வாழ்க வளமுடன் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் வாழ்க வளமுடன்!

Saturday, February 28, 2015

பள்ளிகள் அங்கீகாரம் அறிய இணையதளம் :

பள்ளிகள் அங்கீகாரம் அறிய இணையதளம் :பெற்றோர் வசதிக்காக துவக்கியது கல்வித்துறை

         தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளிகளின் அங்கீகாரம் மற்றும் இதர விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் முதன் முறையாக, tnmatric.com என்ற இணையதளத்தை அறிமுகம் செய்ய, பள்ளிக் கல்வித் துறை முன்னோட்டம் நடத்தி வருகிறது.

         தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் குறித்து, ஆண்டுதோறும் பெற்றோருக்கு குழப்பம் ஏற்படுகிறது. ஆய்வகம், விளையாட்டு மைதானம், நூலகம், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமலேயே, பல இடங்களில் பள்ளிகள் துவக்கப்பட்டன. புற்றீசல் போல் ஏராளமான பிரைமரி, நர்சரி பள்ளிகள் அதிகரித்தன. 2004ல் கும்பகோணம் பள்ளி தீ விபத்துக்குப் பின், நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகளின் மீது, அரசின் கட்டுப்பாடுகள் அதிகரித்தன. மெட்ரிக் பள்ளிகளில் போதுமான காற்றோட்டம், இடவசதி உள்ளிட்டவை இருந்தால் மட்டுமே அங்கீகாரம் தரவேண்டும்; பிரைமரி, நர்சரி பள்ளிகளில், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, அதிகாரிகள் ஆய்வு செய்து அங்கீகாரத்தைப் புதுப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
தமிழகத்தில் மொத்தம் 66 கல்வி மாவட்டங்கள் உள்ளன. குறைந்தது நான்கு மாவட்டங்களை ஒருங்கிணைத்து, மொத்தம் 15 (ஐ.எம்.எஸ்.,) மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் உள்ளனர். இவர்கள் மூலம் தனியார் பள்ளிகளின் அடிப்படை வசதிகள் மற்றும் இதர விவரங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, பள்ளிக்கு அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
பள்ளிகளின் அங்கீகாரம், பிற விவரங்களை அறிய, பெற்றோருக்கு எவ்வித வசதியும் இல்லை. அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்த்து, பரிதவிக்கும் பெற்றோர் அதிகம். இக்குறையைப் போக்க, தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை முதன் முறையாக, tnmatric.com என்ற இணையதளத்தை துவக்கியுள்ளது. இதற்காக, பள்ளிகளுக்கு தனித்தனியே வரிசை எண் வழங்கப்பட உள்ளது.
ஈரோடு மாவட்ட மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அருள் முருகன் கூறுகையில், ""பள்ளிகள் சார்பான புள்ளி விவரங்களை, tnmatric.com என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ள பள்ளிக்கல்வித் துறை ஆய்வு மேற்கொண்டு வருகிறது. பள்ளி குறித்த அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளும் வகையில் இந்த இணையதளம் உருவாக்கப்படுகிறது. புதிய பள்ளிகள் அங்கீகாரம் பெற ஆன்-லைனில் பதிவு செய்து கொள்ளலாம்," என்றார்.

புகை பிடிப்பதை நிறுத்த ஒரு இணையதளம்

புகை பிடிப்பதை நிறுத்த ஒரு இணையதளம்

இந்த இணைய தளம் சென்றவுடன், முதலில் புகை பிடிப்பதிலிருந்து வெளியேற உங்களைத் தயார் செய்து கொள்கிறீர்களா?  என்ற வினாவுடன் ஒரு பிரிவினைப் பார்க்கலாம். ஏனென்றால், வெகு காலம் புகை பிடிக்கும் ஒருவர், நிச்சயமாய் நிறுத்துவதற்கான முடிவினை எடுக்க வேண்டும். அதில் உறுதியாய் இருக்க வேண்டும். பின்னர், அடுத்து தரப்படும் பிரிவில், எந்த எந்த வழிகளில் புகை பிடிப்பதனை நிறுத்தலாம் என்று பல வழிகள் எடுத்துரைக்கப்படுகின்றன. மேலும், இந்தப் பழக்கத்தினால் ஏற்படும் மன அழுத்தம், சத்தான உணவினை எடுத்துக் கொள்வது, உடற்பயிற்சிகளால் நல்ல செயல்பாட்டுடன் இருப்பது எனப் பல பிரிவுகளில் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. புகைப்பவர்கள் எல்லாரும் ஒரு முறை இந்த தளம் சென்று பார்த்தால், நமக்காக இத்தனை முயற்சிகள் எடுத்து தகவல்களைத் தந்திருக்கிறார்களே என்று ஆச்சரியப்பட்டு, புகைப்பதனை நிறுத்த முயற்சிப்பீர்கள். இந்த இணைய தளத்தின் முகவரி http://smokefree.gov

வேர்ட்டில் தலைப்புகளைத் தானாக அமைக்க வேண்டுமா தலைப்புகளைத் தானாக அமைக்க: நூல்கள் மற்றும் பருவ இதழ்களைத் தயாரிக்கையில், வேர்ட் டாகுமெண்ட்களில், சில குறிப்பிட்ட படங்கள், அட்டவணைகள், டேபிள்கள் ஆகியவற்றிற்கு தலைப்புகள் அமைத்திடுவோம். எடுத்துக் காட்டாக, டாகுமெண்ட்களில் உள்ள அனைத்து டேபிள்களுக்கும் “Table” எனத் தலைப்பிட்டு, ஒவ்வொன்றையும் “Table1,Table2, Table3” என அமைக்கத் திட்டமிடுவோம். வேர்ட் இதனை உணர்ந்து ஒவ்வொருமுறை டேபிள் அமைக்கும் போதும், தானாகவே இந்த தலைப்பினை அமைத்துக் கொள்ளும் வகையில், செட் செய்திடலாம். இதே போல படங்கள் மற்றும் பிற ஆப்ஜெக்ட்களை அமைக்கையிலும் இந்த தலைப்புகளைக் கொண்டு வரலாம். இதற்குக் கீழ்க்காணும் முறையில் செட்டிங்ஸ் அமைக்கவும். 1. டாகுமெண்ட்டைத் திறந்து கொள்ளுங்கள். கேப்ஷன் டயலாக் பாக்ஸைக் கொண்டு வாருங்கள். இதற்கு, உங்கள் வேர்ட் தொகுப்பு வேர்ட் 2007க்கு முந்தையதாக இருந்தால், Insert அழுத்தி, கிடைக்கும் மெனுவில் Reference>Caption எனத் தேர்ந்தெடுக்கவும். இப்போது Caption என்ற சிறிய கட்டம் கிடைக்கும். இதில் நீங்கள் தர விரும்பும் தலைப்பு மற்றும் இந்த தலைப்பு எதற்காக என்பத

Wednesday, February 25, 2015

எக்ஸெல்லில் அவசியமான குறுக்கு வழி கட்டளைகள்

எக்ஸெல்லில் அவசியமான குறுக்கு வழி கட்டளைகள்

ஸ்ப்ரெட் ஷீட்டில் மாற்றங்கள்: எக்ஸெல் ஒர்க் புக் தயாரிப்பில், ஒரே நேரத்தில் பல ஒர்க் ஷீட்களைத் திறந்து வைத்து நாம் பயன்படுத்த
விருப்பப்படுவோம். இதற்கென விண்டோவில் ஒவ்வொரு ஒர்க் ஷீட்டிற்கும் மாறுவதற்கு, கீழாக உள்ள டேப்பிற்கு மவுஸ் கர்சரைக் கொண்டு சென்று செயல்படுத்த வேண்டும். கீ போர்டினையே பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு இது சற்று சிரமத்தைத் தரும். இதற்கான சுருக்கு வழி ஒன்று எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் தரப்பட்டுள்ளது. ஒர்க் ஷீட் மாற விருப்பப்படுகையில், Ctrl+F6 கீகளை அழுத்தவும். இந்த கீகளை அழுத்துகையில், ஒர்க் புக்குகளின் டேப்கள் வரிசையாகத் தேர்ந்தெடுக்கப்படுவதனைப் பார்க்கலாம். ஐந்து ஒர்க்புக்குகள் திறந்திருந்தால், ஐந்தாவது ஒர்க் ஷீட் செல்ல, ஐந்து முறை Ctrl+F6 கீகளை அழுத்த வேண்டும்.

அவசிய சுருக்கு வழிகள்: எந்த அப்ளிகேஷன் புரோகிராமிலும், அனைவருக்கும் அனைத்தும் முக்கியமானவை என்று கருத முடியாது. உங்களுக்கு முக்கியமானது மற்றவர்களுக்குச் சாதாரணமாக இருக்கலாம். அதே போல மாற்றியும் சொல்லலாம். இருப்பினும் இங்கு அதிகம் பயனுள்ள சில வித்தியாசமான ஷார்ட் கட் கீ தொகுப்புகள் இங்கு தரப்பட்டுள்ளன. அச்சடித்து உங்கள் மேஜைக்கு அருகே ஒட்டி வைத்துப் பயன்படுத்தலாம்.

Control + “C”: Copy

Control + “X”: Cut

Control + “V”: Paste

F2:அப்போதைய செல்லை எடிட் செய்திட. (எளிதாக எடிட் செய்திடும் வகையில் செல் ரெபரன்சஸ் அனைத்தும் வண்ணத்தில் அமைக்கலாம்)

F5: Go to

F11:உடனடி சார்ட் கிடைக்க

Shift + F3: பேஸ்ட் செயல்பாட்டிற்கான விஸார்ட் கிடைக்கும்.

Control + F3: பெயரை வரையறை செய்திடலாம்.

Control + “+” அப்போதைய தேர்வுக்கு ஏற்றபடி செல், படுக்கை மற்றும் நெட்டு வரிசையினை இடைச் செருகும்.

Control + “--”: அப்போதைய தேர்வுக்கு ஏற்றபடி செல், படுக்கை மற்றும் நெட்டு வரிசையினை நீக்கும்.

Shift + Space: முழு படுக்கை வரிசையும் அப்போதைய ஏரியாவிற்காக தேர்ந்தெடுக்கப்படும். இது என்ன என்று கொடுத்துப் பார்த்து உணர்ந்து கொள்ளுங்கள்.

Control + Space : முழு நெட்டு வரிசையும் அப்போதைய ஏரியாவிற்காக தேர்ந்தெடுக்கப்படும். இது என்ன என்று கொடுத்துப் பார்த்து உணர்ந்து கொள்ளுங்கள்.

Control + “!” (அல்லது Control + Shift + “1”: எண்ணை இரண்டு தசம ஸ்தானத்தில் பார்மட் செய்திடும்.

Control + “$” (அல்லது Control + Shift + “4”): கரன்சியாக பார்மட்செய்திடும்.

Control + “%” (அல்லது Control + Shift + “5”): சதவீதத்தில் பார்மட் செய்திடும்.

Control + “/” (அல்லது Control + Shift + “7”): சயின்டிபிக் ஆக பார்மட் செய்யப்படும்.

Control + “&” (அல்லது Control + Shift + “6”):அப்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனைச் சுற்றி சிறிய பார்டர் அமைக்கப்படும்.

எக்ஸெல் - ஆல்ட்+ஷிப்ட்: எக்ஸெல் தொகுப்பில் ஆல்ட்+ஷிப்ட் கீகளுடன் பங்சன் கீகளை அழுத்தினால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளை இங்கே பார்க்கலாம்

F1 +ALT+SHIFT : புதிய ஒர்க் ஷீட் ஒன்று திறக்கப்படும்.

F2 +ALT+SHIFT : அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒர்க்புக் சேவ் செய்யப்படும்.

F3 +ALT+SHIFT: நெட்டு மற்றும் படுக்கை வரிசை லேபிள்கள் பயன்படுத்தி பெயர்களை உருவாக்கலாம்.

F6 +ALT+SHIFT ஒன்றுக்கு மேற்பட்ட ஒர்க்புக் விண்டோக்கள் திறக்கப்பட்டிருப்பின் தற்போதைய ஒர்க்புக்கிற்கு முந்தைய ஒர்க்புக் விண்டோ திறக்கப்படும்.

F9 +ALT+SHIFT திறந்திருக்கும் அனைத்து ஒர்க் ஷீட்களிலும் அனைத்து ஒர்க் புக்குகளிலும் அனைத்து கால்குலேஷன்களும் செயல்படுத்தப்படும்.

F10 +ALT+SHIFT ஸ்மார்ட் டேக்கிற்கான மெனு மற்றும் மெசேஜ் திறக்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்மார்ட் டேக் திறக்கப்பட்டிருந்தால் அடுத்த டேக் சென்று அதற்கான மெனு மற்றும் மெசேஜ் திறக்கப்படும்.

F11+ALT+SHIFT: மைக்ரோசாப்ட் ஸ்கிரிப் எடிட்டர் திறக்கப்படும்.

F12 +ALT+SHIFT: பிரிண்ட் டயலாக் பாக்ஸ் திறக்கப்படும்

வேர்டில் எண்களை எழுத்தால் எழுத வேண்டுமா

வேர்டில் எண்களை எழுத்தால் எழுத வேண்டுமா

பக்கங்களில் தாவிச் செல்ல: மிக நீளமான டாகுமெண்ட்டில், வேகமாக பக்கங்களைச் சுழற்றிச் செல்ல, நமக்கு மவுஸில் உள்ள சிறிய சக்கரம்
உதவுகிறது. இரண்டு பட்டன்களுக்கிடையே இந்த சிறிய சக்கரம் நமக்குத் தரப்படுகிறது. மவுஸை டாகுமெண்ட்டில் வைத்து, இந்தச் சிறிய சக்கரத்தினை அழுத்தி இழுத்தால், பக்கங்கள் வேகமாக, நாம் நகர்த்துவதற்கு ஏற்ப, கீழாகவோ, மேலாகவோ நகர்ந்து செல்லும். ஆனால், இப்போது வரும் சில மவுஸ் சாதனங்களில், இந்த வீல் இருப்பதில்லை. இருப்பினும் இந்த வசதியைப் பெறுவதற்கு சில செட்டிங்ஸ் அமைப்புகள் உள்ளன. அவற்றைப் பார்க்கலாம்.

1. Tools மெனுவிலிருந்து Customize என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Customize டயலாக் பாக்ஸைக் காட்டும்.

2. இதில் Commands என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். வேர்ட் கட்டளைகள் சில வரிசையாகத் தரப்படும்.

3. இந்த பட்டியலின் இட்து பக்கம் All Commands என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.

4. வலது பக்கம் உள்ள பிரிவில் AutoScroll என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.

5. இந்த AutoScroll ஆப்ஷனை உங்கள் டூல்பார்கள் உள்ள இடத்திற்கு இழுத்துச் செல்லவும். மவுஸ் பட்டனை விட்டுவிட்டால், AutoScroll என்னும் பெயருடன் ஒரு பட்டன் டூல்பார்களில் தோன்றுவதைப் பார்க்கலாம்.

6. தொடர்ந்து Close என்பதில் கிளிக் செய்து Customize டயலாக் பாக்ஸை மூடவும்.

இந்த புதிய கட்டளையைப் பயன்படுத்த, புதிய டூல் பார் பட்டனில் கிளிக் செய்திடவும். அவ்வாறு செய்திடுகையில், வலது பக்கம் உள்ள நெட்டு வாக்கில் உள்ள பார் மாறும். புதிய இரட்டை அம்புக் குறி ஒன்று தோன்றும். இந்த அம்புக்குறியினை மேலாகவும் கீழாகவும் ஸ்குரோல் பாரில் நகர்த்துவதன் மூலம், டாகுமென்ட் எவ்வளவு வேகமாக நகர்த்தப்பட வேண்டும் என்பதனை முடிவு செய்து செட் செய்திடலாம். இந்த வேகமாக நகர்த்தும் செயல்பாட்டிலிருந்து விடுபட எஸ்கேப் கீயை அழுத்துங்கள். அல்லது மவுஸ் பட்டனை அழுத்துங்கள்.

பக்க எண்கள் சொற்களாக: வேர்ட் தொகுப்பில் உருவாக்கப்பட்ட டாகுமெண்ட்களில் பக்க எண்களை எளிதாக இடுகிறோம். மெனு பாரில் சென்று இன்ஸெர்ட் கிளிக் செய்து Page Numbers தேர்ந்தெடுத்தால் கிடைக்கும் மெனுவில் நம் விருப்பப்பட்ட இடத்தில் பக்க எண்கள் தோன்றும்படி செய்துவிடலாம். இந்த பக்க எண்கள் இலக்கங்களாகத் தான் இருக்கும். இவற்றை எண்களுக்கான சொற்களாக வைத்துக் கொள்ளச் சிலருக்கு ஆவலாக இருக்கும். அந்த ஆசையைப் பூர்த்தி செய்திட கீழ்க்கண்டபடி செயல்படவும்.

1. வழக்கம்போல பக்க எண்களை இணைக்கவும்.

2. அதன் பின் பக்க எண்ணுக்குரிய பீல்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கு பக்க எண் அருகே கர்சரைக் கொண்டு சென்று இருமுறை கிளிக் செய்திடவும். பக்க எண் பேஜ் ஹெடர் அல்லது புட்டரில் தான் இருக்கும். இப்போது அந்த இடம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்டு புள்ளிகள் கொண்ட கோடுகளால் கட்டம் கட்டப்பட்டு காட்டப்படும். இதில் எண் இருக்கும்.

3. இனி இந்த எண்ணுக்கான பீல்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அது எங்கே இருக்கிறது என்று கேட்கிறீர்களா? இந்த எண் அருகே கர்சரைக் கொண்டு சென்று ஷிப்ட்+எப்9 அழுத்தவும். எண்ணுக்கான பீல்டு கிடைக்கும். பீல்டு தேர்ந்தெடுக்கப்பட்டு கிரே கலரில் காட்டப்படும். பீல்டில் PAGE என்று தெரியும். இது தான் அதனுடைய குறியீடு.

4. இனி இந்த குறியீட்டிற்குப் பதிலாக \* CardText என டைப் செய்திடவும்.

5. பின் மீண்டும் எப்9 கீ அழுத்தினால் எண் இலக்கமாக இருப்பது மாற்றம் பெற்று எழுத்தில் கிடைக்கும். எடுத்துக் காட்டாக முதல் பக்கத்தில் 1 - என்பதற்குப் பதிலாக One என இருக்கும்.

எண்களை எழுத்தால் எழுத: வேர்ட் புரோகிராமில் டாகுமெண்ட்களை அமைக்கும் போது, எண்களை டெக்ஸ்ட்டுடன் பயன்படுத்த வேண்டியது இருந்தால், ஒற்றை இலக்கமாக இருப்பின், இலக்கத்தினை எழுத்தில் எழுதுவதே சிறந்தது. "He ate 7 biscuits" என்று எழுதுவதைக் காட்டிலும் "He ate seven biscuits," என எழுதுவதே சிறந்தது. நீங்கள் விரும்பினால், வேர்ட் மேற்கொள்ளும் இலக்கண சோதனையையும் (Grammar) இதற்கேற்றபடி மாற்றி அமைக்கலாம். இதனை மேற்கொள்ள கீழ்க்குறித்தபடி அமைக்கவும்.

1. ஆபீஸ் பட்டன் கிளிக் செய்து,அடுத்து Word Options என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது வேர்ட் Word Options டயலாக் பாக்ஸைக் காட்டும்.

2. இந்த டயலாக் பாக்ஸின் இடது பக்கத்தில் உள்ள Proofing என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும்.

அடுத்து Settings பட்டனில் கிளிக் செய்திடவும். வேர்ட் Grammar Settings டயலாக் பாக்ஸைக் காட்டும். இங்கு ஆப்ஷன் பட்டியலில் கீழாகச் செல்லவும். இதில் Numbers ஆப்ஷன் வரை செல்லவும். இதில் டிக் அடையாளம் ஒன்றை ஏற்படுத்தவும்.

பின்னர் கிராமர் மற்றும் வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸ்களை மூடி வெளியேறவும்.

கண்ட்ரோல் கட்டளைகள்:

Ctrl+a: டாகுமெண்ட் முழுவதையும் தேர்ந்தெடுக்க.

Ctrl+b: அழுத்தமான (Font Bold) வடிவில் எழுத்தமைக்க.

Ctrl+c: தேர்ந்தெடுத்ததை, கோப்பினை நகலெடுக்க (copy ).

Ctrl+d: ஓர் எழுத்தின் (Font) வடிவை மாற்றி அமைக்க.

Ctrl+e: நடுவே டெக்ஸ்ட் அமைக்க.

Ctrl+f: குறிப்பிட்ட சொல் அல்லது டெக்ஸ்ட் அமைந்துள்ள இடத்தைக் கண்டறிந்து, அதன் இடத்தில் வேறு ஒரு சொல் அமைக்க. மீண்டும் தேடலைத் தொடர.

Ctrl+g: ஓரிடம் செல்ல.

Ctrl+h: (ஒன்றின் இடத்தில்) மற்றொன்றை அமைத்திட (Replace)

Ctrl+i: எழுத்து / சொல்லை சாய்வாக அமைக்க .

Ctrl+j: பத்தி ஒன்றை இருபக்கமும் சீராக, நேராக அமைக்க.

Ctrl+k: ஹைப்பர் லிங்க் ஒன்றை ஏற்படுத்த.

Ctrl+l: பத்தி ஒன்றை இடது பக்கம் சீராக நேராக அமைக்க.

Ctrl+m: பத்தியினை இடதுபுறமாக சிறிய இடம் விட.

Ctrl+n: புதிய டாகுமெண்ட் உருவாக்க.

Ctrl+o: டாகுமெண்ட் ஒன்றைத் திறக்க.

Ctrl+p: டாகுமெண்ட் ஒன்றை அச்சடிக்க

Ctrl+q: பத்தி அமைப்பை நீக்க.

Ctrl+r: பத்தியினை வலது புறம் சீராக, நேராக அமைக்க.

Ctrl+s: தானாக, டாகுமெண்ட் பதியப்பட.

Ctrl+t:பத்தியில் இடைப்பட்ட இடத்தில் இடைவெளி அமைக்க.

Ctrl+u: டெக்ஸ்ட்டில் அடிக்கோடிட.

Ctrl+v: தேர்ந்தெடுத்ததை ஒட்டிட.

Ctrl+w: டாகுமெண்ட்டை மூடிட.

Ctrl+x: தேர்ந்தெடுத்ததை அழிக்க, நீக்கிட.

Ctrl+y: இறுதியாக மேற்கொண்ட செயல்பாட்டினை மீண்டும் மேற்கொள்ள.

Ctrl+z: இறுதியாக மேற்கொண்ட செயல்பாட்டிற்கு மாறாக மேற்கொள்ள.

பிரிண்ட் பிரிவியூவில் எடிட்: வேர்ட் டாகுமெண்ட் ஒன்று அச்சில் எப்படிக் காட்சி அளிக்கும் என்று காண, பிரிண்ட் பிரிவியூ என்ற வசதியை வேர்ட் தருகிறது. இதில் அந்த டாகுமெண்ட்டில் உள்ள அனைத்து பார்மட்டிங் வேலைகளையும் ஒரே நேரத்தில் காணலாம். நெட்டு வரிசைகள், பாராக்கள், ஹெடர் மற்றும் புட்டர் மற்றும் படங்கள் என அனைத்தையும் காணலாம். இப்படி பார்க்கும் போது அதில் திருத்தங்கள் மேற்கொள்ள நாம் விரும்பலாம். இதே தோற்றத்தில், திருத்தங்களையும் மேற்கொள்ள வசதி உள்ளது. ஆனால் எப்படி மேற்கொள்வது என்பதுதான் பலருக்குப் புரியாத புதிராய் உள்ளது. அதை இங்கு பார்க்கலாம்.

வேர்ட் 2007 தொகுப்பில், பிரிண்ட் பிரிவியூ டூல்பாரில் கிடைக்கும் பிரிவியூ குரூப்பில், Magnifier டூலை, டிக் அடையாளத்தை எடுத்துவிட்டு நீக்கவும். இவ்வாறு செய்தவுடன், ஏற்கனவே பிரிவியூ தோற்றத்தில் காணப்படும் கர்சர் வழக்கமான ஐ-பீம் போலக் காட்சி அளிக்கும். டாகுமெண்ட் நார்மல் வியூவில் கிடைக்கும். உடன் டாகுமெண்ட்டை எடிட் செய்திடலாம்.

Tuesday, February 24, 2015

விண்டோஸ் நாம் அறியா குறிப்புகள்

விண்டோஸ் நாம் அறியா குறிப்புகள்

விண்டோஸ் இயக்கத்துடன் தான் நம் பொழுது முழுவதும் செல்கிறது. இருப்பினும், விண்டோஸ் இயக்கத்தில் நாம் இன்னும் அறியாத பல
விஷயங்கள் உள்ளன. இவை அவ்வப்போது நாம் பணியாற்றிக் கொண்டிருக்கையில் தெரியவருகின்றன. அவ்வாறு கண்டறிந்த பத்து செயல்பாடுகளை இங்கு காணலாம்.

அசைத்து எறி (Shake It Off): ஒரே நேரத்தில் பல விண்டோக்களைத் திறந்து பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் மானிட்டர் திரை, எந்த ஒழுக்கத்திற்கும் கட்டுப்படாமல் குழப்பமான ஒரு காட்சியைக் காட்டிக் கொண்டிருக்கிறதா? விண்டோஸ் 7 மற்றும் அதனை அடுத்து வந்த ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில், இதற்கான தீர்வாக, வியக்கத்தக்க வழி ஒன்று தரப்பட்டுள்ளது. நீங்கள் எந்த விண்டோவினை மட்டும் வைத்துக் கொள்ள விரும்புகிறீர்களோ, அதன் டைட்டில் பார் மீது கிளிக் செய்து அப்படியே மவுஸைத் தக்க வைக்கவும். பின், அதனை மவுஸ் கொண்டு முன்னும் பின்னுமாகச் சற்று அசைத்திடவும். இப்போது பிற விண்டோக்கள் அனைத்தும் டாஸ்க் பாருக்கு வந்துவிடும். இந்த வசதிதான் Aero Shake என அழைக்கப்படுகிறது. இதே வசதி விண்டோஸ் எக்ஸ்பி அல்லது விஸ்டா சிஸ்டத்தில் தேவை எனில், அதற்கான தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தி ஏற்படுத்தலாம்.

வால்பேப்பர் ஸ்லைட் ஷோ: உங்களுடைய டெஸ்க் டாப்பில் ஒரே ஒரு வால் பேப்பர் காட்சியை அமைத்து, அதனையே தொடர்ந்து பார்ப்பது, உங்களுக்கு சில வேளைகளில் அலுத்துப் போகும். ஏன் ஒரே ஒரு வால் பேப்பருடன் நாம் திருப்தி அடைய வேண்டும்? ஒரே நேரத்தில் பல வால் பேப்பர்களைக் காட்டும்படி நாம் செட் செய்திடலாம். இதற்கு டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Personalise > Desktop Background எனச் செல்லவும். இது உங்கள் வால் பேப்பரை செட் செய்திடத் தேவையான விண்டோவினைத் திறக்கும். இங்கு பல படங்கள் கிடைக்கும். கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு, ஒன்றுக்கு மேற்பட்ட படங்களைத் தேர்ந்தெடுக்கவும். இதன் பின்னர், எந்த கால அவகாசத்தில் இந்த படங்கள் மாறி காட்சி அளிக்க வேண்டும் என்பதனை முடிவு செய்திடலாம். எந்த படத்தில் தொடங்கி முடிய வேண்டும் என்பதனையும் நிர்ணயம் செய்திடலாம். இதன் மூலம், டெஸ்க் டாப் படத்தினை மாற்ற ஒவ்வொரு முறையும் நீங்கள் டெஸ்க்டாப்பில் வேலை செய்திட வேண்டியதில்லை.

விரைவாக டாஸ்க்பார் திறத்தல்: வேகம் வேகமாகக் கம்ப்யூட்டரில் வேலை பார்க்கும் நமக்கு, மவுஸை டாஸ்க் பார் கொண்டு சென்று, அங்குள்ள ஐகான்களைக் கிளிக் செய்வது கூட நேரம் எடுக்கும் செயலாக இருக்கும். இதற்குப் பதிலாக, விண்டோஸ் கீயை அழுத்திக் கொண்டு, நீங்கள் விரும்பும் ஐகான் வரிசையில் எந்த இடத்தில் உள்ளதோ, அதற்கான எண்ணை அழுத்த வேண்டும். எடுத்துக் காட்டாக, டாஸ்க் பாரில் வேர்ட் புரோகிராமிற்கான ஐகான் மூன்றாவதாக இடம் பெற்றிருந்தால், விண்டோஸ் கீ + 3 அழுத்தினால் போதும். வேர்ட் விண்டோஸ் திறக்கப்படும்.

ரிசோர்ஸ் மானிட்டர்: உங்களுடைய கம்ப்யூட்டர் சிஸ்டம் வழக்கத்திற்கும் மாறாக, மெதுவாக இயங்கினால், அது நம்மைக் கவலைக்குள்ளாக்கும். எதனால் இந்த மாற்றம் ஏற்பட்டது என்று அறிய ஆவலாயிருக்கும். இதற்கு ரிசோர்ஸ் மானிட்டர் நமக்கு பயன்படும். Resource Monitor எனத் தேடல் கட்டத்தில் டைப் செய்து, அதனைத் திறக்கவும். இங்கு கம்ப்யூட்டரில் இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து புரோகிராம்களும், கம்ப்யூட்டரின் பலவகைத் திறனை எப்படிப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன என்று தெரிய வரும். ஒரு குறிப்பிட்ட புரோகிராமின் செயல்பாட்டினை சி.பி.யு. மற்றும் மெமரியினை அடுத்து அடுத்துப் பார்க்கையில் அதன் செயல்பாட்டுக்கான திறன் எவ்வளவு எடுத்துக் கொள்ளப்படுகிறது என்று தெரிய வரும். இதில் அதிகம் நம் சிஸ்டத்தைப் பயன்படுத்தும் புரோகிராமினைக் கண்டு, அதனை நிறுத்திப் பின்னர் இயக்கலாம்.

அழித்ததைத் திரும்பப் பெற: நாம் எல்லாரும் Ctrl + C and Ctrl + V போன்ற கட்டளைகளை நன்றாகத் தெரிந்து வைத்துள்ளோம். பலருக்குக் Ctrl + Z என்ற கட்டளை இருப்பது தெரியாது. இதனைப் பயன்படுத்தி, நாம் அப்போதுதான் நீக்கியிருந்த செயல்பாட்டினை மீட்டெடுக்கலாம். ஏதேனும் பைல் ஒன்றை அழித்து ரீசைக்கிள் தொட்டிக்கு அனுப்பி இருந்தால், Ctrl + Z கீகளை அழுத்தினால், அது மீண்டும் பழைய இடத்திற்கே வரும். இது போல நீக்கப்பட்ட பல செயல்பாடுகளை மீட்டுக் கொண்டு வரும் கட்டளை இது.

யூசர் அக்கவுண்ட் கட்டுப்பாடு: விண்டோஸ் சிஸ்டம் தரும் User Account Control மிக நல்ல பயனைத் தருவதாகப் பலரும் என்னிடம் கூறி உள்ளனர். ஆனால், இன்னும் சிலர் இது உதவுவதைக் காட்டிலும் உபத்திரவம் தான் அதிகம் தருகிறது என்று கருத்து தெரிவித்துள்ளனர். உங்களுடைய சிஸ்டம் செயல்பாட்டில் நீங்கள் மேற்கொள்ளும் எந்த மாற்றத்தின் போதும் இது ஒரு பாப் அப் கட்டமாக எழுந்து வரும் என்பது பலருக்குத் தெரியாது. இது பயனாளர்களை, அவர்கள் ஏற்படுத்தும் மாற்றம் குறித்து எச்சரிக்கை செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு வசதியாகும். ஆனால், இது உங்களுக்குத் தேவை இல்லை என்றால், இதன் இயக்கத்தை நிறுத்திவிடலாம். தேடல் கட்டத்தில் User Account Control என டைப் செய்து, அதனை இயக்கவும். இனி, User Account Control விண்டோ காட்டப்படும். இங்கு ஸ்லைடர் ஒன்றை இயக்கி, இழுத்து உங்களுடைய நோட்டிபிகேஷன் என்னும் அறிவிக்கை அமைப்பின் தன்மையை மாற்றலாம். உங்களுக்கு இது போன்ற அறிவிக்கையே தேவை இல்லை எனில், ஸ்லைடரைக் கீழாக இழுத்து அமைக்கலாம். இந்த விண்டோவில் வலது பக்கம் ஒவ்வொன்றும் எதனைக் குறிக்கிறது என்று தகவல்களுடன் தரப்படும்.

ஸ்டார்ட் மெனு ஷட் டவுண்: ஸ்டார்ட் மெனுவில் கிளிக் செய்திடுங்கள். இதில் மாறா நிலையில் கீழாக உங்களுக்குக் கிடைப்பது ஷட் டவுண் மெனுவாகும். இதில் உள்ள அம்புக் குறி, மேலும் சில விருப்பங்களுக்கு நம்மை இழுத்துச் சென்றிடும். restart அல்லது log off போன்றவற்றை இங்கு காணலாம். இந்த வகையான ஷட் டவுண் உங்களின் தேர்வாக இல்லை என்றால், இதனை மாற்றியும் அமைக்கலாம். உங்கள் எண்ணப்படி மாற்றி அமைக்க, Shut down என்பதில் ரைட் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் மெனுவில் Properties தேர்ந்தெடுக்கவும். இது, டாஸ்க் பாரில் உள்ளவற்றை உங்கள் விருப்பப்படி அமைக்கும் விண்டோவினைத் தரும். நீங்கள் விருப்பப்படும் பவர் பட்டனைத் தேர்ந்தெடுக்கலாம். எடுத்துக் காட்டாக, நீங்கள் sleep பட்டனை மாறா நிலையில் தோன்றும் பட்டனாக இருக்க விருப்பப்பட்டு அமைக்க விரும்புவீர்கள். அப்படிப்பட்ட விருப்பங்களை இதன் மூலம் அமைக்கலாம்.

கீ போர்ட் ஷார்ட் கட் கீ மூலம் புரோகிராம் தொடக்கம்: நீங்கள் அடிக்கடி சில புரோகிராம்களை இயக்குபவராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இதற்காக, நீங்கள் டாஸ்க் பார் சென்று, ஒவ்வொன்றாக இழுத்து கிளிக் செய்திட வேண்டியதில்லை. எந்த புரோகிராமினை அடிக்கடி இயக்குகிறீர்களோ, அதன் ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில், Properties தேர்ந்தெடுக்கவும். இது புரோகிராம் ப்ராப்பர்ட்டீஸ் என்ற விண்டோவினைத் திறக்கும். இங்கு Shortcut என்ற டேப்பிற்கு மாறவும். இங்கு Shortcut key என்ற பீல்டைக் கவனிக்கவும். இதில் கிளிக் செய்து, நீங்கள் விரும்பும் கீயினை டைப் செய்திடவும். இந்த கீயுடன் Ctrl + Alt ஆகிய கீகள் இணைந்து, இந்த புரோகிராமிற்கான ஷார்ட் கட் கீயாக மாறும். பின்னர், இந்த குறிப்பிட்ட புரோகிராமினைத் திறக்க, இந்த மூன்று கீகளை அழுத்தினால் போதும். அந்த புரோகிராம் திறக்கப்பட்டு இயங்கும்.

டாஸ்க் பார் டூல்பார்களை அதிகரிக்க: நம் திரையில் காட்டப்படும் டாஸ்க் பார், புரோகிராம் ஐகான்களைக் கொண்டிருப்பதனைக் காட்டிலும், மேலும் சில பணியினையும் மேற்கொள்ளலாம். இதற்கு, டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்து, Toolbars என்பதில் மவுஸ் கொண்டு செல்லவும். இப்போது வலது பக்கம் ஒரு சிறு மெனு கிடைக்கும். இதில் மிகவும் பயனுள்ளது Address என்பதாகும். இதில் நீங்கள் செல்ல வேண்டிய இணைய தளத்தின் முகவரியை டைப் செய்து, எண்டர் தட்டினால், உங்கள் பிரவுசர் உசுப்பிவிடப்பட்டு, இணைய தளம் காட்டப்படும். இதில் விண்டோஸ் எக்ஸ்புளோரர் மூலம் தேடும் டைரக்டரி, போல்டர்களையும் பெறலாம். இதில் சில புரோகிராம்கள் அவற்றிற்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்ட டூல்பார்களைக் கொண்டிருக்கும். எடுத்துக் காட்டாக, ஐ ட்யூன்ஸ் (iTunes) தனக்கென டூல் பார் அமைப்பினைக் கொண்டுள்ளது. அதாவது, இந்த மியூசிக் பிளேயர் புரோகிராமினை மினிமைஸ் செய்தால், டாஸ்க் பாரிலிருந்து, மியூசிக் கண்ட்ரோல் செய்திட உங்களுக்கு ஒரு டூல் பார் கிடைக்கும்.

Wednesday, February 18, 2015

நோயின்றி வாழ பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

நோயின்றி வாழ பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

           நம் உடலானது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்ச பூதங்களால் தான் இயங்குகின்றது. அவற்றிலுள்ள பிரச்சினைகளை களைந்தாலே நாம் வாழ்நாள் முழுவதும் நோயின்றி ஆரோக்யமாக வாழலாம்.

                   பஞ்ச பூதங்களில் பாதிப்பு ஏற்பட்டால் நம் உடலில் தோன்றும் அறிகுறிகளை இந்த படத்தில் பார்க்கலாம்.

உணவு [ நிலம் ] [ இரைப்பை , மண்ணீரல், கணையம் ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும்]

பசி இல்லாதபோது சாப்பிடக்கூடாது. [ வாயு தொந்தரவு, அல்சர், அஜீரணம், வயிற்று வலி, சுகர் / நீரிழிவு, இரத்த அழுத்தம், எலும்புத் தேய்மானம் போன்ற தொந்தரவுகளுக்கு அடிப்படை காரணமே பசி இல்லாதபோது சாப்பிடுவது தான் ] அப்படி பசி இல்லாதபோது சாப்பிட நேர்ந்தால் சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் இனிப்பு சாப்பிட வேண்டும்

நாம் பால், டீ, காப்பி, செயற்கை குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்த்தாலே பசி ஒழுங்காக எடுக்கும்.
சாப்பிடும் முன் கை, கால், முகம் கழுவ வேண்டும்.

உணவில் ஆறு சுவைகள் [ இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, காரம் ] இருக்குபடி பார்த்துகொள்ளுங்கள். ஆறு சுவையையும் திகட்டும் வரை உண்ண வேண்டும்.
நாக்கால் சுவையை நன்கு ருசித்த பின்னரே விழுங்க வேண்டும். அப்போதுதான் அதில் உள்ள சத்துக்களை நம் உடம்பால் முழுமையாக ஜீரணிக்க முடியும்.

சாப்பிடும்பொழுது கண்களை மூடி, உதட்டை மூடி, உதட்டை பிரிக்காமல் மென்று கூழ் போல் அரைத்துப் பின் விழுங்க வேண்டும். ஏனென்றால் காற்று நம் ஜீரணத்திற்கு எதிரி. முடிந்தவரை சாப்பிடுவதற்கு அரைமணிநேரம் முன்பும் பின்பும் நீர் அருந்துவதை தவிருங்கள். தேவை ஏற்பட்டால் சிறிதளவு குடித்துக் கொள்ளலாம். ஏனென்றால் நீர் நம் ஜீரணத்திற்கு எதிரி .

குளித்த பின் 45 நிமிடத்திற்குப் பிறகு மட்டுமே சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பிறகு 2 ½ மணி நேரத்திற்குக் குளிக்க கூடாது. அப்படி குளித்தால் நம் உடம்பானது உணவை ஜீரணிபதர்க்கு பதிலாக உடலை வெப்பத்தை சமநிலை படுத்துவதற்கே முன்னுரிமை கொடுக்கும்.

பேசிக் கொண்டோ, புத்தகம் படித்துக் கொண்டோ, டிவி பார்த்துக்கொண்டோ சாப்பிடக்கூடாது [ கவனம் சிதறாமல் இருப்பதற்காக ]கால்களைத் தொங்க வைத்து அமர்ந்து சாப்பிடக்கூடாது. முதல் ஏப்பம் வந்த உடனோ அல்லது உணவின் சுவை குறைந்து விட்டாலோ அல்லது போதும் என்ற உணர்வு வந்துவிட்டாலோ சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும். அது தான் நாம் சாப்பிட வேண்டிய அளவு.

நீர் [நீர்] [ சிறுநீரகம், சிறுநீர்ப்பை, விதைப்பை (ஆண்களுக்கு), கர்பப்பை (பெண்களுக்கு) ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும்] தண்ணீரைக் கொதிக்க வைத்தோ அல்லது நீரை வடிகட்டியோ குடிபதால் அதில் உள்ள தாது உப்புக்களை இழக்க நேரிடும். அந்த தாது உப்புக்களுகாக தான் நாம் நீரையே அருந்துகிறோம். அதற்க்கு பதிலாக நீரை மண்பானையில் 2 மணிநேரம் வைத்தபின் பயன்படுத்தலாம். பின்னர் நீரை செம்பு குடத்தில் வைத்து அருந்தலாம்.

தாகம் எடுத்தால் உடனே தேவையான அளவு மெதுவாக வாய்வைத்து சப்பிக் குடிக்க வேண்டும்.
மினரல் வாட்டர் / Package Drinking Water / Cane Water பயன்படுத்தக் கூடாது. அப்படி குடிக்க நேர்ந்தால் உணவில் அதிக நீர் சத்து உள்ள உணவுகளை அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் அல்லது மோர், இளநீர், பதநீர், எலுமிச்சை சாறு, கரும்புச்சாறு, பழச்சாறு [ பிரெஷ் ஜூஸ் ] போன்றவற்றை பருகலாம்.
தாகம் இல்லாமல் தண்ணீர் குடிக்கக் கூடாது. சிறுநீர் கழித்தால் உடனே தேவையான அளவு நீர் அருந்த வேண்டும். நீரை அன்னாந்து குடிக்கக் கூடாது. அப்படி குடித்தால் தேவைக்கு அதிகமாகவே குடித்துவிடுவோம். நீரை நிதானமாக வாய்வைத்து சப்பி குடிக்க வேண்டும்.

நாம் குடிக்கும் எந்த ஒரு நீரையும் / பானத்தையும் [ பிரெஷ் ஜூஸ், மோர், இளநீர், பதநீர், எலுமிச்சை சாறு, கரும்புச்சாறு,… ] அதில் உள்ள சுவையை நாக்கு உறிந்த பின் சுவை இல்லாத நீரை தான் விழுங்க வேண்டும். அப்போதுதான் அதில் உள்ள சத்துக்களை நம் உடம்பால் முழுமையாக ஜீரணிக்க முடியும்.
பால் அருந்துவதை தவிர்த்தாலே நம் உணவு எளிதில் ஜீரணமாகும். நன்றாக பாசி எடுக்கும். அப்படி பால் அருந்த நேர்ந்தால் பசி எடுக்கும் வரை பொறுமையாக இருந்து உணவை உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

நாம் டீ, காப்பி, செயற்கை குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் . இல்லையென்றால் நம் எலும்புகள் எளிதில் வலுவிழந்துவிடும், சிறுநீரக செயலிழப்பு ஏற்படும், சிறுநீரக கற்கள் ஏற்படும்.

ஓய்வு [தூக்கம்] [ஆகாயம்] [ கல்லீரல், பித்தப்பை ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும்] முடிந்தவரை இரவு 10 மணிக்கு தூங்க முயற்ச்சிக்கவும். இரவு 11 மணி - 3 மணி வரை ஆழ்ந்த உறக்கத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் அந்த நேரத்தில் தான் நம் கல்லீரலும் பிதப்பையும் உடம்பிலுள்ள இரசாயண கழிவுகளை முழுவீச்சில் வெளியேற்றும்.

வடக்கே தலை வைத்துப் படுப்பதை தவிர்க்கவும். தூங்கத் தயாராவதற்கு முன் மனதைப் பாதிக்கும் பேச்சு, அதிர்ந்த சிந்தனைகள், செயல்பாடுகள் போன்றவை இல்லாமல அமைதியான சூழ்நிலையில் இருந்து படுக்கைக்கு சென்றால் தூக்கம் நன்றாக வரும். புகைபழக்கம் மற்றும் டீ, காபி, செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும். இவை அனைத்துமே நம் தூக்கத்திற்கும் உடல்நலத்திற்கும் கேடு விளைவிக்கும்.

இரவு 10 மணி நேரத்திற்குள் படுத்துவிட்டு விடியற்காலை எழுந்து குளிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். காலை நேரத்தில்தான் பித்தம் உடலில் பரவும், அப்போது குளிப்பது உடம்பிற்கு நல்லது.
படுக்கையில், தலைமாட்டில் செல்போன் போன்ற கதிர்வீச்சுக்கள் உள்ளவற்றை வைத்துக்கொள்ளாமல், வேறு அறையில் அல்லது தூரத்தில் வைத்துவிட வேண்டும்.

குளிர் காலங்களில் வெறும் தரையில் படுக்கக் கூடாது. உடல் அதிகம் குளிர்ச்சியடைந்தாலும் தூக்கம் கெட்டுவிடும். உடல் உழைப்பு உள்ளவர்கள் குறைந்தது 6 மணிநேரம் தூங்க வேண்டும். மூளைக்கு மட்டுமே வேலை கொடுப்பவர்கள் குறைந்தது 6 மணிநேரம் ஓய்வு எடுக்க வேண்டும்.

இரவில் பல் விலக்கிப் படுத்தால் நன்றாகத் தூக்கம் வரும். முடிந்தவரை வெறும் கையால் உப்பு கலந்த நீரில் விளக்கவும். ஈறுகளுக்கு மசாஜ் செய்தல் பற்களுக்கு வலிமை தரும். தாடைக்குக் கீழ் தடவிக் கொடுத்தால் நன்றாகத் தூக்கம் வரும். தலையில் உச்சிக்கும் சுழிக்கும் நடுவில் மசாஜ் செய்தால் நன்றாகத் தூக்கம் வரும்.

நாம் தூங்கும் இடங்களில் இயற்கையான காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துகொள்ளுங்கள். இல்லையென்றால் இரவு முழுக்க கனவுகளால் அவதிப்படும் சுழல் உருவாகும். இரவில் எளிதில் ஜீரணமாககூடிய உணவை உண்டால் தூக்கமின்மை தொந்தரவு ஏற்படாது. தலைவலி, உடல்வலி என்று எதெற்கெடுத்தாலும் ஒரு மாத்திரையை போட்டுக்கொள்வது நல்லதல்ல. எண்ணைக் குளியல், கஷாயம் போன்ற இயற்கை மருத்துவ முறையைப் பின்பற்றுவது நல்லது.

இரவு தூக்கம் வரவில்லையென்றால் அல்லது தூக்கம் கலைந்துவிட்டாலும் இரண்டு கைகளிலும் கையின் கட்டை விரல் (Thumb Finger) நுனியையும் நடு விரல் (Middle Finger) நுனியையும் தொடுமாறு வைத்துக்கொண்டு மற்ற அனைத்து விரல்களையும் நேராக வைத்துக்கொண்டு இருந்தால் (படத்தில் இருப்பதை போல) எளிதில் தூக்கம் வரும். இதற்காக மருத்துவரை தேடி ஓட வேண்டாம்.

காற்று [வாயு] [ நுரையீரல், பெருங்குடல் ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும்] புகைபழக்கம்,கொசுவை விரட்டிகள் நம் சுவாசபாதை மற்றும் நுரையீரலை பலகீனப்படுத்தும். இவையே நமக்கு துக்க உணர்வையும் விரக்தியான மனநியையும் கொடுக்கும். மலச்சிக்கலுக்கும் வழிவகுக்கும். கொசுவர்த்தி சுருள் மற்றும் கொசுவை விரட்டுவதற்காக நாம் உபயோகபடுத்தும் அனைத்து இரசாயணங்கள் முதலியவற்றைப் பயன்படுத்தக் கூடாது [ நச்சு கலந்த காற்றை சுவாசிக்காமல் இருக்க ] வீடு, அலுவலகம், தொழிற்சாலை, படுக்கை அறை எங்கும் எப்பொழுதும் காற்றோட்டம் நன்றாக இருக்க வேண்டும்.

தூங்கும் பொழுது A/C ஐ பயன்படுத்தினாலும் ஜன்னல்களை அடைத்து வைக்கக் கூடாது [ நாம் சுவாசித்த காற்றயே (கரியமில வாயு - Carbon-dioxide) மறுபடியும் மறுபடியும் சுவாசிக்காமல் இருக்க ]
தலையை போர்வையால் முழுமையாக போர்த்தி கொண்டு தூங்க கூடாது [ நாம் சுவாசித்த காற்றயே (கரியமில வாயு - Carbon-dioxide) மறுபடியும் மறுபடியும் சுவாசிக்காமல் இருக்க ] மரங்கள் தான் காற்றை உருவாக்குகிறது மின்விசிறியோ / குளிர்சாதனமோ அல்ல என்பதை புரிந்துகொண்டு ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு தூங்குங்கள். அப்படி கொசுத்தொல்லை இருக்கிறதென்றால் ஜன்னலில் கொசுவலையை வாங்கி மாடிக்கொள்ளுங்கள்.

சளி என்பது வியாதி கிடையாது. நம் நுரையீரலில் உள்ள கழிவுகளை நம் உடலானது தும்மல், மூக்கின் மூலம் நீராக, சளி முதலியவற்றின் மூலம் தான் வெளியற்றும். அதனால் இவற்றை அடக்க ஆங்கில மருந்தேதும் உண்ண கூடாது. அப்படி மருந்து உண்டால் முச்சுத்திணறல், மூச்சிறைப்பு, ஆஸ்துமா, வறட்டு இருமல், சைனஸ், மலச்சிக்கல், நிமோனியா… போன்ற பல வியாதிகள் உண்டாகும். சளியை வெளியேற்ற வேறு எந்த மருத்துவத்தை வேண்டுமானால் பயன்படுத்தலாம். எந்த உணவையும் உண்டால் சளி வரும் என்று ஒதுக்காதீர்கள். முடிந்தவரை எந்த பழங்கள் உண்டால் சளி வருகிறதோ அதை உண்ணவும். ஏனென்றால் சளிப்படலம் தான் நமக்கு குடற்புண் (Ulcer) வராமல் நம்மை பாதுகாக்கிறது. மற்றும் மலச்சிக்கல் இல்லாமல் மலம் எளிதில் வெளியேற உதவுகிறது. மலச்சிக்கல் இல்லாமல் இருந்தால் நமக்கு குடலிறக்கம், குடலில் புற்றுநோய் போன்ற தொந்தரவுகள் ஏற்படாது.

உழைப்பு [நெருப்பு] [ இருதயம், சிறுகுடல், இதயமேலுரை, மூவெப்பமண்டலம் ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும்] பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். உழைப்புக்கேற்ற உணவு அல்லது உணவுக்கேற்ப உழைப்பு வேண்டும்.

தினமும் உடலில் உள்ள அனைத்து இணைப்புகளுக்கும் வேலை கொடுக்க வேண்டும். இரத்தம் ஓட இருதயம் உதவும். ஆனால் நிண நீர் ஓட உடல் உழைப்பு மட்டுமே உதவும். உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு நிணநீர் ஓட்டம் நன்றாக இருக்காது. இவை தான் நம் உடம்பில் தோன்றும் பல நோய்களுக்கு காரணம். தினமும் ஏதாவது உடற்பயிற்சி, நடைபயிற்சி, ஜாக்கிங் அல்லது ஏதாவது விளையாட்டில் ஈடுபடுவது நல்லது.

காய்ச்சல் என்பது நோய் அல்ல. நம் உடலில் தேங்கும் கழிவுகள் மலம், சிறுநீர், வியர்வை, சளி, வாந்தி போன்றவற்றின் மூலம் வெளியேற்ற இயலவில்லையெனில் நம் உடலே உடலின் வெப்பத்தை அதிகப்படுத்தி அழித்துவிடும். மேலும் நம் உடலில் கிருமிகளும் காய்ச்சலின்போது அளிக்கப்படும். காய்ச்சலை தடுக்க மருந்து உண்ணாமல் இருந்தால் ஒருமுறை நம் உடலில் வந்த கிருமிகள் நம் வாழ்வில் எப்போது வந்தாலும் நம் உடலே அதை அழிக்கும் எதிர்ப்பு சக்தியை பெற்றுவிடும்.

எனவே காய்ச்சல் வந்தால் ஓய்வு எடுத்து பசித்தால் மட்டுமே உணவு உண்டு தாகம் எடுத்தால் மட்டுமே நீர் அருந்தி நம் உடம்பின் ஒட்டுமொத்த சக்தியையும் கழிவுகளை வெளியேற்றவும் கிருமிகளை அளிக்கவும் உபயோகப்படுத்த நாம் ஒத்துழைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் நாம் தொலைகாட்சியில் செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்தப்படும் எந்த வியாதிக்கும் பயப்பட அவசியம் இல்லை

Sunday, February 15, 2015

மூன்றே நாளில் நுரையீரலை சுத்தமாக்குவது எப்படி?

மூன்றே நாளில் நுரையீரலை சுத்தமாக்குவது எப்படி?
  
நுரையீரல் பாதிக்கின்ற அளவிற்கு ஒருசிலர் எந்த கெட்ட பழக்கத்தையும் தொடர்வதில்லை. ஆனால் அவர்களுக்கு நுரையீரல் தொடர்பான பிரச்னை இருக்கும்.

இது ஒவ்வொருவரின் எதிர்பாற்றலை பொறுத்து மாறுப்படும். மூன்றே நாளில் உங்களின் நுரையீரலை எளிமையான முறையில் சுத்தம் செய்யலாம். இதோ, அதற்கான வழிகள்…

* சுத்தம் செய்ய வேண்டிய நிலைக்கு வரும்போது முதலில் பால் பொருட்கள் அனைத்தையும் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.

* முதல் நாளுக்கு முன் இரவு தூங்க செல்லும் முன் ஒரு கப் மூலிகை டீ குடிக்க வேண்டும். இது உடலிருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவும்.

* முதல் நாள், காலை உணவுக்கு முன்பு 300 மில்லி நீரில் 2 எலுமிச்சை பழத்தை பிழிந்து குடிக்கலாம்.

* இரண்டாம் நாள், காலை வேளையில் அன்னாசி பழ சாறை அருந்தலாம்.

* மூன்றாம் நாள், காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில் 300 மில்லி கேரட் ஜூஸை குடிக்கலாம்.

* உண்ணும் உணவில் அதிகமான பொட்டாஷியம் நிறைந்த உணவுகளை சாப்பிடும் போது உடலிலிருக்கும் நச்சுக்கள் வெளியேறும். மூலிகை டீ குடிப்பதால் நுரையீரலில் எந்த தொற்றும் ஏற்படாமல் பாதுகாக்கும்.

* தினமும் 20 நிமிடங்கள் குளிப்பதால் உடலிலிருந்து வியர்வை அதிகளவில் வெளியேறும். வியர்வையின் மூலமாக நச்சுக்களும் வெளிவரும். காலை மற்றும் மாலை என குளிப்பதை 10 நிமிடங்களாக பிரித்துக் கொள்ளலாம்.

* 5 துளி யூக்கலிப்டஸ் தைலத்தை நீரில் விட்டும் குளிக்கலாம். வாரம் ஒருமுறை யூக்கலிப்டஸ் தைலத்தை 2 நிமிடங்கள் வரை சுவாசிக்கலாம்

இரத்தத்தை சுத்தம் செய்வது எப்படி

இரத்தத்தை சுத்தம் செய்வது எப்படி

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம்.
அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

• பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.

• செம்பருத்திப் பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும். 

• முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும். 

• நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் கூட இரத்தம் விருத்தி ஆகிறது. 

• இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. 

• தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கூட இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது. 

• இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளலாம். பசியையும் தூண்டும் தன்மை கொ‌‌ண்டது. இன்றைய காலகட்டத்தில் பெரும் அச்சுறுத்தல் இரத்தக் குழாய் அடைப்பு. இதனை சாதாரணமாக தவிர்த்துவிடலாம் என்கிறது இயற்கை வைத்தியம். 

• தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும். 

• விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும். 

• அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டால் வந்தாலும் இரத்தக் கொதிப்பு குணமாகும். இரத்தக்கட்டு, சுளுக்கு நிவர்த்தியாக, மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு ஆகியவற்றை வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கின் மீது பற்றுபோட்டால் போதும்.

Friday, February 13, 2015

Touch Screen - கொரில்லா கிளாஸ்

Touch Screen - கொரில்லா கிளாஸ்

டச் ஸ்கிரீன்
     ஒருவரின் போனின் விலை மற்றும் தரத்தினை இன்று ஸ்கிரீன் அளவினை வைத்தே அதிகம் எடைப் போடப்படுகிறது. இந்த டச் ஸ்கிரீன் தொழில்நுட்பம் எவ்வாறு வளா்ந்து வந்துள்ளது? நாம் போன் வாங்கும் போது எவற்றை எல்லாம் பார்க்க வேண்டும்? வாருங்கள் விவாதிப்போம்.

     ஆரம்ப நாட்களில் நாம் டயல் செய்யும் எண்ணை அறியவே திரை வடிவமைக்கப்பட்டது. எய்ட் பார்ட் (எட்டு என்ற எண்ணின் அடிப்படை) டிஸ்ப்ளே போன்களில் பொருத்தப்பட்டு இருந்தன. இவற்றில் கால்குலேட்டரைப் போன்று எட்டு என்ற எண்ணின் அடிப்படையில் எண்கள் தோன்றச் செய்யப்பட்டன. பின்னா் மிகக் குறைந்த புள்ளிகளைக் கொண்ட வி.ஜி.ஏ (விஷிவல் கிராபிக்ஸ் அரே) டிஸ்ப்ளேக்கள் உருவாக்கப்பட்டன. நோக்கியா 1100 மாடல் போன்களை இதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம். இவற்றில் சுமார் 95வரிசைப் புள்ளிகளும் (ரோ), சுமார் 65செங்குத்து வரிசைப் (காலம்ன்) புள்ளிகளும் அமைக்கப்பட்டன.

இதில் எழுத்துக்கள் மற்றும் எண்கள் என எதை வேண்டுமானாலும் உருவாக்கலாம். ஆனால் ஒரு எழுத்தினை உற்று பார்க்கும் போது அது சுமார் 15தனித்த கருப்புநிற புள்ளிகளால் உருவாக்கப்பட்டது என எளிதில் கண்டறியலாம். அக்காலத்தில் பிக்சா் மெஸஜ்களை அனுப்புவதும் பெறுவதுமே இந்த போனின் உச்சகட்ட செயல்பாடு. இந்த டிஸ்ப்ளேக்கள் மோனோகுரோமேடிக் (கருப்பு வெள்ளை) டிஸ்ப்ளேக்கள் என அழைக்கப்பட்டன.

அடுத்த தலைமுறை மாற்றமாக இதே புள்ளிகள் எண்ணிக்கையில் (பிக்சல் கவுண்ட்) பல வண்ண டிஸ்ப்ளேக்கள் உருவாக்கப்பட்டன. இவற்றால் மேற்கண்ட எண்ணிக்கையிலான புள்ளிகளை கருப்பு மட்டுமின்றி, பல நிறங்களாக தோன்றச் செய்ய முடியும். இந்த தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக நோக்கியா 1600 போன்களை கூறலாம். ஆரம்பகால இத்தகைய போனின் ஒரு புள்ளியால் (பிக்சளால்) 256வேறுபட்ட நிறங்களை மட்டுமே தோன்றச் செய்ய முடியும். இவ்வகையில் ஒவ்வொரு புள்ளியும் சுமார் அரை மில்லிமீட்டர் சதுர அளவு கொண்டதாக இருக்கும்.
ஐ.பி.எஸ் டிஸ்ப்ளே

அடுத்தடுத்த தலைமுறை மாற்றங்களாக பிக்சல்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டன (270x176, 320x240, 640x480). இதனுடன் ஒரு பிக்சளால் உருவாக்கப்படக்கூடிய வேறுபட்ட நிறங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது. எழுத்துக்கள் தனியாகவும் அதற்கான பேக்கிரவுண்ட் வெளிச்சம் தனியாகவும் உருவாக்கப்ட்ட எல்.சி.டி (லிக்யுட் க்ரிஸ்டல் டிஸ்ப்ளே) வகை திரைகள், டி.எவ்.டி (தின் பிலிம் டிரான்ஸிஸ்டா்) வகை திரைகளாலும், பிக்சல்களே சுயவெளிச்சத்தை உருவாக்கும் எல்.ஈ.டி (லைட் எமிட்டிங் டையோட்) திரைகளாகவும் மாற்றம் பெற்றன. இவற்றின் வேறுபட்ட நிறங்களை உருவாக்கும் திறனும் சில நூறுகளில் இருந்து சில ஆயிரம் (64கே-64000நிறங்கள், 262கே-262000நிறங்கள்) தனித்த நிறங்களை உருவாக்கும் டிஸ்பிளேக்களாக மேம்பட்டன. இவற்றின் ஒவ்வொரு பிக்சல்களின் அளவும் 10ல் ஒன்று முதல் 100ல் ஒரு மில்லிமீட்டா் அளவிற்கு குறைக்கப்பட்டன. சில பார்வை கோணங்களில் மட்டும் இயல்பாகவும், பிற கோணங்களில் வேறுபட்ட நிறங்களாகவும் தோன்றும் மேற்கண்ட டிஸ்ப்ளேக்கள், ஐ.பி.எஸ் (இன் பிளேன் ஸ்விட்சிங்) எனப்படும் 1780 பார்வைக் கோணம் கொண்ட, சிறப்பு வகை எல்.ஈ.டி திரைகளால்
ஓரங்கட்டப்பட்டன.

தற்காலத்தில் ஒவ்வொரு பிக்சலும் 16.7மில்லியன் தனித்த நிறங்கைளை உருவாக்கும் திறன் கொண்ட ஐ.பி.எஸ் வகை டிஸ்ப்ளேக்களே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் 800வரிசை மற்றும் 480செங்குத்து வரிசை (சுமார் 368ஆயிரம் தனித்த) பிக்சல்கள் (புள்ளிகள்) இடம் பெறும். (மைக்ரோமேக்ஸ், சேம்சங் மற்றும் நோக்கியா போன்ற நிறுவனங்களின் பட்ஜெட் ஸ்மார்ட் போன் மாடல்களில் (பத்தாயிரத்திற்குள்) இவ்வகை திரைகள் பெருமளவு தோ்வு செய்ப்படும்).
சூப்பர் ஆமோலாய்டு டிஸ்ப்ளே

உயா்தர போன்களில் சூப்பர் ஆமோலாய்டு (ஆக்டிவ் மேட்ரிக்ஸ் ஆர்கானிக் லைட் எமிட்டிங் டையோட்) எனப்படும், சிறப்பு வகை எல்.ஈ.டி டிஸ்ப்ளேக்கள் பயனப்டுத்தப்படுகின்றன. இவற்றின் தனித்த நிறங்களை உருவாக்கும் திறனும், ஒவ்வொரு பிக்சல்களின் மிகச்சிறிய உருவ அளவும் சிறப்புடையவை. இன்றைய நிலையில் இவையே டச் திரைகளின் உச்சம். இவற்றில் வளையக் கூடிய மற்றும் ஒளி ஊடுருவக்கூடிய (திரைக்கு பின்னால் கை வைத்தால் கையும் தெரியும்) வகை திரைகளும் கவனத்தை அதிகம் கவா்கின்றன.

நோக்கியாவின் சி6-01 போனில் 640x360 துல்லியமுடைய திரைகள் அமைக்கப்பட்டன. பின்னா் சேம்சங் கேலக்ஸி எஸ் போனில் 800x480 துல்லியமுடைய திரையும், கேலக்ஸி நோட்டில் 1280x800 என்ற துல்லியமுடைய (720பி எச்.டி) திரை அமைக்ப்பட்டது. பின்னர் கேலக்ஸி எஸ்4ல் 1920x1080 என்ற துல்லியமுடைய (புல் எச்.டி) திரை அமைக்கப்பட்டது. இன்றைய உச்சமாக 2560x1440 துல்லியமுடைய (அல்ட்ரா எச்.டி) திரைகள் கேலக்ஸி நோட்4 போன்களில் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் பி.பி.ஐ(பிக்சல்ஸ் பா் இன்ச்) எனப்படும் ஒரு சதுர அங்குலத்திற்கு அடங்கும் பிக்சல்களின் எண்ணிக்கை 515வரை உயர்த்தப்பட்டுள்ளன.
கொரில்லா கிளாஸ்
     மேற்கண்ட டிஸப்ளேக்கள் அதிகம் துல்லியம் கொண்டவையாக இருந்தாலும் எளிதில் உடையக்கூடியவை. இவற்றினை பாதுகாக்க சில வழிகள் பின்பற்றப்படுகின்றன. அவற்றில் முக்கியமானது கொரில்லா கிளாஸ் தொழில்நுட்பம். இம்முறையில் கார்னிங் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட, வேதியல் செயல்பாடுகளால் வலுவூட்டப்பட்ட மிகமெல்லிய கண்ணாடி போன்ற அமைப்பானது, போனின் திரையின் மீது பொருத்தப்படும். இதனால் கூர்மையான பொருட்களால்  திரை கீரப்படுவதும் அல்லது கிழிக்கப்படுவதும், மோதலினால் திரை உடைவதும் பெருமளவு குறைக்கப்படும்.

ரேஸ் காரிகளின் எடையைக் குறைக்க உருவாக்கப்பட்ட இந்த சிறப்பு வகை கண்ணாடிகளை தங்கள் போன்களில் பொருத்துமாறு வடிவமைக்க கார்னிங் நிறுவனத்தை ஆப்பிள் நிறுவனம் கேட்டது. இதனால் உருவானதே கொரில்லா கிளாஸ். இதுவும் இன்று மூன்றாம் தலைமுறையில் உள்ளது. இந்த தலைமுறை கிளாஸ்களானது இதன் முந்தைய தலைமுறை கிளாஸ்களைவிட தடிமனில் குறைந்தவை மட்டுமின்றி மிகவும் வலுவானவை. (இவையும் குறிப்பிட்ட எல்லைகளைக் கொண்டவையே)

நீங்கள் போன்களை முரட்டுத்தனமாக பயன்படுத்துவீா்கள் என்றால் இது உங்களுக்கு சிறப்பான தோ்வாகும். மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஈ மற்றும் ஏசஸ் சென் போன்களே குறைந்த விலையுடைய கொரல்லா கிளாஸ் கொண்ட போன்களாகும்.

Wednesday, February 11, 2015

சிம் கார்டுகள்

சிம் கார்டுகள்
     நாம் 1100 காலத்தில் பயன்படுத்திய சிம்கார்டுகள் தற்காலத்தில் மிகப்பெரிய உருவ அளவு கொண்டதாக கருதப்படுகின்றன. ஏனெனில் பெரும்பாலான ஸ்மாரட் போன் நிறுவனங்கள் தங்கள் போன்களில் மைக்ரோ சிம் எனப்படும், அளவில் சிறிய சிம்கார்டுகளை பொருத்த மட்டுமே போனில் இடம் அமைத்திருப்பர்.

        இயல்பான சிம்மின் அளவில் பாதியாக இருக்கும் இவ்வகை சிம்களை நாம் இருவகைகளில் பெறலாம். சிம்களை வெட்டும் கட்டர்களைக் கொண்டு இயல்பான சிம்மை தேவையான அளவிற்கு வெட்டுவதன் மூலமோ அல்லது உங்கள் போன் நிறுவனத்திடம் டூப்ளிகேட் சிம்கார்டினை மைக்ரோ சிம் அளவிலும் பெறலாம்.

     சிம் வெட்டப்பட்டு பயன்படுத்தப்படுவதே இன்று அதிகம் தேர்வு செய்யப்படுகிறது. இது எளிய முறையாக உள்ளபோதும், வெட்டப்படும் சிம்மில் இடப்பெயர்வு இருக்க வாய்ப்புகள் உள்ளன. இதனால் உங்கள் சிம்மானது அடிக்கடி நெட்வொர்க் சிக்னல் மற்றும் டேட்டா கனக்ஷனை இழக்கவோ அல்லது விட்டுவிட்டு பெறவோ வாய்ப்புகள் உள்ளன. இதனால் கூடுதல் பேட்டரியும் செலவு செய்யப்படும். எனவே இயலுமாயின் உங்கள் சிம் நிறுவனத்திடம் இருந்து சுமார் 150ரூபாய் செலவில் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட புதிய மைக்ரோ சிம்மினை வாங்கி பயன்படுத்துங்கள்.

     இவ்வாறு சிறியதாக வெட்டப்பட்ட சிம்களை பழைய போன்களில் அப்படியே பயன்படுத்த இயலாது. இதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிம் கன்வெர்ட்ர்கள் எனப்படும் இயல்பான சிம் அளவில் உள்ள வெட்டப்பட்ட அட்டைகளின் உள்ளே பொருத்தியே பயன்படுத்த முடியும்.

     பெரும்பாலான புதிய தலைமுறை ஐ போன்கள் (ஆப்பிள்) மைக்ரே சிம்மைவிட அளவில் சிறிய சிம்களை பயன்படுத்துகின்றன. இவை நேனோ சிம்கள் என்று அழைக்கப்படும்

Sunday, February 08, 2015

ஆன்லைன் வர்த்தகத்தில் களமிறங்கும் இந்திய தபால் துறை.

ஆன்லைன் வர்த்தகத்தில் களமிறங்கும் இந்திய தபால் துறை.

சைபர் உலகத்துக்குள் நேரடியாக காலடி எடுத்து வைக்கும்விதமாக இந்திய தபால் துறைவிரைவில் பிளிப்கார்ட், அமேசான் வர்த்தக இணையதளங்களைபோல புதிய ஆன்லைன் வர்த்தகவெப்சைட்டை
களமிறக்க உள்ளது.உலகிலேயே மிகப்பெரியபோஸ்டல் சர்வீஸ் நமது இந்தியதபால் துறைதான்.

அண்மையில்நமதுதபால் துறை, வங்கி துவங்குவதற்கானலைசென்சை பெறுவதற்காக ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பித்திருந்தது.
இந்நிலையில், தபால் துறையை தகவல் தொழில்நுட்பத்துடன்நவீனப்படுத்துவதற்காக ரூ.5000 கோடி மதிப்பீட்டில்பல பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பிளிப்கார்ட், அமேசான், ஈ பே போலஆன்லைன் வர்த்தக தளத்தை இந்தியதபால் துறை விரைவில் துவங்கஉள்ளது.இதற்கான பணிகள் அதிவேகமாகநடந்து வருகிறது. தற்போது, பிளானிங் மற்றும் டிசைனிங் வேலைநடந்து வருகிறது.
இந்த தளம் இறுதிக்கட்டத்தை எட்டஇன்னும் ஆறுமாதங்கள் வரை ஆகும். பிளிப்கார்ட், அமேசானை போலவே இதுவும் வாங்குபவர்விற்பவர்களுக்கு இடையே ஒரு பாலமாகஇருக்கும். ஆனால், அதிலிருப்பதை போல்எந்த பிராண்டை எவருக்கு வேண்டுமானாலும் விற்கலாம் என்றபடி முழுமையாக இருக்காது. பொருட்கள் விற்பனைக்கு வருவதில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படும். தரமான பொருட்களை விற்பனைசெய்யவே இந்த விதிமுறைகள். இதுதவிரஇந்திய பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக, டார்ஜிலிங்டீ, மேற்கு வங்காள மால்டாமாம்பழம், காஷ்மீர் குங்கும பூ போன்றவைஅடங்கும். மேலும், கூடுதலாக சிலபொதுத்துறை நிறுவனங்களுக்கு சேவைகளையும் வழங்க தபால் துறைதயாராக இருக்கிறது.இந்த தகவலை போஸ்டல்சர்வீஸஸ் போர்டில் உறுப்பினராக இருக்கும் ஜான் சாமுவேல் பிரபலநிதி பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்தியதபால்துறை மிகச்சிறந்த லாஜிஸ்டிக்ஸ் (சரக்குகளை சேர வேண்டிய இடத்தில்சரியாககொண்டு சேர்க்கும்) வசதியை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய தபால் துறையின் இந்தபுதிய அவதாரம் தனியார் வர்த்தகஇணையதளங்களுக்கு சவால் விடுமா? என்பதைபொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

செல்வ மகள்' சேமிப்பு திட்டம்: தமிழகத்தில் துவக்கம்.

செல்வ மகள்' சேமிப்பு திட்டம்: தமிழகத்தில் துவக்கம்.
         சென்னை: பெண் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக அறிவிக்கப்பட்ட, 'செல்வ மகள் சேமிப்பு கணக்கு' திட்ட துவக்க விழா, சென்னை, மயிலாப்பூர் தலைமை அஞ்சலகத்தில் நேற்று நடந்தது.

          பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில், 'சுகன்யா சம்ரிதி' என்ற, 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கான சிறுசேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இத்திட்டம், தமிழகத்தில் முதலாவதாக, சென்னை, மயிலாப்பூர் தலைமை அஞ்சலகத்தில், 'செல்வ மகள் சேமிப்பு திட்டம்' என்ற பெயரில், நேற்று துவக்கப்பட்டது. சென்னை வட்ட, தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மெர்வின் அலெக்சாண்டர், ஒன்றரை வயது பெண் குழந்தை ரத்னாவிற்கு, முதல் பாஸ் புத்தகத்தை வழங்கி, திட்டத்தை துவக்கி வைத்தார். அவர் பேசுகையில், ''இது, அறிமுகத் திட்டம் என்பதால், நடப்பு ஆண்டில், 11 வயதிற்குட்பட்ட குழந்தைகளும், இத்திட்டத்தில் சேர வாய்ப்பு அளிக்கப்படும். பொதுமக்கள் இதன் மூலம் பயன் பெற வேண்டும்,'' என்றார்.
சிறப்பு அம்சங்கள்

* 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு காப்பாளர் மூலம் கணக்கு துவங்க முடியும்.
* கணக்கு துவங்க குறைந்தபட்ச தொகை, 1,000 ரூபாய்.
* ஒரு நிதியாண்டில், அதிகபட்சம், 1.5 லட்சம் ரூபாய் வரை செலுத்த முடியும். வட்டி விகிதம், 9.1 சதவீதம்.
* கணக்கு துவங்கியதில் இருந்து, 14 ஆண்டுகள் பணம் செலுத்தலாம்.
* கணக்கு வைத்திருக்கும் பெண் குழந்தைகள், 18 வயது முடிந்த பின், இருப்புத் தொகையில் இருந்து அதிகபட்சம், 50 சதவீதம் மேற்படிப்பு அல்லது திருமணத்திற்காக பெற்றுக் கொள்ள முடியும்.
* வாரிசு நியமன வசதி இல்லை.
* குழந்தைக்கு 21 ஆண்டுகள் முடிந்த பின் கணக்கை முடித்துக் கொள்ளலாம்.

* விருப்பத்தின் படி மாதாந்திர வட்டி பெறும் வசதி உள்ளது.

Friday, February 06, 2015

மாற்றுத் திறனாளிக்கான சலுகை பயணச் சீட்டு: ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் பெறலாம்

மாற்றுத் திறனாளிக்கான சலுகை பயணச் சீட்டு: ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் பெறலாம்

மாற்றுத் திறனாளிகளுக்கான சலுகை விலை ரயில் பயணச் சீட்டுகளை இனி www.irctc.co.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.இதற்கு முன்பு மாற்றுத் திறனாளிகள் ரயில்வே முன்புதிவு கவுன்ட்டர்களுக்குச் சென்று தங்களது மாற்றுத் திறன் அடையாள அட்டையைக் காண்பித்து சலுகை விலை ரயில் பயணச் சீட்டை பெற்று வந்தனர்.
ரயில் நிலையக் கவுன்ட்டர்களுக்கு சென்று பயணச் சீட்டு முன்பதிவு செய்வது சிரமமாக இருப்பதாக பல மாற்றுத் திறனாளிகள் ரயில்வே நிர்வாகத்துக்குத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இப்போது மாற்றுத் திறனாளிகள், இணையதளத்துக்குச் சென்று தங்களது மாற்றுத்திறன் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து பயணச் சீட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். ரயிலில் பயணம் செய்யும்போது பயணச் சீட்டுடன், தங்களது அசல் மாற்றுத்திறன் அடையாள அட்டையை ரயில் டிக்கெட் பரிசோதகரிடம் காட்ட வேண்டும்.

பெரும்பாலான ரயில்வே டிக்கெட் கவுன்ட்டர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ப வசதியுடன் இல்லை.

இப்போது, இந்த வசதியால் ஏராளமான மாற்றுத் திறனாளிகள் தங்களது சலுகை விலை ரயில் பயணச் சீட்டை இருந்த இடத்தில் இருந்தே பெற்றுக்கொள்ளலாம்.

Thursday, February 05, 2015

காலத்தால் மறந்த ஷார்ட் கட் கீகள்

காலத்தால் மறந்த ஷார்ட் கட் கீகள்

ஒவ்வொரு ஆப்பரேட்டிங் சிஸ்டமும், அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பும், தானே வடிவமைத்த பல ஷார்ட்கட் கீ தொகுப்புகளைக்
கொண்டிருக்கும். இவை, நாம் சிரமமெடுத்து, மவுஸ் கிளிக் செய்திடும் வேலைச் சுமையைக் குறைக்கும். மவுஸ் இல்லாமல், கீ போர்டிலேயே சுற்றி சுற்றி வந்து, கீகளை அழுத்துவதன் மூலம் நம் வேலையை மேற்கொண்டால், கம்ப்யூட்டரில் நம் வேலைத் திறன் இரண்டு பங்கு அதிகமாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த நிலையிலும், நாம் சில ஷார்ட்கட் கீ தொகுப்புகளை மட்டுமே நினைவில் கொண்டு பயன்படுத்தி வருகிறோம். சிலவற்றை, அவை எவ்வளவு பயனுள்ளதாக இருந்தாலும், மறந்து பயன்படுத்தாமல் இருந்து விடுகிறோம். இதற்குக் காரணம், அவை அடிக்கடி பயன்படுத்தப் படாதவையாக இருப்பவை; அல்லது, கீ போர்டில், குறிப்பிட்ட கீகள் சற்று தொலைவாக அமைக்கப்பட்டிருக்கும் நிலை. அந்த வகையில் விண்டோஸ் சிஸ்டத்தில், மறக்கப்பட்ட சில ஷார்ட் கட் கீ தொகுப்புகளைக் காணலாம்.

1. கண்ட்ரோல் + ஒய் (Ctrl + Y): நம்மில் பலர், "Ctrl + Z" கீகளைப் பயன்படுத்தினால், அப்போது மேற்கொள்ளப்பட்ட செயல்பாடு நீக்கப்படும் என அறிந்திருக்கிறோம். இது பல வேளைகளில் நமக்கு உதவியாக இருக்கிறது. ஆனால், இதே போல "Ctrl + Y" என்ற கீ தொகுப்பும் உள்ளது என்று ஒரு சிலருக்கே தெரியும். அவர்களும் இதனைப் பயன்படுத்துவது இல்லை. இந்த கீ தொகுப்பு, நாம் மேலே சொன்னபடி, நீக்கப்பட்ட செயல்பாட்டினை, மீண்டும் கொண்டு வரும். இதனால், நாம் தவறுதலாக, முன்பாக மேற்கொண்ட செயலை நீக்கிவிட்டால், அதனை மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டு வர இந்த கீ தொகுப்பு பயன்படுகிறது. இது பல வேளைகளில், நம் வேலைக்கு உயிர்ப்பிச்சை கொடுக்கும். எனவே, இதனை மறந்திடாமல், மனதில் வைத்து, தேவைப்படும்போது பயன்படுத்த வேண்டும்.

2. விண்டோஸ் + பிரேக்/ பாஸ் (Win + : உங்கள் கம்ப்யூட்டர் சிஸ்டத்தின் கட்டமைப்பு தகவல்கள் குறித்து அறிய, நாம் கண்ட்ரோல் பேனலில் இருந்து நேரடியாகப் பெறுகிறோம். விண்டோஸ் 8 சிஸ்டத்தில், இது இன்னும் எளிதாக்கப்பட்டுள்ளது. "Win + X" என்ற கீகளை அழுத்தி, கிடைக்கும் பட்டியலில், "System" என்பதனைத் தேர்ந்தெடுத்தால், சிஸ்டம் குறித்த தகவல்கள் கிடைக்கும். ஆனால், இதனை இன்னும் எளிமைப் படுத்த, உங்கள் கீ போர்டில், "Win + Pause/Break" அழுத்துங்கள். சிஸ்டம் குறித்த தகவல்கள், பாப் அப் விண்டோவாக எழுந்து வரும்.

3. ஆல்ட் + பிரிண்ட் ஸ்கிரீன் (Alt + Print Screen): நம் கீ போர்டில் உள்ள (Prt Scr) கீ, அடிக்கடி, ஸ்கிரீனில் தெரியும் தோற்றத்தினை அப்படியே படமாக மாற்றி எடுக்கப் பயன்படுகிறது. திரைக் காட்சி முழுமையும் இந்த செயல்பாட்டில் காட்டப்படும். இதற்குப் பதிலாக, செயல்பட்டுக் கொண்டிருக்கும் விண்டோ காட்சி மட்டும் தேவை என்றால், "Alt + Print Screen" கீகளை அழுத்துங்கள். இப்போது கிடைக்கும் காட்சி, நாம் விரும்பும் செயல்பாட்டை மட்டும் காட்டும் விண்டோ காட்சியாக இருக்கும். இதனால், திரை முழுமையும் காப்பி செய்து, பின்னால், அதனை எடிட் செய்திடும் வேலை மிச்சமாகிறது.

4. விண்டோஸ் + இ (Win + E) விண்டோஸ் சிஸ்டத்தில் அதிகம் பயன்படும் ஒரு புரோகிராம் உள்ளது என்றால், அது விண்டோஸ் எக்ஸ்புளோரர் தான். பொதுவாக, இதனை ஸ்டார்ட் மெனு இயக்கிப் பெறுகிறோம். அல்லது டாஸ்க் பாரில் உள்ள இதன் ஐகானில் கிளிக் செய்கிறோம். அல்லது, திரையில் காட்டப்படும் "My Computer" ஐகான் மீது கிளிக் செய்து பெறுகிறோம். ஆனால், மிக வேகமாக, விண்டோஸ் எக்ஸ்புளோரரைப் பெற வேண்டும் என்றால், உங்கள் கீ போர்டில், "Win + E" அழுத்துங்கள். இதனைப் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவதே இல்லை. ஆனாலும், இது மிக மிகப் பயனுள்ள ஷார்ட் கட் கீ தொகுப்பு என்பதில் சந்தேகமே இல்லை.

5. கண்ட்ரோல் + ஷிப்ட் + என் (Ctrl + Shift + N): புதிய போல்டர் ஒன்றை உருவாக்க, நாம் அனைவரும் பின்பற்றும் வழி, டெஸ்க் டாப்பில், காலியாக உள்ள இடத்தில், ரைட் கிளிக் செய்து, பின்னர் "New > Folder." எனத் தேர்ந்தெடுப்பதுதான். இதைக் காட்டிலும் எளிய வழி, "Ctrl + Shift +N," ஆகிய கீகளை அழுத்துவதாகும். இந்த கீகளை அழுத்தினால், உங்களின் புதிய போல்டர் உருவாக்கப்பட்டு, நீங்கள் அதற்கு ஒரு பெயர் கொடுப்பதற்காகக் காத்திருக்கும். கைகளை எடுத்து, மவுஸை இயக்கி, கிடைக்கும் மெனுவில், இதற்கான பிரிவுகளை இயக்கி, போல்டரைப் பெறுவதைக் காட்டிலும், இது எவ்வளவு எளிய, குறைந்த நேரம் எடுக்கும் வழி என தெரிந்து கொள்ளலாம்.

6. விண்டோஸ் கீ + வலது அம்புக் குறி + எண்டர் (Win + Right Arrow + Enter): விண்டோஸ் பெர்சனல் கம்ப்யூட்டரை, இறுதியாக ஷட் டவுண் செய்திடப் பல வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று --"Win" பட்டன் அழுத்தி, அதன் பின் வலது ஆரோ கீ அழுத்தி, பின்னர் என் டர் பட்டன் அழுத்துவது. இது, ஷட் டவுண் பட்டனில், முதல் ஆப்ஷனைச் செயல்படுத்தும். இந்த கீ செயல்பாடு விண்டோஸ் 8 மற்றும் 8.1 ல் செயல்படாது. விண்டோஸ் 10ல் செயல்படும் என்று எதிர்பார்ப்போம்.

7. விண் + அம்புக் குறி கீகள் (Win + Arrow Keys): உங்களிடம் மிகப் பெரிய கம்ப்யூட்டர் திரை இருந்தால், செயல்பட்டுக் கொண்டிருக்கும் புரோகிராம்களை, திரையின் ஏதாவது ஒரு பக்கத்திற்குக் கொண்டு செல்லலாமே. இதனால், பின்னும் முன்னுமாக விண்டோக்களிடையே உலவ வேண்டாமே. பொதுவாக, மவுஸ் பயன்படுத்தி, விண்டோக்களை மூடித் திறக்கலாம். ஆனால், அதே நேரத்தில், "Win + Arrow Keys" பயன்பாடு, இதே செயல்பாட்டினைத் தரும். எந்த அம்புக் குறி கீயை அழுத்துகிறீர்களோ, அதற்கேற்ப விண்டோஸ் ஒதுங்கிக் கொடுக்கும்.

8. விண் + டேப் (Win + Tab): விண்டோவில் இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம்களுக்கிடையே சென்று வர, நாம் ஆல்ட் + டேப் கீகளைப் பயன்படுத்துகிறோம். இதே செயல்பாட்டினை, விண்டோஸ் கீ + டேப் கீ அழுத்தியும் பெறலாம் என்பது பலருக்குத் தெரியாது.

மேலே சொல்லப்பட்டவை, நம்மால் அதிகம் பயன்படுத்தப்படாத, ஆனால், பயனுள்ள பல ஷார்ட் கட் கீகளாகும். இது போல, இன்னும் பல இருக்கின்றன. இவற்றை அறிந்து பயன்படுத்துங்கள்

இலவசமாக கிடைக்கும் விண்டோஸ் 10

இலவசமாக கிடைக்கும் விண்டோஸ் 10

''விண்டோஸ் இயக்கத்திற்கு இது ஒரு மாபெரும் திருநாள்" என்ற உணர்ச்சிப் பெருக்கான வாசகத்துடன், மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாகி
நாதெள்ளா, விண்டோஸ் 10 இயக்க முறைமையின், நுகர்வோர் சோதனைப் பதிப்பினை, மக்கள் பார்க்கும் வகையில், ரெட்மண்ட் நகரில் நடைபெற்ற விழாவில், மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைமையகத்தில் வெளியிட்டார். "விண்டோஸ் சிஸ்டத்தை தேடிப் பெற்ற மக்களிடமிருந்து, விண்டோஸ் சிஸ்டத்தை தேர்ந்தெடுத்து, அதனை நேசிக்கும் மக்களை நோக்கி நாம் நகர்வோம்" என்று விண்டோஸ் சிஸ்டத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மக்களை நோக்கி அன்பு பெருக்கோடு உரையாற்றினார், நாதெள்ளா.

நம் வாழ்க்கை முறையையும், சிந்தனையையும் மாற்றி அமைத்த விண்டோஸ் இயக்கம், இனி, நம் வாழ்வின் சூழ்நிலைகளை மாற்றி அமைக்கும் பணியை, விண்டோஸ் 10 இயக்கத்துடன் தொடங்குகிறது. இந்த உலகிற்கு இன்னும் விண்டோஸ் ஒரு கட்டாயத் தேவையாக இருக்கும்; அது இல்லாமல் உலகு இயங்காது என்பதனை நிரூபிக்கும் வகையில், விண்டோஸ் 10 வருகிறது.

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்பது, மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஒரு பெரிய சவால் ஆகும். அதனுடைய வெற்றியில் தான், அந்நிறுவனத்தின் எதிர்காலமே உள்ளது. அந்த வகையில், விண்டோஸ் 10 சிஸ்டம் குறித்த நடவடிக்கைகள் அனைத்தையும், மைக்ரோசாப்ட் நிறுவனம் சரியாகவே மேற்கொண்டுள்ளன என்று கூறலாம். பத்தாண்டுகளுக்கு முன்னால், அனைத்து டிஜிட்டல் சாதனங்களிலும், பெரும்பாலும் டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களில், 90% விண்டோஸ் இயக்கமே இயங்கியது. அதன் பின்னர் வந்த ஸ்மார்ட் போன், டேப்ளட் ஆகிய டிஜிட்டல் சாதனங்களில், ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்ட் இயங்கியதால், டிஜிட்டல் சாதனங்களில் விண்டோஸ் இயக்கத்திற்கான பங்கு 15% ஆகக் குறைந்தது. இதனைச் சரி செய்து உயர்த்தும் பணியில், விண்டோஸ் 10 இயங்கும் எனக் கூறலாம்.
ஏற்கனவே வெளியான தொழில் நுட்ப பிரிவினருக்கான முன்னோட்ட பதிப்பில், மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8 சிஸ்டத்தில் ஏற்படுத்திய தவறுகள் அனைத்தையும் சரி செய்தது. தற்போதைய, நுகர்வோருக்கான சோதனைத் தொகுப்பில், ஆச்சரியப்படத்தக்க வகையில் பல புதிய வசதிகளை நுகர்வோருக்குத் தந்துள்ளது. தொழில் நுட்ப பிரிவினருக்கான முன்னோட்ட பதிப்பினைப் பல லட்சம் பேர் சோதனை செய்து தங்கள் பின்னூட்டங்களைத் தந்தனர். இவர்களை முறைப்படுத்துவதற்காகவே, 'விண்டோஸ் இன்சைடர் திட்டம்' ("insiders")என்ற ஒன்றை மைக்ரோசாப்ட் சென்ற ஆண்டில் தொடங்கி, இன்னும் இயக்கிக் கொண்டுள்ளது. இந்த புதிய இயக்க முறைமையின், சிறப்பு அம்சங்களை இங்கு காணலாம்.

இலவசமாய்ப் பெறலாம்: முதலாவதாக, பலரும் எதிர்பார்த்துக் கேட்டுக் கொண்டது போல, விண்டோஸ் 10 பதிப்பு, விண்டோஸ் 7 மற்றும் அடுத்து வந்த ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைப் பயன்படுத்துவோருக்கு இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை இயக்கும் அனைத்து கம்ப்யூட்டர்களையும், விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு அப்கிரேட் செய்துவிடலாம். கூடுதலாக, விண்டோஸ் 8.1 பயன்படுத்தும் விண்டோஸ் போன்களும், இதே விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு அப்டேட் செய்யப்படும்.

மைக்ரோசாப்ட், 'விண்டோஸ்' என்பது இனி ஒரு சேவையாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது. ஆனால், இது குறித்த விரிவான தகவல்களை வெளியிடவில்லை.

ஒரே சிஸ்டம்: ஆப்பிள், ஓ.எஸ். எக்ஸ் சிஸ்டத்தினை தன் டெஸ்க்டாப் ஆப்பரேட்டிங் சிஸ்டமாகவும், ஐ.ஓ.எஸ். சிஸ்டத்தை மொபைல் சாதனங்களுக்காக எனவும் பிரித்து வைத்து இயக்கி வருகிறது. ஆனால், முதன் முதலாக, மைக்ரோசாப்ட், விண்டோஸ் 10 சிஸ்டத்தை, பெர்சனல் கம்ப்யூட்டர் முதல் அனைத்து மொபைல் சாதனங்களுக்கும் இயைவானதாகத் தர இருக்கிறது. இவற்றில் இயங்கும் இடை முகங்களும் (Interface) ஏறத்தாழ ஒரே மாதிரியாக அமைய இருக்கின்றன. இதனால், டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில், விண்டோஸ் 10ல் தொடங்கிய வேலையை, போனில் தொடரலாம். அதே போல, போனில் தொடங்கிய வேலையை, டேப்ளட் பி.சி.யில் இயக்கலாம். அனைத்து சாதனங்களையும் ஒரே இயக்கத்தில் கொண்டு வரும் இந்த வசதியினை, மைக்ரோசாப்ட் வெகு காலமாக எண்ணி வந்து, இப்போது ஈடேற்றியுள்ளது.

இதன் மூலம், மொபைல் கம்ப்யூட்டிங் உலகில் கோலோச்சி வரும், கூகுள் ஆதரிக்கும் ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் சிஸ்டங்களின் வாடிக்கையாளர்களைத் தன் பிடிக்குள், விண்டோஸ் சிஸ்டம் மூலம், தன் குடைக்குள் கொண்டு வருகிறது மைக்ரோசாப்ட். இதற்காகவே, உலக அளவில், தன் விண்டோஸ் சிஸ்டம் பயன்படுத்தும் 150 கோடி பேர்களுக்கு, புதிய விண்டோஸ் 10 சிஸ்டத்தினை இலவசமாகப் பெற அனுமதித்துள்ளது.
மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 சிஸ்டத்தினை, பெர்சனல் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் சாதனங்களுக்கு மட்டுமில்லாமல், வேறு பல சாதனங்களையும் இயக்கும் வகையில் வடிவமைத்து வெளியிடுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய சர்பேஸ் ஹப் (Surface Hub,) மற்றும் எக்ஸ் பாக்ஸ் ஒன் (Xbox One) ஆகியவையும் இதே சிஸ்டத்தினைப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கிறது. இதனால், விண்டோஸ் மற்றும் எக்ஸ்பாக்ஸ் ஸ்டோர்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. வை பி இணைப்பு மூலம், எக்ஸ் பாக்ஸில் உள்ளனவற்றை, கம்ப்யூட்டரில் இயக்கலாம். எதிர் வழியில், மாற்றியும் இயக்கலாம்.

விண்டோஸ் 10 சிஸ்டம் கட்டமைப்பு, புரோகிராம்களை வடிவமைக்கும் டெவலப்பர்கள், ஒரே நேரத்தில், ஸ்மார்ட் போன், டேப்ளட், லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களுக்குத் தங்கள் அப்ளிகேஷன்களை உருவாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த அனைத்து சாதனங்களையும் இயக்கும் ஒரே சிஸ்டமாக, மைக்ரோசாப்டின் விண்டோஸ் இருக்கப் போகிறது என இனி அடித்துச் சொல்லலாம்.

ஹலோ கார்டனா!: மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏற்கனவே வடிவமைத்துள்ள கார்டனா (Cortana digital assistant) விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. கார்டனா இப்போது முழுமையாக, செறிவான திறன் பெற்றுள்ளது. மேப்ஸ், ஒன் ட்ரைவ் மற்றும் ஸ்பார்டன் பிரவுசர் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது நம் டிஜிட்டல் உதவியாளராகச் செயல்படும். நாம் டைப் செய்தோ, அல்லது குரல் வழியாகவோ, பைல் ஒன்றைத் தேடலாம். கார்டனா, இவற்றிலிருந்து நம்மைப்பற்றி நன்கு அறிந்து கொள்ளும். இதனைத் தொடர்ந்து பயன்படுத்துகையில், நமக்கு சில மேம்படுத்தப்பட்ட விஷயங்களைப் பரிந்துரைகளாகத் தரும்.

ஸ்பார்டன் பிரவுசர்: தன் விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் இணைத்து வழங்குவதுடன், புதுமையான பிரவுசராக இருக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன், ஸ்பார்டன் பிரவுசரை, நவீன தொழில் நுட்பத்தில், புதிய கூடுதல் வசதிகளுடன் மைக்ரோசாப்ட் வடிவமைத்துள்ளது. இதன்படி, ஓர் இணைய தளம் இதில் குறிப்பிடப்படுகையில், அந்த இணையதளப் பக்கத்தினை, அதனுடனான தொடர்புகளுடன் உறைய வைத்து காட்டுகிறது.
இதனால், தான் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, உருவாக்கி, மேம்படுத்தித் தந்த இன்டர்நெட் பிரவுசரை மைக்ரோசாப்ட் விட்டுவிடவில்லை. அதனையும் தன் சிஸ்டத்துடன் தருகிறது. ஆனால், இனி வருங்காலத்தில், இதற்கும் எக்ஸ்பிக்கு நேர்ந்த கதி ஏற்படலாம். முற்றிலும் மறைக்க, மறுக்கப்படலாம்.

மொபைல் போனுக்கும் விண்டோஸ் 10: போனில் விண்டோஸ் ஒரு முழுமையான மாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. புதிய வகையில் போட்டோ, ஸ்கைப், ஆபீஸ் மற்றும் பிற அப்ளிகேஷன்கள் மாற்றப்பட்டு, மேம்படுத்தப்பட்டு கிடைக்கின்றன. கீ போர்டினை மாற்றி அமைக்கும் வகையில் தருகிறது. மெசேஜ் அனுப்ப, குரல் வழியினை பயனாளர்கள் மேற்கொள்ளலாம். ஸ்கைப் அப்ளிகேஷன் சிஸ்டத்துடன் இணைக்கப்படுகிறது. இதன் மூலம், மெசேஜ்கள் தாமாகவே, ஸ்கைப் மூலம் அனுப்பப்படுகின்றன. ஸ்கைப், டயலருடன் இணைக்கப்படுகிறது. போனில் இயங்கும் விண்டோஸ் சிஸ்டத்திற்கான ஆபீஸ் அப்ளிகேஷம் முற்றிலுமாக மேம்படுத்தப்பட்டு கிடைக்கிறது. பயனாளர்கள் எதிர்பார்க்கும் அனைத்து வசதிகளும், வேர்ட், எக்ஸெல் மற்றும் பவர்பாய்ண்ட் அப்ளிகேஷன்களுடன் கிடைக்கின்றன.

விளையாடும் வசதி: போனில் இயங்கும் விண்டோஸ் 10, கேம் விளையாடுவதற்கான வசதிகளை மேம்படுத்துகிறது. இதனுடைய புதிய DirectX 12 அப்ளிகேஷன் புரோகிராமிங் மொழி, விளையாடுவதனை புதிய அனுபவமாகக் காட்டுகிறது.

எக்ஸ்பாக்ஸ்: மைக்ரோசாப்ட் தன் எக்ஸ்பாக்ஸ் (Xbox) அப்ளிகேஷனை, விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் இணைத்துள்ளது. அதே போல, விண்டோஸ் 10 எக்ஸ்பாக்ஸ் ஒன் கன்சோலுடன் இணைக்கப்படுகிறது.

தொடரும் உறவு: விண்டோஸ் 10 சிஸ்டத்தில் தரப்பட்டுள்ள மிகப் பெரிய வசதி, அதன் தொடரும் உறவு தான். ஆம், விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 சிஸ்டங்களைப் பயன்படுத்தியவர்கள், விண்டோஸ் 10 சிஸ்டத்தினைப் பயன்படுத்தும்போது, ஒரு தொடர்ச்சியினை உணர்வார்கள். ஸ்டார்ட் மெனு மீண்டும் தரப்படுகிறது. அதே போல, விண்டோஸ் 8 பயனாளர்கள், அந்த சிஸ்டத்தில் விரும்பியவையும் தரப்பட்டுள்ளன. இவ்வாறு அனைத்திற்கும் இசைவான இடைமுகத்தினை மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10ல் Continuum என அழைக்கிறது.

விண்டோஸ் 10, மவுஸ் மற்றும் கீ போர்டினை உணர்ந்தவுடன், தானாக, பழைய வகை விண்டோஸ் எக்ஸ்புளோரரை ஸ்டார்ட் பட்டனுடன் காட்டுகிறது. விண்டோஸ் 8 சிஸ்டம் டெஸ்க்டாப்பில் பழகியவர்கள், இரண்டு வகையையும் இயக்கலாம். ஐகான்கள் புதிய உருவினைப் பெற்றுள்ளன. விண்டோஸ் 8 சிஸ்டத்தின் பெரிய அளவிலான ஐகான்களையும், பழைய ஸ்டார்ட் மெனுவுடன் இயங்குகையில், சிறிய அளவிலான ஐகான்களையும் பெற்று இயக்கலாம்.

விண்டோஸ் 8 சிஸ்டத்தில், அனைவராலும் விருப்பமில்லாமல் இயக்கப்பட்ட சார்ம்ஸ் மெனு (charms menu) விற்கு விடை கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, வலது பக்கம் இருந்து ஸ்வைப் செய்தால், புதிய நோட்டிபிகேஷன்ஸ் மெனு கிடைக்கிறது. இதில், பல அப்ளிகேஷன்களுக்கான இயக்க தொடக்கம் முடிவிற்கான விரைவாக இயங்கும் டாகிள் (quick-toggle) பட்டன்கள் தரப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தி, டெஸ்க்டாப் மற்றும் டேப்ளட் என்ற நிலைகளுக்கு மாறிக் கொள்ளலாம். வை பி மற்றும் பிற செட்டிங்ஸ் அமைப்புகளையும் இயக்கலாம். செட்டிங்ஸ் மெனுவும், கண்ட்ரோல் பேனலும் புதிய பிரிவில் தரப்படுகின்றன.

விரைவான வேகம்!: மைக்ரோசாப்ட் தன் சிஸ்டத்திற்கான அப்டேட் பைல்களை வழங்கும் போதெல்லாம், அது மெமரியில் அதிக இடத்தை எடுத்துக் கொள்கிறதென்றும், அதனால், சிஸ்டம் மெதுவாக இயங்குகிறது என்றும் குற்றச் சாட்டுகள் அடுக்கப்பட்டன. அது உண்மையே. அதனால், மைக்ரோசாப்ட், தன் விண்டோஸ் 7 முதல், இத்தகைய குற்றச்சாட்டுகள் வராமல் பார்த்துக் கொண்டது. ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை மிகச் சிறியதாக அமைத்து, வேகமாக இயங்கும் வண்ணம் வைத்துக் கொண்டது. விண்டோஸ் 10 சிஸ்டத்திலும், இந்த இலக்கு அழகாக அடையாளம் காணப்பட்டுள்ளது. விண்டோஸ் 8.1 இயக்க வேகத்தைக் காட்டிலும் மட்டுமில்லாமல், ஆப்பிள் நிறுவனத்தின் ஓ.எஸ்.எக்ஸ். யோஸ்மைட் சிஸ்டத்தைக் காட்டிலும் வேகமாக இயங்கும் வகையில், விண்டோஸ் 10 வடிவமைக்கப்படுகிறது.

விண்டோஸ் 7 முதல் அதன் பின் வந்த அனைத்து சிஸ்டங்கள் இயங்கிய கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் 10 இயங்கும். இதனால், விண்டோஸ் 10 இயக்க, ஹார்ட்வேர் உயர்த்தப்பட வேண்டும் என்ற செலவு பயம் இல்லை.

அசையாத பாதுகாப்பு: இதுவரை வெளியிட்ட விண்டோஸ் இயக்க முறைமைகளில், மிகவும் அதிகமான பாதுகாப்பு அம்சங்கள் கொண்டது விண்டோஸ் 10 என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. அண்மைக் காலத்தில் ஹேக்கர்களால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், விண்டோஸ் 10 சிஸ்டத்தில் பலிக்காது எனவும் தெரிவித்துள்ளது. மேலும், ஒன் ட்ரைவில் பல கட்டமைப்பு மாறுதல்களை மேற்கொண்டுள்ளது. இதன்படி, ஒன் ட்ரைவில் சேவ் செய்யப்படும் பைல்கள் போட்டோஸ் மற்றும் எக்ஸ்பாக்ஸ் மியூசிக் அப்ளிகேஷன்களில் இயக்கப்படும். மேலும், போட்டோக்களைப் பொறுத்தவரை டூப்ளிகேட் பைல்கள் தாமாகவே களையப்படும். மிச்சமிருக்கின்ற பைல்கள், மேம்படுத்தப்படும்.

புதிய நவீன தொழில் நுட்பம்: மேலே கூறப்பட்டவை அனைத்தும் நாம் ஏற்கனவே, மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் இருந்து பெற்று வந்தவற்றின் புதிய மாற்றங்கள். இவற்றுடன், முற்றிலும் புதிய பரிமாணங்கள் கொண்ட, நவீன தொழில் நுட்ப சங்கதிகளை, மைக்ரோசாப்ட், விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் தருகிறது. அந்த வகையில் முதலில் நாம் சந்திப்பது ஹோலோ லென்ஸ் (HoloLens) மற்றும் சார்ந்த அப்ளிகேஷன்கள் ஆகும். உலகிலேயே முதன் முதலாக, "ஹோலோ கிராபிக் கம்ப்யூட்டிங் இயக்க மேடையை", மைக்ரோசாப்ட் அமைக்கிறது. இதன் மூலம், பயனாளர்கள், முப்பரிமாண ஹோலோ கிராம்களை அமைக்கலாம். இதற்கான தலை அணிகலனை மாட்டிக் கொண்டு, விண்டோஸ் 10 சிஸ்டம் வழங்கும் ஹோலோ லென்ஸ் தொழில் நுட்பத்துடன் இணைந்து, ஹோலோ கிராபிக் உருவங்களை, நம் நிஜ உலகில் உலவவிடலாம்.

இது குறித்து உரையாற்றுகையில், மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவர் நாதெள்ளா, "இனி ஹோலோகிராம் உருவங்கள், நம் தினசரி வாழ்வின் ஓர் அங்கமாக மாறிவிடும்" என்றார்.

விண் 10-எப்பொழுது எங்கு கிடைக்கும்?: சென்ற அக்டோபர், 2014 முதல், விண்டோஸ் 10ன் தொழில் நுட்ப முன்னோட்ட பதிப்பு வெளியானது. அப்போது மைக்ரோசாப்ட் விண்டோஸ் இன்சைடர் (Windows Insider) புரோகிராம் என்ற ஒன்றைத் தொடங்கி, ஆர்வலர்களைப் பதியுமாறு கேட்டுக் கொண்டது. இந்த புரோகிராமில் பதிந்தவர்களுக்கு, வரும் வாரங்களில் விண்டோஸ் 10 நுகர்வோர் சோதனைப் பதிப்பு பயன்படுத்த அனுமதி கிடைக்கும்.

மொபைல் போனில் பயன்படுத்துவதற்கான விண்டோஸ் 10 சோதனைத் தொகுப்பு வரும் பிப்ரவரியில் கிடைக்கும்.

மொத்தமாகப் பயனாளர் அனைவருக்கும், விண்டோஸ் 10 இந்த ஆண்டின் பிற்பகுதியில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது