KALVI SAITHI-TN EDUCATIONAL FLASH NEWS |
- சூரியனில் புயல் வீசப் போவதால் டிசம்பரில், 6 நாட்கள் உலகம் இருளில் மூழ்கும்: நாசா தகவல்-MaalaiMalar
- ஏடிஎம் கார்டை 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால் ரூ. 20 கட்டணம் வசூலிக்கும் முறை நாளை முதல் அமல்
- வாட்ஸ் அப்: புரட்சி...போராட்டம்!
- உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு குறித்து முறையாக நீதிமன்ற உத்தரவு நகல் கிடைத்தப்பின் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தகவல்.
- SCHOOL EDUCATION - PAY ORDER FOR 13 HS HM / 210 BT & 500 PGT / 230 BT & 500 PGT / 1200 BT & 200 PET / 675 PGTs FOR SEP & OCT 2014
- SSLC -Mar / Apr - 2015 -Private Application -Press Release Notification
- 2 மாதத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு சேமநல நிதி வழங்க உத்தரவு.
- 350 டன் பள்ளி பாடபுத்தகத்தை விற்று மோசடி; சி.இ.ஓ.,உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு.
- அலுவலக நடவடிக்கையில் உறவினர்கள் தலையீடு அமைச்சரை எச்சரித்த கல்வித்துறை செயலாளர்: தலைமை செயலகத்தில் பரபரப்பு.
- பரிதாப நிலையில் பகுதிநேர ஊழியர்கள்: நூலகத்துறையை கண்டுகொள்ளாத அரசு.
- பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு
- இராமநாதபுரம்மாவட்டம் முழுவதும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.
- CTET முடிவுகள்:தமிழகத்திற்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை!
- 248 பேருக்கு பதவி உயர்வு.
- 10 மற்றும் 12 ம் வகுப்பிற்கு வினாவங்கி ( PTA)கிடைக்கும் இடங்கள்
- மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :
- பழைய டிவி, கம்ப்யூட்டர், மொபைல் கிலோ 5 ரூபாய்
- TRB- அறிவிப்பு கணினி பயிற்றுனர் பணி விண்ணப்பங்களை டிஆர்பிக்கு அனுப்ப வேண்டாம்.
- தொழிற்கல்வி கணினி பயிற்றுனர் பணி பதிவு மூப்பு பட்டியல் வெளியீடு.
- தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலைமையாசிரியர்கள் நியமனம்
- தரிசு நில தாவரம், வைக்கோலில் இருந்து எத்தனால் தயாரிப்பு : பேராசிரியர் தகவல்
- அப்துல் கலாம் நலமாக உள்ளார் : ஆலோசகர் புது தகவல்
- ரூ.20 சம்பளத்தில் பகுதிநேர நூலகர்கள்
- அரசு பள்ளிகளை வலுப்படுத்த கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை
- கம்ப்யூட்டர் ஆசிரியர் பணி: டி.ஆர்.பி., வேண்டுகோள்
சூரியனில் புயல் வீசப் போவதால் டிசம்பரில், 6 நாட்கள் உலகம் இருளில் மூழ்கும்: நாசா தகவல்-MaalaiMalar Posted: 31 Oct 2014 09:44 AM PDT சூரிய மண்டலத்தில் அடிக்கடி புயல் வீசுவது உண்டு.சுட்டெரித்து சாம்பலாக்கி விடும் இந்த பயங்கர புயல்களால், மற்ற கிரகங்களில் பாதிப்பு ஏற்படும்.பெரும்பாலான சூரிய புயல்களால், பூமியில் இருந்து ஏவப்படும் செயற்கைக் கோள்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அத்தகைய பயங்கர சூரிய மண்டல புயல் ஒன்று டிசம்பர் மாதம் வீச உள்ளது.டிசம்பர் மாதம் 16–ந் தேதி அந்த புயல் வீசத் தொடங்கும். 22–ந்தேதி வரை 6 நாட்களுக்கு புயலின் தாக்கம் நீடிக்கும் என்று நாசா விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். கடந்த 250 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவுக்கு இந்த சூரிய மண்டல புயல் மிகப்பெரியது என்று தெரிய வந்துள்ளது. சூரிய மண்டலத்தில் புயல் வீசும் 6 நாட்களும் வான்வெளியில் தூசிகள், துகள்கள் சுழன்றடிக்கப்பட்டு நிரம்பிவிடும்.தூசிகள் நிரம்பும் போது வானில் மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக சூரிய ஒளிக்கதிர்கள் பூமிக்கு வர முடியாதபடி, அந்த தூசிகள், துகள்கள் மறைத்துவிடும்.இதன் காரணமாக டிசம்பர் 16–ந்தேதி முதல் 22–ந்தேதி வரை இந்த உலகமே இருளில் மூழ்கும் என்று நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். சூரிய மண்டல புயல் பூமி அருகில் வராது. எனவே உலகம் இருளில் மூழ்கினாலும், பூமிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆகையால் சூரிய புயலை நினைத்து மக்கள் பயப்பட வேண்டியது இல்லை என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.சூரிய மண்டல புயலால் ஏற்படும் தூசி, துகள்கள் 220 மணி நேரத்துக்கு வானத்தை அடைத்துவிட்டது போல மாற்றிவிடும். அதற்கு ஏற்ப மக்கள் தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்று நாசா வேண்டுகோள் விடுத்துள்ளது. |
ஏடிஎம் கார்டை 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால் ரூ. 20 கட்டணம் வசூலிக்கும் முறை நாளை முதல் அமல் Posted: 31 Oct 2014 09:16 AM PDT சென்னை உள்ளிட்ட 6 மெட்ரோ நகரங்களில் மாதத்துக்கு 5 முறைக்கு கூடுதலாக ஏடிஎம் பயன்படுத்தினால் கட்டணம் வசூலிக்கும்நடைமுறை நாளை அமலுக்கு வருகிறது. அதன்படி, கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏடிஎம்மை மாதத்தில் 6-வது முறை பயன்படுத்தும் போதிலிருந்து ஒவ்வொரு முறையும் 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. பணம் எடுப்பது மட்டுமின்றி, கணக்கில் இருப்பை அறிவது, மினிஸ்டேட்மென்ட் எடுப்பது ஆகிய பணமல்லாத நடவடிக்கைகளும் இந்த எண்ணிக்கையில் அடங்கும். ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறையின்படி சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய 6 மெட்ரோ நகரங்களில் மட்டும் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய இந்த நகரங்களில் வங்கி வாடிக்கையாளர்கள் பிற வங்கி ஏடிஎம்மை பயன்படுத்தும் அனுமதியும் 5-ல் இருந்து 3-ஆக குறைக்கப்பட்டுள்ளது. எனினும், சென்னையல்லாத தமிழகத்தின் பிற பகுதிகளிலும், பூஜ்யம் இருப்பு வைக்க அனுமதியுள்ள சிறிய சேமிப்பு கணக்குகளிலும் இப்போதுள்ள நிலையே தொடரும் என்றும் ரிசர்வ் வங்கியின் தகவல் தெரிவிக்கிறது. |
வாட்ஸ் அப்: புரட்சி...போராட்டம்! Posted: 31 Oct 2014 07:02 AM PDT கடந்த சில வாரங்களாக, வாட்ஸ் அப்பில் காட்டுத் தீயாக பரவும் வேண்டுகோள், 'அக்டோபர் 31ஆம் தேதி யாரும் மொபைல் இண்டர்நெட் பயன்படுத்த வேண்டாம். அன்றைய தினம் இண்டர்நெட் இணைப்பை துண்டித்து, நமது எதிர்ப்பை மொபைல் போன் சர்வீஸ் அளிக்கும் நிறுவனங்களுக்குத் தெரிவிப்போம். இனி, திடீரென எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கட்டணத்தை உயர்த்தும் முன்பு யோசிப்பார்கள்!' என்கிறது அந்த வேண்டுகோள். இன்றைக்கு மொபைல் போன் என்பது ஒரு அத்தியாவசிய பொருள் போல ஆகிவிட்டது. மேலும், மொபைல் போனில் இண்டர்நெட் பார்க்கும் வசதி வந்தவுடன், அதைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிகையும் ஸ்மார்ட் போன் விற்பனையும் எகிற ஆரம்பித்திருப்பது நாம் அறிந்ததே.வாட்ஸ் அப்பில் பகிரப்படும் அந்தச் செய்தியில், மொபைல் இண்டர்நெட் சேவை அளிக்கும் நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு என்ன என்றால், 'ஆரம்பத்தில் 1ஜிபி பயன்படுத்த 68 ரூபாய் கட்டணம். 30 நாட்கள் வரை இந்த சேவையைப் பெறலாம். இப்போது அதே 1ஜிபி பயன்படுத்த 198 ரூபாய் கட்டணம். அதுவும் 28 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். மூன்றுமடங்கு கட்டணம் உயர்த்தும் அளவுக்கு விலைவாசி உயர்ந்துவிட்டதா' என்பதுதான் அதில் கேட்கப்படும் கேள்வி.மொபைல் போன் மூலம் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் பார்ப்பதற்கு அடிமையாகி விட்டோம். இவற்றைப் பார்க்காமல் வாடிக்கையாளர்களால் சும்மா இருக்க முடியாது என நினைத்துதான் செல்போன் நிறுவனங்கள் இப்படி கட்டணத்தை கண்டபடி உயர்த்துகின்றன. அக்டோபர் 31ஆம் தேதி அன்று, இந்தியா முழுவதும் இந்த சேவையைப் பயன்படுத்தாமல், நாம் யார் என்பதைக் காண்பிப்போம் என சவால் விடுகிறது அந்த வேண்டுகோள்.இன்றைய வாட்ஸ் போராட்டத்தின் பலமும், பலனும் விரைவில் தெரியும்! |
Posted: 31 Oct 2014 02:58 AM PDT இதுகுறித்து பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் திரு.இரவிசந்திரன் கூறுகையில் : 2014-15ம் கல்வியாண்டில் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள், நீதிமன்ற வழக்கின் இடைகால தடையால் இன்னும் உரிய பணியிடத்தில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு மேற்கொண்ட முயற்சியில் அண்மையில் நீதிமன்ற தடை விலக்கிக்கொள்ளப்பட்டது. இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் இருந்து முறையான ஆணை பெற்றபின் அத்தீர்ப்பின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என இயக்குனரக வட்டாரங்கள் தெரிவித்ததாக தெரிவித்தார். |
Posted: 31 Oct 2014 02:56 AM PDT |
SSLC -Mar / Apr - 2015 -Private Application -Press Release Notification Posted: 31 Oct 2014 01:07 AM PDT |
2 மாதத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு சேமநல நிதி வழங்க உத்தரவு. Posted: 31 Oct 2014 01:05 AM PDT ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் சேமநல நிதி நிலுவை தொகையை, இரண்டு மாதத்தில் வழங்க வேண்டும் என, ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டத்தில், ஆட்சியர் உத்தரவிட்டார். திருவள்ளுர் மாவட்ட ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம், ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று முன்தினம் நடந்தது. ஆட்சியர் வீரராகவ ராவ், தலைமை வகித்து பேசுகையில், "ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கான சேமநல நிதி நிலுவை தொகையை, இரண்டு மாதத்தில் முடித்து வழங்க வேண்டும். அரசு பணியிலிருந்து ஓய்வுபெற்றவர்களின் நிலையை கருத்தில் கொண்டு, அவர்களுடைய கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும்," என்றார்.கூட்டத்தில் 34 மனுக்கள் வரப்பெற்று, அதில் ஐந்து இனங்களுக்கு உடன் தீர்வு காணப்பட்டு முடிக்கப்பட்டது, பிற மனுக்களை, விரைவில் முடிக்க, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில், சென்னை ஓய்வூதிய இயக்குநர் மனோகர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) விமலா மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத் தலைவர் சந்திரன் நன்றி கூறினார். |
350 டன் பள்ளி பாடபுத்தகத்தை விற்று மோசடி; சி.இ.ஓ.,உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு. Posted: 31 Oct 2014 01:04 AM PDT 350 டன் எடையுள்ள பள்ளி பாடபுத்தகத்தை விற்று மோசடி செய்ததாக, சென்னைமுதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2011ல், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த போது தி.மு.க., ஆட்சியில் அச்சடிக்கப்பட்ட சமச்சீர் கல்வி பாடபுத்தங்களை, மாணவர்களுக்கு விநியோகம் செய்ய அனுமதிக்கவில்லை. முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றியும், அவரது திட்டங்கள் குறித்தும், பாடபுத்தகத்தில் இடம்பெற்றதாக காரணம் கூறப்பட்டது.தமிழ்நாடு அரசு பேப்பர் நிறுவனத்தில் இருந்து பழைய பாடபுத்தகங்கள் கொண்டு வரப்பட்டு, மாணவர்களுக்கு வழங்க தயாராக வைக்கப்பட்டன. அ.தி.மு.க.,அரசின் முடிவுக்கு எதிராக, தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட், சமச்சீர் கல்வி பாடபுத்தகத்தை வழங்க உத்தரவிட்டது. அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் சமச்சீர் பாடபுத்தகங்கள் வழங்கப்பட்டன. கோவை மாவட்டத்திற்கு, லாரிகளில் கொண்டு வரப்பட்ட 350 டன் எடையுள்ள சமச்சீர் கல்வி அல்லாத பழைய பாட திட்ட புத்தகங்கள், அப்போதைய முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் மேற்பார்வையில், ஒண்டிப்புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புலியகுளம் ஆர்.சி., ஆண்கள் பள்ளியில் வைக்கப்பட்டிருந்தன.அந்த பாடபுத்தகங்களை கரையான் அரிப்பதாக கூறி, திடீரென லாரிகளில் ஏற்றி செல்லப்பட்டன. எங்கு கொண்டு செல்லப்பட்டன என்ற விவரமும் தெரிவிக்கப்படவில்லை. இதற்கிடையில், முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன், அக்டோபரில், சென்னை சி.இ.ஓ.,வாக இடமாற்றம் செய்யப்பட்டார். பாடபுத்தக விவகாரம் தொடர்பாக, அவரிடம் பள்ளி கல்வி துறை விளக்கம் கேட்டது. ஆனால், அவர் உரிய பதில் அளிக்கவில்லை.பள்ளி கல்வி துறை செயலாளர் சபீதா, கோவையில் அத்துறை அலுவலர்களிடம் விளக்கம் கேட்டார். அப்போது, அரசு அனுமதி பெறாமல் பாடபுத்தகங்களை விற்று,பணத்தை கையாடல் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, ராஜேந்திரன் கடந்த 17ம் தேதி, சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது தொடர்பாக, கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.இதையடுத்து, அப்போதைய முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன், சி.இ.ஓ., அலுவலக இளநிலை உதவியாளர் சரவணன், பாடபுத்தக கண்காணிப்பாளர் அருள்ஜோதி, பள்ளி துணை ஆய்வாளர் சாலமன் பிரின்ஸ், பதிவு எழுத்தர் சேதுராமலிங்கம், தமிழ்நாடு பாடபுத்தக கார்ப்பரேசன் தனி அலுவலர் கார்த்திகேயன், புலியகுளம் பள்ளி தலைமையாசிரியர், லூர்து சேவியர் ஆகியோர் மீது, இன்ஸ்பெக்டர் மரியமுத்து வழக்கு பதிந்து, விசாரித்து வருகிறார்.இந்திய தண்டனை சட்டம், 409வது சட்ட பிரிவின் கீழ் (அரசு சொத்தை கையாடல் செய்தல்) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. |
Posted: 31 Oct 2014 01:02 AM PDT தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு அங்கீகாரம் புதுப்பிக்கும் பணி தற்போது நடக்கிறது. அரசு அறிவித்துள்ள தகுதிகள் உள்ள பள்ளிகளுக்கே அங்கீகாரம் வழங்கப்பட்டு வருவதால், தனியார் பள்ளி நிர்வாகங்கள் கலக்கத்தில் உள்ளன. வரும் மார்ச் மாதம் பொதுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில் அங்கீகாரம் புதுப்பிப்பதில் மெட்ரிக் பள்ளிகள் நடத்துவோர் வேகம் காட்டி வருகின்றனர்.இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின்உறவினர்கள் சிலர் மெட்ரிக்குலேஷன் இயக்குனர் அலுவலக நடவடிக்கைகளில் தலையிட்டு, அங்கீகாரம் வழங்குவதில் சில யோசனைகளை தெரிவித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மேலும், ஒரு சில பள்ளி நிர்வாகிகளை இடைத் தரகர்களாக வைத்து அமைச்சரின் உறவினர்கள் ரகசிய பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். இதனால், பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது. இதுபற்றி, பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதாவை தனியார் பள்ளி நிர்வாகிகள் சந்தித்து முறையிட்டுள்ளனர். விசாரணையில், அமைச்சரின் உறவினர்கள் என்றுகூறிக் கொண்டு சிலர் டிபிஐ வளாகத்தில் அதிகாரிகளின் அறைகளில் இருந்து கொண்டு, அவர்களுக்கே உத்தரவு போடுவதும் தெரியவந்தது. இதையடுத்து, பள்ளி கல்வித்துறை செயலாளர், பள்ளி கல்வித்துறை அமைச்சர் வீரமணியிடம் விசாரித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அமைச்சர் தக்க பதில் கூறாததால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து நேரடியாக விசாரித்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த அமைச்சர் வீரமணி, செயலாளரின் அறைக்கு சென்று வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரம் செய லாளருக்கும் அமைச்சருக் கும் நேரடியாகவே வார் த்தை மோதல் நடந்துள் ளது. பின்னர் அமைச்சர் அங்கிருந்து கோபமாக சென்றுவிட்டார். இதைத் தொடர்ந்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மெட்ரிக்குலேஷன் இயக்குனரக அதிகாரிகளை செயலாளர் சபீதா அழைத்து, இதுபோன்ற தவறுகள் நடக்க அனுமதி அளித்தால், முதல்வரின் கவனத்துக்கு நேரடியாக கொண்டு செல்ல வேண்டியது இருக்கும் என்று எச்சரித்துள்ளார். மேலும், இனிமேல், அமைச்சரின் பெயரைச் சொல்லி யாராவது உத்தரவிட்டால், எந்த உத்தரவிலும் கையெழுத்து போடக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார். இந்த பிரச்னைக்கு பிறகு சில கல்வி அதிகாரிகளை மாற்றுவது என்று பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள் ளது. விரைவில் இதுகுறித்து உத்தரவு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் வீரமணி அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது, அமைச்சர் ஆலோசனையில் இருப்பதால் இப்போது பேச முடியாது என்றுதெரிவித்தனர். |
பரிதாப நிலையில் பகுதிநேர ஊழியர்கள்: நூலகத்துறையை கண்டுகொள்ளாத அரசு. Posted: 31 Oct 2014 01:01 AM PDT வேலை நாட்களுக்கு மட்டும் தினமும் 20 ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாலும், வேறு எந்த அரசு சலுகைகளும் கிடைக்காததாலும், மாதம் 400 ரூபாய் சம்பளம் கூட கிடைக்காமல் பகுதிநேர நூலகர்கள் மனம் நொந்த நிலையில் 16 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர். நூலகத்துறையை தமிழக அரசு கண்டுகொள்ளவே இல்லை. இத்துறையில் 20க்கும் மேற்பட்ட மாவட்ட நூலக அலுவலர் பணியிடம் மூன்றாண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ளது. இப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படவே இல்லை. அதேபோல் 35க்கும் மேற்பட்ட முதல்நிலை ஆய்வாளர் பணியிடங்களும் காலியாகவே உள்ளன. இப்பணியிடங்களும் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன.இதேபோல் நூலகர் பணியிடங்கள், பகுதிநேர நூலகர் பணியிடங்கள் என காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை தொடர்கதையாகிறது. பணிபுரிபவர்களுக்கு மனிதநேய சலுகைகள் கூட வழங்கப்படுவதில்லை. தமிழகம் முழுவதும் 16 ஆண்டுகளாக பணிபுரியும் பகுதிநேர ஊழியர்களுக்கு எந்த பணிப்பலன்களும் வழங்கப்படவில்லை.1800 பகுதிநேர நூலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இதுவரை தினமும் 20 ரூபாய் சம்பளம் மட்டுமே வழங்கப்படுகிறது. அதுவும் வேலை நாட்களில் மட்டும்தான் சம்பளம். மாதம் 10 நாட்கள் வரை விடுமுறை வந்து விடுகிறது. எனவே, இவர்களது மாதச்சம்பளமே 400 ரூபாய்தான். அதுவும் முறையாக வழங்கப்படுவதில்லை. என்றாவது ஒருநாள் நமக்கும், அரசு ஊழியர்களை போல் சலுகைகளும், சம்பளமும் கிடைக்கும் என்ற ஆசையில் வாழ்க்கையை தொலைத்துவிட்டு தவிக்கின்றனர். |
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு Posted: 30 Oct 2014 09:32 PM PDT பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 10-ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 12-ஆம் தேதியும் தொடங்கும் என பள்ளிக் கல்வி இயக்ககம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் பொதுவான தேர்வாக நடைபெறும் இந்த் தேர்வுகளை சுமார் 20 லட்சம் மாணவர்கள் எழுதுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை:டிசம்பர் 10 புதன்கிழமை - தமிழ் முதல் தாள் டிசம்பர் 11 வியாழக்கிழமை - தமிழ் இரண்டாம் தாள் டிசம்பர் 12 வெள்ளிக்கிழமை - ஆங்கிலம் முதல் தாள் டிசம்பர் 15 திங்கள்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள் டிசம்பர் 16 செவ்வாய்க்கிழமை - வணிகவியல், மனையியல், புவியியல் டிசம்பர் 17 புதன்கிழமை - கணிதம், நுண்ணுயிரியல், விலங்கியல், நியூட்ரிஷன் அண்ட் டயட்டடிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ் டிசைனிங், உணவு மேலாண்மை- குழந்தை பராமரிப்பு, வேளாண்மைப் பயிற்சி, அரசியல் அறிவியல், நர்சிங் (தொழில்பிரிவு), நர்சிங் (பொது) டிசம்பர் 18 வியாழக்கிழமை - இயற்பியல், பொருளாதாரம், ஜெனரல் மெஷினிஸ்ட், எலக்ட்ரானிக்ஸ் எக்யூப்மென்ட், டிராஃப்ட்ஸ்மேன் சிவில், எலக்ட்ரிக்கல் மெஷின்ஸ் அண்ட் அப்ளிகேன்ஸ், ஆட்டோ மெக்கானிக், டெக்ஸ்டைல் டெக்னாலஜி டிசம்பர் 19 வெள்ளிக்கிழமை - தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம், கணிணி அறிவியல், உயிர் வேதியியல், சிறப்பு மொழி (தமிழ்), தட்டச்சு (தமிழ், ஆங்கிலம்), புள்ளியியல் டிசம்பர் 22 திங்கள்கிழமை - வேதியியல், கணக்குப்பதிவியல் டிசம்பர் 23 செவ்வாய்க்கிழமை - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம் பத்தாம் வகுப்பு அரையாண்டு பொதுத் தேர்வு கால அட்டவணை:டிசம்பர் 12 வெள்ளிக்கிழமை - தமிழ் முதல் தாள் டிசம்பர் 15 திங்கள்கிழமை - தமிழ் இரண்டாம் தாள் டிசம்பர் 16 செவ்வாய்க்கிழமை - ஆங்கிலம் முதல் தாள் டிசம்பர் 17 புதன்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள் டிசம்பர் 19 வெள்ளிக்கிழமை - கணிதம் டிசம்பர் 22 திங்கள்கிழமை - அறிவியல் டிசம்பர் 23 செவ்வாய்க்கிழமை - சமூக அறிவியல் |
இராமநாதபுரம்மாவட்டம் முழுவதும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை. Posted: 30 Oct 2014 09:29 PM PDT பள்ளி விடுமுறை அறிவிப்பு: தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் தூக்கு தண்டனை வழங்கப்பட்ட விவகாரத்தால் தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால்இராமநாதபுரம்மாவட்டம் முழுவதும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. |
CTET முடிவுகள்:தமிழகத்திற்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை! Posted: 30 Oct 2014 09:23 PM PDT கடந்த மாதம் நடைபெற்ற மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள்அண்மையில் வெளியாகின. இந்த முடிவுகள் காட்டும் புள்ளிவிவரங்கள்,தமிழகத்திற்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை. முதல் தாள், இரண்டாம் தாள்இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர்கள் 89பேர் மட்டுமே! எத்தனை பேர் விண்ணப்பித்தார்கள், எத்தனை பேர் எழுதினார்கள் என்கிறபுள்ளிவிவரங்களுக்குள் சிக்கிக்கொள்ளத் தேவையில்லை. எந்தெந்தமாவட்டங்களிலிருக்கும், எந்தெந்த கல்வியியல் கல்லூரிகளில் இந்த 89 பேர்படித்தார்கள் என்பதெல்லாம்கூட இந்த இடத்திற்கு தேவையில்லாதது. இந்தநேரத்தில் நாம் சிந்திக்க வேண்டிய விஷயம் - நாம் அகில இந்திய அளவிலான ஆசிரியர் தொழில்வாய்ப்புகளைத் தவறவிடுகிறோம் என்பதை மட்டுமே!தமிழ்நாட்டில் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள், எந்த ஊரிலும் சிறந்தஆசிரியராகப் பணியாற்ற முடியும் என்றநிலைமை இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை இருந்தது. பிறமாநிலங்களுக்கு மட்டுமன்றி, பிலிப்பின்ஸ், ஆப்பிரிக்க நாடுகள்போன்றவற்றுக்குக்கூட, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்என்று சொல்வதே ஒரு தகுதியாக அறியப்பட்ட காலம் ஒன்று இருந்தது. கணித ஆசிரியர்களாக, அறிவியல் ஆசிரியர்களாக, ஆங்கில ஆசிரியர்களாக தமிழர்கள் பலதிசைகளிலும் பறந்து சென்று பணியாற்றிய காலம் அது. கேரளத்தவர் செவிலியர்களாக உலகம் முழுதும் வலம் வருவதைப்போல,தமிழர்கள் இந்தியாவின் பிற மாநிலங்களிலும், அண்டை நாடுகளிலும்ஆசிரியர்களாக வலம் வந்தனர். இப்போதும் அந்த வாசல்கள்திறந்தே இருக்கின்றன. ஆனால், செல்வதற்குத்தான் ஆசிரியர்கள் இல்லை.இந்தியா முழுவதிலும் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும், கேந்திரியவித்யாலயா பள்ளிகளிலும் ஆசிரியராகச் சேரும் வாய்ப்பை தமிழர்கள்ஏன் இழக்க வேண்டும்?தமிழ்நாட்டின் தனியார் கல்வியியல் கல்லூரிகள் பலவும், பி.எட் பட்டம்இருந்தாலே போதும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்பதிவு செய்துவிட்டு, அரசியல் செல்வாக்கினால் அரசுப் பள்ளி களில் சேர்ந்துவிடலாம் என்று எண்ணிய காலகட்டத்தில் தோன்றியவை.இவற்றில் பலவும் பட்டம் வழங்கும் நிறுவனங்களாக மட்டுமே செயல்பட்டவை. ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆசிரியர்பணி கிடைக்கும் என்ற நிலை உருவான பிறகு, தமிழகக் கல்வி உலகில் புதிய மாற்றம்ஏற்பட்டது. அரசியல் செல்வாக்குகள் மூலம் பணி நியமனம் பெறும்தகுதியில்லாத, சம்பளம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட ஆசிரியர்கள்எண்ணிக்கை கணிசமாகக் குறையும், தரமான ஆசிரியர்கள் அரசுப்பள்ளிகளில் வலம் வருவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், தகுதியை உயர்த்தும், உயர்த்திக்கொள்ளும் முயற்சிகளில் யாரும்இறங்கவில்லை. தகுதித் தேர்வை தங்கள் தகுதிக்கு ஏற்ப குறைக்கும் நடவடிக்கைகளைத்தான் பல வகைகளிலும் காண்கிறோம். தகுதித் தேர்வு மதிப்பெண்ணை குறைக்கக் கோரியும், சிறப்புச் சலுகை தரக்கூடாது என்றும், இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப் படவில்லை என்றும் ஒவ்வொரு காரணத்துக்கும் ஒரு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.இதன் பின்னணி, பெரும்பான்மையான கல்வியியல் கல்லூரிகளின் தாளாளர்கள் அரசியல்வாதிகளாக இருப்பதுதான். தமிழ்நாட்டை விட்டால் வேறு எங்கும் நம்மால் ஆசிரியர் தொழில் செய்ய முடியாது என்கிற தாழ்வு மனப்பான்மையில் ஆசி ரியர் பட்டம் பெற்றவர்கள் சிக்கிக் கொண்டிருப்பதால், அவர்கள் தங்களைஇயக்குபவர்களின் கைப்பாவைகளாக மாறிப்போகிறார்கள். இன்றைய தேவை, கல்வியியல் நிறுவனங்களைத் தரமானவையாக ஆக்குவதும், அவற்றின் அனுமதியை மறுபரிசீலனைக்கு உள்படுத்துவதும்தான். தமிழ்நாட்டில் புற்றீசல் போலத் தோன்றியுள்ள கல்வியியல் கல்லூரிகளை முறைப்படுத்தும் முயற்சியை தமிழக அரசு மேற்கொண்டாகவேண்டும். லாபம் கருதித் தொடங்கப்பட்ட நிறுவனங்கள் (போதிய வருவாய் இல்லை என்பதற்காக பி.எட். தொடங்கிய பல்கலைக்கழகங்கள் உள்பட) அனைத்தையும் ஆய்வுக்கு உள்படுத்தி, தரமில்லாத, தேர்ச்சி விகிதம் குறைவான, பயிற்றுநர்கள் இல்லாத கல்வியியல் கல்லூரிகளின் அனுமதியை ரத்து செய்வதோடு பாடத்திட்டம், பயிற்சி அனைத்தையும்வலுப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் கல்வியியல் கல்லூரிகள் தரமானவையாக இருக்குமெனில், தங்கள் மாணவர்களுக்கு தமிழக அரசுப் பள்ளிகள் மட்டுமே கதி என்று இல்லாமல், இந்தியா முழுவதும் உலகம் முழுவதும் தமிழர்களுக்கு உள்ள கற்பித்தல் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளதுணை புரியும். தமிழகத்தில் பணியாற்றுவோரும், அடுத்த தலைமுறைக்கு தரமான கல்வியைக் கற்பிப்பார்கள். |
Posted: 30 Oct 2014 09:20 PM PDT அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு, மாநிலம் முழுவதும், இணையதள வழியில், நேற்றுநடந்தது. இதில், 248 பேருக்கு,பணியிட மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. நடப்பு கல்வி ஆண்டில், 100 அரசு உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.இந்த பள்ளிகளுக்கு, புதிய தலைமை ஆசிரியர் நியமனம் மற்றும் பிற பள்ளிகளில் காலியாகஇருந்த, 248 இடங்களை நிரப்ப, நேற்று, இணையதள வழியில் கலந்தாய்வு நடந்தது. இதில், 260க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்; காலியாக இருந்த, 248 இடங்களும் நிரப்பப்பட்டன.இன்று,450 முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளில், தலைமை ஆசிரியராக இருந்த, 100 பேருக்கு, பணியிட மாறுதல் கலந்தாய்வு ஆகியவை நடக்கிறது. |
10 மற்றும் 12 ம் வகுப்பிற்கு வினாவங்கி ( PTA)கிடைக்கும் இடங்கள் Posted: 30 Oct 2014 09:19 PM PDT |
மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் : Posted: 30 Oct 2014 09:16 PM PDT மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் :(MADRAS EYE- CONJUNCTIVITIS-FACTS& PREVENTION) Reactions: மெட்ராஸ் ஐ - குறித்த உண்மைகள் : அன்பார்ந்த சகோதரர் சகோதிரிகளே ! தற்போது நிறைய ஊர்களில் மெட்ராஸ் ஐ பரவி உள்ளது என்று கேள்வி படுகிறோம் அதற்கு முன் ஏச்சரிக்கை எவ்வாறு எடுப்பது என்ற விபரங்கள் தெரிந்து பயன்பெறுவோம்!!!! மற்றவர்களுக்கும் பகிர்துகொள்ளுங்கள்!!! கண்களின் வெளி சவ்வு அழற்சியே - சிவந்த கண் அல்லது மெட்ராஸ் ஐ எனபடுகிறது .அடினோ வைரஸ் (ADENO VIRUS -CONJUNCTIVITIS)என்ற வைரஸ் இதற்க்கு பெரும்பாலும் காரணம் . இது பருவநிலை மாறுபாடல் வரும் ஒரு வியாதி .இந்த வைரஸ் சூடான , ஈரபதமான சூழ்நிலையில் மிக வேகமாக பரவக்கூடியது . இது காற்று மற்றும் உடைமைகள்(fomites) ( கர்சிப் , துண்டு ,பேனா ,பென்சில் ,அழிப்பான் ,பேப்பர் ) கை குலுக்குதல் மூலம் பரவும் ஒரு வைரஸ் வியாதி ஆகும் . கருப்பு கண்ணாடி போடுவதால் பிறருக்கு பரவாது என்பது தவறு . கண்ணாடி போடுவதால் அதிகபடியான சூரிய வெளிச்சம் மூலம் வரும் எரிச்சலை மட்டுமே தடுக்க மூடியும். ஒருவர் பயன்படுத்திய கண்ணாடியை மற்றவர் பயன் படுத்த கூடாது கண் சொட்டு மருந்தை ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு முறை மருத்துவர் ஆலோசனை படி போடவேண்டும் . கண்களை கசக்க கூடாது . தும்மல் , இருமல் மூலமும் இந்த வைரஸ் பரவும் , எனவே வாயில் துணி வைத்து இருமவும் . கண்களை குளிர்ந்த நீரில் அடிக்கடி கழுவவும் ,ஆதற்கு முன்பு கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவவும் . மிதமான வெந்நீரில் துண்டை நனைத்து ஒத்தடம் கொடுக்கவும். நேருக்கு நேர் பார்த்தால் வராது . ஆனால் எதிர்ப்பு சக்தி குறைவனவர்களுக்கும் , குழந்தைகளுக்கும் அருகில் வந்தாலே மூச்சு காற்று மூலம் தொற்று ஏற்படும் . மருத்துவர் ஆலோசனை இன்றி steroid சொட்டு மருந்துகளை கடையில் வாங்கி போட்டால் கண் பார்வை இழப்பு ஏற்படலாம் . எனவே சுய மருத்துவம் செய்வதற்கு சும்மா இருப்பதே மேல் . ஏனெனில் இது தானாகவே சரி ஆகிவிடும் (self limiting ). உடலின் எதிர்ப்பு சக்தியை பொருத்து 5 முதல் 7 நாட்களில் இது குணமடையும் . குறிப்பு: தாங்கள் தெரிந்ததை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த முயற்சியுங்கள் !!!! |
பழைய டிவி, கம்ப்யூட்டர், மொபைல் கிலோ 5 ரூபாய் Posted: 30 Oct 2014 09:16 PM PDT தேவையில்லை என, ஓரங்கட்டப்பட்ட பழைய 'டிவி'க்கள், கம்ப்யூட்டர்கள், மொபைல் போன்கள் எல்லாம், கேரளத்தவர்களுக்கு, இனி பணத்தைவாரி வழங்கப் போகின்றன. மின்னணு கழிவுகளை எல்லாம், பணம் கொடுத்து வாங்க, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. 'கிளீன் கேரளா கம்பெனி லிமிடெட்' என்ற, மாநில அரசு நிறுவனம், உள்ளாட்சி அமைப்புகளுடன் சேர்ந்து, இந்தப் பணியை மேற்கொள்ள உள்ளது. பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து, பணம் கொடுத்து வாங்கப்படும், இந்தக் கழிவுகள், பாலக்காட்டை சேர்ந்த, 'எர்த் சென்ஸ் ரீசைக்கிள்' என்ற, தனியார் நிறுவனத்திடம், அது ஒப்படைக்கப்படும். அந்த நிறுவனம், ஐதராபாத்தில் உள்ள தங்கள் தொழிற்சாலையில், இந்த மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்து, மீண்டும் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் மாற்றும்.மின்னணு கழிவுகளை சேகரிக்கும் திட்டத்தின் கீழ், வேண்டாம் என, ஓரங்கட்டப்பட்ட கம்ப்யூட்டர்கள், 'டிவி'க்கள், மொபைல் போன்கள், ரேடியோக்கள், குளிர்சாதன பெட்டிகள், கிரைண்டர்கள், டியூப் லைட்கள், சிஎப்எல் விளக்குகள் உட்பட, பல வித பொருட்கள், கிலோ ஐந்து ரூபாய் என்ற விலைக்கு வாங்கப்படும். |
TRB- அறிவிப்பு கணினி பயிற்றுனர் பணி விண்ணப்பங்களை டிஆர்பிக்கு அனுப்ப வேண்டாம். Posted: 30 Oct 2014 06:22 PM PDT கணினி பயிற்றுநர் பணிநியமனம் பதிவு மூப்பு அடிப்படை யில் நடக்கஇருப்பதால், ஆசிரியர் தேர்வு வாரியத் துக்கு யாரும் விண்ணப்பம் அனுப்ப வேண்டாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 652 கணினி பயிற்றுநர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கணினி பயிற்றுநர் பணி நியமனம் அனைத்தும் வேலை வாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படை யில் நடக்கிறது. வேலை வாய்ப்பகம் பரிந்துரை செய்யும் நபர்கள் மட்டுமே தெரிவுப் பணிகளுக்கு பரிசீலிக்கப்படுவார்கள். அதனால், ஆசிரியர் தேர்வு வாரியம் கணினி பயிற்றுநர்களை தேர்வு செய்வது தொடர்பாக எந்த விண்ணப்பங்களையும் கேட்கவில்லை. அதனால் இந்தபணி நியமனம் தொடர்பாக விண்ணப்பங்களை நேரடியாக ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்ப வேண்டாம். இவ்வாறு ஆசிரியர் தேர்வு வாரிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. |
தொழிற்கல்வி கணினி பயிற்றுனர் பணி பதிவு மூப்பு பட்டியல் வெளியீடு. Posted: 30 Oct 2014 06:20 PM PDT தொழிற்கல்வி கணினி பயிற்றுனர் பணிக்கான பதிவு மூப்பு விவரங்கள்அடங்கிய பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி வெளியிட்டுள்ள அறிக்கை: ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தொழிற்கல்வி கணினிபயிற்றுனர் பணி காலியிடத்திற்கு சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் மாநில பதிவு மூப்பு அடிப்படையில் தகுதியுடைய பதிவுதாரர்கள் பரிந்துரை செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்துக்கு பி.எட்., கல்வி தகுதியுடன் பி.இ., கணினி அறிவியல், பி.எஸ்.சி., கணினி அறிவியல், பி.சி.ஏ., பி.எஸ்.சி., தகவல் தொழில்நுட்பம் பட்டம் பெற்றவர்கள் தகுதியுடையவர்கள் ஆவர். வயது வரம்பு 1.7.2014 அன்று 18 வயது முதல் 57 வயதுக்குஉட்பட்டவராக இருத்தல் வேண்டும். மேலும், விவரங்களை www.chennai.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச பதிவு மூப்புக்கு உட்பட்ட சென்னை மாவட்ட பதிவுதாரர்கள் மட்டும் வருகிற 3ம் தேதிக்குள் சென்னை கிண்டி தொழிற்பேட்டை, தொழில் மற்றும் செயல்வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களுடைய பரிந்துரைத்தல் விவரங்களை நேரில் சரிபார்த்து கொள்ளலாம். |
தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலைமையாசிரியர்கள் நியமனம் Posted: 30 Oct 2014 06:16 PM PDT தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப் பள்ளிகள் உள்பட 248 பள்ளிகளுக்கான தலைமையாசிரியர் பணியிடங்கள் வியாழக்கிழமை நிரப்பப்பட்டன. இந்த ஆண்டு புதிதாகத் தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப் பள்ளிகள் உள்பட 248 மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன. இந்தப் பணியிடங்களுக்கான ஆன்-லைன் கலந்தாய்வு தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு, அவர்கள் விரும்பிய இடங்களில் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களாகப் பதவி உயர்வு வழங்கப்பட்டதாக பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. |
தரிசு நில தாவரம், வைக்கோலில் இருந்து எத்தனால் தயாரிப்பு : பேராசிரியர் தகவல் Posted: 30 Oct 2014 06:14 PM PDT தரிசுநில தாவரங்கள், வைக்கோலில் இருந்து எத்தனால் தயாரிக்கும் முறையை கண்டறிந்துள்ளதாக மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி பேராசிரியர் ராஜேந்திரன் தெரிவித்தார். இந்தியாவில் பதிவான வாகனங்களின் எண்ணிக்கை 165 மில்லியன். இவற்றிற்கான தினமும் எரிபொருள் அளவு 167 மில்லியன் லிட்டர். பெட்ரோல் பயன்பாட்டை குறைக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்கு எத்தனால் உதவுகிறது. இந்தியாவில், ஆண்டுக்கு எத்தனால் உற்பத்தி 5.5 பில்லியன் லிட்டர். இதில் 300 மில்லியன் லிட்டரை பெட்ரோலுடன் கலந்து பயன்படுத்துகிறோம். இதன்மூலம் 2017 க்குள் பெட்ரோல் பயன்பாட்டை 20 சதவீதம் குறைக்கலாம். காலநிலை மாற்றம், கரும்பு உற்பத்தி மற்றும் கரும்பாலைகளில் மொலாசஸ் உற்பத்தி குறைவு போன்ற காரணங்களால் குறிக்கோளை எட்டுவது சிரமம். எத்தனால் தயாரிக்க, மொலாசஸூக்குப் பதில் மாற்றுப் பொருளைக் காண வேண்டும். மதுரையில் ஆய்வு: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி உயிர் தொழில் நுட்ப பிரிவில் இதுபற்றிய ஆய்வு நடக்கிறது. அதன் ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் கூறியதாவது: சப்பாத்திக் கள்ளி, நார் கற்றாழை, சோற்றுக் கற்றாழை, பிரண்டை, கார்லுமா, யானை நெருஞ்சியை பயன்படுத்தி எத்தனால் தயாரிக்க ஆய்வு செய்கிறோம். நார் கற்றாழையின் குருத்தை அரைத்து, பிழிந்தெடுத்த சாறுடன் சிறிதளவு தேங்காய் தண்ணீர் சேர்க்க வேண்டும். இவற்றை ஈஸ்ட் அல்லது சைமேமோனஸ் பாக்டீரியா கொண்டு, எட்டு நாள் நொதிக்க வைக்க எத்தனால் உற்பத்தியாகிறது. இந்த எத்தனாலின் அளவு, சக்கரை மொலாசஸ் மூலம் சாராய ஆலைகளில் பெறப்படும் எத்தனாலுக்கு இணையாக உள்ளது. தாவரங்கள் வறண்ட நிலத்தைச் சேர்ந்தவை. வைக்கோலில் எத்தனால்: வைக்கோலில் இருந்து எத்தனால் தயாரிக்கும் முறை நடைமுறையில் உள்ளது. மற்றொரு ஆய்வுமூலம், வைக்கோலில் அதிக எத்தனால் உற்பத்தி செய்யும் முறையை கண்டறிந்துள்ளோம். வைக்கோலை உடைத்து சிதைக்க காளான் பூஞ்சைகளைப் பயன்படுத்துவது புதிய அணுகுமுறை. இப்பூஞ்சைகள் மூலம் வைக்கோல் 60 நாட்களுக்கு நொதிக்க வைக்கப்படும். அப்போது வைக்கோலில் உள்ள ஸ்டார்ச், குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் சிறிய சர்க்கரையாக மாற்றப்படும். இவை ஈஸ்ட் மற்றும் சைமேமோனஸ் பாக்டீரியாவால் பயன்படுத்தப்பட்டு எத்தனால் உற்பத்தியாகிறது. நொதித்த வைக்கோலுடன் தேங்காய் தண்ணீர் சேர்த்து, கூழாக மாற்றி, நீர்சேர்த்து, நீராவியால் தொற்று நீக்கம் செய்வர். பின் ஈஸ்ட் அல்லது சைமேமோனஸ்சுடன் கலந்து 10 நாள் நொதிக்க வைத்து, எத்தனால் வடித்தெடுக்கப்படும், என்றார். |
அப்துல் கலாம் நலமாக உள்ளார் : ஆலோசகர் புது தகவல் Posted: 30 Oct 2014 06:13 PM PDT கமுதி: ''முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நலமாக உள்ளார்,'' என்று அவரது அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் தெரிவித்தார். பசும்பொன் வந்திருந்த அவர் கூறியதாவது: மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்கள், பேரிடர் நிகழ்வு நடந்த இடங்களில் உண்மை நிலவரத்தை அறிய 'தெர்மல் இமேஜிங் கேமரா' பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கேமராக்கள் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் எளிதாக உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக தேவர் நினைவிடத்தில் இந்த கேமரா அண்ணா பல்கலை மேலாண்மை துறை மூலமாக செயல்படுத்தப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி கலாம் உடல் நலம் குறித்து தவறான செய்திகள் வெளிவருகின்றன. அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார், என்றார். |
ரூ.20 சம்பளத்தில் பகுதிநேர நூலகர்கள் Posted: 30 Oct 2014 06:13 PM PDT வேலை நாட்களுக்கு மட்டும் தினமும் 20 ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாலும், வேறு எந்த அரசு சலுகைகளும் கிடைக்காததாலும் மாதம் 400 ரூபாய் சம்பளம் கூட கிடைக்காமல் பகுதி நேர நூலகர்கள் மனம் நொந்த நிலையில் 16 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர். நூலகத்துறையை தமிழக அரசு கண்டுகொள்ளவே இல்லை. இத்துறையில் 20க்கும் மேற்பட்ட மாவட்ட நூலக அலுவலர் பணியிடம் மூன்றாண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ளது. இப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படவே இல்லை. அதேபோல் 35க்கும் மேற்பட்ட முதல்நிலை ஆய்வாளர் பணியிடங்களும் காலியாகவே உள்ளன. இப்பணியிடங்களும் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன. இதேபோல் நூலகர் பணியிடங்கள், பகுதி நேர நூலகர் பணியிடங்கள் என காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை தொடர்கதையாகிறது. பணிபுரிபவர்களுக்கு மனிதநேய சலுகைகள் கூட வழங்கப்படுவதில்லை. தமிழகம் முழுவதும் 16 ஆண்டுகளாக பணிபுரியும் பகுதி நேர ஊழியர்களுக்கு எந்த பணிப்பலன்களும் வழங்கப்படவில்லை. 1800 பகுதி நேர நூலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இதுவரை தினமும் 20 ரூபாய் சம்பளம் மட்டுமே வழங்கப்படுகிறது. அதுவும் வேலை நாட்களில் மட்டும் தான் சம்பளம். மாதம் 10 நாட்கள் வரை விடுமுறை வந்து விடுகிறது. எனவே இவர்களது மாதச்சம்பளமே 400 ரூபாய் தான். அதுவும் முறையாக வழங்கப்படுவதில்லை. என்றாவது ஒருநாள் நமக்கும் அரசு ஊழியர்களை போல் சலுகைகளும், சம்பளமும் கிடைக்கும் என்ற ஆசையில் வாழ்க்கையை தொலைத்து விட்டு தவிக்கின்றனர். |
அரசு பள்ளிகளை வலுப்படுத்த கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை Posted: 30 Oct 2014 06:12 PM PDT 'பள்ளிகளில், தாய்மொழி கல்வியை வழங்குவதுடன், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை வலுப்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கல்வி உரிமைக்கான அகில இந்திய கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர், பிரின்ஸ் கஜேந்திரபாபு வெளியிட்ட அறிக்கை: கல்வி உரிமைக்கான அகில இந்திய கூட்டமைப்பு, கல்வி சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும், நவம்பர், 2ம் தேதி முதல், பிரசாரம் செய்கிறது. இறுதியில், டிசம்பர், 4ம் தேதி, மத்திய பிரதேச தலைநகர், போபாலில் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடக்கிறது. இதில், நாடு முழுவதிலும் இருந்து, கல்வி ஆர்வலர்கள் பலர் பங்கேற்கின்றனர். தமிழகத்தில், பல்வேறு இடங்களில், பிரசாரம் நடக்கிறது. பள்ளிகளில், தாய்மொழி கல்வியை வழங்குவதுடன், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை வலுப்படுத்த வேண்டும்; கல்வி நிறுவனங்களில், வெளிநாட்டு அன்னிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது; மாவட்டந்தோறும், மத்திய பல்கலை துவக்க வேண்டும் என்பது உட்பட, பல கோரிக்கைகள், வலியுறுத்தப்படும். இவ்வாறு, பிரின்ஸ் கூறியுள்ளார். |
கம்ப்யூட்டர் ஆசிரியர் பணி: டி.ஆர்.பி., வேண்டுகோள் Posted: 30 Oct 2014 06:12 PM PDT 'கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வு, வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே நடக்கும்; விண்ணப்பம் அனுப்பக் கூடாது' என, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) கேட்டுக் கொண்டுள்ளது. டி.ஆர்.பி., அறிவிப்பு அரசு பள்ளிகளில், 652 கம்ப்யூட்டர் பயிற்றுநர் காலி பணியிடங்களை நிரப்பும் பணி, வேலை வாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில் நடக்க உள்ளது. வேலை வாய்ப்பு இயக்குனரகத்தால் பரிந்துரை செய்யப்படுபவர்கள் மட்டுமே, ஆசிரியர் பணிக்கு, பரிசீலனை செய்யப்படுவர். இந்த வேலை தொடர்பாக, டி.ஆர்.பி., விண்ணப்பம் எதையும் கேட்கவில்லை. எனவே, பதிவுதாரர்கள், டி.ஆர்.பி.,க்கு, விண்ணப்பம் எதையும் அனுப்ப வேண்டாம். இவ்வாறு, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது. |
You are subscribed to email updates from கல்விச் செய்தி To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |