பார்வையற்றோர் உலகுக்கு பார்வையற்றவர் வழங்கிய பார்வை
சொந்த வாழ்க்கையின் கசப்பான அனுபவத்தை கண் பார்வை அற்றவர்களுக்கு ஒரு அருட்கொடையாக மாற்றியவர்தான் 'பிரெய்ல் லூயி'.
லூயிஸ் பிரெய்ல் (1809-1852, பிரான்ஸ்) பார்வையற்றவர்களுக்கான பிரெய்ல் எழுத்தினை உருவாக்கியவர். பிரெஞ்சுக்காரரான இவர் பார்வையற்றவர். பார்வையற்றவர்கள் தடவிப் பார்த்துப் படிக்க ஏற்ற பிரெய்லி எழுத்தினைக் கண்டுபிடித்தார். பிரெயில் முறையில் ஒன்று முதல் ஆறு புடைப்புப்புள்ளிகளையும் ஓட்டைகளையும் கொண்டு எழுதிய எழுத்துகளை விரல்களை வைத்துத் தடவுதலின் மூலம் இனங்கண்டு கொள்வர்.
இளமைக்காலம்
லூயி பிரெயில் தன் மூன்றாவது வயதில், தோல் தொழிலாளியான தந்தையின் கடையில் இருந்த ஒரு தையல் ஊசியை வைத்துக்கொண்டு விளையாடும் போது எதிர்பாராத விதமாக, ஒரு கண்ணில் காயம் ஏற்பட்டது; உரிய மருத்துவம் செய்யாது விட்டதனால், அக்கண்ணை இழக்க நேரிட்டது. பரிவுக்கண் நோய் (sympathetic ophthalmia) காரணத்தினால், அவர் இன்னொரு கண்ணையும் இழக்க நேரிட்டது.
சிறுவன் பிரெயில் பார்க்கும் சக்தியை இழந்தார். பார்வைத் திறனை வெற்றிக் கொள்ளும் அறிவாற்றலைப் பெற்ற இந்தச் சிறுவரின் அதற்குப் பிறகான வாழ்க்கை ஒரு உலக மகா அதிசயமாகி விட்டது.
<><><><><><> <><><><>
பிரெய்ல் லூயி
<><><><><><> <><><><>
ஈரானிய திரைப்படத்தில்
பிரெல் லூயியாக நடித்த சிறுவன்
இந்த கல்விக் கூடத்தின் நிறுவனராக இருந்த வாலன்டின் ஹேய் சாதாரணமான ரோமன் டைப்பில் காகிதத்தில் உப்பி நிற்கும் ஒரு எழுத்து முறையை பார்வையற்றவர்களுக்காக உருவாக்கியிருந்த காலம் அது. கடினமானதும் வேகம் குறைந்ததுமாக இந்த முறை அமைந்திருந்தது. எனவே பார்வையற்ற மாணவர்களுக்கு எழுத்தைப் பயிற்றுவிக்க இந்த முறை பயன்படவில்லை.
தன்னைப் போன்ற பார்வையற்றவர்களுக்கு வாசிப்பதற்காக ஒரு பாட முறையை வளர்த்தெடுக்க வேண்டுமென்ற தீவிர சிந்தனை இந்த காலகட்டத்தில் பிரெய்லை ஆட்கொண்டது.
போர்க்கலங்களில் இருந்து இரவு நேரங்களில் செய்திகளை எழுதவும் வாசிக்கவும் சான்ஸ் பார்பியன் என்ற பிரெஞ்சு ராணுவக் கேப்டன் உருவாக்கிய 'நைட் ரைட்டிங்'(இரவு எழுத்து) என்றமுறை இந்த விஷயத்தில் பிரெயிலுக்கு உதவிகரமாக அமைந்தது.
உப்பி நிற்கும் 12 புள்ளிகளை (Dots) அடிப்படையாகக் கொண்டது இந்த முறை. 15 வயது மட்டுமே உடைய பிரெய்ல் 'நைட் ரைட்டிங்' முறைகளைப் பற்றித் தெரிந்து கொண்டதோடு, அதை தன்னைப் போன்ற பார்வையற்றவர்களுக்குப் பயன்படுத்துவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டார்.பார்பியான் 'நைட் ரைட்டிங்'முறையில் தேவையான மாறுதல்களை மேற்கொண்ட பிரெய்ல் மிக வெகமாக வாசிக்க உதவும் சில புதிய முறைகளையும் அதில் இணைத்தார்.
பார்வையற்றவர்களுக்கு,தாளில் உப்பி நிற்கும் புள்ளிகளை (Dots) விரல் நுனிகளால் தொட்டுணர்ந்து வாசிக்க உதவுமாறு உருவாக்கப்பட்ட பிரெய்ல் லிபி(பிரெய்ல் கோடு)யின் வரலாறு இதுதான்.
<><><><><><> <><><><>
பிரெல் லூயி எழுத்து முறையில்
ஆங்கில எழுத்துக்கள்
(அலுவலகத்திற்கு லிப்டில் ஏறும்போது அந்த பட்டனில் உள்ள நமபர்களை தடவிப் பாருங்கள் இதுவும் பிரெல் லூயியின் தொழில் நுட்பம் தான்)
பத்தாண்டுகளுக்குப் பிறகு 1829-இல்தான் பிரெய்ல் உருவாக்கிய இந்த முறை (பிரெய்ல் லிபி) வெளியாகியது.அவர் ஆசிரியராகப் பணியாற்றிய பாரிஸ் நேஷனல் இன்ஸ்டிடியூட்டில் இருந்துதான் இந்த முறையை அறிமுகப்படுத்தினார். சர்வதேச அரங்கில் இந்த முறைக்கு அங்கீகாரம் கிடைக்க பல ஆண்டுகள் தேவைப்பட்டன.
1932-இல் கூடிய சர்வதேச மாநாடுதான் பிரெய்ல் கோடுக்கு (பிரெய்ல் லிபி) அதிகாரப்பூர்வ அங்கீகாரம் அளிக்கவும் ஆங்கிலம் பேசுபவர்களுக்கிடையில் மிகவும் தரமான ஒரு வழிமுறையாக இதை ஏற்றுக் கொள்ளவும் முடிவு செய்தது. இன்றைக்கு பார்வையற்றவர்களுக்கான பிரெய்ல் கோடு
(பிரெய்ல் லிபி) உலகின் ஏராளமான மொழிகளில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பது கண்கூடு. இசைக்கான கோடுகளாகவும் சில வகை சுருக்கெழுத்துக்கும் (Short Hand) மட்டுமின்றி விஞ்ஞானம் மற்றும் கணித இயலுக்கும் இந்த முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வாசிப்பு மற்றும் அறிவுலகக் கதவை திறந்து விட்ட இந்த மேதையின் வாழ்க்கை 43 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. 1809 ஜனவரி நான்காம் நாள் பாரிஸ் நகருக்கு அருகில் குவ்ரே என்னுமிடத்தில் பிறந்த பிரெய்ல் காச நோயால் பாதிக்கப்பட்டு 1852 ஜனவரி ஆறாம் நாள் பாரிசில் உயிர் துறந்தார்.
ஊரையடித்து உலையில் போட்டு பெரும் பணமுதலைகளாக மாறிய லாட்டரி சீட்டு கம்பெனி அதிபர்கள் தமிழக அரசின் தடையால் சம்பாதிக்க முடியாமல் போனதால் லாட்டரி சீட்டு மீதான தடையை விலக்க கோரி ஊர்வலம் நடத்தினார்கள். அதில் முன்வரிசையில் ரயிலில்,கடைத் தெருவில் லாட்டரி விற்றுக் கொண்டிருந்த பார்வையற்றவர்களை பொறுக்கி எடுத்து.அவர்களை எங்கே செல்லும் இந்த பாதை என்ற சினிமா பாடலை பாட வைத்து தமிழக அரசு, மற்றும் பொதுமக்களின் அனுதபத்தைப் பெற நினைத்து கேடு கெட்ட அரசியல் பன்னினார்கள்.
பிரெய்ல் லூயி போன்றவர்கள் உலகத்திலுள்ள ஒவ்வொரு பார்வையற்றவருக்கான ஆக்கபூர்வமான கல்வி ஒளியை அளித்ததை நினைவு கூரும்போது இது போன்ற கேடு கெட்டவர்களின் செயல்களும் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.
சரி கண்களை மூடிக்கொண்டு கீ போர்டு எழுத்துக்களை தடவிப் பாருங்கள்
F.J. இரண்டு இடங்களில் இந்த பிரெய்ல் லூயி அவர்களின் தொழில் நுட்பத்தை அறிவீர்கள்.பேக்ஸ் மிஷினில் 5 நமபர் எழுத்திலும் மொபைலில் 2.5 இரு என்களுக்கு அருகிலும் இந்த தொழில் நுட்பத்தை அறிவீர்கள்.
Edumalai at 10:00 AM