KALVI SAITHI-TN EDUCATIONAL FLASH NEWS |
Date:2014/11/06 3:07 AM (GMT+05:30)
To: bliccenter@gmail.com
Subject: KALVI SAITHI-TN EDUCATIONAL FLASH NEWS
- வரலாறு இருக்கிறது; வரலாற்று உணர்வு...?
- சிறுபான்மை மொழிப்பாட இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநியமன கலந்தாய்வு அறிவிப்பு.
- குறுகிய நாட்களில் பாடத்திட்டங்களை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆசிரியர்கள்
- அடிப்படையே தெரியாத ஆசிரியை சஸ்பெண்ட் !
- PG TRB:தமிழகத்தில் 1,800 முதுநிலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம்! அடுத்த வாரம் அறிவிப்பு வெளியாகிறது-vikatan News
- ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்! : கல்வியாண்டு இறுதி வரை பணியாற்றலாம் மறு நியமன காலத்திலும் குறைவில்லாத சம்பளம்
- Additional Need BT Posts Go
- தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - கல்வியாண்டின் இடையில் வயதுமுதிர்வு காரணமாக ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு கல்வியாண்டு இறுதிவரை மறு நியமனம் வழங்க பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு›
- குரூப் 2 பிரதான தேர்வுக்கான ஏற்பாடுகள் தயார்
- உதவிப் பேராசிரியர் நேரடி நியமனம்: தேர்வுப் பட்டியல் வெளியீடு
- ராஜேந்திர சோழன் 1000-ஆவது ஆண்டு தொடக்கம்: நவம்பர் 9-இல் ஆர்.எஸ்.எஸ். பேரணி
- பிளஸ்-2 தனித்தேர்வர்களுக்கு இணையத்தில் விடைத்தாள்
- பிளஸ் 2 விடைத்தாள் நகல் பதிவிறக்கம் எப்போது?
- குரூப் - 2 தேர்வுக்கு 'ஹால் டிக்கெட்'
- அந்தமான் அருகே புதிய புயல் 'அஷோபா' உருவாகிறது.
- ஆசிரியர்கள் பணப்பலன்களை உடனடியாக வழங்க கோரிக்கை
- சுந்தரனார் பல்கலை: ஐஐபிஎம் அரியர் செட் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு .
- 12-ம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள் 5 பேர் டிஸ்மிஸ் - ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் நடவடிக்கை
- ஆபத்தான வகுப்பறைகள், கட்டடங்களை பயன்படுத்த கல்வித்துறை தடை!
- எந்த ஒரு தகவலையும் சரியாக விசாரிக்காமல் பரப்பக்கூடாது - கமிஷனர் ஜார்ஜ்
- நாட்டில் முதன்முறையாக ஏழை தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான தரமான பள்ளி!
- திருவள்ளுவர் பல்கலை: 41 ஆயிரம் மாணவர்களுக்கு டிசம்பருக்குள் சான்றிதழ் !
- 10-ம் வகுப்பு இடைநிலைத் தேர்வு: விண்ணப்பங்கள் இணையம் மூலம் பதிவேற்றம்.
வரலாறு இருக்கிறது; வரலாற்று உணர்வு...? Posted: 05 Nov 2014 07:10 AM PST வரலாற்றுப் பெருமிதம் கொண்ட இளைஞர்கள் எந்த நாட்டில் அதிகமாக இருக்கிறார்களோ, நிகழ்காலம் குறித்துக் கவலை கொள்ளும் இளைஞர்கள் எந்த தேசத்தில் அதிகமாக உள்ளனரோ, எதிர்காலம் பற்றிய கனவுகளை நெஞ்சில் தேக்கிக் களமிறங்குகிற இளைஞர்கள் எந்த மண்ணில் அதிகமாக வாழ்கின்றனரோ அந்த நாட்டின் வளர்ச்சியை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது' என்று மகான் அரவிந்தர் கூறியிருக்கிறார். இன்று உலக அரங்கில் இந்தியா கம்பீரமாக நிற்பதற்கு பல காரணங்கள் இருப்பினும் ஹரப்பா, மொகஞ்சதாரோ, நாளந்தா, தட்சசீலம் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களே முக்கியக் காரணங்களாகத் திகழ்கின்றன. சிந்துவெளி நாகரிகம் நிலவிய நாடு இந்தியா என்பது தெரிந்த பின்னர்தான் இந்தியத் தாயின் முகத்தை உலகத்தார் உன்னிப்பாகப் பார்த்தனர். சிறப்பிற்குச் சிறப்புச் சேர்த்த இவற்றிற்கெல்லாம் அகழாய்வுகள்தான் அடிப்படை. தமிழ் மண்ணில் - ஆதிச்ச நல்லூர், அரிக்கமேடு, நொய்யல்கரைக் கொடுமணல் போன்ற சில இடங்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் விளைவாகத் தமிழ்த்தாய் புத்தெழுச்சி பெற்று வீறு நடை போடுகிறாள். இந்தப் பின்புலத்தில் இன்றைய தமிழ்நாட்டில் அகழ்வாராய்ச்சியின் நிலை என்னவாக உள்ளது என்பதை சிந்திப்பது அவசியமாகும். இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறை, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகப் பழங்கால வரலாற்றுத் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டுத் தொல்லியல் துறை ஆகிய நான்கு அமைப்புகள் மட்டும்தான் தமிழகம் முழுவதிலும் அகழ்வாய்வு செய்வதற்குத் தகுதியும் உரிமையும் பெற்ற அமைப்புகளாகும். இதிலும் கூட, தமிழ்நாட்டிலுள்ள மூன்று அமைப்புகள் தன்னிச்சையாக தாங்கள் விரும்பிய இடங்களில் விரும்பியவாறு ஆய்வுகளில் இறங்கிவிட முடியாது. மத்திய அரசு நிறுவனமான இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையின் அனுமதியைப் பெற்ற பின்னர்தான், மீதமுள்ள மூன்று அமைப்புகளும் களமிறங்க விதி அனுமதியளிக்கிறது. அகழாய்வில் இந்திய அளவில் குறிப்பிடத் தகுந்த அறிஞர்களாக தமிழ் மண்ணைச் சார்ந்த வரலாற்றாய்வறிஞர்கள் ஒய். சுப்பராயலு, கே. ராஜன், ஆர். நாகசாமி, கே.வி. இராமன், பி. சண்முகம் ஆகியோர் திகழ்கின்றனர். அகழாய்வில் இவர்களது அறிவும், அனுபவமும், நுட்பமான அணுகுமுறையும் இத்துறைச் சார்ந்த அனைவராலும் வியந்து போற்றப்படுகிறது. இவர்களோடு இத்துறையில் முத்திரைபதித்த இன்னும் சிலர் தமிழகத்தில் உள்ளனர். இவ்வளவிருந்தும் தமிழக அகழாய்வுப் புள்ளி விவரங்கள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. தமிழகத்தில் அகழாய்வுக்கு ஏற்ற இடங்கள் என்று அறிஞர்களால் பட்டியலிடப்பட்ட இடங்களின் எண்ணிக்கை சுமார் 2,000 ஆகும். அறிஞர்கள் தங்களுக்குள் ஆய்வாளர் குழு ஒன்றை அமைத்துக் கொண்டு, நீண்ட கள ஆய்விற்குப் பிறகு ஆய்விற்கான 2,000 இடங்கள் குறித்த பட்டியலைத் துல்லிமான விளக்கங்களுடன் மாவட்ட வாரியாக வரிசைப்படுத்திப் புத்தகமாக வெளியிட்டுள்ளனர். இதில் சுமார் நூறு இடங்களில் மட்டும் தான் இதுவரை அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மீதமுள்ள இடங்களெல்லாம் கேட்பாரில்லாமல் அப்படியே கிடக்கின்றன. ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இடங்களிலும் பத்து சதம், பதினைந்து சதம் பரப்பளவில் மட்டுமே இதுவரை அகழாய்வுகள் நடைபெற்றுள்ளன. அதிலும் பெரும்பகுதி ஆய்வுப்பணிகள் ஆமை வேகத்தில் நடக்கின்றன. சில ஆய்வுகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. ஏறக்குறைய நூறு இடங்களில் நடைபெற்றுள்ள அகழ்வாய்வுகளின் முடிவுகளில் சுமார் 20 சதவீதம் மட்டுமே அறிக்கைகளாக வெளியிடப்பட்டுள்ளன. அப்படியென்றால், இந்த நூறு இடங்களில் நடைபெற்ற ஆய்வுகளால் என்ன பயன்? ஆய்வு முடிவுகளை அறிக்கைகளாக விரைவில் வெளியிட்டால் மட்டுமே அவை மற்ற ஆய்வாளர்களுக்கும் ஆய்வில் ஆர்வமுள்ளவர்களுக்கும் பயன்பட்டு அடுத்தடுத்த ஆய்வுகளுக்கு அடித்தளமிடுவதாக அமையும். 1985-இல் கொடுமணல் ஆய்வுகள் தொடங்கப்பட்டு கடந்த 28 ஆண்டுகளாக ஏழு ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இதுவரை பத்து சதவீதப் பகுதிகளில் மட்டுமே அகழாய்வுகள் நடைபெற்றுள்ளன. கால்நூற்றாண்டுக்கும் மேலாக நடைபெற்றுவரும் மிக முக்கியமான இந்த ஆய்வு சம்பந்தமான எந்தவொரு விரிவான அறிக்கையும் இதுவரை வெளியாகவில்லை. கொடுமணல் அகழாய்வின் மூலம் சங்க காலத்தின் சிறப்பு நிரூபிக்கப்பட்டுள்ளது. 2,500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் மேலை நாடுகளுடன் வணிகத் தொடர்பு வைத்திருந்தது கொடுமணல் ஆய்வின் மூலம் நிறுவப்பட்டுள்ளது. அப்போதே இரும்புக் கருவிகள் புழக்கத்தில் இருந்ததும், இரும்பு உருக்கும் களங்கள் இருந்ததும் இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிந்துவெளி நாகரிகம் என்பதைப்போல நொய்யல்வெளி நாகரிகம் என்ற ஒரு நாகரிகம் தமிழ் மண்ணில் சிறந்து விளங்கியதைக் கொடுமணல் அகழாய்வு உலகத்திற்கு அறிவித்தது. பண்டையக் கால மக்கள் விட்டுவிட்டுச் சென்ற பொருள்கள், அக்காலத்தில் புழக்கத்திலிருந்த காசுகள், முத்திரைகள், வணங்கிய மண் பொம்மைகள், உலோகப் பொருள்கள் போன்ற எண்ணற்ற தொல்லியல் சான்றுகள் அகழ்வாராய்ச்சியின் மூலம் கிடைக்கப்பெறுகின்றன. இவற்றையெல்லாம் சேகரித்து ஆய்வுகளை மேற்கொண்டால், அக்கால மக்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்வதோடு, வரலாற்றுக் காலக் கணக்கீடு செய்வதற்கும் மிகவும் பயன்படும். இலக்கியங்களிலும், புராணங்களிலும் வெளிப்படும் பெருமைகளைக் காட்டிலும் இத்தகைய அகழாய்வின் மூலமாக ஆதாரங்களோடு வெளியிடப்படும் வரலாற்று உண்மைகளையே அயல்நாட்டவர் ஏற்கின்றனர். ஜோர்டான் - பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள நாடு. வளமும் வருமானமும் குறைந்த நாடு. அந்த நாட்டில் அகழாய்வுகளின் மூலம் ஏராளமான பழங்காலப் பொருள்கள் கிடைத்தன. வரலாற்று ஆர்வம் மிக்க சுற்றுலாப் பயணிகள் ஜோர்டன் நாட்டிற்கு தொடர்ந்து வந்து செல்கின்றனர். இதுவே அந்நாட்டின் பொருளாதார நிலையை பெரிய அளவுக்கு உயர்த்தியுள்ளது. தஞ்சைப் பெரியகோயில், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம், மாமல்லபுரம் போன்ற பகுதிகள் நம் தமிழ்நாட்டைத் தலை நிமிர வைத்துள்ளன. அத்தனை நூற்றாண்டுகளுக்கு முன்பே நாகரிகம் செழிக்க, பண்பாடு சிறக்க தமிழர்கள் வாழ்ந்துள்ளனர் என்ற வரலாற்று உண்மை அச்சிற்பங்களுக்குள் பொதிந்து கிடக்கிறது. நமக்கு வரலாறு இருக்கின்ற அளவுக்கு நாம் வரலாற்று உணர்வுடன் இருக்கின்றோமா என்ற கேள்வி எழுகிறது. வரலாற்றுப் பெருமையை எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும் வாங்க முடியாது. மத்திய - மாநில அரசுகள் அகழாய்வுக்குப் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்கின்றனர் ஆய்வாளர்கள். தொலைநோக்குப் பார்வை, வரலாற்றுச் சிந்தனை, ஆய்வுகளின் முக்கியத்துவம் குறித்த சரியான புரிதல் ஆகியவை நிதி ஒதுக்கீடு செய்பவர்களுக்குத் தேவை. வரலாற்றை விருப்பப்படி வளைக்க முற்படுவோர், அதனை வளர்க்க முயற்சிப்பதில்லை. தமிழ்நாட்டில் வரலாற்றுப் பாடங்களில் அதிலும் குறிப்பாகத் தொல்லியல் படிப்பில் முதுகலைப் பட்டமும் முனைவர் பட்டமும் பெற்றவர்கள் ஏராளமாக உள்ளனர். அவர்களில் பலர் வேலையில்லாமலும் இருக்கின்றனர். இத்துறையில் ஆர்வமும் அக்கறையும் உள்ள, வளர்ந்து வரும் வரலாற்று ஆய்வாளர்களுக்குத் தகுந்த முறையில் வழிகாட்டுவதற்கும் பயிற்சியளிப்பதற்கும் தகுதி மிக்க, பெரும் வரலாற்று அறிஞர்கள் பலர் இங்கு உள்ளனர். இதற்கென்று தனித்துறையும் அதற்கான அலுவலர்களும் இருக்கின்றனர். இத்தனையிருந்தும் எத்தனையோ இடங்களில் ஆய்வுகளை இன்னும் தொடங்கவேயில்லையே, ஏன்? கேரள அரசு சார்ந்த நிறுவனமான கேரள வரலாற்று ஆய்வுக் கழகம், பிரிட்டிஷ் அரசு மியூசியத்திற்கு விண்ணப்பித்து கேரளத்தில் நடைபெறுகிற வரலாற்று ஆய்வுக்காக எழுபது லட்ச ரூபாய் நிதியுதவியைப் பெற்றுள்ளது. கலை, அறிவியல் கல்லூரிகள் பலவற்றில் வரலாற்றுத் துறையோ, வரலாற்றுப் பாடமோ கிடையாது. பாரதியார் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறை இல்லை. வரலாற்றை ஏதோ காலாவதியாகி விட்ட பாடமாக நினைக்கின்றனர். "கடந்த கால இந்தியாவைப் படிப்போம் - எதிர்கால இந்தியாவைப் படைப்போம்' என்ற முழக்கத்தை இளைஞர்கள், மாணவர்களின் நெஞ்சில் கல்வெட்டு போல் பதிய வைக்க வேண்டும். தமிழ் மண்ணில் பொதிந்து கிடக்கிற வரலாற்றுச் செல்வங்கள் அனைத்தையும் வெளிக் கொண்டு வந்து அவற்றையெல்லாம் ஆவணங்களாக உருவாக்கினால் உலகமே தமிழகத்தைத் திரும்பிப் பார்க்கும். எங்கிருந்து வந்தோம் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் எங்கே செல்ல வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள முடியாது. பூமிக்குக் கீழ் தங்கச் சுரங்கம் இருப்பதை அறியாமல் பிச்சைப் பாத்திரத்துடன் அமர்ந்திருக்கிறோம் நாம். |
சிறுபான்மை மொழிப்பாட இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநியமன கலந்தாய்வு அறிவிப்பு. Posted: 05 Nov 2014 06:56 AM PST சிறுபான்மை மொழிப்பாடங்களான தெலுங்கு, மலையாளம்,கன்னடம், உருது ஆகிய பாடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநியமன கலந்தாய்வு வரும் நவம்பர் 8 ம் தேதி சனிக்கிழமை காலை 9மணிக்கு நடைபெறும் என அறிவிப்பு. |
குறுகிய நாட்களில் பாடத்திட்டங்களை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆசிரியர்கள் Posted: 04 Nov 2014 11:06 PM PST இரண்டாம் பருவத்தேர்வு மற்றும் அரையாண்டு தேர்வுக்கு மாணவர்களை தயார்செய்ய குறுகிய காலமே உள்ள நிலையில், பாடத்திட்டத்தை துரிதமாக முடிக்க வேண்டிய கட்டாயம் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, அரையாண்டு தேர்வில் அனைத்து பாடங்களில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படும் என்பதால், பாடங்கள் முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டிருக்க வேண்டும். காலாண்டு தேர்வுகள் நிறைவடைந்து, அரையாண்டு தேர்வுகள் வரும் டிச., மாதம் துவங்குகிறது. கடந்த அக்., மாதத்தில் பெரும்பாலான பள்ளி வேலைநாட்கள் பண்டிகை விடுமுறை மற்றும் மழை விடுமுறைகளால் பாதிக்கப்பட்டன. இதனால், அரையாண்டு தேர்வுக்குள் பாடங்களை நடத்தி முடிக்கவும், அதற்குள் மாணவர்களை தயார் படுத்த வேண்டிய கட்டாயத்திலும் ஆசிரியர்கள் உள்ளனர்.விடுமுறை நாட்களை ஈடுகட்ட, சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படுகின்றன. நடப்பு கல்வியாண்டில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில், சிறப்பு வகுப்புகளை நடத்துவதில், கல்வித்துறை தனிகவனம் செலுத்தியது. இதனால், காலாண்டு தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தில் முன்னேற்றம் காணப்பட்டது.அரையாண்டு தேர்வு நெருங்கி வரும் நிலையில், அதற்குள் பாடங்களை முழுமையாக நடத்தி முடிப்பதில் ஆசிரியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். எனினும், பள்ளி வேலை நாட்களில் நடக்கும் பயிற்சிக்கு செல்வதால், பாடங்கள் நடத்துவது பாதிக்கப்படுவதாக, ஆசிரியர்கள் கூறுகின்றனர். அலுவலக பணி மற்றும் பிற பணிகளுக்காக ஆசிரியர்கள் திருப்பூர் வரை சென்றுவர வேண்டி உள்ளது. இத்தகைய சிக்கல்களால், பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் பணி தடைபடுவதாக, ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், "கடந்த மாதத்தில் விடுமுறை நாட்கள் அதிகரித்ததால், பாடங்களை, அரையாண்டு தேர்வுக்குள் நடத்தி முடிக்க குறுகிய அவகாசமே உள்ளது. அரையாண்டு தேர்வில் பாடம் முழுவதும் கேட்கப்படும் என்பதால், மாணவர்களுக்கு துவக்கத்தில் இருந்து புத்தாக்க பயிற்சி அளிக்க வேண்டியுள்ளது. நடப்பு மாதத்தில் பள்ளி வேலைநாட்களில் நடக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை, அரசு குறைத்து கொண்டால், மாணவர்களை தயார்ப்படுத்த உதவியாக இருக்கும்" என்றார். |
அடிப்படையே தெரியாத ஆசிரியை சஸ்பெண்ட் ! Posted: 04 Nov 2014 11:04 PM PST கான்பூர்: உ.பி.,யில், 315ஐ, மூன்றால் வகுக்க தெரியாமல், திருதிருவென விழித்த பள்ளி ஆசிரியை, கல்வி துறை அதிகாரியால் அதிரடியாக, சஸ்பெண்ட் செய்யப்பட்டார். உ.பி., மாநிலம் கான்பூர் அருகே, ஹர்கா என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள தொடக்கப் பள்ளியில் ஆய்வு நடத்துவதற்காக, கல்வி துறை அதிகாரி ராஜேந்திர பிரசாத், சமீபத்தில் சென்றார். அவர் சென்றபோது, அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பெரும்பாலான ஆசிரியர்கள் வகுப்பறைக்கு வெளியில், மொபைல் போனில் அரட்டை அடித்து கொண்டிருந்தனர்.பின், அங்குள்ள மூன்றாம் வகுப்புக்கு அந்த அதிகாரி சென்றார். மாணவிகள் சிலரை எழுப்பி, 315 என்பதை எண் வடிவில் எழுதும்படி கூறினார். அவர்களுக்கு எழுத தெரியவில்லை; சில மாணவர்கள் தவறாக எழுதினர். அதிர்ச்சி அடைந்த அதிகாரி, வகுப்பாசிரியை ருசி ஸ்ரீவத்சவாவிடம், 315 ஐ, மூன்றால் வகுத்து காட்டும்படி கூறினார்.ஆனால், அவர், அதை வகுக்க முடியாமல், திருதிருவென விழித்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் அதிகாரி ராஜேந்திர பிரசாத். இதையடுத்து, பள்ளியின் தலைமை ஆசிரியர், மூன்றாம் வகுப்பு ஆசிரியை ருசி, மம்தா, சபனா ஆகிய ஆசிரியைகளை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். |
Posted: 04 Nov 2014 10:56 PM PST தமிழகத்தில் விரைவில் 1,800 முதுநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, 4ஆம் தேதி மதுரை வந்த தமிழக ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் மற்றும் இயக்குநர் அறிவொளியிடம் நேரில் கேட்டபோது, ''அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலைஆசிரியர் பணியிடங்களில் கடந்த ஆண்டு 2 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதேபோல், இந்த ஆண்டு 1,800 முதுநிலை ஆசிரியர்களை தேர்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும்.முதுநிலை ஆசிரியர்களை தேர்வு செய்ய சிறப்பு எழுத்து தேர்வு நடத்தப்படும். தேர்வுக்கு 150 மார்க்குகளும், வேலை வாய்ப்பு அலுவலக சீனியாரிட்டிக்கு 4 மார்க்குகளும், ஆசிரியர்களின் பாடம் நடத்தும் அனுபவத்திற்கு 3 மார்க்குகளும்வழங்கப்படும். மொத்தத்தில் 157 மார்க்குகளை அடிப்படையாக கொண்டு முதுநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்'' என்றார். |
Posted: 04 Nov 2014 10:57 PM PST மாத ஓய்வூதியம், பணி நீட்டிப்பு ஆகிய பிரச்னைகள் குறித்த ஆசிரியர்களின் போராட்டங்களுக்கு தீர்வு காணும் வகையில், பள்ளிக் கல்வித் துறை நேற்று ஒரு அறிவிப்பு வெளியிட்டுஉள்ளது. 'பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்த, 2003ல் இருந்து, பணியில் சேர்ந்த ஆசிரியர், கல்வி ஆண்டின் பாதியில், ஓய்வூதிய வயதை எட்டினாலும், கல்வி ஆண்டு இறுதி வரை, பணியில் தொடரலாம். ஓய்வு பெறுவதற்கு முன் பெற்ற சம்பளம், மறு நியமன காலத்திலும் வழங்கப்படும்' என, அத்துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் பலன்கள்: மொத்தம், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பலன் அடைவர். ஒரு கல்வி ஆண்டான, ஜூன் முதல், மே வரையிலான, எந்த மாதத்தில் ஆசிரியர் ஓய்வு வயதை எட்டினாலும், மாணவர் நலனை கருத்தில் கொண்டு, அந்த ஆசிரியர், அந்த கல்வி ஆண்டு முழுவதும், வேலையில் இருக்க அரசு அனுமதித்து உள்ளது. ஓய்வு பெறும்போது, என்ன சம்பளம் வாங்கினாரோ, அதே சம்பளம், அந்த கல்வி ஆண்டு முடியும் வரை பெற முடியும். பள்ளிக் கல்வித் துறையின் இந்த அறிவிப்பை, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர், பேட்ரிக் ரைமண்ட் வரவேற்றுள்ளார். |
Posted: 04 Nov 2014 10:44 PM PST |
Posted: 04 Nov 2014 10:47 PM PST |
குரூப் 2 பிரதான தேர்வுக்கான ஏற்பாடுகள் தயார் Posted: 04 Nov 2014 05:11 PM PST குரூப் 2 பிரதானத் தேர்வுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. இதற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை தேர்வாணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுகுறித்து தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெ.சோபனா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: குரூப் 2 பிரதானத் தேர்வு வரும் 8-ஆம் தேதி முற்பகல், பிற்பகல் ஆகிய இரு வேளைகளிலும் நடைபெறுகிறது. முதன்மைத் தேர்வுக்குத் தகுதி பெற்றுள்ள விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு தேர்வாணைய இணையதளங்களானwww.tnpscexams.net.ய்ங்ற் மற்றும் www.tnpsc.gov.in-இல் வெளியிடப்பட்டுள்ளது. தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முதன்மை எழுத்துத் தேர்வு இரு பகுதிகளாக நடைபெறும். காலையில் பொது அறிவு கொள்குறிவகைத் தேர்வு கணினி வழித் தேர்வாகவும், மாலையில் விரிவான விடை எழுதும் தேர்வாகவும் இருக்கும். முதன்மை எழுத்துத் தேர்வுக்கான தேர்வுக் கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும். இதுவரை தேர்வுக் கட்டணம் செலுத்தாத விண்ணப்பதாரர்கள், தேர்வுக் கட்டணத்தை செயலாளர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சென்னை-3 என்ற பெயரில் பெறப்பட்ட வங்கி வரைவோலையை வரும் 8-ஆம் தேதி தேர்வுக் கூடத்தில் அளிக்க வேண்டும் என்று சோபனா தெரிவித்துள்ளார். |
உதவிப் பேராசிரியர் நேரடி நியமனம்: தேர்வுப் பட்டியல் வெளியீடு Posted: 04 Nov 2014 05:08 PM PST உதவிப் பேராசிரியர் காலிப் பணியிட நேரடி நியமனத்துக்கான முதன்மைத் தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) வெளியிட்டுள்ளது. ஆங்கிலம், தாவரவியல், விலங்கியல், கடல்வாழ் உயிரின வளர்ப்பு ஆகிய நான்கு துறை உதவிப் பேராசிரியர் பணிக்கான இந்த இறுதித் தேர்வுப் பட்டியல் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது. அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 1,093 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பும் பணியை டி.ஆர்.பி. மேற்கொண்டு வருகிறது. கல்வித் தகுதி, பணி அனுபவம், நேர்முகத் தேர்வு ஆகிய மூன்று நிலைகளில் பெறப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. ஆங்கிலப் பாடத்துக்கு 133 பேர், தாவரவியல் பாடத்துக்கு 62 பேர், விலங்கியல் பாடத்துக்கு 58 பேர், கடல்வாழ் உயிரின வளர்ப்பு பாடத்துக்கு 2 பேர் என இந்தப் பட்டியல் டி.ஆர்.பி. இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது. அடுத்ததாக கணிதம், இயற்பியல், இயற்பியல் - கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், எலெக்ட்ரானிக் அறிவியல் - எலெக்ட்ரானிக் தகவல் தொடர்பியல், புள்ளியியல் ஆகிய பாடங்களுக்கான இறுதித் தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது எனவும் டி.ஆர்.பி. அறிவித்துள்ளது. |
ராஜேந்திர சோழன் 1000-ஆவது ஆண்டு தொடக்கம்: நவம்பர் 9-இல் ஆர்.எஸ்.எஸ். பேரணி Posted: 04 Nov 2014 05:07 PM PST ராஜேந்திரசோழன் முடிசூட்டிக்கொண்டதன் 1000-ஆவது ஆண்டை முன்னிட்டு, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் வருகிற 9-ஆம் தேதி தமிழகம் முழுவதும் பேரணி நடைபெற உள்ளது. இதுகுறித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாநில செய்தித் தொடர்பாளர் என்.சடகோபன் செய்தியாளர்களிடம் கூறியது: ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில இந்திய செயற்குழுக் கூட்டம் லக்னெüவில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. அதில் ராஜேந்திரசோழன் முடிசூட்டிய 1000-ஆவது ஆண்டை நாடெங்கிலும் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இதன் ஒரு பகுதியாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் நவம்பர் 9-ஆம் தேதி தமிழகமெங்கும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் பேரணி நடைபெற உள்ளது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகிலிருந்து வரும் 9-ஆம் தேதி பேரணி தொடங்கும். இதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொள்ள உள்ளனர். ராஜேந்திர சோழன் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான கோயில்கள் இன்றும் கம்பீரமாக நிலைத்து நிற்கின்றன. சீனாவுடன் ராஜிய உறவுகளை மேம்படுத்த வேண்டி அந்தக் காலக்கட்டத்திலேயே துôதரை நியமனம் செய்துள்ளார் அவர். அவரது பெருமைகள், நிர்வாகத்திறன், ஆட்சியின் சிறப்பம்சங்களை, கருத்தரங்குகள், சொற்பொழிவுகள், மாநாடுகளின் மூலம் நாடு முழுவதும் எடுத்துரைக்க ஆர்.எஸ்.எஸ். செயற்குழு முடிவு செய்துள்ளது என்றார். |
பிளஸ்-2 தனித்தேர்வர்களுக்கு இணையத்தில் விடைத்தாள் Posted: 04 Nov 2014 05:03 PM PST பிளஸ்-2 துணைத்தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் இணையதளம் மூலமாக விடைத்தாள்களை பதிவிறக்கம் செய்யலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. செப், அக்., 2014ல் பிளஸ் 2 பொதுத்தேர்வில் துணைத் தேர்வு எழுதியோர் (ண்tதஞீஞுணt.டச்ண்14ணூtதி.டிண) என்ற முகவரியில் இன்று (நவ.,5) காலை 10 முதல் 6 ந்தேதி மாலை 5 மணிவரை தங்களது தேர்வு பதிவெண், விண்ணப்ப எண்களை பதிவு செய்து விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன்பின் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இதே இணையதளத் தில் அணீணீடூடிஞிச்tடிணிண ஞூணிணூ கீஞுtணிtச்டூடூடிணஞ்/ கீஞுதிச்டூதtடிணிண என்ற தலைப்பில் 'கிளிக்' செய்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தியான படிவத்தை 2 நகல்கள் எடுத்து நவ.,7 காலை 10 மணி முதல் 8ந்தேதி 1 மணிக்குள் உரிய சி.இ.ஓ., அலுவலகத்தில் ஒப்படைக்கவேண்டும். மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தை சி.இ.ஓ., அலுவலகத்தில் பணமாக செலுத்தவேண்டும் என, அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.--- |
பிளஸ் 2 விடைத்தாள் நகல் பதிவிறக்கம் எப்போது? Posted: 04 Nov 2014 05:03 PM PST 'பிளஸ் 2 விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்த மாணவ, மாணவியர், இன்றும், நாளையும், இணைய தளத்தில் இருந்து, விடைத்தாள்களை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது. துறையின் அறிவிப்பு: சமீபத்தில், பிளஸ் 2 உடனடித் தேர்வு நடந்தது. தேர்வு முடிவிற்குப் பின், விடைத்தாள் நகல் கேட்டு, விண்ணப்பித்த மாணவ, மாணவியருக்கு, அவர்களின் விடைத்தாள் நகல், தீதீதீ.ண்tதஞீஞுணt.டண்ஞு14ணூtணூதி.டிண என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. மாணவர்கள், 5ம் தேதியும் (இன்று), 6ம் தேதியும், மேற்கண்ட இணையதளத்தில், பதிவு எண் மற்றும் விண்ணப்ப எண்ணை பதிவு செய்து, விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம். மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்கள், இதே இணையதளத்தில் இருந்து, விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, 7ம் தேதி காலை முதல், 8ம் தேதி பகல் 1:00 மணிக்குள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். உரிய கட்டணங்களையும், முதன்மைக் கல்வி அலுவலகத்தில் செலுத்த வேண்டும். இவ்வாறு, தேர்வுத் துறை அறிவித்துள்ளது. |
குரூப் - 2 தேர்வுக்கு 'ஹால் டிக்கெட்' Posted: 04 Nov 2014 05:01 PM PST வரும், 8ம் தேதி நடக்க உள்ள குரூப் - 2 தேர்வுக்கு, டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) இணையதளத்தில், 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டு உள்ளது. வணிக வரித்துறை உதவி அலுவலர், சார் பதிவாளர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட, பல பதவிகளில், 1,064 பணியிடங்களை (குரூப் - 2) நிரப்ப, கடந்த ஆண்டு, டிசம்பர், 1ம் தேதி, முதல்நிலை தேர்வு நடந்தது. இதில், தகுதி பெற்றவர்கள், வரும், 8ம் தேதி நடக்கும் முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அன்று காலை, கம்ப்யூட்டர் வழியில், பொது அறிவு தாள் தேர்வும், பிற்பகலில், விரிவாக விடை அளிக்கும் வகையிலான தேர்வும் நடக்கிறது. இதில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர். இவர்களுக்கான, 'ஹால் டிக்கெட்', www.tnpscexams.net, www.tnpsc.gov.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. முதன்மை தேர்வுக்கான 100 ரூபாய் கட்டணத்தை, இதுவரை செலுத்தாத தேர்வர்கள், 'செயலர், டி.என்.பி.எஸ்.சி., சென்னை - 3' என்ற முகவரிக்கு, டி.டி., எடுத்து, நேரடியாக, தேர்வு அறையில் சமர்ப்பிக்க வேண்டும் என, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், ஷோபனா கேட்டுக் கொண்டு உள்ளார். |
அந்தமான் அருகே புதிய புயல் 'அஷோபா' உருவாகிறது. Posted: 04 Nov 2014 09:01 PM PST அந்தமான் அருகே வங்கக்கடலில் புதிய புயல் அஷோபா உருவாகிறது. அது தீவிரப்புயலாக மாறும் நிலைஉள்ளது என்று புயல் எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.இது குறித்து விசாகப்பட்டினத்தில் உள்ள புயல் எச்சரிக்கை மைய அதிகாரி கூறியதாவது:- அந்தமான் அருகே புயல் அந்தமான் அருகே வங்கக்கடலில் விசாகப்பட்டினத்தில் இருந்து 1400 கிலோ மீட்டர் தூரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளன. அது வலுவடைந்து புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த புயலுக்கு 'அஷோபா' என்று பெயர் சூட்டப்படும்.இந்த பெயரை இலங்கை தேர்ந்து எடுத்து உள்ளது. இது ஒடிசா முதல் ஆந்திரா மற்றும் தமிழ்நாடு வரை தாக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் இருக்கும் என்று கருதப்படுகிறது. இப்போது ஆரம்ப கட்டத்தில் உள்ளதால் அதன் வழியை. இப்போது கணிக்க முடியாத நிலை உள்ளது. 8 அல்லது 9-ந்தேதி புயலாக மாறும் என்று கணிக்க முடிகிறது.இதேபோல மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தென்மேற்கு வங்கக்கடலில்இலங்கை அருகே உருவாகி உள்ளது.இவ்வாறு அதிகாரி தெரிவித்தார். தமிழ்நாட்டில் மழை இன்று எப்படி இருக்கும் என்று சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் நேற்று கூறியதாவது:- இன்று சில இடங்களில் மழை இலங்கை அருகே வானத்தில் காற்றில் மேலடுக்கில் சுழற்சி உள்ளது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது. இன்று (புதன்கிழமை) தென் தமிழ்நாட்டில் சில இடங்களிலும், வடதமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும். இவ்வாறு எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.நேற்று காலை 8.30மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:- ராதாபுரம் 6 செ.மீ., பாபநாசம் 5 செ.மீ., பேச்சிப்பாறை, மதுரை விமானநிலையம் தலா 4 செ.மீ., மதுரை தெற்கு ,ஆயிக்குடி, செங்கோட்டை, ராஜபாளையம் , நாங்குநேரி , சங்கரன் கோவில் , தென்காசி தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது. பாளையங்கோட்டை பாளையங்கோட்டை, கயத்தாறு, மரக்காணம், திண்டிவனம், மணிமுத்தாறு, வானூர், ஒட்டப்பிடாரம், பூதப்பாண்டி தலா 2 செ.மீ., கன்னியாகுமரி, விழுப்புரம், செஞ்சி, புதுச்சேரி, கடலூர், விளாத்திக்குளம், அம்பாசமுத்திரம் உள்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தலா 1 செ.மீ.மழை பதிவாகி உள்ளது. |
ஆசிரியர்கள் பணப்பலன்களை உடனடியாக வழங்க கோரிக்கை Posted: 04 Nov 2014 09:01 PM PST ஆசிரியர்கள் பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டுமென தமிழ்நாடுபட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அந்த அமைப்பின் வட்டார பொதுக்குழு கூட்டம் வேடசந்தூரில் நடந்தது. வட்டாரத்தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் மலர்விழி முன்னிலை வகித்தனர். மாநில பொதுசெயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் பேசினார். மாவட்ட தலைவர் திருநாவுக்கரசு, செயலாளர் ஜோசப் சேவியர், பொரு ளாளர் பாண்டியராஜன், மாநில துணைத்தலைவர் பாபு கலந்து கொண்டனர். வேடசந்தூர் ஒன்றியத்தில் ஆசிரியர்களுக்கு பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். குறைதீர் கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். அறிவியல் பாடம் பயின்ற பட்டதாரிகளை அறிவியல் உதவி தொடக்க கல்வி அலுவலர்களாக நியமிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வேடசந்தூர் வட்டார தலைவராக முருகேசன், செயலாளராக கோதண்டராமன், துணைத்தலைவராக அமலன், இணை செயலாளராக நீலவேணி, செயற்குழு உறுப்பினர்களாக குமாரவேல், மோகன், கோமதி ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். |
சுந்தரனார் பல்கலை: ஐஐபிஎம் அரியர் செட் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு . Posted: 04 Nov 2014 08:54 PM PST மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், ஜூலை மாதம் நடைபெற்ற ஐஐபிஎம் அரியர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஜூலை ஐஐபிஎம் அரியர் செட் 1 தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.தேர்வு முடிவுகளை காண www.msuniv.ac.in/tcpresults.aspx என்ற இணையதளத்தை பார்க்கலாம். |
Posted: 04 Nov 2014 09:00 PM PST மதுராந்தகம் அடுத்த சூணாம்பேடு மேல்நிலைப் பள்ளியில், தவறான நடத்தை காரணமாக 12-ம் வகுப்பு படித்து வந்த 5 மாணவர்களை மாவட்ட கல்வி நிர்வாகம் டிஸ்மிஸ் செய்துள்ளது. பள்ளியில் படிக்கும் சக மாணவர்களின் நலன்கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாககல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அடுத்த சூணாம்பேடு கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவர்கள் 5 பேர், சக மாணவ, மாணவிகளிடம் தவறான செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால், பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் அந்த மாணவர்களின் பெற்றோர்களிடம் புகார் தெரிவித்துள்ளார். எனினும், அந்த மாணவர்கள் தொடர்ந்து ஒழுங்கீனமாக நடப்பதாக புகார் எழுந்ததால் அவர்களை ஒரு மாதம் இடைநீக்கம் செய்துள்ளார். பின்னர், சூணாம்பேடு பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி, சம்பந்தப்பட்ட மாணவர்களின் எதிர்கால நலன் கருதி அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க அனுமதித்துள்ளார். ஆனால், 5 மாணவர்களும் பள்ளியின் ஆசிரியைகளிடம் கண்ணியக் குறைவாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, மாவட்ட கல்வி நிர்வாகத்தின் உத்தரவின்பேரில், 5 மாணவர்களும் அக்டோபர் 17-ம் தேதி பள்ளியிலிருந்து நீக்கப்பட்டனர்.இந்நிலையில், மீண்டும் பள்ளியில் சேர்க்கக் கோரி, 5 மாணவர்களும் தங்களது பெற்றோர்களுடன் வந்து மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தனர். இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி கூறியதாவது: 'மாவட்ட கல்வி நிர்வாகம் மற்றும் போலீஸார் இணைந்து, மாவட்ட ஆட்சியரிடம் கலந்தாலோசித்து, சக மாணவர்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட 5 மாணவர்களையும் பள்ளியிலிருந்து நீக்கி உத்தர விட்டுள்ளோம். நீக்கம் செய்யப் பட்டதற்கான சான்றுகளை பெற்றோர் வாங்க மறுத்ததால், அவை பதிவு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டன. அதையும் அவர் கள் பெற்றுக்கொள்ளவில்லை' என்றார். இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சண்முகத்திடம் கேட்டபோது:'குறிப்பிட்ட மாணவர் களால் பள்ளியில் படிக்கும் மற்ற மாணவ, மாணவிகள் பாதிக்கப் படக்கூடிய நிலை இருந்தால், பெற்றோர்களிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியிருந்தேன். இதன் பேரில், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். அதேநேரம், மாணவர்கள் மீதான நடவடிக்கை குறித்து கல்வி அதிகாரிகளிடம் விசாரிக்கப்படும்' என்றார். |
ஆபத்தான வகுப்பறைகள், கட்டடங்களை பயன்படுத்த கல்வித்துறை தடை! Posted: 04 Nov 2014 09:00 PM PST மதுரை மாவட்டத்தில் 78 அரசு பள்ளிகளில், ஆபத்தான நிலையிலுள்ள வகுப்பறைகள், கட்டடங்களை பயன்படுத்த கல்வித்துறை தடை விதித்தது. வடகிழக்கு பருவமழை தற்போது துவங்கியுள்ளது. மேலும் அவ்வப்போது தாழ்வழுத்தம் காரணமாக புயல் உருவாகியும் மழை பெய்கிறது. மழை மற்றும் வெள்ளச் சேதம் ஏற்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.இதன் ஒரு பகுதியாக, மதுரையில் பொதுப்பணித்துறை செயலாளர் சாய்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அரசு பள்ளிகளில் ஆபத்தான நிலையில் உள்ள வகுப்பறைகள், கட்டடங்களை கணக்கெடுக்க கல்வி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். தொடக்கப் பள்ளிகளின் வகுப்பறைகள் மற்றும் கட்டடங்கள் குறித்து துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், சுவர்களில் கீறல், விரிசல் மற்றும் உடைந்தஓடுகள் உள்ள நிலையில் 69 வகுப்பறைகள் மற்றும் கட்டடங்கள் கணக்கெடுக்கப்பட்டன. உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் நடந்த ஆய்வில் 9 கட்டடங்கள் பாதுகாப்பில்லாதவை என தெரிந்தது. இவற்றின் பட்டியல் ஊராட்சி ஒன்றிய கமிஷனர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி கூறியதாவது: மழை மற்றும் வெள்ளத் தடுப்பு முன்னெச்சரிக்கை ஆய்வு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதின் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வில், 78 வகுப்பறைகள்மற்றும் கட்டடங்கள் பாதுகாப்பில்லாதவை என உறுதி செய்யப்பட்டது. பொதுப்பணித்துறைக்கு இப்பட்டியல் அனுப்பியுள்ளோம். அதை பராமரிப்பதா அல்லது இடிப்பதா என துறை அதிகாரிகள் முடிவு செய்வர். தற்போது அவற்றை பயன்படுத்தாமல் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது, என்றார். |
எந்த ஒரு தகவலையும் சரியாக விசாரிக்காமல் பரப்பக்கூடாது - கமிஷனர் ஜார்ஜ் Posted: 04 Nov 2014 08:59 PM PST வாட்ஸ்–அப்பில் அவதூறு: பெண்ணை கொள்ளைக்காரியாக மாற்றிய கும்பலை பிடிக்க தீவிர வேட்டைசென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் செல்போன் வாட்ஸ் அப்பில் இளம் பெண் ஒருவரின் போட்டோவுடன் பரபரப்பான தகவல் ஒன்று பரப்பப்பட்டது. குடும்ப பெண் போன்ற தோற்றத்தில் இருந்த அப்பெண் ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றுபவர் போல கழுத்தில் அடையாள அட்டை ஒன்றையும் அணிந்திருந்தார்.வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களிடம் நைசாக பேசி குளோரா பார்ம் கொடுத்து கொள்ளையடிப்பவர் இப்பெண். எனவே உஷாராக இருங்கள் என்று வாட்ஸ் அப் தகவலில் குறிப்பிடப்பட்டிருந்தது.அதனுடன் துரைப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்குமாரின் செல்போன் நம்பரும் இணைத்து அனுப்பப்பட்டதுடன், துரைப்பாக்கம் பகுதியில் இது போன்ற சம்பவம் நடைபெற்றதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.இன்ஸ்பெக்டர் மகேஸ் குமாரின் செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு பலரும் விசாரித்தனர். இதற்கிடையே சம்பந்தப்பட்ட பெண்ணின் போட்டோவுடன் விளக்கம் ஒன்று வாட்ஸ் அப்பிலேயே வந்தது.மும்பையில் வசிக்கும் எண்ணைப் பற்றி, யாரோ தவறான தகவலை பரப்பியுள்ளனர். இதுபற்றி தானேசைபர் கிரைம் போலீசில் நான் புகார் செய்துள்ளேன் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.இதன் பின்னரே அப்பெண்ணை பற்றி யாரோ மும்பையில் பரப்பிய அவதூறு தகவல் ''வாட்ஸ் அப்''பில் சென்னைவரை பரவி இருக்கும் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.இந்த அவதூறு தகவலை போலீசார் சிலரே வாட்ஸ் அப் குருப்பில் அனுப்பி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனால் இந்த விவகாரம் சூடு பிடித்தது. இதுபற்றி விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். மத்திய குற்றபிரிவு கூடுதல்கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார் ஆகியோரது மேற்பார்வையில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.சைபர் கிரைம் போலீசில் பணிபுரியும் பெண் சப்–இன்ஸ்பெக்டர் ஒருவரின் செல்போனுக்கும் இந்த தகவல் வந்துள்ளது. இதையடுத்து அப்பெண் அளித்த புகாரின் பேரில் தகவல் தொழில் நுட்ப சட்டப்பிரிவு 66–ஏ–ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக துரைப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மகேஸ்குமார், கண்ணகி நகர் இன்ஸ்பெக்டர் முனுசாமி, பாதுகாப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் ஆகியோரை அழைத்து கமிஷனர் ஜார்ஜ் விசாரணை நடத்தினார். அப்போது 3 பேரும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த தகவல்களை அனுப்பியதாக கூறினர்.இதையடுத்து, எந்த ஒரு தகவலையும் சரியாக விசாரிக்காமல் பரப்பக்கூடாது என்று கமிஷனர் ஜார்ஜ் எச்சரிக்கை விடுத்தார். இந்த விவகாரத்தை பொறுத்தவரை, சென்னையில் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமாரின் செல்போன் நம்பரை அப்பெண்ணின் போட்டோவுடன் இணைத்து அனுப்பியது யார்? என்பதே மிகப்பெரிய கேள்வியாக உறுவெடுத்துள்ளது. அந்த ஆசாமியை பிடிக்க போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர். |
நாட்டில் முதன்முறையாக ஏழை தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான தரமான பள்ளி! Posted: 04 Nov 2014 08:59 PM PST தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதற்காக, மத்தியப் பிரதேச மாநிலத்தில், முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், நாட்டின் முதல் ஷிரமோதயா பள்ளிக்கான அடிக்கலை நாட்டியுள்ளார். இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது: இப்பள்ளியின் பெயர் தீன்தயாள் ஷிரமோதயா வித்யாலயா என்பதாக இருக்கும். இப்பள்ளியில், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை இருக்கும்.மொத்தம் 1120 மாணவர்கள் வரை சேர்க்கும் கொள்ளளவுக் கொண்ட இப்பள்ளி,நவோதயா வித்யாலயா பள்ளிகளின் அடிப்படையில் மேம்படுத்தப்படும். இப்பள்ளி,ஆங்கில மீடியம் பள்ளியாக செயல்படும். இப்பள்ளியின் 60% இடங்கள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் குழந்தைகளின் மூலம் நிரப்பப்பட்டு, மீதமுள்ள 40% இடங்கள், உள்ளூர் மக்களுக்கு திறந்துவிடப்படும். தற்போது தலைநகர் போபால் அருகில் திறக்கப்பட்டுள்ள இப்பள்ளி, பின்னாட்களில், இந்தூர், ஜபல்பூர் மற்றும் குவாலியர் ஆகிய இடங்களிலும் துவக்கப்படும்.பணத்தின் காரணமாக, யாருக்கும் தரமான கல்வியானது தடைபட்டுவிடக்கூடாது என்ற நோக்கத்தின் பொருட்டே, ஷிரமோதயா பள்ளிகள் துவக்கப்படுகின்றன. இவ்வாறு கூறப்பட்டுள்ளது. |
திருவள்ளுவர் பல்கலை: 41 ஆயிரம் மாணவர்களுக்கு டிசம்பருக்குள் சான்றிதழ் ! Posted: 04 Nov 2014 08:58 PM PST திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 2009 முதல் 2012 ஆம் ஆண்டு வரை தேர்வுஎழுதிய மாணவர்களில் இதுவரை சான்றிதழ் பெறாத 41 ஆயிரம் பேருக்கு டிசம்பர் மாதத்துக்குள் சான்றிதழ் வழங்கப்படும் என திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெற்ற 10-ஆவது கல்விக்குழுக் கூட்டம் தொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இக்கூட்டத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை தேர்வு எழுதிய மாணவர்களின் மதிப்பெண் பட்டியல், புரொவிஷனல் சான்றிதழ் உள்ளிட்ட 3 லட்சத்து 18 ஆயிரம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாகவும், எஞ்சியுள்ள 41 ஆயிரம் பேருக்கு வரும் டிசம்பர் மாதத்துக்குள் வழங்கவும், வரும் 2013ஆம் ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வரும் ஜனவரி மாதத்துக்குள் சான்றிதழ் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி பல்கலைக்கழக தேர்வுத்துறை முழுமையாக கணினிமயமாக்கப்படுகிறது. |
10-ம் வகுப்பு இடைநிலைத் தேர்வு: விண்ணப்பங்கள் இணையம் மூலம் பதிவேற்றம். Posted: 04 Nov 2014 08:55 PM PST திருவள்ளூர் மாவட்டத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள 10-ஆம் வகுப்பு இடைநிலைத் தேர்வுக்கான விண்ணப்பங்களைத் தேர்வர்கள் வரும் 7-ஆம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) திருவள்ளூர் மாவட்டத்தில் கீழ்காணும் பள்ளிகளில் உள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களில் இணையம் முலம் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சந்திரசேகர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவள்ளூர் கல்வி மாவட்டத்தில், மணவாளநகரில் உள்ள நடேச செட்டியால் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண் தேர்வர்களும், திருவள்ளூரில் உள்ள ஆர்எம்.ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பெண் தேர்வர்களும், பூந்தமல்லி அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்க தாற்காலிக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.பொன்னேரி கல்வி மாவட்டத்தில், பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண் தேர்வர்களும், பொன்னேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில்பெண் தேர்வர்களும், அம்பத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்க தாற்காலிக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுக் கட்டண விவரம்: தேர்வுக் கட்டணம் ரூ.125, இணையப் பதிவுக் கட்டணம் ரூ.50 என மொத்தம் ரூ.175 ரொக்கமாக செலுத்த வேண்டும்.விண்ணப்பத்துடன் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி, 9-ஆம் வகுப்பு அல்லது 10-ஆம் வகுப்பு படித்ததற்கான மாற்றுச் சான்றிதழ் நகல், 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சிக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.செய்முறை பயிற்சித் தேர்வு: செய்முறைப் பயிற்சி வகுப்பில் பெயர் பதிவு செய்து கொள்ள விடுபட்ட தனித் தேர்வர்கள் வரும் 7-ஆம் தேதி வரை கீழ்காணும் மையங்களில் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.திருவள்ளூர் கல்வி மாவட்டத்தில், திருவள்ளூர் டிஆர்பிசிசி இந்து மேல்நிலைப் பள்ளி, ஆவடியில் காமராசர் நகர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் ஆண் தேர்வர்களும், திருவள்ளூரில் ஆர்எம்.ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, ஆவடியில் காமராசர் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பெண் தேர்வர்களும் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம். பொன்னேரி கல்வி மாவட்டத்தில், செங்குன்றத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கவரப்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி, மீஞ்சூர்டிவிஎஸ் ரெட்டி மேல்நிலைப் பள்ளிகளில் ஆண் தேர்வர்களும், பொன்னேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் அம்பத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிகளில் பெண் தேர்வர்களும் செய்முறைத் தேர்வுக்கு பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.செய்முறைத் தேர்வுக்கு தேர்வுக் கட்டணமாக ரூ.125 ரொக்கமாக செலுத்த வேண்டும். தேர்வர்கள் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. |
You are subscribed to email updates from கல்விச் செய்தி To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |