வாழ்க வளமுடன் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் வாழ்க வளமுடன்!

Tuesday, April 26, 2016

திருஷ்டி சுத்தி போடுவது எப்படி?

திருஷ்டி சுத்தி போடுவது எப்படி?

By admin | May 23, 2014
திருஷ்டி என்பது சம்ஸ்கிருத சொல். தமிழில் கண். திருஷ்டி கழித்தலை தமிழர்கள் கண்ணேறு கழித்தல் என்று கூறுவார்கள்.

குழந்தை திருஷ்டி;
பிறக்கும் குழந்தை எல்லாம் அழகுதான். அழகோ அழகுன்னு எல்லாரும் கொஞ்சறப்போ ஏற்படுற திருஷ்டிக்கு பரிகாரம் தான் கருப்பு திருஷ்டி பொட்டு. எளிமையான இது எல்லோராலும் செய்யக்கூடிய ஒன்று.நெற்றியிலும் கன்னத்திலும் இடப்படும் மைப்பொட்டு குழந்தையின் திருஷ்டியை போக்கும். கோயில்கள்ல தருகின்ற ஹோம ரட்சையை வைத்தால் இன்னும் கூடுதல் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை!.

வாலிப திருஷ்டி;
ஒருகைப்பிடி உப்பை எடுத்து கையை நல்லா மூடிகிட்டு இளைஞனையோ/வாலிப பெண்ணையோ கிழக்கு நோக்கி இருத்தி இடமிருந்து வலமா மூணுதடவையும் வலமிருந்து இடமா மூணு தடவையும்சுத்தி அப்படியே சுத்தி அந்த உப்பை தண்ணியில போட்டுடுங்க. தண்ணியில உப்பு கரையரா மாதிரி திருஷ்டி எல்லாம் கரைஞ்சி போய்விடும்.

பெரியவங்களுக்கு;
புதிய சட்டி ஒன்று, ஊமத்தங்காய், படிகாரம் தெருமண் , இவைகளை சேகரித்துக் கொண்டு பெரியவர்களை தெருவாசலில்கிழக்கு முகமாக நிறுத்தி மண்சட்டிக்குள் ஊமத்தங்காய், படிகாரம், தெருமண் இவை மூன்றையும் போட்டு மண்சட்டியை தலைக்கு இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் மூன்று முறை சுற்றி தலை முதல் பாதம் வரை இறக்கி அப்படியே எடுத்துச் சென்று முச்சந்திகள் கூடும் இடத்தில் போட்டு உடையுங்கள். கையோடு ஒரு துடைப்பம் எடுத்துச் சென்று ஓரமாக பெருக்கித் தள்ளுங்கள். இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் போகும். பின்னர் வீடு திரும்பி கைகால் கழுவி தலையில் சிறிது தண்ணீர் தெளித்துக் கொண்டு வீட்டிற்குள் நுழையவும் . பிள்ளையையும் அவ்வாறே செய்ய செய்து உள்ளே அழைத்துச் செல்லவும்.

மாதம் ஒருமுறை மூன்று கண் கொட்டாங்கச்சி எடுத்து அதை அடுப்பில் பற்றவைத்து ஒரு தட்டில் வைத்து சுற்றி தெருவில் ஓரமாக போடலாம்.

இன்னும் சில வீடுகளில் கடுகுமிளகாய், உப்பு சிறிது தெருமண், தலைமுடி இவற்றினை கையில் எடுத்துக் கொண்டு குழந்தையை உட்காரவைத்து ஊருகண்ணு, உறவு கண்ணு, நாய் கண்ணு, நரிக் கண்ணு, நோய்கண்ணு, நொள்ள கண்ணு கண்டக்கண்ணு, கள்ளக் கண்ணு, அந்த கண்ணு, இந்த கண்ணு எல்லாம் கண்ணும் கண்டபடி தொலையட்டும் கடுகு போல வெடிக்கட்டும் என்று இடமிருந்துவலமாகவும் வலமிருந்து இடமாகவும் சுற்றி அடுப்பில்போடுவார்கள்.
இதுவும் ஒரு எளிமையான திருஷ்டி பரிகாரமே!

இந்த திருஷ்டி பரிகாரங்கள் நம்முடைய முன்னோர்கள் தொன்றுதொட்டு கடைபிடித்து வந்தவை ஆகும்.இதை கடைபிடிப்பது அவரவர் விருப்பம் ஆகும்

எந்தெந்த தெய்வங்களை வீட்டில் வைத்து வணங்கலாம்?

வீட்டில் வைத்து வணங்க வேண்டிய கடவுள்கள்

பொதுவாக கடவுள் வழிபாட்டில் உருவ வழிபாடு மிக முக்கியமானது. உருவ வழிபாடே மக்களின் மனதை கடவுளிடம் ஒன்றுமாறு செய்யக…்கூடியதாகும். இத்தகைய உருவ வழிபாட்டில் பிம்பங்களை அதாவது படங்களை வைத்து வழிபாடு செய்வதும் அடங்கும். அவ்வாறு படங்களை வைத்து வழிபாடு செய்வதில் சில விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். இல்லையேல் நமது வாழ்வில் குழப்பங்கள் உண்டாகும். எனவே குழப்பங்களை தவிர்த்து இறை வழிபாடு தழைக்கவே இப்பதிவு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

வீட்டில் வைத்து வணங்க வேண்டிய கடவுள்கள் / தெய்வங்கள் / தேவதைகள்:-

1. அவரவர் குல தெய்வத்தின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். இது மிகவும் நன்மை பயக்கும். குல தெய்வம் நம்மை கண்ணின் இமை போல் காத்து நிற்கும். குல தெய்வத்தினை விட உயர்ந்த தெய்வம் உலகில் இல்லை. குல தெய்வத்தின் அருள் இல்லாமல் நாம் வாழவே இயலாது.

2. அவரவர் இஷ்ட தெய்வத்தின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். இதுவும் நன்மை பயக்கும். நமது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி நம்மை காப்பாற்றும் தெய்வம் இஷ்ட தெய்வமே. குல தெய்வத்திற்கு அடுத்தபடியாக நமக்கு அருள் பாலிக்கும் தெய்வம் இஷ்ட தெய்வமே.

3. எந்த ஒரு விநாயகர் படத்தினையும் வைத்து வணங்கி வரலாம். முழு முதற் கடவுள் இவரே. இவரை வழிபடுவதால் நம் வாழ்வில் அனைத்து நலங்களையும் பெறலாம். காரியசித்தி உண்டாக்குபவர் இவரே. விக்கினங்களையும், வினைகளை களைபவரும் இவரே. நல்வழி காட்டுபவரும் இவரே.

4. குழந்தை கடவுளரின் படம் எதுவாக இருந்தாலும் வைத்து வணங்கி வரலாம். இது குழந்தை வரம் தரும். குழந்தை இல்லாதவர்கள் வழிபாடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். நல்ல குழந்தைகள் பிறக்கும். பிறந்த குழந்தைகளின் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.

5. ராஜ அலங்கார முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். அரசாங்க காரியங்களில் வெற்றி பெறவும், அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களும், அரசியலில் முன்னேற துடிப்பவர்களும் வணங்க வேண்டிய கடவுள் இவரே. இவரின் அருள் இல்லாமல் அரசியலும் இல்லை, அரசாங்கமும் இல்லை.

6. மணக்கோலத்தில் இருக்கும் முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணத்தடையை போக்கும் வடிவம் ஆகும். திருமணம் ஆனவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியை பொங்க செய்யும் வடிவம் இதுவே ஆகும். இல்லறம் நல்லறமாக நடக்கும்.

7. அர்த்தநாரீஸ்வரின் படம் வைத்து வணங்கி வரலாம். நாம் அனைவரும் வணங்க வேண்டிய கடவுள் இவரே. பிரிந்த தம்பதியர் வணங்கி வந்தால் விரைவில் ஒன்று சேருவர். தம்பதியரின் திருமண வாழ்வில் ஒற்றுமை, அன்பு, காதல், பாசம் உண்டாகும். தம்பதியரின் கருத்து வேற்றுமை நீங்கும்.

8. சக்தியுடன் இருக்கும் சிவபெருமானின் படத்தினை வணங்கி வரலாம். சிவசக்தி கலப்பே உலகம். சிவசக்தி கலப்பில்லாமல் உலகில்லை. சக்தியுடன் இருக்கும் சிவபெருமானுக்கே மிகவும் வலிமை அதிகம். எப்போதும் எல்லோருக்கும் எல்லாவற்றையும் வழங்கும் வடிவம் சிவசக்தி வடிவம் ஆகும்.

9. ராதையுடன் இருக்கும் குழலூதும் கிருஷ்ணரின் படம் வைத்து வணங்கி வரலாம். இது திருமணத்தடையை நீக்கும் வடிவம் ஆகும். இந்த வடிவம் தம்பதியர் இடையே அன்பு, பாசம், காதல், நேசம் இவற்றை உருவாக்கும் வடிவம் ஆகும். தம்பதியரின் கருத்து வேற்றுமையை நீக்கும் வடிவம் ஆகும்.

10. குடும்பத்துடன் இருக்கும் சிவபெருமானின் படம் வைத்து வணங்கி வரலாம். இதுவே எல்லா வடிவங்களைக் காட்டிலும் மிகவும் சிறந்தது. இதனை வைத்து வணங்கி வர குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் உண்டாகும். குடும்பம் ஒற்றுமையுடன் செழித்து வளரும்.

11. தனது மனைவியான சொர்ணதாதேவியை அணைத்தவாறு தன் மடியில் அமர்த்தி அருள்பாலிக்கும் சொர்ணபைரவரின் படமும் வீடுகளில் வைத்து வணங்கத் தக்கதே. பைரவ வடிவங்களிலேயே சிறந்த இவ்வடிவத்தினை வணங்கி வர அறம், பொருள் மற்றும் இன்பம் அனைத்தும் பெருகும்.

12. ராமர், சீதை, லட்சுமணன் இவர்களுடன் கூடிய அனுமனின் படமும் சிறப்பானதே. பஞ்சமுக அனுமன் கேட்ட வரங்களை எல்லாம் அள்ளித் தருபவர். அனுமனின் படம் வைத்தால் அதனுடன் ராமனின் படத்தையும் கட்டாயம் வைக்க வேண்டும்.

13. லட்சுமியுடன் கூடிய நாராயணனின் எந்த ஒரு அவதாரத்தையும் தாராளமாக வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். இதனால் திருமகளின் அருள் கிட்டும். நிம்மதியான வாழ்க்கையும் 16 வகை பேறுகளும் கிட்டும்.

14. சிவகாமசுந்தரியுடன் நடனமாடும் நடராசரை தாராளமாக வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். இது சிவசக்தி அருளைத் தரும். 16 பேறுகளும் கிட்டும். நடனம், இசை முதலான நுண்கலைகளில் புலமை உண்டாகும். கர்மவினைகள் தொலையும். மாயை விலகும். முக்தி கிட்டும்.

15. ஞானத்தினை போதிக்கும் தட்சணாமூர்த்தியின் படம் வீட்டில் வைத்து வணங்கி வழிபாடு செய்வது நன்று. இதனால் அறிவும், ஞாபக சக்தியும் உண்டாகும். கல்வி ஞானம் கிட்டும். ஞாபக மறதி உடைய குழந்தைகள் வணங்க வேண்டிய வடிவம் இதுவே. கல்வி, செல்வம், வீரம் மூன்றும் கிட்டும்.

16. கலைமகளின் படமும் வீட்டில் வைத்து வணங்கத் தக்கதே. இதனால் குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் பேச்சுத்திறமையும், எழுத்துத்திறமையும் உண்டாகும். நமது வளமான வாழ்விற்கு வாணி வழிகாட்டுவாள். போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டாகும்.

17. லட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம். குபேரனுக்கு அருள் பாலிக்கும் லட்சுமி படமும், லட்சுமி மற்றும் குபேரன் இவர்கட்கு அருள் பாலிக்கும் சிவபெருமானின் படமும் மிகவும் சிறந்தவை. இத்தகைய படங்களை வைத்து வணங்கி வர 16 பேறுகளும் கிட்டும். 8 ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.

18. அலர்மேல்மங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படம் வீட்டில் வைத்து வணங்கி வரலாம். இதனால் செய்தொழிலில் நல்ல வருமானமும், சுகமான வாழ்க்கையும் அமையும். மேற்கண்ட படத்துடன் லட்சுமியின் படமும் இருப்பது மிகவும் சிறப்பானது.

19. துர்க்கையின் படம் வீட்டில் வைத்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது. இதனால் தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும். கணவன் மற்றும் மனைவி இடையே ஒற்றுமை உண்டாகும். செய்யும் தொழிலில் மேன்மை உண்டாகும். வியாபாரம் பெருகும்.

20. அன்னம் பாலிக்கும் அன்னபூரணியின் படம் நாம் அவசியம் வீட்டில் வைத்து வழிபாடு செய்தல் மிகவும் சிறப்பானது. இதன் மூலம் வறுமை அகலும். பசி, பட்டினி, பஞ்சம் தீரும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும்.

21. சித்தர்கள், மகான்கள், முனிவர்கள், யோகிகள், ரிஷிகள் இவர்களின் படங்களையும் வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். இதனால் குருவருள் வந்து சேரும். தோஷங்கள் விலகும். கர்மவினைகள் நீங்கி புண்ணியம் சேரும். வளமான, நிம்மதியான வாழ்க்கை கிட்டும்

Monday, April 25, 2016

எந்த நாள் எந்த திதி அறிய

எந்த நாள் எந்த திதி…..? அறிய…

By admin | May 22, 2014
ஒரு மாதத்திற்கு அமாவாசை, ஒரு பவுர்ணமி வரும். அந்த இரு நிகழ்ச்சிகளும் பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியால் ஏற்படுவதை நீங்கள் அறிவீர்கள். நாட்களைச் சுட்டிக்காட்ட அமாவாசையிலிருந்து அல்லது பவுர்ணமியிலிருந்து எத்தனையாவது நாள் என்று குறிப்பிட்டுக் காட்டவே பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்களுக்கும் பெயரிட்டிருக்கிறார்கள்.

1. பவுர்ணமி, அமாவசைக்கு அடுத்த நாள் பிரதமை பிரதமர் என்றால் முதல்வர் என்று பொருள். அதுபோல் பிரதமை என்றால் முதல் நாள்.

2. துவிதை என்றால் இரண்டாம் நாள் தோ என்றால் இரண்டு. துவிச் சகர வண்டி என்று சைக்கிளைக் கூறுவது தங்களுக்கு தெரியும்.

3. திரிதியை என்றால் மூன்றாம் நாள் திரி என்றால் மூன்று அல்லவா?

4. சதுர்த்தி என்றால் நான்காம் நாள் சதுரம் நான்கு பக்கங்கள் கொண் டது.

5. பஞ்சமி என்றால் அய்ந்தாம் நாள் பாஞ்ச் என்றால் அய்ந்து எனப் பொருள்.

6. சஷ்டி என்றால் ஆறாம் நாள்.

7. சப்தமி என்றால் ஏழாம் நாள். சப்த ஸ்வரங்கள் என ஏழு ஸ்வரங்களைக் கூறுவதில்லையா?

8. அஷ்டமி என்றால் எட்டாம் நாள். அஷ்டவக்கிரம் என்று எட்டு கோணல்களைக் கூறுவதையும் அஷ்ட லட்சுமி என்றெல்லாம் கூறக் கேட்டிருக்கிறோம்.

9. நவமி என்றால் ஒன்பதாம் நாள் நவ என்றால் ஒன்பது என்றும் நவ கிரகங்கள் என்பதும் தங்களுக்குத் தெரியும்.

10. தசமி என்றால் பத்தாம் நாள் தஸ் என்றால் பத்து அல்லவா? தாரம் என்று கடவுளின் அவதாரங்களைக் கூறக் கேட்டிருக்கிறோம்.

11. ஏகாதசி என்றால் பதினொன்றாம் நாள் ஏக் என்றால் ஒன்று தஸ் என்றால் பத்து இரண்டின் கூட்டுத் தொகை பதினொன்று.

12. துவாதசி என்றால் பன்னிரண்டாம் நாள் தோ/துவி என்றால் இரண்டு தஸ் என்றால் பத்து எனவே இதன் கூட்டுத்தொகை பன்னிரண்டு ஆகும்.

13. திரியோதசி என்றால் பதிமூன்றாம் நாள் திரி என்றால் மூன்று + தஸ் என்றால் பத்து ஆகப் பதிமூன்று.

14. சதுர்த்தசி என்றால் பதினான்காம் நாள் சதுர் (சதுரம்) என்றால் நான்கு அத்தோடு தஸ் என்ற பத்து சேர்த்தால் பதினான்கு என ஆகும்.

சதுர்த்தசிக்கும் அடுத்தது பவுர்ணமி அல்லது அமாவாசை ஆகி விடும். .

எந்த நாள் எந்த திதி…..? அறிய…

நல்ல செய்திகளை பகிர்வோம், பயனடைவோம்…ஒரு மாதத்திற்கு அமாவாசை, ஒரு பவுர்ணமி வரும். அந்த இரு நிகழ்ச்சிகளும் பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியால் ஏற்படுவதை நீங்கள் அறிவீர்கள். நாட்களைச் சுட்டிக்காட்ட அமாவாசையிலிருந்து அல்லது பவுர்ணமியிலிருந்து எத்தனையாவது நாள் என்று குறிப்பிட்டுக் காட்டவே பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்களுக்கும் பெயரிட்டிருக்கிறார்கள்.

1. பவுர்ணமி, அமாவசைக்கு அடுத்த நாள் பிரதமை பிரதமர் என்றால் முதல்வர் என்று பொருள். அதுபோல் பிரதமை என்றால் முதல் நாள்.

2. துவிதை என்றால் இரண்டாம் நாள் தோ என்றால் இரண்டு. துவிச் சகர வண்டி என்று சைக்கிளைக் கூறுவது தங்களுக்கு தெரியும்.

3. திரிதியை என்றால் மூன்றாம் நாள் திரி என்றால் மூன்று அல்லவா?

4. சதுர்த்தி என்றால் நான்காம் நாள் சதுரம் நான்கு பக்கங்கள் கொண் டது.

5. பஞ்சமி என்றால் அய்ந்தாம் நாள் பாஞ்ச் என்றால் அய்ந்து எனப் பொருள்.

6. சஷ்டி என்றால் ஆறாம் நாள்.

7. சப்தமி என்றால் ஏழாம் நாள். சப்த ஸ்வரங்கள் என ஏழு ஸ்வரங்களைக் கூறுவதில்லையா?

8. அஷ்டமி என்றால் எட்டாம் நாள். அஷ்டவக்கிரம் என்று எட்டு கோணல்களைக் கூறுவதையும் அஷ்ட லட்சுமி என்றெல்லாம் கூறக் கேட்டிருக்கிறோம்.

9. நவமி என்றால் ஒன்பதாம் நாள் நவ என்றால் ஒன்பது என்றும் நவ கிரகங்கள் என்பதும் தங்களுக்குத் தெரியும்.

10. தசமி என்றால் பத்தாம் நாள் தஸ் என்றால் பத்து அல்லவா? தாரம் என்று கடவுளின் அவதாரங்களைக் கூறக் கேட்டிருக்கிறோம்.

11. ஏகாதசி என்றால் பதினொன்றாம் நாள் ஏக் என்றால் ஒன்று தஸ் என்றால் பத்து இரண்டின் கூட்டுத் தொகை பதினொன்று.

12. துவாதசி என்றால் பன்னிரண்டாம் நாள் தோ/துவி என்றால் இரண்டு தஸ் என்றால் பத்து எனவே இதன் கூட்டுத்தொகை பன்னிரண்டு ஆகும்.

13. திரியோதசி என்றால் பதிமூன்றாம் நாள் திரி என்றால் மூன்று + தஸ் என்றால் பத்து ஆகப் பதிமூன்று.

14. சதுர்த்தசி என்றால் பதினான்காம் நாள் சதுர் (சதுரம்) என்றால் நான்கு அத்தோடு தஸ் என்ற பத்து சேர்த்தால் பதினான்கு என ஆகும்.

சதுர்த்தசிக்கும் அடுத்தது பவுர்ணமி அல்ல

Wednesday, April 13, 2016

தயிர் பயன்கள்

அட...தயிரை வைத்து இதெல்லாம் செய்யலாமா,,?

சிறந்த அருமருந்தான தயிர், பாலை விட வெகு சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும் சக்தி கொண்டது.
உதாரணத்திற்கு பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32 சதவீதம் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91 சதவீதம் உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.
அதுமட்டுமின்றி பாலைத் தயிராக மாற்றும் பக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.
மேலும் நன்மை தரும் பக்டீரியாக்களை உருவாக்குவதால், ஜீரணி சக்தியை தூண்டி வயிற்று உபாதைகளை சரி செய்கிறது.
இதன் மற்ற பலன்கள்,

* ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.

* அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும்போது வெந்தயம் மற்றும் ஒரு தயிர் கப் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும்.

* மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.

* வெண்ணெய் காய்ச்சி இறக்கும்போது சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும். புளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலை முடி மிருதுவாக இருக்கும்.

* தயிரில் தேங்காயை சிறிய துண்டாக்கி சேர்த்தால் 23 நாட்கள் வரை புளிக்காது.

* வெண்டைகாய் வதக்கும்போது ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்தால் நிறம் மாறாமல், பிசுபிசுக்காமல் இருக்கும்.

* வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது. மண்ணெண்ணெய் வாசம் போக தயிர் கொண்டு கை கழுவலாம்.

* மோராக கடைந்து உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம்.

Tuesday, April 12, 2016

காய்கறிகளில் உள்ள சத்துக்கள்

மனிதனுக்கு தேவையான சத்துக்களை அசைவ உணவுகளை விட சைவ உணவுகளே அதிகம் அள்ளித்தருகின்றன.
சைவ உணவுகளான காய்கறிகளை சாப்பிடும் போது மனிதனுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கின்றன.
அந்த வகையில் என்னென்ன காய்கறிகளில் என்ன சத்துக்கள் இருக்கின்றன என்பதை பார்ப்போம்,

வாழைத் தண்டு
கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுக்கள், வைட்டமின் பி, சி ஆகியவை உள்ளன. இது சிறுநீர் பாதையில் கல் அடைப்பு இருந்தால் கரைக்க உதவும்.

பீட்ரூட்
இதில் துத்தநாகம், கால்ஷியம், சோடியம், பொட்டாஷியம் ஆகியவை உள்ளன. மலச்சிக்கலைப் போக்கும். உடல் வளர்ச்சிக்கு ஏற்றது.

வாழைப்பூ
கால்ஷியம், பாஸ்பரஸ், புரதச்சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி உள்ளன. மலச்சிக்கலை போக்க உதவும்.

உருளைக்கிழங்கு
இதில் மாவுச்சத்து அதிகமாக உள்ளது. வைட்டமின் ஏ, சி மற்றும் பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியவை உள்ளன.

வாழைக்காய்
இரும்புச் சத்து, போலிக் ஆசிட், வைட்டமின் ஏ, பி, சி உள்ளன. கர்ப்பிணி பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ரத்தசோகையைத் தடுக்க உதவும்.

பாகற்காய்
இந்த காயில் வைட்டமின் சி, ஏ, பி, பாஸ்பரஸ், கால்ஷியம் உள்ளன. இந்த காயை சாப்பிடுவதன் மூலம் பசி அதிகரிக்கும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும்.

கேரட்
இதில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. குழந்தைகளின் உணவில் அதிகமாக சேர்த்தால், பிற்காலத்தில் பார்வை கோளாறு எதுவும் வராது. மாலைக்கண் நோயை கட்டுப்படுத்தவும் உதவும்.

கத்தரிக்காய்
பாஸ்பரஸ், போலிக் ஆசிட், வைட்டமின் பி, சி உள்ளன. ரத்தத்தை சுத்தப்படுத்தும்.

வெண்டைக்காய்
போலிக் ஆசிட், கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து உள்ளது. மூளை வளர்ச்சிக்கு உதவும், குழந்தைகள் விரும்பி சாப்பிடும். தினமும் வெண்டைக்காய் சாப்பிட்டால் கணக்கில் புலி ஆகலாம்.

பீன்ஸ்
புரதச்சத்து, கால்ஷியம், இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, பி, சி உள்ளன. எலும்பு வளர்ச்சிக்கு உதவும்.

புடலங்காய்
வைட்டமின் ஏ, பி, இரும்புச் சத்து, தாமிரம், கால்ஷியம் உள்ளன. எலும்பு உறுதிக்கு இதை சாப்பிடலாம்.

அவரைக்காய்
புரதச்சத்து, நார்ச்சத்து உள்ளன, உடல் வளர்ச்சி பெறும், மலச்சிக்கலை போக்கும்.

முருங்கைக்காய்
வைட்டமின் ஏ, பி, சி மற்றும் பாஸ்பரஸ், இரும்புச்சத்து உள்ளன. ஆண்களுக்கு விந்து அதிகரிக்க உதவும், பெண்களுக்கு உதிரப் போக்கை கட்டுப்படுத்தும்.

வெங்காயம்
இரும்புச்சத்து, கால்ஷியம் உள்ளன. தினமும் சாப்பாட்டில் வெங்காயம் சேர்த்தால், உடல் கொழுப்பை கரைக்க உதவும்.

சுண்டைக்காய்
புரதச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ஏ ஆகியவை உள்ளன. எலும்புகளுக்கு வலு சேர்க்கவும், ரத்தசோகை வராமல் தடுக்கவும் உதவும்.

கருணைக் கிழங்கு
கால்ஷியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி ஆகியவை உள்ளன. இதை சாப்பிட்டால், உடல் வளர்ச்சிக்கு நல்லது. மூல நோய் வராமல் தடுக்கவும், மூலத்தை கட்டுப்படுத்தவும் உதவும்.

தக்காளி
வைட்டமின், ஏ, பி, சி மற்றும் இரும்புச்சத்து உள்ளது. உடல் உறுதிக்கும், ரத்தவிருத்திக்கும் உதவும்.

Sunday, April 10, 2016

எண்ணெய் குளியல்

எண்ணெய் குளியல் எடுக்கும் போது..

தீபாவளிக்கு மட்டுமே நினைவுக்கு வருகிற விஷயமாக மாறி விட்டது எண்ணெய் குளியல். ‘தலை வலி வரும்... ஜலதோஷம் பிடிக்கும்... முகமெல்லாம் எண்ணெய் வழியும்... தலைமுடியை அலசறது கஷ்டம்...’’ - இப்படி எண்ணெய் குளியலைத் தவிர்க்க இன்றைய தலைமுறையினருக்கு எத்தனையோ காரணங்கள்.

Posted Image

‘‘எண்ணெய் குளியலைத் தவிர்க்க எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். ஏன் தவிர்க்கக்கூடாதுங்கிறதுக்கு ஒரே ஒரு காரணம்தான்... கூந்தலுக்கும் உடலுக்கும் மனதுக்கும் அது தரும் ஆரோக்கியம்’’
எண்ணெய் குளியலில் ஏகப்பட்ட வகைகள் உள்ளன. யாருக்கு, என்ன தேவை என்பதைப் பொறுத்து அந்தக் குளியலும் வேறுபடும். அதன்படி...

சளி பிடிக்காமலிருக்கச் செய்யும் குளியல்

கால் லிட்டர் நல்லெண்ணெயில் 50 கிராம் ஓமம் போட்டுக் காய்ச்சி, வடிகட்டி வைக்கவும். தலைக்குக் குளிப்பதற்கு முன், இந்த எண்ணெயை வெதுவெதுப்பாக்கி, தலையில் தடவி, மசாஜ் செய்து வெந்நீரில் குளிக்கவும். தலை குளித்தால் உடனே ஜலதோஷம் பிடித்துக் கொள்பவர்களுக்கும், தும்மல் போடுவோருக்கும் இந்த வகையான எண்ணெய் குளியல் ஏற்றது. குளிர்ச்சியைக் கிளப்பாது. தலைமுடியை நன்கு கண்டிஷன் செய்வதோடு, முடியையும் அழகாக வைக்கும்.

வாசனை தரும் குளியல்

சம்பங்கி, மருக்கொழுந்து, தவனம், செண்பகப்பூ, பன்னீர் ரோஜா மற்றும் வெட்டிவேர் ஆகியவற்றை தலா 100 கிராம் எடுத்து, எல்லாம் மூழ்கும் அளவுக்கு நல்லெண்ணெய் விட்டு சூடாக்கவும். எண்ணெய் கொதிக்கக் கூடாது. ஓசை அடங்கியதும், அடுப்பை அணைத்து, ஒரு நாள் அப்படியே ஊற விடவும். மறுநாள் தேவையான எண்ணெயை வடிகட்டி எடுத்து லேசாக சூடாக்கி, தலையில் தடவிக் குளிக்கவும். அடுத்த முறை தலைக்குக் குளிக்கிற வரை கூந்தல் நல்ல நறுமணத்துடன் இருக்கும். கூந்தலில் இருந்து வந்து கொண்டே இருக்கும் மெல்லிய நறுமணமானது உங்களுக்கு புத்துணர்வையும் மன அமைதியையும் கொடுப்பதை உணர்வீர்கள்.

வறண்ட கூந்தலை மிருதுவாக்கும் குளியல்

அரை கப் ஆலிவ் ஆயிலில், உதிர்த்த புதிய பன்னீர் ரோஜா இதழ்கள் ஒரு கப் சேர்த்துக் காய்ச்சவும். அதை வடிகட்டி, தலைக்குத் தேய்த்துக் குளிக்கவும். இந்தக் குளியலின் மூலம் கூந்தலின் பளபளப்பு கூடும். கருப்பான கூந்தலாக இருந்தால் இன்னும் அடர் கருமையுடனும், பிரவுன் நிற கூந்தலாக இருந்தால் அழகிய பிரவுன் நிறத்துடனும் மாறும்.

குளிர்ச்சியைக் கொடுக்கும் குளியல்

பாதாம் எண்ணெய், ஆலிவ் ஆயில், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றில் தலா கால் கப் எடுத்து, அதில் 1 டீஸ்பூன் கல் உப்பு போட்டுக் காய்ச்சவும். இந்த எண்ணெயை தலை நிறைய சொதசொதவென தடவவும். இந்தக் குளியலின் மூலம் கண்களும் உடலும் குளிர்ச்சியடையும். ஒற்றைத் தலைவலி வராது. மன அழுத்தமும் படபடப்பும் நீங்கி, மன அமைதி கிடைக்கும். வாரத்தில் 2 நாட்கள் இப்படிக் குளிக்கலாம்.

இதம் தரும் இயற்கைப் பொடி

எண்ணெய் குளியல் எடுக்கும் போது ஷாம்பு உபயோகிக்காமல், இயற்கையான முறையில் தயாரித்த பொடியை உபயோகித்து தலையை அலசுவதே சரியானது. அந்தப் பொடியையும் அவரவர் தேவை மற்றும் கூந்தலின் தன்மைக்கேற்ப தயாரித்து வைத்துக் கொள்ளலாம்.

கால் கிலோ பூந்திக் கொட்டையை விதை நீக்கி, கால் கிலோ வெந்தயம் சேர்த்து அரைத்து சலித்துக் கொள்ளவும். எண்ணெய் குளியல் எடுக்கும் போது, இந்தப் பொடியில் 2 டீஸ்பூன் எடுத்து சிறிது தயிர் மற்றும் வெந்நீர் கலந்து பேக் மாதிரி தலையில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்து அலசலாம்.

200 கிராம் சீயக்காய், 100 கிராம் பச்சைப்பயறு, 100 கிராம் கடலைப்பருப்பு, டீ தூள் 100 கிராம் எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து, சலித்துக் கொள்ளவும். தனித்தனியே அரைத்தும் கலந்து கொள்ளலாம். 3 டீஸ்பூன் பொடியை வெந்நீரில் கரைத்து, தலையில் எண்ணெய் இருக்கும் போதே தடவி, அலசலாம். இதிலுள்ள டீ தூள் முடியை மென்மையாக்கும். மற்ற பொருட்கள் கண்டிஷன் செய்யும்.

கடலைப்பருப்பு 50 கிராம், பச்சைப்பயறு 50 கிராம், துவரம் பருப்பு 50 கிராம், வெந்தயம் 50 கிராம், வெட்டிவேர் 50 கிராம், பூலாங்கிழங்கு 50 கிராம் - இவை எல்லாவற்றையும் நைசாக அரைத்து சலித்துக் கொள்ளவும். இதை சின்னக் குழந்தைகளுக்குக் கூட தலைக்கும் உடம்புக்கும் தேய்த்துக் குளிப்பாட்டலாம். தினமுமே குளியலுக்கு உபயோகிக்கலாம்.

Posted Image

எண்ணெய் குளியல் எடுக்கும் போது...

எண்ணெய் குளியல் எடுப்பதால் ஒருவருக்கு ஜலதோஷம் பிடிக்காது. அதை ஒரு முறையான பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். தலைவலி இருப்பவர்கள், எண்ணெயில் நிறைய ஓமம் சேர்த்துக் காய்ச்சி உபயோகிக்கலாம். சைனஸ் அல்லது ஜலதோஷப் பிரச்னை இருந் தால், தலைக்குக் குளித்து முடித் ததும், ஈரம் போகத் துடைத்து, அகன்ற பற்கள் கொண்ட சீப்பால், சூடு கிளம்பும் அளவுக்கு நன்கு வாரி விட வேண்டும். எண்ணெய் குளியலே ஆகாது என்பவர்கள், சிறிதளவு தண்ணீரைக் கொதிக்க வைத்து, மேலே சொன்ன மூலிகைகளை ஒரு துணியில் மூட்டையாகக் கட்டிப் போட்டு, அதன் சாரம் இறங்கியதும், அந்தத் தண்ணீரைத் தலை குளிக்க உபயோகிக்கலாம்.

எண்ணெய் குளியலை முறைப்படுத்திக் கொண்டால் மன அமைதி கிடைக்கும். உடல் குளிர்ச்சியடையும். கண்கள் குளுமை பெறும். பொடுகு நீங்கும். அதன் விளைவாக இள நரை வராமலிருக்கும். முன்னந்தலையில் வழுக்கை விழாது.

எண்ணெய் குளியலுக்கு பொடியே சிறந்தது.ஆனாலும், ஷாம்புதான் வேண்டும் என நினைப்பவர்கள், பொடியுடன் சில துளிகள் ஷாம்புவையும் சேர்த்துக் குளிக்கலாம். சிலருக்கு சுருட்டை முடி இருக்கும். முடி சுருண்டு மேலே இழுத்துக் கொள்ளும். அடிக்கடி எண்ணெய் குளியல் எடுத்து வந்தால், முடி நீண்டு நன்கு வளரும். ஏசி அறையில் வேலை செய்பவர்களுக்கு எண்ணெய் குளியல் மிகமிக அவசியம். வாரம் இருமுறை அவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது கூந்தல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.

Thursday, April 07, 2016

உங்கள் ஜாதகப்படி நடக்கும் தசா-புக்தியை சாதகமாக்குவது எப்படி?

உங்கள் ஜாதகப்படி நடக்கும் தசா-புக்தியை சாதகமாக்குவது எப்படி?

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஒருவருடைய வாழ்வை நிர்ணயிப்பது முன்ஜென்ம கர்மவினை. இதையே விதிபயன் என்றும் சொல்கிறோம். ஒழுக்கம், மனிதாபிமானம், நேர்மை, கலாசார கட்டுப்பாடு போன்றவை ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள். இத்தகைய விதிகளை அவன் மீறும்போதுதான், சட்டவிதியை மீறும்போது தண்டனைக்கு ஆளாவது போல, நல்லவற்றை செய்ய தவறிய காரணத்தால் கொடும் தீவினை மனிதனை ஆட்டிபடைக்கிறது. ஒரு மனிதன் செய்கிற தீய செயல்கள் ஒரு கட்டத்திற்கு பிறகு அவனை நோக்கியே திரும்பும் என்கிறது சாஸ்திரம். அந்த சமயம் அந்த தீய பலன்களை மனிதன், இந்த ஜென்மத்திலும் அனுபவிக்க்க்கூடும் அல்லது அடுத்து வரும் பிறவிகளிலும் அனுபவிக்க்க்கூடும். இதைதான் விதி என்கிறோம். முன்ஜென்ம பயனாக ஒருவர் இந்த ஜென்மத்தில் அனுபவிக்க இருப்பது சுகங்களா? அல்லது சோகங்களா? என்பதைதான், அவரவர் ஜாதக தசா-புக்தி விரிவாக எடுத்துக்காட்டுகிறது. “ஒரு காலத்தில் அவன் எப்படி வாழ்ந்தவன் தெரியுமா?. ஆனால் இன்றோ தெருவில் நிற்கிறான்” என்பார்கள். அதுபோல, “ஒரு காலத்தில் அவன் அடுத்த வேலை உணவுக்கு கூட வழியில்லாமல் இருந்தவன். ஆனால் இன்றோ சமுதாயத்தில் பெரிய மனிதாக நல்ல அந்தஸ்தில் இருக்கிறான்” என்பார்கள். இதில் இருந்து என்ன தெரிகிறது? எதிர்காலத்தில் யாருடைய வாழ்க்கை நிலையும் இன்று இருக்கும் இதே நிலையில் இருப்பதில்லை. அதனால்தான், “30 வருடம் வாழ்நதவனும் இல்லை. 30 வருடம் தாழ்ந்தவனும் இல்லை.” என்று சொல்வார்கள். அது என்ன 30 வருடம்? சனியின் சஞ்சாரத்தை கணகிட்டுதான் நம்மவர்கள் அப்படி சொல்லி வைத்தார்கள். சனி, ஒரு இராசியில் இருந்து புறப்பட்டு மீண்டும் அதே இராசிக்கு வந்து சேர 30 வருடங்கள் ஆகிறது. அந்த 30 வருட காலகட்டத்திற்குள், ஒருவரின் வாழ்க்கையில் எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்கிறது. விண்வெளியில் புதிது புதிதாக கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வந்தாலும், யுகம் யுகமாக ஜோதிட ரீதியில் பலன் தரும் கிரகங்கள் ஒன்பது. இதில் இராகு-கேது, கண்களுக்கு தெரியாத சாயா கிரகங்கள். இந்த ஒன்பது கிரகங்களும் நமது முன்ஜென்ம கர்மவினைக்கு ஏற்ப இந்த ஜென்மத்தில் பலன் தரும் பணியை செய்கிறது. விதியை மதியால் வெல்லலாம் என்பது என்ன? ஒருவர் துன்பத்தைதான் அனுபவிக்க வேண்டும் என விதி இருந்தால், தன் மதியை பயன்படுத்தி துன்பங்களுக்கு நிவர்த்தி தேடி அதை செய்து, அந்த துன்பங்களில் இருந்து பாதிப்பு இல்லாமல் மீண்டு வருவதே, விதியை மதியால் வெல்லலாம் என்பதற்கு பொருள். நல்ல திசையை நோக்கி ஒருவரின் புக்தி செல்ல வேண்டும் என்றால், ஜாதகப்படி அந்த நபருக்கு நல்ல தசா-புக்தி நடைப்பெற வேண்டும். ஒருவருக்கு தசா-புக்தி பாதகமாக இருந்தாலும் அதற்கேற்ப எளிய பரிகாரம் செய்தால், பாதகமான தசா-புக்தியும் சாதகமாக மாறும். அனைத்து இராசிகாரர்களும் அவரவர் ஜாதக தசா-புத்திக்கு ஏற்ப அந்தந்த கிரகங்களுக்கு வழிபாடு – பரிகாரம் போன்றவற்றை தாராளமாக செய்யலாம். சூரிய திசை – புக்தி நடப்பவர்களுக்கு ஏற்ற பரிகாரம் ஞாயிற்று கிழமையில் சூரியபகவானை வணங்க வேண்டும். அன்றைய தினம் சிகப்பு ஆடை அணியலாம். கோதுமையால் தயாரித்த உணவை பசுவுக்கோ அல்லது காக்கைக்கோ தர வேண்டும்.  திங்கள் கிழமையில் சிவ வழிபாடு செய்வது இன்னும் விசேஷம். மாணிக்கம் என்ற ரத்தினத்தை வலது கையில்  மோதிர விரலில் வெள்ளியில் செய்து அணியலாம். சூரியனுக்கு உகந்த காயத்திரி மந்திரத்தை தினமும் 9 முறை ஜபித்து வர வேண்டும். சூரிய காயத்திரி மந்திரம் ஓம் அச் வ த்வஜாய வித்மஹே பாச ஹஸ்தாய தீமஹி தன்நோ சூர்ய ப்ரசோதயாத். சந்திர திசை – புக்தி நடப்பவர்களுக்கு ஏற்ற பரிகாரம் திங்கள் அன்று அம்பாளை வணங்க வேண்டும். சந்திரனுக்கு உகந்த தெய்வம் அம்மன்தான். வெள்ளை நிற ஆடை அணியலாம் அல்லது நீங்கள் அணியும் உடையில் சிறிய அளவிலாவது வெள்ளை நிறம் இருப்பது நல்லது.  நெல் தானியத்தை ஒரு கைபிடி அளவு பறவைகளுக்கு வைக்க வேண்டும். வலது கை மோதிர விரலில் முத்து மோதிரம் அணியலாம்.  பசு மாடுக்கு உணவு தர வேண்டும். இதனால் மன அமைதி ஏற்படும். புத்தி தெளிவு பெறும் புத்தி தெளிவாக இருந்தாலே அனைத்து காரியங்களும்  நடக்கும். ஸ்ரீ சந்திர காயத்ரீ மந்திரம் ஓம் பத்ம த்வஜாய வித்மஹே ஹேம ரூபாய தீமஹி! தந்தோ  ஸோம ப்ரசோதயாத்! செவ்வாய் திசை நடப்பவர்களுக்கு ஏற்ற பரிகாரம் முருகப்பெருமானையும், துர்காதேவியையும் வணங்க வேண்டும். சிகப்பு ஆடை அணியலாம். சிகப்பு மலர்களை இறைவனுக்கு சமர்ப்பிக்க வேண்டும். பவழ மோதிரம் அணிய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் கையில் செம்பு காப்போ, மோதிரமோ அணிந்தால் நன்மை தரும். பருப்பு சாதம் அதாவது துவரம் பருப்பை சாதத்தில் கலந்து காக்கைக்கு வைக்க வேண்டும்.  செவ்வாய் பகவானுக்கு உகந்த காயத்திரி மந்திரத்தை 9 முறை சொல்லி வர வேண்டும். ஸ்ரீஅங்காரக காயத்ரீ மந்திரம் ஓம் வீர த்வஜாய வித்மஹே: விக்ன ஹஸ்தாய தீமஹி! தந்நோ பௌம ப்ரசோதயாத்! புதன் திசை நடப்பவர்களுக்கு ஏற்ற பரிகாரம் பெருமாளை வணங்க வேண்டும். துளசியை பெருமாளுக்கு சமர்பிக்க வேண்டும். 5 பேருக்கு புளிசாதம், தயிர்சாதம் தானமாக கொடுக்க வேண்டும் அத்துடன் காக்கைக்கும் வைக்க வேண்டும். பசுவுக்கு  கீரை தர வேண்டும். பச்சைபயிரை வேக வைத்து     இறைவனுக்கு படைத்து அதை பிரசாதமாக சாப்பிட வேண்டும். மரகத பச்சை அல்லது சாதாரண பச்சை நிறத்தில் இருக்கும் ரத்தினத்தை மோதிரம் செய்து, வலது கையில் மோதிர விரலில் அணியலாம். 9 முறை புதன் பகவானுக்கு உகந்த காயத்திரி மந்திரத்தை சொல்லி வர வேண்டும். ஸ்ரீபுத காயத்ரீ மந்திரம் ஓம் கஜ த்வஜாய வித்மஹே: சு க ஹஸ்தாய தீமஹி தந்நோ புத ப்ரசோதயாத். குரு திசை நடப்பவர்களுக்கு ஏற்ற பரிகாரம் ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும், பெருமாளையும் அல்லது நவகிரகங்களில் உள்ள குரு பகவானையோ வணங்க வேண்டும். வியாழ கிழமையில் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். கொண்டைக் கடலையை இறைவனுக்கு படைத்து அதை பிரசாதமாக சாப்பிட வேண்டும்.  கொண்டைக் கடலையை சிலருக்கு தானம் செய்யலாம். அல்லது ஒரு கைபிடி அளவு கொண்டைக் கடலையை காக்கைக்கும் வைக்கலாம். முல்லை மலர் அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும் மலர்களை ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கோ, பெருமாளுக்கோ சமர்ப்பிக்கலாம். புஷ்பராக ரத்தினத்தை வலது கையில் ஆள்காட்டி விரலில் மோதிரமாக அணியலாம்.  9 முறை குருவுக்கு உகந்த காயத்திரி மந்திரத்தை வியாழன்தோறும் சொல்லி வர வேண்டும். ஸ்ரீ குரு காயத்ரீ மந்திரம் ஓம் வ்ருஷப த்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத். சுக்கிர திசை நடப்பவர்களுக்கு ஏற்ற பரிகாரம் வெள்ளி கிழமையில் ஸ்ரீமகாலஷ்மியையும், அரங்கநாதரையும் வணங்க வேண்டும்.  இனிப்பை தானம் செய்ய வேண்டும். வெள்ளை நிறத்தில் இருக்கும் இனிப்பு வைத்து ஸ்ரீமகாலஷ்மியை வணங்க வேண்டும். மொச்சை பயிரை சாப்பிட வேண்டும். அத்துடன் மொச்சை பயிறை தானம் செய்ய வேண்டும். மல்லிகைப்பூ தாமரையை ஸ்ரீமகாலஷ்மிக்கு சமர்ப்பிக்க வேண்டும். சுக்கிர பகவானுக்கு உகந்த காயத்திரி மந்திரத்தை 9 முறை சொல்ல வேண்டும். ஸ்ரீ சுக்ர காயத்ரீ மந்திரம் ஓம் அச் வ த்வஜாய வித்மஹே: தநுர் ஹஸ்தாய தீமஹி தந்நோ சுக்கிர ப்ரசோதயாத். சனி திசை நடப்பவர்களுக்கு ஏற்ற பரிகாரம் சனிகிழமையில் அனுமாரையும் திருப்பதி பெருமாளையும் வணங்க வேண்டும். நீலம் அல்லது கறுப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். எள் சாதத்தை காக்கைக்கு வைக்க வேண்டும். நல்லெண்ணை தானம் கஷ்டத்தை தீர்க்கும். ஆகவே  சனிஸ்வர ஆலயத்தில் நல்லெண்ணைய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இது சிறப்பான பலன்களை கொடுக்கும். சனிஸ்வர பகவானுக்கு நீலம் அல்லது கறுப்பு வஸ்திரத்தை காணிக்கையாக கொடுக்க வேண்டும்.  சனி பகவானுக்கு உகந்த காயத்திரி மந்திரத்தை 9 முறை உச்சரிக்க வேண்டும். ஸ்ரீ சனீஸ்வர காயத்ரீ மந்திரம் ஓம் காக த்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி தந்நோ மந்த ப்ரசோதயாத். இராகு திசை நடப்பவர்களுக்கு ஏற்ற பரிகாரம் செவ்வாய் கிழமையில் துர்க்கை தேவியை வழிபட வேண்டும். உளுந்து வடையை தானம் செய்யலாம். உளுந்தை பறவைகளுக்கு வைக்க வேண்டும். புளி சாதத்தை ஒருவருக்காவது தானம் செய்யவேண்டும். கோமேதக ரத்தினத்தை இடது கையில் சூரிய விரலில் மோதிரமாக அணிய வேண்டும். நீல ஆடை அணிய வேண்டும். இராகுபகவானுக்கு உகந்த காயத்திரி மந்திரத்தை 9 முறை ஜெபிக்க வேண்டும். ஸ்ரீ இராகு காயத்ரீ மந்திரம் ஓம் நாக த்வஜாய வித்மஹே: பத்ம ஹஸ்தாய தீமஹி தந்நோ ராகு ப்ரசோதயாத். கேது திசை நடப்பவர்களுக்கு ஏற்ற பரிகாரம் வியாழ கிழமையில் விநாயகரை வணங்க வேண்டும். விநாயகருக்கு அறுகம்புள்ளை சமர்பித்து வணங்க வேண்டும். நல்லது. பறவைகளுக்கு கொள்ளு தானம் நல்லது. வைடூரிய ரத்தினத்தை மோதிரமாக இடது கையில் மோதிர விரலில் அணிய வேண்டும்.  பல நிறங்கள் கலந்த வஸ்திரம் அணியலாம். ஸ்ரீ கேது காயத்ரீ மந்திரம்  ஓம் அச் வ த்வஜாய வித்மஹே சூ ல ஹஸ்தாய தீமஹி தந்நோ கேது ப்ரசோதயாத்.  இப்படி அந்தந்த திசை மற்றும் புக்திகளுக்கு ஏற்ற பரிகாரங்களை அந்தந்த கிழமைகளில் செய்தாலே குறிப்பிட்ட கிரகங்களால் ஏற்படும் பெரிய அளவிலான பாதகங்களை தவிர்க்கலாம். நம்பிக்கையுடன் இந்த பரிகாரங்களையும், கிரகங்களுக்குரிய காயத்திரி மந்திரங்களையும் நம்பிக்கையுடன் உச்சரித்து வந்தால், காயத்ரீ தேவியின் ஆசியாலும் கிரகங்களின் அருளாலும் நன்மைகள் கிடைக்கும்.!

Read More at: bhakthiplanet.com/2013/01/horoscope-favourable-dasa-bhukti/ © BHAKTHIPLANET.COM