணை எண், பணிப் பதிவேடு, திருத்திய ஓய்வூதிய விண்ணப்பத்துக்கான முகாந்திரம், அரசு ஆணை எண். 363-ன்படி திருத்திய ஓய்வூதியத்துக்கு பணிப் பதிவேடு கிடைக்கவில்லை எனில், 4-ஆவது ஊதியக் குழுவின் அடிப்படையில் ஊதிய நிர்ணயம் செய்யப்பட்ட அட்டவணை, ஓய்வூதியதாரரின் விருப்பப் படிவம், இருப்பிட முகவரி, தற்போது ஓய்வூதியம் பெறும் கருவூலத்தின் சார் கருவூலத்தின் பெயர் ஆகிய விவரங்களுடன் அனுப்ப வேண்டும்..
மேலும் விவரங்களுக்கு "துணை மாநில கணக்காயர் (ஓய்வூதியம்), மாநில முதன்மை கணக்காயர் அலுவலகம், 361, அண்ணா சாலை, சென்னை - 18' என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

விதிமீறும் சிபிஎஸ்இ பள்ளிகள் : 'நடவடிக்கை எடுக்கப்படும்' - இயக்குநர் ராமேஸ்வர முருகன்

Posted: 05 Nov 2014 07:28 PM PST

தமிழகத்தில் தனியார் மெட்ரிக் பள்ளிகள் கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிப்பதாக புகார் இருந்தது. தற்போது அந்நிலை மாறி, தற்போது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மற்றும் இந்திய இடைநிலைக் கல்வி சான்றிதழ் வாரியத்தின் (ஐசிஎஸ்இ) கீழ் செயல்படும் தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. தவிர, இப்பள்ளிகளில் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்ததாக, பள்ளி, கல்லூரிகள் அதிக அளவில் உள்ள நகரமாக கோவை மாவட்டம் உள்ளது. கோவை மாவட்டத்தில் சுமார் 275-க்கு மேற்பட்ட மெட்ரிக் பள்ளிகள் உள்ளன. தவிர சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ வாரியங்களின் கீழ் 50-க்கு மேற்பட்ட பள்ளிகள் மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்றன.
"சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ ஆகிய வாரியங்களின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் அதிகாரியாக பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்படுவார்' என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் இப்பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான முதற்கட்டப் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
"தமிழக அரசின் கல்விக் கட்டண நிர்ணயச் சட்டம், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளையும் கட்டுப்படுத்தும்' என்றும், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, கோவையில் உள்ள சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகள் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை முன்கூட்டியே தொடங்கும் வகையில் தற்போது விண்ணப்பங்களை அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், தமிழக அரசின் கல்விக் கட்டண நிர்ணயச் சட்டத்தின் கீழ் அல்லாமல் கூடுதலாக கல்விக் கட்டணம் வசூலிப்பதாகவும், எல்கேஜி வகுப்புக்கு கல்விக் கட்டணம், நன்கொடை என சுமார் ரூ. 1 லட்சம் வரை வசூல் செய்வதாகவும், பெயர் குறிப்பிட விரும்பாத பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர்.
விதிமீறும் சிபிஎஸ்இ பள்ளிகள்: அதேநேரத்தில், மத்திய இடைநிலைக் கல்வி வாரிய விதிகளின்படி, பள்ளிகளுக்கு முதல் வகுப்பில் இருந்து 12- ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடத்த மட்டுமே இணைப்பு வழங்கப்படுகிறது.
சிபிஎஸ்இ விதிமுறைகள் இவ்வாறிருக்க, எல்கேஜி, யுகேஜி போன்ற மழலையர் வகுப்புகளுக்கு எவ்வாறு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
சிபிஎஸ்இ பள்ளிகளில் ஒவ்வொரு கல்வியாண்டிலும் மாணவர் சேர்க்கை என்பது, அந்த வருடத்தின் தொடக்கத்தில், அதாவது பிப்ரவரி மாதத்தில் தான் தொடங்குகிறது. அதே நேரத்தில் சிபிஎஸ்இ பள்ளிகளில் முதல் வகுப்பில் இருந்து தான் வகுப்புகளை நடத்த இணைப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு எந்த அடிப்படையில் சிபிஎஸ்இ பள்ளிகள் மாணவர் சேர்க்கை நடத்துகிறன என்பது கேள்விக்குறியாக உள்ளதாக கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்புகின்றனர்.
இயக்குநர் விளக்கம்: இதுதொடர்பாக, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ராமேஸ்வர முருகனிடம் கேட்டபோது, "சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு முன்கூட்டியே மாணவர் சேர்க்கை நடத்துவது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

தொடக்க கல்வித்துறை : 8ம் தேதி சிறுபான்மை ஆசிரியர் நியமன கவுன்சலிங்

Posted: 05 Nov 2014 07:27 PM PST

தொடக்க கல்வித்துறையின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சிறுபான்மை மொழிப் பாட ஆசிரியர் கள் நியமிக்கப்பட உள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் சிறுபான்மை மொழிப்பாடங்களான தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்க தொடக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இதற்கான கவுன்சலிங் 8ம் தேதி இணைய தளம் மூலம் நடக்கிறது. எனவே சிறுபான்மை மொழிவழி இடைநிலை ஆசிரியர் பணிக்காக டிஆர்பி தெரிவு செய்துள்ள ஆசிரியர்கள் தகுதித் தேர்வு ஹால்டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள முகவரி உள்ள மாவட்டத்தில் உள்ள மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் 8ம் தேதி காலை 9 மணிக்கு ஆஜராகவேண்டும். அப்போது தங்களின் அசல் கல்விச் சான்றுகள், அதன் நகல்கள் தலா 2 எடுத்து செல்ல வேண்டும்.

பள்ளி கல்வித்துறை தகவல், அரசு பள்ளிகளில் விரைவில் கண்காணிப்பு கேமரா

Posted: 05 Nov 2014 07:25 PM PST

வேலூர் மாவட்டத்தில் கொணவட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த மாதம் 15ம் தேதி பயிற்சிக்காக வந்த ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவர், மாணவிகளிடம்  சில்மிஷம் செய்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.  பெரும்பாலான மாவட்டத்தில் இதுபோன்று சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. இந்த தவறுகளை தடுப்பதற்கும், மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை கருதியும் அரசு பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா விரைவில் பொருத்தப்பட உள்ளது. 


இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் கடுமையாக அடிப்பதன் காரணமாக பள்ளியில் கேமராக் களை பொருத்த அரசு உத்தரவிட்டிருந்தது. எனவே பெரும்பாலான தனியார் பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அரசு பள்ளிகளில் கேமராக்கள் பொருத் தப்படவில்லை. மேலும் பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை போன்ற பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இவற்றை தடுப்பதற்காக அரசு பள்ளிகளில் நூலகங்கள்,  ஆய்வுக்கூடங்கள், தலைமை ஆசிரியர் அறை மற்றும் ஆசிரியர்கள் ஓய்வுஅறை உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராவை பொருத்த நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். இந்த  கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை கண்காணிப்பதற்கு ஒருவரை நியமனம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது என்றன

முதுகலை ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம்; பட்டியல் அனுப்ப உத்தரவு

Posted: 05 Nov 2014 07:24 PM PST

ஊக்க ஊதியம் பெறும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் குறித்த பட்டியல்அனுப்புமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள்,கூடுதல் கல்வி தகுதி பெறும் பட்சத்தில், அவர்களுக்கு உயர்கல்வி ஊக்கஊதியம் வழங்குவது நடைமுறையாக உள்ளது.

"இன்சென்டிவ்' எனப்படும் இந்தஊக்க ஊதியத்தை, தனது பணிகாலத்தில் ஒரு ஆசிரியர், இரண்டு முறை பெறலாம்.முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எம்.எட்., பட்டம் பெற்றிருந்தால், அதற்கு ஒரு ஊக்க ஊதியமும், எம்.பில்., பி.எச்.டி., போன்ற படிப்பை முடித்திருந்தால் அதற்கு ஒரு ஊக்க ஊதியமும் பெற வாய்ப்பு இருந்தது. முதுகலை பட்டதாரி ஆசிரியராக உள்ளவர்கள், தொலைதூரகல்வி மூலம் எம்.எட்., படித்து முதல் ஊக்க ஊதியத்தை சுலபமாக பெற்றனர்.
தற்போது, பல பல்கலைகளில் தொலைதூர எம்.எட்., படிப்பு இல்லாததால், பலரும் அதற்கான வாய்ப்பு இழந்துள்ளனர்; எம்.எட்., படிப்போர் குறைந்து விட்டதால் எம்.பில்., - பி.எச்.டி., முடித்தவர்களுக்கு மட்டுமே இனி, இரண்டு வகையான ஊக்க ஊதியத்தையும் வழங்க, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, எம்.பில்., - பி.எச்.டி., உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்களுக்கு மட்டுமே இனி,ஊக்க ஊதியம் வழங்கப்பட உள்ளது. இத்தகைய கல்வித்தகுதி உடைய முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பட்டியலை, மாவட்டம் வாரியாக தயாரித்து அனுப்புமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கைப்பேசி மூலம் மாணவர்களைக் கண்காணிக்க வசதி: மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி

Posted: 05 Nov 2014 07:21 PM PST

கல்வியைப் பாதியிலேயே கைவிட்டவர்கள், அதை மீண்டும் தொடரும் வகையிலான புதிய திட்டம் இந்த மாதம் 11-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி புதன்கிழமை தெரிவித்தார்.

ஜெனீவாவைச் சேர்ந்த உலகப் பொருளாதார அறக்கட்டளை, இந்திய வர்த்தக கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் தில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் ஸ்மிருதி இரானி பேசியதாவது:
முதல்கட்டமாக, 9-ஆம் வகுப்பிலிருந்து தொடங்கி, ஜனவரி மாதத்துக்குள்ளாக முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சிப் படிப்புகள் வரை இது நீட்டிக்கப்படும். இந்தத் திட்டத்தை கட்டுப்பாடின்றி செயல்படுத்த மத்திய பல்கலைக்கழகங்களும்அறிவுறுத்தப்பட்டுள்ளன. இத்திட்டத்தின்படி, இந்தியாவில் எந்த மாநிலத்தில் கல்வியைப் பாதியில் நிறுத்தியிருந்தாலும், வேறு மாநிலத்தில் உள்ள கல்வி நிலையங்களிலும் சேர்ந்து மீண்டும் அதைத் தொடர முடியும்.
குடும்ப சூழ்நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பலர் கல்வியைக் கைவிட்டு வேலைக்குச் சென்றுவிடுகின்றனர். அவர்கள் மீண்டும் தங்களின் கல்வியைத் தொடர விரும்பும்போது அதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாக உள்ளன. அவ்வாறானவர்களுக்கு இத்திட்டம் பெரிதும் உதவும்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கைப்பேசி மூலம் மாணவர்களைக் கண்காணிக்க வசதி: பள்ளிகளில் மாணவர்களின் செயல்பாடுகளை கைப்பேசி மூலமாகவே பெற்றோர்கள் கண்காணிக்கும் வகையிலான புதிய திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

கல்விச்சந்தையில்தொடரும் அவலம்

Posted: 05 Nov 2014 07:20 PM PST

தமிழகத்தில் கோவை, சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் உள்ள சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் தற்போதே மாணவர் சேர்க்கை அதி காரப்பூர்வமற்ற முறையில் துவங்கியிருக்கிறது. அதுவும் மத்திய பாடத்திட்டத்தின் பேரில் லட்சக்கணக்கில் கூடுதல் கட்டணம் வசூலோடு சேர்க்கை முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெறு கிறது. கல்வித்துறையோ கல் போல் அசைய மறுக்கிறது.
தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறை அமலான பிறகு, மெட்ரிக் பள்ளிகள் மீது இருந்த மோகம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது. இதனால் கல்விச் சந்தையில் `மெட்ரிக்' பாடத்திட்டத்திற்கான விலை இறங்குமுகத் திலேயே இருக்கிறது. இதற்கு மாற்றாக மத்திய இடைநிலை கல்வி வாரியம் ( சிபிஎஸ்இ) மற்றும் இந்திய இடைநிலைக் கல்வி சான்றிதழ் வாரியத்தின் ( ஐசிஎஸ்இ ) கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களின் வணிகம் தற்போது ஏறு முகத்திலேயே இருக்கிறது.
இதன் காரணமாகவே பல கல்வி நிறுவனங்கள் 'மெட்ரிக்' முறையை முற்றும் துறந்து, சிபிஎஸ்இ அவதாரம் எடுக்க ஆரம்பித்திருக்கின்றன.கடந்த கல்வியாண்டிலேயே இது போன்ற சூழல் உருவானது. அதனை தொடர்ந்தே சென்னை உயர் நீதிமன்றம் தலையிட்டு சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பள்ளிகளுக்கு சில உத்தரவு பிறப்பித்தது. குறிப்பாக கட்டணக் கொள்ளையை தடுக்கும் விதமாக தமிழக அரசின் கல்வி கட்டணநிர்ணய சட்டம், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளி களையும் கட்டுப்படுத்தும், தமிழகத்தில் இயங் கும் இது போன்ற பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் அதிகாரியாக பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்படுவார் எனவும் தனது உத்தரவில் கூறியிருந்தது.
இந்த மூக்கணாங்கயிற்றை கொண்டே சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பள்ளிகளின் தில்லு முல்லுகளையும் தமிழக அரசு கட்டுப்படுத்த முடியும். ஆனால் இது போன்ற பள்ளிகள் விஷயத்தில் தமிழக அரசு உரிய முறையில் தலையிட வில்லை என்பதுதான் உண்மை. அதன் காரணமாகவே இன்று இந்த பள்ளிகள் அரசின் உத்தரவுகளுக்கு கட்டுப்பட மாட்டோம் என்ற அடிப்படையில் தன்னிச்சையாக மாணவர் சேர்க்கையை நடத்தி வருகின்றன. மேலும் தமிழக அரசு நிர்ணயிக்கும் கல்வி கட்டணத்தை ஒரு பொருட்டாக இவர்கள் மதிப்பதாக தெரியவில்லை. சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் ஒவ் வொரு வருடமும் பிப்ரவரி மாதத்தில்தான் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
அதுவும் ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மட்டுமே சேர்க்கை நடத்த அனுமதிக்கப்படும். ஆனால் தற்போது இந்த பள்ளிகளில் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கும் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதுவும் எல்கேஜி வகுப்பிற்கே ரூ. 1 லட்சம் வரை பல்வேறு விதமான கட்டணங் கள் வசூலிக்கப்படுகின்றன. இதனை தமிழக கல்வித்துறை எவ்வாறு அனுமதிக்கிறது என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது. மேலும் இது போன்ற பள்ளிகளில் உள்ள பாடப்பிரிவுகளில் தமிழ் மொழி ஒரு பாடமாகக் கூட இல்லை என்பதை பெருமையாக கூறும் அவல மும் அரங்கேறி வருகிறது. தமிழக அரசு உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் விதத்தில் முன்கூட்டியே மாணவர் சேர்க்கையை தடுத்து நிறுத்த வேண்டும். சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இபள்ளிகள் தமிழக அரசு நிர்ணயிக்கும் கட்டணத் திற்கு மிகாமல் வசூலிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அடுத்த அம்மா!

Posted: 05 Nov 2014 07:19 PM PST

இடுப்பு பகுதியில் உள்ள அதிகப்படியான சதையை குறைக்க உதவும் பயிற்சி

Posted: 05 Nov 2014 07:18 PM PST

உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க ஏராளமான உடற்பயிற்சி முறைகள் உள்ளன.ஆனால் இந்த உடற்பயிற்சி முறைகள் அனைத்தும் அனைவருக்கும் உகந்தது அல்ல. காரணம் ஒவ்வொரு மனித உடலும் தனித்தன்மையானவை.
எனவே உடலுக்கு ஏற்ற சரியான உடற்பயிற்சியை, தகுந்த ஆலோசனையின் பேரில், சரியான முறையில் சரியான அளவில் செய்வது நல்லது. இடுப்பு பகுதியில் சேர்ந்திருக்கும் சற்று அதிகப்படியான சதையைக் குறைப்பதற்கான சில உடற்பயிற்சி முறைகள் உள்ளன.

இந்த பயிற்சிகள் அனைத்தும் அதிகப்படியான தொடை சதையைக் குறைப்பதற்கே, பொதுவாகவே சற்று பருமனான உடல்வாகு கொண்டவர்களுக்கு இந்த பயிற்சிகள் பயன் தராது. முதலில் விரிப்பில் நேராக நின்று கொண்டு பாதங்கள் இரண்டிற்கும் 30 செ.மீ இடைவெளி இருக்குமாறு கால்களை வைத்துக் கொண்டு நேராக நிமிர்ந்து நின்று கொள்ளவும்.
கைகளை இடுப்பில் வைத்துக் கொள்ளவும். கட்டை விரல் இரண்டும் முன்னோக்கி இருக்கட்டும். அதாவது, கட்டைவிரல் முதுகைப் பார்த்தவண்ணம் இல்லாமல், வயிற்றின் மீது இருக்கட்டும். இப்பொழுது இடுப்பை இடமிருந்து வலமாக சுற்றவும். சுமார் 30 வினாடிகள் இதுபோல் இடுப்பை சுற்றவும்.
பின்னர் அடுத்த 60 வினாடிகள் அதே போல் எதிர் திசையில், அதாவது வலமிருந்து இடமாக சுற்றவும். இதுபோல் மாறி மாறி 20 முறை செய்யவும். இந்தப் பயிற்சி செய்யும்போது பாதம் முழுவதும் தரையில் அழுத்தமாக ஊன்றி இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
ஆரம்பத்தில் இந்த பயிற்சியை 20 முறை செய்தால் போதுமானது. பின்னர் படிப்படியான எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 30 முறை செய்யலாம்.

BHARTHIAR UNIVERSITY List of Candidates Provisionally selected for M.Ed. Admission (2014-16)

Posted: 05 Nov 2014 07:26 PM PST

List of Candidates Provisionally selected for M.Ed. Admission (2014-16)
More Details -> Click here


Provisional Waiting List for M.Ed. Admissions (2014-16)
More Details -> Click here

ஒரு நாளில் மரித்துவிடுமா ஈசல் - தி இந்து

Posted: 05 Nov 2014 08:57 AM PST

ஈசலின் ஆயுள் ஒரு நாள்தான்' என்பது கிராமத்தினரின் பரவலான நம்பிக்கை. ஈசலைப் பார்க்க வாய்ப்பில்லாத நகரத்து மக்களும் அதுதான் உண்மை என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனர். சமூக வலைத்தளங்களில் இந்த மூடநம்பிக்கை தீயாகப் பரவிக் கொண்டிருக்கிறது.

எறும்பு இனம்?
மழைக்காலம்தானே, ஈசல்களின் காலம். ஈசல்கள் பெருகும் இந்த நேரத்தில் மதுரை அமெரிக்கன் கல்லூரி விலங்கியல் துறை இணைப் பேராசிரியரும், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மதுரை கிளைத் தலைவருமான ப.குமாரசாமி, ஈசலைப் பற்றிச் சொல்லும் அறிவியல் உண்மைகள், பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன.
"கறையான் குடும்பத்து உறுப்பினர்தான் ஈசல். கறையான் புற்றில் இருந்து ஈசல்கள் வெளிப்படுவதைப் பார்த்திருக்கலாம். ஆரம்பத்தில், ஈசலை (Winged white ants) இறக்கை உள்ள வெள்ளை எறும்பு என்று ஆங்கிலத்தில் வகைப்படுத்தினார்கள். ஆனால், கறையான் எறும்பு இனத்தைச் சேர்ந்தது அல்ல. ஆறு கால்களைக் கொண்ட பூச்சியினத்தைச் சேர்ந்தவை என்று கண்டறியப்பட்டது.
சமுதாயப் பூச்சி
கறையான், கூட்டமாக வாழும் சமுதாயப் பூச்சி வகையைச் சேர்ந்தது. ஒரு புற்றில் ஆயிரம் முதல் 5 லட்சம் கறையான்கள்கூட இருக்கலாம்.
தேனீக்களில் உள்ளது போலவே கறையான்களிலும் ராணி, ஆண், சிப்பாய், வேலைக்காரர்கள் என்று 4 வகை உறுப்பினர்கள் உண்டு. ஒரு நாளைக்குச் சுமார் 2 ஆயிரம் முட்டைகள் வரை இடும் திறன் பெற்றவை ராணிக் கறையான்கள். 4 வகைக் கறையான்களுக்கும் இதுவே தாய். ராணியைக் கர்ப்பமடையச் செய்வதே ஆண் கறையான்களின் பணி. புற்றை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கும் பணியைச் சிப்பாய்க் கறையான்களும், உணவு சேகரிப்பு, புற்று கட்டுதல் போன்ற வேலைகளை வேலைக்காரக் கறையான்களும் செய்கின்றன.
தனி ஏற்பாடு
ஒரே புற்றில் கறையான்கள் கட்டுக்கடங்காமல் பெருகினால் இடநெருக்கடி ஏற்படும். அருகருகில் வேறு புற்றுகளைத் தோற்றுவித்தாலும், உணவுப் போட்டி ஏற்பட்டுவிடும். இதைத் தவிர்ப்பதற்காக ராணிக் கறையான்கள் சில சிறப்பான முட்டைகளை இடுகின்றன. அதில் இருந்து வெளிவருபவைதான் ஈசல்கள். இலவம் பஞ்சு மரமும் எருக்கஞ்செடியும் பஞ்சைப் பறக்கவிட்டு, தங்கள் விதைகளைப் பரப்புவதற்கு ஒப்பானதுதான் ஈசல் பறப்பதும்.
ராணி ஈசல் இடுகிற முட்டையில் இருந்து வெளியே வந்த ஈசல் குஞ்சுகள் வெள்ளை நிறத்தில், நான்கு இறக்கைகளுடன் காணப்படும். அவற்றுக்கு வேலைக்கார கறையான்கள்தான் உணவு கொடுத்துப் பராமரிக்கின்றன. வளர்ந்ததும், ஈசல்கள் புற்றில் இருந்து வெளியேறத் தயாராக இருக்கும்.
மரிப்பா, பிறப்பா?
மழைக்காலம் தொடங்கியதும், (தமிழகத்தைப் பொறுத்தவரை அக்டோபர், நவம்பர் மாதங்கள்) ஈசல்கள் போட்டி போட்டுக்கொண்டு வெளியேறும். ஈசல்களுக்கு 4 இறக்கைகள் இருந்தாலும்கூட அவற்றால் காற்றை எதிர்த்துப் பறக்க முடியாது. அதனால், காற்றில்லாத அமைதியான நேரத்தையே, அவை பறக்கத் தேர்ந்தெடுக்கின்றன.
புற்றில் இருந்து வெளிவருகிற ஈசல்களில் சுமார் 80 சதவீதம்வரை பறவைகள், தவளைகள், பல்லி, ஓணான், உடும்பு போன்றவற்றுக்கு இரையாகிவிடுகின்றன. எஞ்சியவை இறகுகள் உதிர்ந்து கீழே விழுந்ததும், ஜோடி ஜோடியாக ஈர மண்ணைத் துளைத்துக்கொண்டு உள்ளே புகுகின்றன. இப்படி இறகு உதிர்ந்து விழுகிற ஈசல்களைப் பார்த்துத்தான், அவற்றுக்கு அற்ப ஆயுசு என்ற தவறான கருத்து பரவியிருக்கலாம். இவ்வாறு மண்ணுக்குள் புகுந்த ஈசல்கள் புதிய கறையான் காலனியை உருவாக்குகின்றன" என்கிறார்.
எது உண்மை?
அதெல்லாம் சரி, ஈசலின் உண்மையான ஆயுள்காலம் தான் என்ன? "கறையான்களில் 4 உறுப்பினர் வகைகளுக்கும் வெவ்வேறு ஆயுள்காலம் உண்டு. இதன்படி, ஈசலின் (இதுவும் ராணி கறையான்தான்) ஆயுள்காலம் 12 முதல் 20 ஆண்டுகள். நான்கு வகைகளில் வேலைக்காரக் கறையான்கள்தான் குறைந்த ஆயுள்காலம் கொண்டவை. அவை 4 முதல் 5 ஆண்டுகள்வரை வாழ்கின்றன
இன்னொரு முக்கியமான விஷயம். விவசாயத்தில் மனிதர்களுக்கு முன்னோடி இந்தக் கறையான்கள்தான். தாவரங்களில் உள்ள செல்லுலோஸ்தான் கறையான்களின் உணவு. ஆனால், அவற்றை ஜீரணிக்கும் சக்தி இவற்றுக்குக் கிடையாது என்பதால், சேகரித்துவைத்த மரத்துண்டுகளின் மீது ஒரு வகைக் காளான்களைப் பயிரிடுகின்றன. காளான்கள் மிருதுவாக்கிய உணவையே கறையான்கள் உண்கின்றன" என்கிறார்.
இனிமேல் ஈசல் ஒரே நாளில் இறந்து போகும் என்று யாராவது சொன்னால், அவர்களிடம் உண்மையைச் சொல்லுங்கள்.
பேராசிரியர் குமாரசாமி

சொத்தை அளவிட்டு கல்விக் கடன் வழங்காமல் மாணவனின் திறனை அளவிட்டு கல்விக்கடன் தரப்பட வேண்டும் என்பதை அரசுக்கு அறிவுறுத்தியிருக்கிறான் கண்ணதாசன்.

Posted: 05 Nov 2014 08:56 AM PST

"கல்யாணம் ஆகி பத்துவருஷத்துல மனைவி உடம்பு சரியில்லாம தவறிட்டாள், ஒரு பெண் பிள்ளை, இரண்டு ஆண் குழந்தை. சொந்தக்காரங்க வற்புறுத்தலால பிள்ளைகளை பராமரிக்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அவளுக்கும் ஒரு பெண் குழந்தை... அஞ்சாங் கிளாஸ் வரை நாமதான் படிக்காம இப்படி வயல்லகிடந்து கஷ்டப்படுறோம். பிள்ளைகளையாவது நல்லா படிக்க வைக்கணும்னு கஷ்டப்பட்டு சேர்த்த சொத்துக்களையெல்லாம் வித்து காலேஜ் சேர்த்தேன்.....ஆனா...?"- ராஜாவின் கண்களில் தேங்கி நிற்கும் கண்ணீர்த்துளிகள் துயரத்தோடு சரிந்துவிழுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளிக்கு அருகில் இருக்கும் ஜம்புக்குட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. விவசாயியான ராஜா தன்னுடைய மூத்த மகன் கண்ணதாசனை அவனது விருப்பபடியே டாக்டராக்கிவிட வேண்டுமென்று நினைத்த அற்புதமான அப்பா. அதிர்ஷ்டவசமாக அர்மோனியா நாட்டில் உள்ள எரேவன் மருத்துவக்கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்தது.'மகன் டாக்டராகி ஸ்டெதஸ்கோப்போடு வருவான்!' என்று கனவுகளை நிரப்பி வைத்திருந்த ராஜா, மகன் சவப்பெட்டியில் வீடு வந்து சேர்ந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் விலகவில்லை.
என்ன நடந்தது....? தொண்டையை செருமிக்கொண்டு பேசுகிறார் ராஜா. ''பிள்ளைங்க எதிர்காலம் நம்மைப்போல இருக்கக்கூடாதுன்னு 4 பிள்ளைகளையும் தனியார் பள்ளியில சேர்த்தேன். அந்த செலவுகளை என்னால சமாளிக்க முடியாம கொஞ்ச கொஞ்சமா என் பெயரில் இருந்த நிலங்களை வித்துதான் படிக்கவச்சேன். மூத்த மகன் கண்ணதாசனுக்கு படிப்புனா உசுரு. தன்னோட அம்மா சின்ன வயசிலேயே உடம்பு சரியில்லாம இறந்ததால தான் டாக்டராகி ஏழைமக்களுக்கு இலவசமா சிகிச்சையளிக்கணும்னு அடிக்கடி சொல்வான்.
அதுக்காக கஷ்டப்பட்டு படிச்சான். ஆனாலும் மார்க் குறைஞ்சதால தமிழ்நாட்ல மெடிக்கல் சீட் கிடைக்கல, அப்பதான் அர்மோனியா நாட்டில் படிக்க வாய்ப்பு கிடைச்சது. முடிந்தவரை செலவு செய்வோம். பத்தாததுக்கு கல்விக்கடன் வாங்கி சமாளிச்சிடலாம்னு முடிவு செய்து அவனுடைய முதல் வருடம் கல்லூரி கட்டணம் மற்றும் விசா, தங்குவதற்கான செலவுகள்னு கிட்டத்தட்ட 7 லட்சரூபாயை கடைசியாக இருந்த நிலங்களையும் விற்று செலவு செய்தேன்.
பையனை கல்லூரிக்கு அனுப்பி வைத்துவிட்டு போச்சம்பள்ளியில இருக்கிற இந்தியன் வங்கியில லோன் கேட்க போனா, அப்ளிகேஷன் கூட அவங்க தரலை. ரொம்ப இழுத்தடிச்சாங்க. இதை அறிந்த நண்பர்கள் சிலர் "நீ இப்படியே அலைஞ்சுகிட்டு இருந்தா இவுங்கள்ட்ட லோன் வாங்க முடியாது நீதிமன்றத்துல ஒரு கேஸை போடு அப்பதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க. சென்னை உயர் நீதி மன்றத்துல வழக்கு போட்டு 20 லட்சம் ரூபாய் வரை கல்விக்கடன் வழங்கலாம்னு ஒரு தீர்ப்பும் வாங்கினேன். ஆனால் நான் கேஸ்போட்டதால வங்கி அதிகாரிகள் என் மேல கோபம் ஆகிட்டாங்க.
தீர்ப்புப்படி அப்ளிகேஷன் தரக்கூட ரொம்ப தாமதிச்சாங்க. அப்புறம் லோன் கிடைக்க இதெல்லாம் கொண்டுவாங்கனு ஒரு பட்டியல் கொடுத்தார் மேனேஜர். அதில் ரத்தசொந்தங்களில் சிலரிடமிருந்த ஷ்யூரிட்டி தவிர மற்ற எல்லாவற்றையும் தயார் செய்தேன். பரவாயில்லைன்னு முதல்ல அப்ளிகேஷனை வாங்கின மேனேஜர், ஒருமாதம் கழித்து அதையே காரணம் காட்டி திருப்பி அனுப்பிவிட்டார்கள்.
இதற்கிடையில் என் மகன் முதல்வருடத்தை முடிச்சிட்டான். இரண்டாவது ஆண்டிற்கான கட்டணம் கட்ட வேண்டிய சூழல், என்னால் முடியவில்லை. அவனது சூழலை புரிந்துகொண்டு அவனது சக நண்பர்கள் சேர்ந்து கட்டணம் முழுவதையும் கட்டிவிட்டார்கள். மற்ற செலவுக்காக மாதம் பத்தாயிரம் ரூபாய் என் சம்பாத்யத்திலிருந்து அனுப்பினேன். இதற்கிடையில் ரத்த சொந்தத்தில் ஷ்யூரிட்டி கொடுக்க ஆள் இல்லை என்பதால் என் நண்பர் ஒருவர் தருவதை மேனேஜரிடம் சொன்ன போது முதலில் சம்மதித்தார். எனது வீடு, என் நண்பரது சொத்து என ஷ்யூரிட்டி கொடுத்தோம். இதோ.. அதோ.. என இழுத்தடித்தார்களே தவிர லோன் கிடைக்கவில்லை. அதற்குள் பழைய மேனேஜர் அனந்தராமன் என்பவர் மாற்றலாகி, புதியதாக சீனிவாசன் என்பவர் பொறுப்பேற்றார். மீண்டும் பழைய பல்லவி.
இதற்கிடையில் மூன்றாவது ஆண்டு தொடங்கியும் பணம் கட்ட முடியவில்லை, வங்கியிலிருந்து கடன் பெற முடியாது என்பதை உணர ஆரம்பித்தேன். இடையில் இதையெல்லாம் சிந்தித்து கண்ணதாசனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. கடைசியில் பணம் கிடைக்கவில்லையென்ற தகவலை அவனிடம் சொன்னபோது நான் இந்தியா திரும்பி வந்துடுறேம்ப்பானு சொன்னான், நானும் என்னென்னவோ முயற்சி பண்ணியும் முடியலை, கூடிய சீக்கிரம் லோன் வந்துடும்னு அவுங்க சொல்றதுக்கே மூன்று வருஷம் ஆகிடுச்சி.
எப்படியும் பணம் புரட்டிடலாம்னு நம்பிக்கையா இருந்த ஒரு நாள் ராத்திரி "உங்க பையன் தற்கொலை பண்ணிக்கிட்டான்" னு போன்ல தகவல் வந்துடுச்சி. என கண்ணீரை துடைத்தபடி பேசினார். வங்கிக்கடன் தருவதா சொல்லி, தேவையில்லாம அதை இழுத்தடிச்சி ,அநியாயமா என மகன் உயிரை பறிச்சிடுச்சி அந்த வங்கி. எப்படியோ என் பையன் தியாகியா இருந்துட்டு போறான். ஆனா இது மாதிரி இன்னொரு மாணவன் பாதிக்கப்படக்கூடாது" என்று அழுத்தமாக சொல்கிறார் ராஜா.
சொந்த ஊருக்கு வந்த கண்ணதாசனின் உடலுக்கு ஊர் மக்கள் அனைவரும் கூடி அஞ்சலி செலுத்தினார்கள். அந்த வங்கிக்கு போலீஸ் பாதுகாப்பு போட்டிருந்தார்கள். தனது மகனின் படிப்புக்காக இருந்த சொத்துக்களையெல்லாம் விற்றுவிட்டார் ராஜா. வங்கிக்கடன் கிடைக்காததால் உயிரையும் விட்டுவிட்டார் கண்ணதாசன். வங்கி தரப்பில் அவர் நாங்கள் கேட்டத்தொகைக்கு ஷ்யூரிட்டி தரவில்லையென்று காரணம் சொல்லப்படுகிறது. எதிர்கால இந்தியா இளைஞர்களின் கையில் என கோஷமிடும் இந்தியாவில் அதன் கீழ் இயங்கும் ஒரு வங்கி ஒரு இளைஞனுக்கு தன் கோர முகத்தை காட்டி கொன்றிருக்கிறது.
"படிப்பதற்கு உனக்கு உரிமை இல்லை' என்று ஒருநாள் தனது டைரியில் எழுதிய கண்ணதாசன், இன்னொரு நாள் ஏதோ ஒரு நம்பிக்கையில் "இந்த நாள் என்னுடைய நாள். இந்த யுனிவர்சிட்டியிலிருந்து செல்லும்போது டாக்டர் பட்டத்துடன்தான் செல்வேன்" என்று எழுதியிருக்கிறார். கடைசி வரை வங்கியின் மீது நம்பிக்கை வைத்து கடைசியில் அந்த நம்பிக்கைக்கு தன் வாழ்க்கையையே தொலைத்திருக்கிறார் கண்ணதாசன்.
லட்சக்கணக்கான ஏழை மாணவர்கள் நம்பி இருக்கும் கல்விக்கடனை விதிமுறைகளை சொல்லி மறுப்பது இனியாவது தவிர்க்கப்பட வேண்டும். சொத்தை அளவிட்டு கல்விக் கடன் வழங்காமல் மாணவனின் திறனை அளவிட்டு கல்விக்கடன் தரப்பட வேண்டும் என்பதை அரசுக்கு அறிவுறுத்தியிருக்கிறான் கண்ணதாசன். அதற்கு அவன் கொடுத்த விலை அவனது உயிர்.
எம்.புண்ணியமூர்த்தி
படங்கள் : வி.சதீஸ்குமார்

அடுத்தாண்டு முதல் புதிய கல்விக் கொள்கை அமல்?

Posted: 05 Nov 2014 05:36 AM PST

அடுத்தாண்டு முதல், புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.


ஒரு கல்வி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் இதுகுறித்து கூறியதாவது: புதிய கல்விக்கொள்கையை மத்திய அரசு விரைவில் தொடங்கும். கல்விக் கொள்கையில், அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் ஆகியோர் மட்டுமே பங்களித்தால் போதாது, பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களும் பங்கெடுக்க வேண்டும்.

இந்த நாட்டின் தலைவிதி, நெடுங்காலமாக, அரசியல் செய்தோரிடம் சிக்கிக் கொண்டிருந்தது. இப்போதுதான், அது விடுதலையடைவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

கல்வித் தொடர்பான மாற்றம் என்பது ஒரு அரசில் மட்டுமே நிகழ்ந்துவிடாது. அது அடிமட்ட அளவிலும் நிகழ வேண்டும் மற்றும் மாற்றத்தைக் கொண்டுவரும் வாகனங்களாக ஆசிரியர்கள் திகழ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அந்த நிகழ்ச்சியில், பள்ளிகளில், முழுமையான சுய-மதிப்பாய்வை மேற்கொள்ளும் வகையிலான, சரன்ஷ் என்ற அம்சத்தையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த அம்சத்தின் மூலம், கற்றலில் குறைபாடுள்ள மாணவர்கள், பெரிதும் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1,800 முதுநிலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம்! அடுத்த வாரம் அறிவிப்பு வெளியாகிறது

Posted: 05 Nov 2014 12:39 AM PST


தமிழகத்தில் விரைவில் 1,800 முதுநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, 4ஆம் தேதி மதுரை வந்த தமிழக ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் மற்றும் இயக்குநர் அறிவொளியிடம் நேரில் கேட்டபோது, ''அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலைஆசிரியர் பணியிடங்களில் கடந்த ஆண்டு 2 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளனர். 


அதேபோல், இந்த ஆண்டு 1,800 முதுநிலை ஆசிரியர்களை தேர்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும்.முதுநிலை ஆசிரியர்களை தேர்வு செய்ய சிறப்பு எழுத்து தேர்வு நடத்தப்படும். தேர்வுக்கு 150 மார்க்குகளும், வேலை வாய்ப்பு அலுவலக சீனியாரிட்டிக்கு 4 மார்க்குகளும், ஆசிரியர்களின் பாடம் நடத்தும் அனுபவத்திற்கு 3 மார்க்குகளும்வழங்கப்படும். மொத்தத்தில் 157 மார்க்குகளை அடிப்படையாக கொண்டு முதுநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்'' என்றார்.

ஆசிரியர்களின் போராட்டங்களுக்கு தீர்வுகாணும் வகையில் பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

Posted: 05 Nov 2014 12:28 AM PST


மாத ஓய்வூதியம், பணி நீட்டிப்பு ஆகிய பிரச்னைகள் குறித்த ஆசிரியர்களின் போராட்டங்களுக்கு தீர்வு காணும் வகையில், பள்ளிக்கல்வித் துறை ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்த, 2003ல் இருந்து, பணியில் சேர்ந்த ஆசிரியர், கல்வி ஆண்டின் பாதியில், ஓய்வூதிய வயதை எட்டினாலும், கல்வி ஆண்டு இறுதிவரை, பணியில் தொடரலாம். ஓய்வு பெறுவதற்கு முன் பெற்ற சம்பளம், மறு நியமன காலத்திலும் வழங்கப்படும் என அத்துறை அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் பலன்கள்

மொத்தம், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பலன் அடைவர். ஒரு கல்வி ஆண்டான, ஜூன் முதல், மே வரையிலான, எந்த மாதத்தில் ஆசிரியர் ஓய்வு வயதை எட்டினாலும், மாணவர் நலனை கருத்தில் கொண்டு, அந்த ஆசிரியர், அந்த கல்வி ஆண்டு முழுவதும், வேலையில் இருக்க அரசு அனுமதித்துள்ளது.

ஓய்வு பெறும்போது, என்ன சம்பளம் வாங்கினாரோ, அதே சம்பளம், அந்த கல்வி ஆண்டு முடியும் வரை பெற முடியும். பள்ளிக் கல்வித் துறையின் இந்த அறிவிப்பை, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர், பேட்ரிக் ரைமண்ட் வரவேற்றுள்ளார்.

குறுகிய நாட்களில் பாடத்திட்டங்களை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆசிரியர்கள்

Posted: 05 Nov 2014 12:27 AM PST


இரண்டாம் பருவத்தேர்வு மற்றும் அரையாண்டு தேர்வுக்கு மாணவர்களை தயார்செய்ய குறுகிய காலமே உள்ள நிலையில், பாடத்திட்டத்தை துரிதமாக முடிக்க வேண்டிய கட்டாயம் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.


பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, அரையாண்டு தேர்வில் அனைத்து பாடங்களில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படும் என்பதால், பாடங்கள் முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டிருக்க வேண்டும். காலாண்டு தேர்வுகள் நிறைவடைந்து, அரையாண்டு தேர்வுகள் வரும் டிச., மாதம் துவங்குகிறது.

கடந்த அக்., மாதத்தில் பெரும்பாலான பள்ளி வேலைநாட்கள் பண்டிகை விடுமுறை மற்றும் மழை விடுமுறைகளால் பாதிக்கப்பட்டன. இதனால், அரையாண்டு தேர்வுக்குள் பாடங்களை நடத்தி முடிக்கவும், அதற்குள் மாணவர்களை தயார் படுத்த வேண்டிய கட்டாயத்திலும் ஆசிரியர்கள் உள்ளனர்.

விடுமுறை நாட்களை ஈடுகட்ட, சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படுகின்றன. நடப்பு கல்வியாண்டில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில், சிறப்பு வகுப்புகளை நடத்துவதில், கல்வித்துறை தனிகவனம் செலுத்தியது. இதனால், காலாண்டு தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தில் முன்னேற்றம் காணப்பட்டது.

அரையாண்டு தேர்வு நெருங்கி வரும் நிலையில், அதற்குள் பாடங்களை முழுமையாக நடத்தி முடிப்பதில் ஆசிரியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். எனினும், பள்ளி வேலை நாட்களில் நடக்கும் பயிற்சிக்கு செல்வதால், பாடங்கள் நடத்துவது பாதிக்கப்படுவதாக, ஆசிரியர்கள் கூறுகின்றனர். அலுவலக பணி மற்றும் பிற பணிகளுக்காக ஆசிரியர்கள் திருப்பூர் வரை சென்றுவர வேண்டி உள்ளது. இத்தகைய சிக்கல்களால், பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் பணி தடைபடுவதாக, ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், "கடந்த மாதத்தில் விடுமுறை நாட்கள் அதிகரித்ததால், பாடங்களை, அரையாண்டு தேர்வுக்குள் நடத்தி முடிக்க குறுகிய அவகாசமே உள்ளது. அரையாண்டு தேர்வில் பாடம் முழுவதும் கேட்கப்படும் என்பதால், மாணவர்களுக்கு துவக்கத்தில் இருந்து புத்தாக்க பயிற்சி அளிக்க வேண்டியுள்ளது. நடப்பு மாதத்தில் பள்ளி வேலைநாட்களில் நடக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை, அரசு குறைத்து கொண்டால், மாணவர்களை தயார்ப்படுத்த உதவியாக இருக்கும்" என்றார்.

பள்ளிகளின் வளாகத்திலேயே மாணவியர் கழிப்பிடங்கள் அமைக்க உத்தரவு

Posted: 05 Nov 2014 12:27 AM PST


திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளின் வளாகத்திலேயே, மாணவியர் கழிப்பிடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


திருப்பூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை என மொத்தம் 1,460 அரசு பள்ளிகள் உள்ளன. இவற்றில், பெரும்பாலான பள்ளிகளில் கழிப்பிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. சில பள்ளிகளில் கழிப்பிட வசதி இல்லை.

போதுமான கழிப்பிட வசதி இல்லாமல், மாணவிகள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். சுப்ரீம் கோர்ட் உத்தரவையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில், கழிப்பிட வசதியை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, ஒன்றியம் வாரியாக குழு அமைத்து, பள்ளிகளில் கள ஆய்வு நடத்தி, அறிக்கை தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில், ஒவ்வொரு ஒன்றியத்திலும் குழு அமைக்கப்பட்டு, ஆய்வு துவங்கியுள்ளது. ஒன்றியம் வாரியாக அமைக்கப்பட்டுள்ள குழுவினருக்கு, ஊரக வளர்ச்சித்துறை மூலம், தேவையான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதுகுறித்த விளக்க கூட்டம், மாவட்டம் முழுவதும் நடந்து வருகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் நேரடியாக கள ஆய்வு நடத்தி, முறையாக அறிக்கை தயாரிக்க வேண்டும்.

பெரும்பாலும் பள்ளி வளாகத்திற்குள்ளேயே கழிப்பிடம் அமையும் வகையில் திட்டமிட வேண்டும். எக்காரணத்தை கொண்டும், ரோட்டை கடந்து மாணவியர், கழிப்பிடம் செல்வது போல் அமைக்க கூடாது. மாணவர் கழிப்பிடமும், மாணவியர் கழிப்பிடமும் அருகருகே இருக்கக் கூடாது. தனித்தனி கழிப்பிடங்கள் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறியதாவது: மாணவிகளுக்கு அமைக்கப்படும் கழிப்பிடத்தை ஆசிரியைகள் பயன்படுத்த கூடாது. கட்டப்படும் கழிப்பிடத்தை பூட்டி வைத்துக்கொண்டு, சாவி இல்லை என்று தட்டி கழிக்கவும் கூடாது. தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு, தலா 35 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கழிப்பிடம் அமைக்க வேண்டும். உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கழிப்பிட வளாகங்கள் அமைக்கப்பட வேண்டும்.

எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ., நிதியில் கழிப்பிடம் அமைக்க, ஒன்றிய நிர்வாகங்கள் ஆவண செய்ய வேண்டும். மாணவியருக்கு கழிப்பிட வசதி ஏற்படுத்துவது, சுப்ரீம் கோர்ட் உத்தரவு என்பதால், குழுவினர் சிறப்பாக கள ஆய்வுசெய்து, அறிக்கை அளிக்க வேண்டும். இல்லை என்றால், கோர்ட் அவமதிப்பு நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றனர்.

அதிகரித்த ஏடிஎம் சேவைக் கட்டணம்...சமாளிக்க 10 வழிகள்!

Posted: 04 Nov 2014 08:52 PM PST


ஆர்பிஐ அறிவித்த முக்கிய அறிவிப்புகளால், ஏடிஎம் மூலம் பணம் எடுக்க கடந்த நவம்பர் முதல் தேதி முதல் புதிய நெறிமுறைகள் அமலுக்கு வந்தன. இதனால் ஒருவர், மாதத்துக்கு அவர் கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏடிஎம்மில் 5 முறையும், மற்ற வங்கிகளின் ஏடிஎம்மில் 3 முறையும் ஆக மொத்தம் 8 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்கும் சூழல் உருவாகியுள்ளது. அதற்குமேல் செல்லும்போது 20 ரூபாய் வரை பயன்பாட்டு கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.

இந்தச் சூழலை சமாளிக்க 10 வழிகள் இதோ...
1. உங்களுக்கான ஒரு மாத செலவுகளைத் திட்டமிட்டு அதற்கேற்றவாறு பணத்தை எடுத்து சரியாக செலவு செய்யப் பழகுங்கள். இப்படி செய்யும்போது இரண்டு அல்லது மூன்று பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே ஏடிஎம் கார்டினை பயன்படுத்தும் நிலையை உருவாக்கிக் கொள்ளலாம்.
2. உங்களால் ஒரு மாதத்துக்கான செலவை முழுமையாக திட்டமிட சிரமமாக இருந்தால், ஒரு வாரத்துக்கு ஒருமுறை என்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இதையும் நீங்கள் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் முதலில் செய்யுங்கள்.
3. தொலைபேசிக் கட்டணம், ரயில் டிக்கெட் முன்பதிவு கட்டணம் ஆகியவற்றை ஆன்லைன் மூலம் செய்யுங்கள். ஆன்லைன் பரிவர்த்தனை செய்வதன் மூலம் உங்கள் நேரத்தையும் தேவையில்லாமல் ஒரு ஏடிஎம் பயன்பாட்டையும் குறைக்கலாம்.
4. இந்த மாதம் இந்த செலவு மட்டுமே என திட்டமிட்டால், அடிக்கடி ஏடிஎம்மை நாட வேண்டிய அவசியம் இருக்காது.
5. அதிகத் தொகையை எடுக்க நேரிட்டால், வங்கிக்குச் சென்று எடுங்கள். இதன்மூலம் ஏடிஎம் கார்டின் பயன்பாட்டை வெகுவாகக் குறைக்க முடியும்.
6. காசோலைகளைப் பயன்படுத்த கட்டணம் இல்லை என்பதால், காசோலைகள் ஏற்றுக்கொள்ள கூடிய இடங்களில் காசோலைகளைப் பயன்படுத்துங்கள்.
7. அனைவருக்குமே தற்போது சம்பளம் என்பது பெரும்பாலும் நேரடியாக வங்கி கணக்கில் சேரும்படியுள்ளது. உங்கள் சம்பளத்தில் முதன்மை செலவுகள் என்ன என்பதை உணர்ந்து, அதனை செலவு செய்ய ஒரே நேரத்தில் பணத்தை எடுத்து செலவழிப்பது நல்லது. உதாரணமாக வீட்டு வாடகை, பள்ளிக் கட்டணம், கல்லூரிக் கட்டனம், பஸ் பாஸ் போன்றவற்றை கணக்கிட்டு ஒரேமுறையில் எடுப்பது சிறந்தது.
8. கல்லூரி மாணவர்கள்தான் இதன்மூலம் அதிகம் பாதிக்கப்படுவார்கள். அதற்கு பெரும்பாலும் இன்டர்நெட் பேங்கிங் வசதி இருக்கும். அதனை பயன்படுத்தி தங்களது தேவைகளையும், பயன்பாட்டு கட்டணங்களையும் குறைக்கலாம்.
9.ஷாப்பிங் செய்யும்போது பணத்துக்குப் பதிலாக டெபிட் / கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துங்கள். பெரிய மால்களில் ஏடிஎம்கள் வைத்திருப்பார்கள். அவற்றில் சென்று பணத்தை எடுத்து மால்களின் பல கடைகளில் செலவு செய்யாமல், ஒரு மாதத்துக்கு எவ்வளவு செலவு செய்வோம் என கணித்து, அந்த தொகைக்கு அந்ததந்த மால்களின் கார்டுகளை பெற்று, அதன்மூலம் ஷாப்பிங்குக்காக பணம் எடுத்து செலவழியும் பயன்பாட்டு கட்டணத்தைத் தவிர்க்க பாருங்கள்.
10. மெட்ரோ நகரங்களில் ஏடிஎம் பயன்பாட்டுக்கு குறைவான வாய்ப்புகள் வழங்கப்படுவதால், நீங்கள் இருக்கும் இடத்தில் அல்லது பயணிக்கும் இடத்தில் மெட்ரோ எல்லைக்குள் அல்லாத ஏடிஎம்களைப் பயன்படுத்தினால் உங்களது வாய்ப்புகளை மிச்சப்படுத்தலாம்.
இந்த பத்து வழிகளை பயன்படுத்தி தேவையில்லாத பயன்பாட்டு கட்டணத்தைக் குறைக்கலாமே!